எரிமலை பத்தி பெருசா நமக்கு ஒன்னுந்தெரியாது. பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, எரிமைலைன்னா என்ன, உலகத்துல அது எங்கெங்கே இருக்குங்கிற மாதிரியான சில செய்திகள மட்டும் படிச்ச அனுபவமுண்டு. நம்ம ஊருல இல்லைங்கிறதுனால அதப் பத்தி பெருசா அலட்டிக்கிட்டதில்லை இதுவரைக்கும்?!
ஆனா, சில வருடங்களா ஜப்பான்ல (கல்வி நிமித்தமா வந்து) இருக்குறதுனால அப்பப்போ, தொலைக்காட்சியிலேயோ, ஜப்பானிய நண்பர்கள் மூலமாகவோ, இங்குள்ள சில எரிமலைகள் பத்தி சில விஷயங்கள தெரிஞ்சிக்கிட்டதுண்டு. எரிமலையப் பத்தி நெனச்சாலே, ஏதோ திடீர்னு நம்ம வீட்டுக்குப் பக்கத்துல வெடிக்கப் போறது மாதிரி, கொஞ்சம் பயமாவும், திகிலாவும்தான் இருக்கும்.
எரிமலையப் பத்தி நமக்குத் தெரியாத பல உண்மைகள அலசி ஆராயத்தான் இந்தப் பதிவு. கெளம்புங்க போலாம் , எரிமலைப் பதிவுச் சுற்றுலாவுக்கு……
உலகத்துல மொத்தம் (குறைந்த பட்சம்), 1,500 எரிமலைகள் தொடர்ந்து (பல வருடங்களாக) தீக்குழம்பைக் கக்கிக்கிட்டே இருக்குதாம். மாக்மா (நக்மா இல்லீங்க! ;-)) அப்படீங்கிற பாறைக் குழம்புகள், பூமியின் மிருதுவான பகுதிகளை உடைத்துக் கொண்டு வெடிக்கும்போது, பாறைகளின் தீக்குழம்புகளை எட்டுத்திக்கும் வாரி இறைக்கும் ஒரு நிகழ்வையே நாம் எரிமலை என்கிறோம்!
உண்மையில், இந்தப் பாறைக் குழம்புகள், வருடக்கணக்கில் (இருட்டில் பதுங்கியிருக்கும் திருடன் மாதிரி) பூமிக்கு அடியில், நூற்றுக்கணக்கான வருடங்கள்கூட பதுங்கி இருக்குமாம். எதிர்பாராதவிதமாக, திடீரென்று ஒரு நாள் வெடித்துச் சிதறுமாம். எரிமலைகள் பற்றி இதுவரை நாம் அறிந்திறாத பல உண்மைகளை தெரிஞ்சிக்கலாம் வாங்க….
எரிமலையைப் பற்றிய திகிலூட்டும் பல உண்மைகள்!
- உலகிலேயே, எரிமலைப் பாறை பியூமீஸ் என்னும் பாறை மட்டுமே தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது. வெளிர் வெண்மை நிறத்தில் இருக்கும் இந்த பாறைகள், எரிமலையின்போது வெடித்துச் சிதறி பின்பு குளிரும் பாறைகளிலிருந்து பல வாயுக்கள் வெளியாவதால் ஏற்படும் ஓட்டைகளைக் கொண்டது!
- உலகிலேயே மிக பயங்கரமான எரிமலைகள் சூப்பர் எரிமலைகள் எனப்படுகின்றன! இவை வெடித்துச் சிதறும்போது,பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் தீமழை பொழிவதோடு, உலகளாவிய பருவநிலை (தட்ப வெட்ப) மாற்றங்களையும் உருவாக்கும் தன்மை கொண்டவையாம். இவ்வெரிமலைகள், சில லட்ச வருடங்களுக்கு ஒரு முறைதான் வெடிக்குமாம். யப்பா…..தப்பிச்சோம்டா சாமீ….?! இத்தகைய ஒரு எரிமலை, அமெரிக்காவின் யெல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் இருக்கிறதாம். இது வெடிப்பதற்க்கு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஐய்யய்யோ…..!!
