தொப்பையால் மூளை சுருங்குகிறது!!! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

ஜனவரி 19, 2019

0

தொப்பையால் இருதயக் கோளாறுகள், டிமென்ஷியா நியாபக மறதி குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு, உணவுக்குழாய், பெருங்குடல் மற்றும் கணையப் புற்றுநோய் இப்படி பல ஆபத்தான உயிர்கொல்லி நோய்கள் ஏற்படும் என்பது பழைய செய்தி. ஆனா சமீபத்துல, தொப்பையினால மூளையே சுருங்குகிறது. அல்லது மூளை அளவு குறைகிறது அப்படீன்னு இங்கிலாந்துல இருக்குற Loughborough பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க! இந்த அறிவியல் விழிப்புணர்வு செய்தி பற்றிய ஒரு காணொளி நம்ம Science Voice channel-ல் வெளியாகியிருக்கிறது.   பார்த்து பயனடையுங்கள். […]

கருந்துளை: உலகங்களை அழிப்பவன்! 

ஜூன் 17, 2017

0

ஆமா…., நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?  என்னங்க அப்படி பாக்குறீங்க? மேலே இருக்குற கேள்வி நான் உங்களைப் பார்த்து கேட்டேன்னு நெனச்சிக்கிட்டீங்களா? அட நீங்க வேற. நான் ஏங்க உங்கள அப்படி கேட்கப் போறேன். அது நான் இல்லீங்க! இந்த ‘கருந்துளை’ (ப்ளாக்ஹோல்) அப்படீன்னு சொல்றாங்களே….அதுதாங்க மனுசப் பயலுகளான நம்ம எல்லாரையும் பார்த்து ‘நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?’ அப்படீன்னு கேட்குது!  ஏன்னு கேக்குறீங்களா? அப்படிக் கேளுங்க. அதுதான் இந்த கட்டுரையோட அடிநாதமே! வாங்க […]

சாகாவரம் தரும் செயற்கை நுண்ணறிவு!

மே 5, 2017

0

மனிதர்களின் உயிர்காக்கும் நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு செயற்கை உடல் உறுப்புகள் உற்பத்தி, மனிதர்களுக்கு நிகரான ரோபாட் வடிவமைப்பு என விஞ்ஞானம் அசத்திக்கொண்டு இருக்கிறது. இருந்தாலும், ‘மனிதர்கள் நூறு வருடம் வரை வாழ முடியுமா?’ என்ற சந்தேகம் நிலவத்தான் செய்கிறது. ஏனென்றால், மனிதனின் ஆயுட்காலத்தை வெகுவாக குறைத்துவிடும் பல்வேறு வகையான நோய்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு என பல்வேறு காரணங்களால் உள்ளன. இதனால் மனிதனின் நீண்டகால வாழ்க்கை என்பது ஒரு கனவாகத்தான் இருக்கிறது. ஆனால் […]

ஆக்சிஸ்: கண்புரை அறுவை சிகிச்சை செய்யும் ரோபாட்! by Harinarayanan Janakiraman

திசெம்பர் 7, 2016

0

https://soundcloud.com/harinarayanan-janakiraman/33hvxemqmke4

இரண்டாவது பூமியை உருவாக்குவது எப்படி? by Harinarayanan Janakiraman on #SoundCloud

திசெம்பர் 6, 2016

0

https://soundcloud.com/harinarayanan-janakiraman/u301mmpbx5xd

டைனோசரின் முதல் மூளை புதைபடிமமும் அதன் புத்திக்கூர்மையும்! by Harinarayanan Janakiraman on #SoundCloud

