Browsing All Posts filed under »தொழில்நுட்பம்«

ஆக்சிஸ்: கண்புரை அறுவை சிகிச்சை செய்யும் ரோபாட்! by Harinarayanan Janakiraman

திசெம்பர் 7, 2016

0

https://soundcloud.com/harinarayanan-janakiraman/33hvxemqmke4

ஜப்பானில் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கதிரியக்கம்! உண்மை நிலவரம்தான் என்ன?

மார்ச் 31, 2011

11

ஜப்பானின் ஃபுகுஷிமாவிலுள்ள தாய்இச்சி அணுமின் நிலைய 4 அணுஉலைகளின் கூரைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச்சிதரியது குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதை எழுதிய பின்னர், கடந்த 15 நாட்களாக அணு உலைகளில் வெடிப்போ, பெரிய அசம்பாவிதமோ எதுவும் ஏற்படவில்லை என்பது ஒரு பெரிய ஆறுதல். ஆனால், அணு உலைகளை குளிர்விக்கும் பொருட்டு உட்செலுத்தப்படும் கடல் நீர், சில தினங்களுக்கு முன் நிறுத்தப்பட்டு, அமெரிக்காவிலிருந்து கப்பல் மூலம் […]

ஜப்பானில் அணு உலைகளின் கூரைகள் வெடிப்பு; சில அறிவியல் விளக்கங்கள்…..

மார்ச் 14, 2011

52

என்னங்க, எல்லாரும் தொலைக்காட்சியில் வந்த ஜப்பான் பூகம்ப/சுனாமி செய்திகளை பார்த்தீங்களா? 8.9 ரிக்டர் அளவிலான பூகம்பமும், 30 அடி உயர ஆழிப்பேரலைகளுடன்கூடிய சுனாமியும் ஜப்பானைத் தாக்கிவிட்டு, வந்த வேலை முடிந்ததும் (?) போய்விட்டன. இவையிரண்டும் ஏற்படுத்திய பேராபத்துகளின் பாதிப்பு என்ன, இவற்றால் காணாமல் போன 100 பேர் கொண்ட கப்பல், பல நூறு/ஆயிரம் பயணிகளை தாங்கிய 3 ரயில்கள் என்னவாயின போன்றவற்றை துல்லியமாக கண்டறியவே சில வாரங்கள்/மாதங்கள் ஆகும் என்பதுதான் நிதர்சனம் எனும் வேளையில்……. இடைவெளிகள் விட்டு […]

ஸ்டெம் செல் அதிசயம்: “தோல்” போயி “ரத்தம்” வந்தது டும் டும் டும்!!!

திசெம்பர் 13, 2010

19

இப்பெல்லாம் யாராவது ஸ்டெம் செல்லுன்னு சொன்னாலே, சினிமா படத்துல வர்ற வில்லனை மக்கள் பார்க்குற மாதிரிதான் பார்க்குறாங்க அரசியல்வாதிகளும், பொதுமக்களும்! நம்ம ஊரு நெலவரம் எப்படியோ தெரியல, அமெரிக்காவுல அப்படித்தான் நடக்குது! அதனால, ஸ்டெம் செல் தொடர்பான ஆய்வுன்னாலே ஆயிரத்தெட்டு எதிர்பலைகள் கிளம்பி, தூரத்துல தெரியுற ஒளிமயமான (மருத்துவ) எதிர்காலத்தைக்கூட கானல் நீராக்கிடுது! ஆமா, இதுக்கு என்ன காரணம்? இந்தப் பதிவை படிக்கிறதுக்கு முன்னாடி, “ஸ்டெம் செல்கள் (குறுத்தனுக்கள்) தொடர்-பாகம் 1” அப்படீங்கிற பதிவைக் கொஞ்சம் படிச்சிடுங்க….! சிசு […]

உலகை மாற்றிய “6 மரபனுமாற்ற உணவுப் பயிர்களும்” சில சர்ச்சைகளும்!!

