தினத்தந்தி நாளிதழின் ‘மாணவர் ஸ்பெஷல்’ பகுதியில் எனது புதிய தொடர் ‘நாளைய உலகம்’

ஒக்ரோபர் 19, 2015

1

அன்பின் வாசகர்கள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள். வேலைப்பளு அதிகமுள்ள முனைவர் பட்டத்துக்குப் பின்னான ‘Postdoc’ பணியில் இருப்பதால் எவ்வளவோ முயன்றும் முன்பைப் போல இந்த வலைப்பக்கத்தில் எழுத முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். ஆனாலும், என்னுடைய எழுத்துப்பணிக்கு ஓய்வு கொடுக்க மனமில்லை! அதனால் இந்த வலைப்பக்கத்தில் மீண்டும் எனது பதிவுகள் வெகுவிரைவில் அடிக்கடி வரப்போகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் அன்பு வாசகர்களே….. ஆனால் அதுவரை,  நான் சமீபத்தில் தினத்தந்தி நாளிதழின் மாணவர் ஸ்பெஷல் பகுதியில் எழுதத்தொடங்கியுள்ள ‘நாளைய […]

அறிவியல் ஆச்சரியங்கள்! தொடர்…….உடற்பயிற்சி மாத்திரையாகிறது ஒரு ஹார்மோன்!

மே 11, 2012

2

நம் எல்லோருக்குமே ஆசைதான் வாரணம் ஆயிரம் சூர்யா போல நமக்கும் ஒரு சிக்ஸ் பேக் இருந்தால் நன்றாக இருக்குமே என்று! ஆனால் என்ன செய்ய, சூர்யா போல நம்மால் மாதக் கணக்கில் ஜிம்முக்கு போகவும் முடியாது. உணவுக் கட்டுப்பாட்டிலும் இருக்க முடியாது! ‘இவை இரண்டையுமே செய்யாமல் கட்டுமஸ்தான உடலமைப்பு வேண்டும். இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா சொல்லுங்கள்’ என்று யாராவது கேட்டால் நமக்கு சிரிப்புதான் வரும். ஆனால், அமெரிக்க ஆய்வாளர் ப்ரூஸ் ஸ்பீகெல்மேனோ, ‘அவ்வளவுதானே கவலையை விடுங்க. இந்த உடற்பயிற்சி மாத்திரையை சாப்பிடுங்க. நீங்க […]

பூச்சிகளை பிடிக்கும் ‘எந்திரன்’!

பிப்ரவரி 16, 2012

1

எலியைப்பிடிக்க பயன்படும் எலிப்பொறியைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். அது ஒரு எந்திரம். ஆனால் பூச்சியைப் பிடிக்கும் பூச்சிப்பொறியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஓ தெரியுமே, பூச்சியைப் பிடிக்க பயன்படும் எந்திரம்தானே பூச்சிப்பொறி என்கிறீர்களா? அதுதான் இல்லை. பூச்சிப்பொறி என்பது பூச்சிகளை பொறி வைத்துப் பிடித்து உண்ணும் ஒரு தாவரம். அந்த தாவரத்தின் பெயர் வீனஸ் ஃப்லைட்ராப். முட்களாலான விளிம்புகளைக் கொண்ட இலைகளையுடைய இந்த தாவரம், அதன் இலைகளையே பூச்சியைப் பிடிக்கும் பொறிகளாகப் பயன்படுத்துகின்றன. அதாவது, உணர்ச்சி […]

தினத்தந்தியில் எனது தொடர்….அறிவியல் ஆச்சரியங்கள்!

திசெம்பர் 24, 2011

2

வைரஸ்

வணக்கம். எல்லாரும் நல்லாயிருக்கீங்களா? உங்களை எல்லாம் சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சு. சொந்த வேலைகள் காரணமா வலைப்பக்கமே வர முடியல. ஆனா இப்போ வந்துட்டோம்ல. உங்க எல்லாருடைய ஊக்கத்துனால எழுத்தாளரான நான், நண்பர், எழுத்தாளர் சேவியர் அவர்களுடைய அன்பினால் தினத்தந்தி இளைஞர் மலரில் “அறிவியல் ஆச்சரியங்கள்” எனும் ஒரு அறிவியல் தொடர் எழுத ஆரம்பிச்சிருக்கேன். பத்திரிகைகளில் அறிவியல் தொடர்பாக நான் “தொடர் கட்டுரை” எழுதுவது இதுவே முதல் முறை. அதுவும் தினத்தந்தி போன்ற கோடிக்கணக்கான வாசகர்களைக் கொண்ட […]

மருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள், ‘தசைகளையும் வளர்க்கிறது’ இப்போது!!

செப்ரெம்பர் 17, 2011

5

என்னங்க, எல்லாரும் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா? என்ன அப்படி பார்க்குறீங்க? ஆஹா, இந்த மேலிருப்பான் திரும்பவும் ஆப்பிளோட வந்திருக்கானே….., இந்த முறை என்னத்த சொல்லப்போறானோ அப்படீன்னு பார்க்குறீங்களா? அட, அது வேற ஒன்னுமில்லீங்க! ஆப்பிள், குறைந்தபட்சம் இருதய நோய் சம்பந்தப்பட்ட காரணங்களுக்காகவாவது மருத்துவரை கண்டிப்பா தூரத்திலே வைக்கக் கூடிய திறன் கொண்டது அப்படீன்னு முந்தைய ஆப்பிள் பதிவுல பார்த்தோம் இல்லீங்களா? இப்போ என்னடான்னா, “ஆப்பிள் மருத்துவரை தூர வைக்கிறதோடு மட்டுமில்லாம, நம்ம உடலில் இருக்குற […]

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

ஜூன் 29, 2011

14

Image credit: www.flickr.com

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு. அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச, கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா? அப்படி எனக்கு தெரிஞ்ச ஒரு யுக்தி என்னன்னா, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை […]

“நியாபக மறதி குறைபாடு” அதிகம் தாக்குவது ஆண்களையே; ஆய்வு!!

ஜூன் 24, 2011

5

Image: Google

நியாபகம் வருதே….. நியாபகம் வருதே….. நியாபகம் வருதே…..! பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் நியாபகம் வருதே…..!! அப்படீன்னு தொடங்குற சேரனின் ஆட்டோகிராப் படப் பாடல முனு முனுக்குறது நம்ம எல்லாருக்குமே பிடிக்கும்! இதுல ஆண்-பெண், பெரியவர்-சிறியவர் அப்படீங்கிற பாரபட்சமெல்லாம் கிடையாதுன்னு நெனக்கிறேன். ஆனா, நம்மளோட பழைய நினைவுகளை எல்லாம் நல்லா நியாபகம் வச்சிருந்தாதானே, அந்த நினைவுகளோட நியாபகம் வந்து இந்த மாதிரி நியாபகம் வருதே அப்படீன்னு பாட முடியும்?! ஆமா, அதுக்கு என்ன இப்போ? அப்படீன்னுதானே […]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 270 other followers