திசெம்பர் 6, 2016

0

https://soundcloud.com/harinarayanan-janakiraman/zxe0ayvqbp5e

துல்லியமாக நேரத்தை கணக்கிடும் ஆப்டிக்கல் கடிகாரம்

ஜூன் 23, 2016

0

தற்பொழுது காலத்தை அளவிட ஒரு நிமிடம் (60 நொடிகள்), ஒரு மணி நேரம் (60 நிமிடங்கள்) மற்றும் ஒரு நாள் (24 மணிகள்) எனும் வரையறை கொண்ட கால அளவையைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சுவாரசியமாக, 24 நிமிடங்களால் ஆன ‘நாழிகை’ எனும் கால அளவையைத்தான் பண்டைய தமிழர்கள் பயன்படுத்தி வந்தார்கள். மேலும், பகல் பொழுது 30 + இரவுப்பொழுது 30 சேர்ந்து 60 நாழிகைகள் கொண்டது ஒரு நாள் என்றும் கணக்கிட்டனர். முக்கியமாக, ‘குறுநீர்க் […]

காத்திருக்கும் ஆபத்து – சிவப்பு பெரும் பூதம்

ஜூன் 23, 2016

0

அன்றாட வாழ்க்கைக்கும், உணவுக்கும் சூரிய வெளிச்சத்தை நம்பி வாழும் மனிதனுக்கு அந்த சூரியன் மற்றும் வானத்தில் மின்னும் இதர நட்சத்திரங்கள் குறித்த அறிவியல் அறிவு அவசியம் என்பதை சங்க இலக்கியங்கள் படைத்த நம் தமிழ்ச் சான்றோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்பதற்கு, “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்று பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்…” (புறநானூறு:30) எனத் தொடங்கும் சூரிய மண்டலம் குறித்த புறநானூற்றுப் பாடல் ஒரு சோற்றுப் பதம்! ஆக, சூரியன் மற்றும் சூரிய மண்டலம் குறித்த அடிப்படை அறிவு […]

நோய்களைக் கண்டறியும் கையடக்க ‘ஸ்பார்ட்டான் கியூப்’!

ஜூன் 22, 2016

0

இணையத் தொடர்புடன் கூடிய கையடக்க கணினிகளான ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்டுகளின் வருகையால் உலகம் உள்ளங்கைக்குள்ளேயே சுருங்கிவிட்டது என்பது மிகையல்ல கண்கூடான நிதர்சனம். ஏனென்றால், ஒரு ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் போதும் உணவு முதலான சகல சவுகரியங்களையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே அனுபவித்து விடலாம் என்பதுதான் இன்றைய எதார்த்தம். ஆனாலும் மனித வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களான திடீரென்று நோய்வாய்ப்படுதல் மற்றும் விபத்துகள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின்போது உதவ வேண்டிய மருத்துவத்துறையில் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மேம்பட்டிருக்கிறது என்பதை உற்று நோக்க வேண்டியது […]

மிருதுவான ரோபாட்களை உருவாக்கும் ரப்பர் தசைகள்.

ஜூன் 22, 2016

0

உலகம் வேகமாக ரோபாட் மயமாகி வருகிறது. இன்னும் சில வருடங்களில் மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்துப் பணிகளையும் செய்யும் ரோபாட்களை, பொதுவிடங்கள் அல்லது நம் பணியிடங்களில் சந்திக்க, கடந்துபோகவேண்டிய சூழல் வந்துவிடும். அதனால் மனிதர்களுடன் பணியாற்றும், மனிதர்களுக்கு உதவும் ரோபாட்கள் மனிதர்களைப் போன்றே மிருதுவான உடலோடு இருப்பதுதான் பாதுகாப்பானது என்று கருதி அத்தகைய ரோபாட்களை உருவாக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள் உலக ரோபாட்டிக் தொழில்நுட்பத் துறை பொறியாளர்கள். ‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்று மனித […]

விண்வெளியில் உயிா் மூலக்கூறு!