ஒக்ரோபர் 9, 2010

48

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: மதிய உணவுக்குப்பின் ஒரு குட்டித்தூக்கம் போடுவது இருதயத்துக்கும், மூளைக்கும் மிகவும் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். மதிய உணவுக்குப்பின் சுமார் 30 நிமிடம் உறங்குவதுதால்,   நியாபக சக்தியும், செயல்திறனும் மேம்படுகிறதாம். அட, இது நல்லாருக்கே…!! விஞ்ஞானம் ஒரு கத்தி மாதிரி, அதை வச்சி ஆப்பிளையும் நறுக்கலாம், ஆளையும் வெட்டலாம்! ஆக, இது ரெண்டுல எதை செய்யப்போறோம்ங்கிறது கத்தி எடுக்கிற ஆளைப்பொறுத்தது. ஏன்னா, விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லைன்னா, இப்போகூட நம்ம வாழ்க்கை கற்க்கால […]

சூப்பர் பேட்டரி: “அதிக சக்தியை சேமிக்கும்” அட்டகாசமான புதுவரவு!!

ஓகஸ்ட் 3, 2010

8

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: மனஅழுத்தம்/மன உளைச்சல் நிறைந்த வேலைகளே பெரும்பாலான மாரடைப்புகளுக்கு காரணம். அதனால், உங்கள் வேலை/பணி உங்களை மிகுந்த மன உளைச்சலுக்கும், மனச்சோர்வுக்கு ஆளாக்கினால் அந்த வேலை விட்டுவிட்டு வேறு நல்ல வேலை தேடிக்கொள்வதே சாலச் சிறந்தது என்கிறார்கள் இருதயநல மருத்துவர்கள்! ஒரு பக்கம் என்னடான்னா, இன்னும் 100 வருஷத்துல உலகம் அழியப்போகுதுன்னு சின்னம்மை நோயை ஒழிச்சுக்கட்டின உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரான, ஃப்ராங்க் ஃபென்னர் சொல்றாரு! அவரு சொல்றதுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கு […]

ரெக்ஸ்: அதிநவீன “செயற்க்கை” கால்கள்; “நடக்கும்” பக்கவாத நோயாளிகள்!!

ஜூலை 31, 2010

10

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: ஒமேகா கொழுப்பு (Omega fatty acids) என்னும் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புச்சத்தினை அதிகமான அளவில் கொண்ட ஒரு உணவு மீன்கள். அந்த ஒமேகா கொழுப்பு இருதயத்துக்கு மிகவும் உகந்தது. அதனால், நிறைய மீன்கள் சாப்பிட்டு உங்கள் இருதய நலனை பேணிப் பாதுக்காத்துக்கொள்ளுங்கள்! இந்த உலகத்துல பிறக்கிற எல்லாருக்குமே, உலகியல் விஷயங்களையெல்லாம் ரசிக்கனும், செயற்கரிய செயல்கள் பல செய்து பெயரும் புகழும் அடையனும், எல்லா வகையான இன்பங்களையும் அனுபவிக்கனும் இப்படி நிறைய ஆசைகள் […]

“சூப்பர் ப்ளாஸ்டிக்”: களிமண்ணிலிருந்து ஒரு புதுயுக ப்ளாஸ்டிக்?!

ஜூலை 29, 2010

4

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: இரவு உணவு எப்போதும் மிகவும் எளிதில் ஜீரனமாகக்கூடிய, எண்ணை அதிகமில்லாத, உப்பு-காரம் குறைந்த சாதாரணமான உணவாக இருப்பது இருதய நலனுக்கு மிக மிக அவசியம் என்கிறார்கள் இருதய நல மருத்துவர்கள்! இந்த உலகத்தை அழிக்க அணுகுண்டு, உயிரியல் ஆயுதம், உலகப் போர் இப்படி எதுவுமே வேணாம். பொதுமக்களாகிய நாம நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சில பொருட்களே போதும். என்ன அப்படிப்பார்க்குறீங்க? அட உண்மையத்தாங்க சொல்றேன். ஏன்னா, சுற்றுச்சூழல் பாதிப்பு அப்படீங்கிற […]

அதிசயம்: அசைத்தாலே ‘ரீசார்ஜ்’ ஆகும் அதிநவீன பேட்டரிக்கள்!!