- உலகின் மிகப்பெரிய எரிமலை, இந்தோனேஷியாவின் சும்பாவா (Sumbava) தீவில் உள்ள, டாம்போரா(Tambora) மலையில்தான் வெடித்ததாம். 1815 ஆம் ஆண்டு வெடித்துச் சிதறிய இந்த எரிமலைக்கு, ஒரு லட்சம் மக்கள் பலியானார்களாம்! உலகின் மிகப் பெரிய எரிமலைகள், இந்தோனேஷியாவில் சுமார் 76 இருக்கின்றன என்கிறது அமெரிக்காவின் ஒருஆய்வு!
- பெரும்பாலான எரிமலைகள், பூமியின் மேற்புறத்தின் விளிம்புகளில்தான் ஏற்படுகின்றனவாம். ஆனால், சூப்பர் எரிமலைகள் பூமியின் ஆழ்பகுதிகளில் தீக்குழம்புகளுடன் மறைந்திருக்கின்றனவாம். அப்படியா சங்கதி….?!
- உலகின் தீ-பனிக்கட்டி நாடு என்றழைக்கப்படும் ஐஸ்லாந்து நாடு, எரிமலைகளின் மேலேதான் உட்கார்ந்து இருக்கிறதாம்?!. 2010 ஏப்ரலில் ஏற்பட்ட Eyjafjallajokull volcano என்னும் எரிமலை, 1783 ஆம் ஆண்டின் ஸ்கப்டார் (Skaptar) மலையில் ஏற்பட்டு, ஐஸ்லாந்து நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு மக்களையும், விளைநிலம் மற்றும் மீன்பிடி குளங்களையும், காவு வாங்கிய எரிமைலையைவிட அளவில் சற்றே சிறியதாம்!
- கடந்த 1991 ஆம் ஆண்டு, பிலிப்பின்ஸ் நாட்டின், பினாடூபோ (Pinatubo) மலையில் வெடித்துச் சிதறிய எரிமலை, 22 மில்லியன் டன் சல்ஃபர் டை ஆக்சைடு என்னும் வேதிப்பொருளை (அமிலம்) கக்கியதோடு, உலகின் வெப்ப நிலைவயில் 0.5 டிகிரி செல்சியஸ் அளவிற்க்கு குறைத்துவிட்டதாம்?! அடேங்கப்பா….!!
- எரிமலைகள் வளரும் தன்மையுடையனவாம்! லாவா குழம்பும், சாம்பலும் சேர சேர, எரிமலைகளுக்கு அவை, பல்வேறு படிமங்களையும், உயரத்தையும் ஏற்படுத்திவிடுமாம். இப்படித்தான் பல மலைகளும் உருவாகின்றன என்கிறது அறிவியல் ஆய்வு!
- எரிமலைகள் முற்றிலும் அழிந்தும் போகக்கூடிய தன்மை உடையவையாம்!
- எரிமலைகளின் சக்தியானது, மாக்மா (Magma) குழம்புகளை ஒரு மிகப்பெரிய கிண்ணம் போன்ற வடிவத்தில் உருவாக்கிவிடும் தன்மை கொண்டவையாம். இவற்றை கால்டெரா (Caldera) என்கிறார்கள் ஆங்கிலத்தில்!
- உலகின் மிகப்பெரிய எரிமலையானது ஹவாயின் “மாய்னா லோவா (Mauna Loa)” தானாம். ஹாவாயின் 5 எரிமலைகளுக்குள் ஒன்றான இது, கடல் அளவிலிருந்து 13,000 அடி உயரத்தில் இருக்கிறதாம். ஹவாய் தீவுகளே இத்தகைய எரிமலைகளால் உருவானவைதானாம்!