ஜூன் 22, 2016

0

பூமியில் பெருகிவரும் சுற்றுச்சூழல் மாசுபாடு, அதன் காரணமாக அதிகரித்துவரும் உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட பருவநிலை மாற்றங்கள், அவற்றால் உண்டாகும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் போன்றவை மற்றும் அதிவேகமாக நிகழ்ந்துவரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகிய பல காரணங்களால் மனிதன் தன் பெட்டி, படுக்கையைக் கட்டிக்கொண்டு நிலவுக்கு போய் வாழலாமா அல்லது செவ்வாய் போன்ற வேற்று கிரகங்களில் வாழலாமா என்று சிந்தித்து வரும் நவீன காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும், பூமியில் உயிர்கள் தோன்றியது எப்படி என்ற […]

நரம்பு மறுவளர்ச்சி சாத்தியமே

ஜூன் 22, 2016

0

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், விண்வெளிக்கு சுற்றுலா சென்று வருவது, நிலவில் வாழ்வது, மனிதனுக்கு நிகராக இயங்கும் செயற்கை மனிதர்களை உருவாக்குவது என கிட்டத்தட்ட எல்லாமே சாத்தியமாகி வருகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மருத்துவம் என்று வரும்போது பல இடங்களில் தொழில்நுட்பம் கை கொடுப்பதில்லை என்ற நிலைதான் இன்றுவரை தொடர்கிறது. உதாரணமாக, அல்ஷெய்மர்ஸ், டிமென்ஷியா உள்ளிட்ட பல நரம்பியல் நோய்கள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டுவிட்டால் இறுதிவரை அவற்றோடுதான் வாழ்ந்தாக வேண்டும். ஏனென்றால் நரம்புகள் ஒருமுறை சேதமடைந்த அல்லது சிதைவுற்ற பிறகு […]

உலகம் சுற்றும் “சூரிய விமானம்”

ஜூன் 22, 2016

0

‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்று பாடினார் கவிஞர் கண்ணதாசன். பறவைகள் எப்படி பறக்கின்றன என்று உற்றுநோக்கிய மனிதன், பறவைகள் பறப்பதற்கு கையாளும் உத்தியை பயன்படுத்தி நாமும் பறப்பதற்கு ஓரு வாகனத்தை உருவாக்கினால் என்ன என்று சிந்தித்து செயல்பட்டான். அதன் பலனாகவே இன்று பல ஆயிரம் மைல்களை சில மணி நேரங்களில் கடந்து செல்லக்கூடிய விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன! கடந்த 1903-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதியன்று ரைட் சகோதரர்களின் உதவியுடன் அதிகபட்சமாக 852 அடி தூரத்தை, […]

தினத்தந்தி நாளிதழின் ‘மாணவர் ஸ்பெஷல்’ பகுதியில் எனது புதிய தொடர் ‘நாளைய உலகம்’

ஒக்ரோபர் 19, 2015

1

அன்பின் வாசகர்கள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள். வேலைப்பளு அதிகமுள்ள முனைவர் பட்டத்துக்குப் பின்னான ‘Postdoc’ பணியில் இருப்பதால் எவ்வளவோ முயன்றும் முன்பைப் போல இந்த வலைப்பக்கத்தில் எழுத முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். ஆனாலும், என்னுடைய எழுத்துப்பணிக்கு ஓய்வு கொடுக்க மனமில்லை! அதனால் இந்த வலைப்பக்கத்தில் மீண்டும் எனது பதிவுகள் வெகுவிரைவில் அடிக்கடி வரப்போகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் அன்பு வாசகர்களே….. ஆனால் அதுவரை,  நான் சமீபத்தில் தினத்தந்தி நாளிதழின் மாணவர் ஸ்பெஷல் பகுதியில் எழுதத்தொடங்கியுள்ள ‘நாளைய […]

அறிவியல் ஆச்சரியங்கள்! தொடர்…….உடற்பயிற்சி மாத்திரையாகிறது ஒரு ஹார்மோன்!