ஜூலை 21, 2010

12

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: கோபம், சோகம், சந்தோஷம் இப்படி எல்லா விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துங்கள். உங்கள் உணர்ச்சிகளை எவ்வளவுக்கு எவ்வளவு கட்டுப்படுத்தி வைக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு இருதய நோய் வருவதற்க்கான வாய்ப்புகளை அதிகப்படுத்திக்கொள்கிறீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்! நவீன கண்டுபிடிப்புகள் பத்தி ஒரு நல்ல பதிவு எழுதி ரொம்ப நாள் ஆச்சேன்னு நேனச்சிக்கிட்டு இருந்தேன். அந்த குறையை நிவர்த்தி செய்ய ஒரு செய்தி கெடைச்சது, அதான் எழுதிடுவோமேன்னு இந்தப்  பதிவை எழுதுறேன். நவீனம் அப்படீங்கிற வார்த்தைக்கு அர்த்தம் […]

ஜப்பான்: ‘ஒகோனோமியாக்கியும்’ ஹிரோஷிமாவும்; ஒரு தொடர்பு!

ஜூலை 20, 2010

7

இன்று ஒரு இருதய நலக்குறிப்பு: சிரிப்பு சிகிச்சை (Laughter therapy) என்பது ஆரோக்கியத்தை கூட்டுகிறது என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது! உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், மன உளைச்சல், எல்லாவற்றிற்க்கும் மேலாக, இருதய நோய்களை குறைக்க வல்லதாம் சிரிப்பு! அதனால சிரித்து வாழுங்கள், இருதய நோயை எதிர்த்து வாழுங்கள்! ‘ஹிரோஷிமா’ அப்படீன்னு சொன்னாலே கூடவே ‘நாகசாக்கி’ என்கிற பெயரும் ஒட்டிக்கொண்டு, ”அணுஆயுதம்-உலக அழிவு-குண்டு விழுந்த இடத்துல இன்னும் புல், பூண்டுகூட முளைக்கல” இப்படியான விஷயங்கள்தான் மேலோங்கி இருக்கிறது நம் […]

பெட்ரோல்:ஆச்சரியமூட்டும் 7 உண்மைகள்!!

ஜூலை 4, 2010

11

இன்றைய உடல்நலக் குறிப்பு: தாவரம் சார்ந்த உணவுகளை மட்டுமே உண்ணும் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு, போதுமான அளவு கால்சியம் கிடைப்பதில்லையாம். இது விலங்குகளிலிருந்து கிடைக்கும் பால் சார்ந்த உணவுகளையும் தவிர்ப்பவர்களின் நிலை மட்டுமே! மற்ற சைவர்களுக்கு அல்ல! நம்ம ஊருல, பெட்ரோலைப் பத்தி ஒரு சர்ச்சை இருக்குன்னா, எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அது நம்ம ராமர் பிள்ளையோட மூலிகைப் பெட்ரோல் சர்ச்சைதான்!  ஏன்னா, பெட்ரோலே இல்லாம உலகப் போக்குவரத்தெல்லாம் தடைபட்டு, மொத்த உலகமும் ஸ்தம்பித்துவிடும் அப்படீன்னு ஒரு […]

ரகசிய ஆய்வு: ஆஸ்கர் விருது பரிந்துரைகள் பற்றிய ரகசியங்கள்!

ஜூலை 2, 2010

12

இன்றைய உடல்நலக் குறிப்பு: நீங்கள் உட்கொள்ளும் பல வகையான வைட்டமின் மாத்திரைகளும், தாது மாத்திரைகளும் ஆரோக்கியமான உணவுக்கு ஒருபோதும் ஈடானவையல்ல. அதனால், வைட்டமின்கள்/தாதுக்கள் நிறைந்த இயற்க்கை உணவு வகைகளை உண்பதை பழக்கமாக்கிக்கொள்வது மிகவும் உகந்தது! நம்ம உலக நாயகன் கமலஹாசன், நாயகன்ல ஆரம்பிச்சு இதுவரைக்கும், எப்படியாவது ஒரு ஆஸ்கார் விருதையாவது வாங்கியே தீருவேன்னு கங்கனம் கட்டிக்கிட்டு சும்மா நடிச்சு தள்ளிக்கிட்டேதான் இருக்காரு! ஆனா பாருங்க, கழுத அந்த ஆஸ்கார் விருதைத்தான் இன்னும் குடுக்கவே மாட்டேங்கிறாய்ங்க அமெரிக்காகாரைங்க! ஆனா, […]

ஆபத்து: உங்க செல்ஃபோன் எவ்வளவு (SAR) கதிர்வீச்சை வெளியிடுகிறது?!

ஜூன் 30, 2010

4

இன்றைய உடல்நலக் குறிப்பு: இஞ்சியானது பல மருத்துவப் பலன்களை உள்ளடக்கிய ஒரு காய்கறி வகை! கெட்ட கொலஸ்டிராலான எல்.டி.எல் (LDL) குறைப்பது, ரத்த நாளங்களுக்குள் ரத்தக் கட்டி ஏற்படுவதை தடுப்பது மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் என்னும் பண்பைக் கொண்டது ஆகியவை இஞ்சியின் மருத்துவக் குணங்களில் சில! வர வர இந்த செல்ஃபோன் இம்சை பெரிய இம்சையாப்போச்சு! என்னங்க அப்படிப் பார்க்குறீங்க? ஏதோ செல்ஃபோனே பிடிக்காத மாதிரியும், இதுவரைக்கும் செல்ஃபோனையே பயன்படுத்தாத மாதிரியும் பேசுறேனேன்னு பார்க்குறீங்களா? பின்ன என்னங்க,  […]

60 நொ.அ/20.6.10: மனித ஹார்மோன் சுரந்து “பெண்ணாக மாறிய” மரம்?!

ஜூன் 20, 2010

4

வணக்கம். இன்றைய முக்கிய அறிவியல் தலைப்புச்செய்திகள். வாசிக்கப்போவது…..அட வேற யாருமில்ல, நீங்கதாங்க! 60 நொடி அறிவியலுக்கு நிறைய ஓட்டுகள் போட்டு என்னோட புதிய முயற்ச்சிக்கு ஆதரவு தெரிவித்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் மேலிருப்பானின் மனமார்ந்த நன்றிகள். (இதுல எதாவது மாற்றம் செய்யனும்னு நீங்க எதிர்ப்பார்த்தீங்கன்னா, அதைப்பற்றிய சிறு விளக்கத்துடன் கூடிய ஒரு மறுமொழி அல்லது மின்னஞ்சலை padmaharij@gmail.com முகவரிக்கு கொஞ்சம் தட்டிவிட்டீங்கன்னா, மாற்ற முயற்ச்சி செய்யறேன். நன்றி!) இனி நாம, இன்றைய 60 நொடி அறிவியலுக்குப் போவோம்….. […]

“சிந்த்தியா”, விஞ்ஞான உலகின் அட்டகாசமான ‘செயற்கை’ புதுவரவு!!

ஜூன் 1, 2010

15

நம்ம ஊருல “சந்தியா” யாரு தெரியுமான்னு கேட்டா, குறைஞ்சது நூத்துல 60-வது பேராவது, எடுத்த எடுப்பிலேயே “யாரு காதல் சந்தியாவத்தானே கேக்குறீங்க” அப்படீன்னு கச்சிதமா கேப்பாங்கன்னு நெனக்கிறேன். காரணம் என்னன்னு உங்களுக்கே நல்லா தெரியும்?! நடிகை சந்தியா மூச்சு விட்டிருந்தாக்கூட, “சூடாக மூச்சு விட்ட காதல் சந்தியா” அப்படீன்னு பெட்டிச்செய்தியில கிசு கிசுவையும், அட்டைப்படத்துல சந்தியாவையும் போட்டு சும்மா அசத்திடுவாங்கல்ல நம்ம ஊடகத்தார்?! இது நம்ம சினிமா  (பொது?) அறிவுக்கு ஒரு சின்ன சான்று. அதனால, நாம […]

ஃபேஸ்புக்: செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்?!