மே 11, 2012

2

நம் எல்லோருக்குமே ஆசைதான் வாரணம் ஆயிரம் சூர்யா போல நமக்கும் ஒரு சிக்ஸ் பேக் இருந்தால் நன்றாக இருக்குமே என்று! ஆனால் என்ன செய்ய, சூர்யா போல நம்மால் மாதக் கணக்கில் ஜிம்முக்கு போகவும் முடியாது. உணவுக் கட்டுப்பாட்டிலும் இருக்க முடியாது! ‘இவை இரண்டையுமே செய்யாமல் கட்டுமஸ்தான உடலமைப்பு வேண்டும். இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா சொல்லுங்கள்’ என்று யாராவது கேட்டால் நமக்கு சிரிப்புதான் வரும். ஆனால், அமெரிக்க ஆய்வாளர் ப்ரூஸ் ஸ்பீகெல்மேனோ, ‘அவ்வளவுதானே கவலையை விடுங்க. இந்த உடற்பயிற்சி மாத்திரையை சாப்பிடுங்க. நீங்க […]

பூச்சிகளை பிடிக்கும் ‘எந்திரன்’!

பிப்ரவரி 16, 2012

1

எலியைப்பிடிக்க பயன்படும் எலிப்பொறியைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். அது ஒரு எந்திரம். ஆனால் பூச்சியைப் பிடிக்கும் பூச்சிப்பொறியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஓ தெரியுமே, பூச்சியைப் பிடிக்க பயன்படும் எந்திரம்தானே பூச்சிப்பொறி என்கிறீர்களா? அதுதான் இல்லை. பூச்சிப்பொறி என்பது பூச்சிகளை பொறி வைத்துப் பிடித்து உண்ணும் ஒரு தாவரம். அந்த தாவரத்தின் பெயர் வீனஸ் ஃப்லைட்ராப். முட்களாலான விளிம்புகளைக் கொண்ட இலைகளையுடைய இந்த தாவரம், அதன் இலைகளையே பூச்சியைப் பிடிக்கும் பொறிகளாகப் பயன்படுத்துகின்றன. அதாவது, உணர்ச்சி […]

தினத்தந்தியில் எனது தொடர்….அறிவியல் ஆச்சரியங்கள்!

திசெம்பர் 24, 2011

3

வணக்கம். எல்லாரும் நல்லாயிருக்கீங்களா? உங்களை எல்லாம் சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சு. சொந்த வேலைகள் காரணமா வலைப்பக்கமே வர முடியல. ஆனா இப்போ வந்துட்டோம்ல. உங்க எல்லாருடைய ஊக்கத்துனால எழுத்தாளரான நான், நண்பர், எழுத்தாளர் சேவியர் அவர்களுடைய அன்பினால் தினத்தந்தி இளைஞர் மலரில் “அறிவியல் ஆச்சரியங்கள்” எனும் ஒரு அறிவியல் தொடர் எழுத ஆரம்பிச்சிருக்கேன். பத்திரிகைகளில் அறிவியல் தொடர்பாக நான் “தொடர் கட்டுரை” எழுதுவது இதுவே முதல் முறை. அதுவும் தினத்தந்தி போன்ற கோடிக்கணக்கான வாசகர்களைக் கொண்ட […]

மருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள், ‘தசைகளையும் வளர்க்கிறது’ இப்போது!!

செப்ரெம்பர் 17, 2011

5

என்னங்க, எல்லாரும் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா? என்ன அப்படி பார்க்குறீங்க? ஆஹா, இந்த மேலிருப்பான் திரும்பவும் ஆப்பிளோட வந்திருக்கானே….., இந்த முறை என்னத்த சொல்லப்போறானோ அப்படீன்னு பார்க்குறீங்களா? அட, அது வேற ஒன்னுமில்லீங்க! ஆப்பிள், குறைந்தபட்சம் இருதய நோய் சம்பந்தப்பட்ட காரணங்களுக்காகவாவது மருத்துவரை கண்டிப்பா தூரத்திலே வைக்கக் கூடிய திறன் கொண்டது அப்படீன்னு முந்தைய ஆப்பிள் பதிவுல பார்த்தோம் இல்லீங்களா? இப்போ என்னடான்னா, “ஆப்பிள் மருத்துவரை தூர வைக்கிறதோடு மட்டுமில்லாம, நம்ம உடலில் இருக்குற […]