மே 18, 2010

12

எனக்குத் தெரிஞ்சி இதுவரைக்கும், “ஆடை இல்லாதவன் அரை மனிதன்” அப்படீன்னுதான் சொல்லிக்கிட்டிருக்காங்க. ஆனா, இனிமே “ஃபேஸ்புக் பக்கமில்லாதவன் ஃபேஸே இல்லாதவன்”னு (அதாங்க, முகமே இல்லாதவன் அப்படீன்னு) சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கு! அட நான் ஒன்னும் சும்மா சொல்லலீங்க, உலகம் போல போற போக்கு என்னை அப்படிச் சொல்ல வைக்குது! ஆமாங்க, அந்த அளவுக்கு ஃபேஸ்புக் தளம், ஒவ்வொருவரோட அன்றாட வாழ்க்கையில அப்படியே பின்னிப் பிணைஞ்சு இருக்குன்னா பார்த்துக்கங்களேன்!  அப்படிப்பட்ட ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்துவதில் ஏற்படும் சில/பல சிக்கல்கள் […]

உங்க “பாக்டீரியா கையெழுத்து” தெரியுமா உங்களுக்கு?!

மார்ச் 27, 2010

0

என்ன நண்பர்களே, நல்லாயிருக்கீங்களா? சில நாட்களா மேலிருப்பான் வலைப்பக்கம் வந்து பார்த்துட்டு, “என்னது இது, 200வது பதிவ போட்டுட்டு மேலிருப்பான் எஸ்கேப் ஆயிட்டானோ”ன்னு நெனச்சிருப்பீங்க! அதெப்படிங்க, “அரைகுறை தமிழாயிருந்தாலும் பரவாயில்ல, அறிவியல் தமிழாச்சே”ன்னு நீங்களும், எதாவது ஒரு பதிவு எழுதியிருப்பான்னு “நம்ம்ம்ப்பீ”  வலைப்பக்கம் வரும்போது, பதிவு எழுதாம இருக்க முடியும்?! வேலைப்பளு காரணமா சில நாட்கள் பதிவு ஒன்னும் எழுத முடியல. சரி அத விடுங்க, உங்க எல்லாருக்குமே தெரியும் (மேலிருப்பான் பக்கத்துல இந்த பதிவையும் படிச்சிருப்பீங்க) […]

“டாக்டர்” கூகுளும் “சைபர்காண்ட்ரியாவும்”?!

மார்ச் 23, 2010

4

பதிவுத் தலைப்பைப் படிச்சவுடனே உங்களுக்கு மனசுல ரெண்டு கேள்விகள் எழுந்திருக்கும். அதாவது,  “டாக்டர் கூகுள்”னு ஒருத்தர் இருக்கிறாரா (இருந்திருப்பாரோ?), சைபர்காண்ட்ரியாவுக்கும் டாக்டர் கூகுளுக்கும் என்ன தொடர்பு ? இப்படி விசித்திரமான ரெண்டு கேள்விகள்தான் அது. என்ன சரிதானே? “இதைவிட விசித்திரமான பல பதிவுத்தலைப்புகளை மேலிருப்பான் வலைப்பக்கத்தில் சந்தித்திருக்கிறோம், அதனால் இது ஒன்றும் பெரிதல்ல எங்களுக்கு”ன்னு சர்வ சாதாரணமா சொல்லிட்டு “பதிவப் பத்தி மேல சொல்லுப்பா”ன்னு கேக்குற நண்பர்கள்ல ஒருத்தர்தான் நீங்கன்னா நான் உடனே பதிவுச் செய்திக்கு போயிடறேன்….. […]