- எரிமலைகள், சூரியன் மறைவை மிக வண்ணமயமாக்கிவிடுமாம்! கடந்த 2008 ஆம் ஆண்டு, அலாஸ்காவின், காசாடோச்சி (Kasatochi) எரிமலை வெடித்துச் சிதறியபோது, உலக மக்கள் அனைவரும் வித்தியாசமான, அசாதாரணமான அழகுடன் ஆரஞ்சு வண்ண சூரியன் மறைவை காண முடிந்ததாம். இம்மாதிரியான நிகழ்வு, எரிமலையின் சாம்பல்கள் சூரியக் கதிர்களுடன் இணையும்போது ஏற்படுபவையாம்!
இதுவரைக்கும் எரிமலைகள் பத்தி படிக்கத்தான செஞ்சீங்க, அதனால உங்கள்ல சில பேருக்கு, “இதுல என்ன பெரிய திகிலு, இது எல்லாம் ஒரு சப்ப மேட்டரு” அப்படீன்னுகூட தோனலாம். உண்மையாவே திகிலடையனும்னா வாங்க, வெடிக்கும் எரிமலைகளோட இருக்குற இந்த காணொளிகளப் பார்ப்போம்……
ஹாவாயின் மாவ்னா லோவா (Mauna loa) எரிமலை!
லாவா குழம்பைக் கக்கும் எர்மலையின் தத்ரூபமான டை லாப்ஸ் காணொளி!
உலகின் மிகப்பெரிய 10 எர்மலைகளின் தொகுப்பு!
என்னங்க, எரிமலை……பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல…… 😉
HARESH NARAYAN
ஏப்ரல் 20, 2010
இதுவரை தமிழ் சினிமாவின் ஹீரோவின் தன்மையை ஒப்பிட மட்டுமே பயன்பட்ட எரிமலையில் இத்தனை மேட்டர் இருக்கிறதா..! ஆச்சர்யம்தான், வீடியோ பார்க்க அழகாகவும், அதே நேரம், ஆபத்தை எண்ணி பயமாகவும் இருக்கிறது. அழகென்றாலே ஆபத்துதான் என்ற பழமொழி இந்த எரிமலைகளுக்கு மிகவும் பொறுந்தும் போலிருக்கிறது. கலக்கல் போஸ்ட்! தொடருங்கள் ஹரிஜி!
–
DREAMER
padmahari
ஏப்ரல் 20, 2010
//அழகென்றாலே ஆபத்துதான் என்ற பழமொழி இந்த எரிமலைகளுக்கு மிகவும் பொறுந்தும் போலிருக்கிறது. கலக்கல் போஸ்ட்! தொடருங்கள் ஹரிஜி! //
உண்மைதான். பாராட்டுக்கு நன்றி ஹரீஷ், உங்க ஆதரவு தொடரட்டும். மீண்டும் சந்திப்போம்!
வித்யாசாகர்
ஏப்ரல் 20, 2010
வணக்கம் மதிப்பிற்குரியோரே,
எரிமலை பற்றி அறிய ஆவலுற்றிருந்த நேரம் தங்களின் இப்பதிவு பெரும் விவரங்களை அறியத் தந்தது. தங்களுக்கான மனதார்ந்த நன்றிகளை தெருவிக்கிறேன்.
வித்யாசாகர்
padmahari
ஏப்ரல் 20, 2010
வாங்க நண்பரே,
வணக்கம். முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!
//எரிமலை பற்றி அறிய ஆவலுற்றிருந்த நேரம் தங்களின் இப்பதிவு பெரும் விவரங்களை அறியத் தந்தது.//
உங்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் என் பதிவு அமைந்திருந்ததை எண்ணி மிக்க மகிழ்ச்சி! உங்கள் ஆதரவு மேலிருப்பானுக்கு அவசியம் தேவை. தொடர்ந்தும் இணைந்திருங்கள். மற்றுமோர் அறிவியல் பதிவில் சந்திப்போம்!
Mushafi
ஏப்ரல் 20, 2010
தற்போதுதான் உங்கள் வலைத்தளத்தை பார்க்க நேரிட்டது. நல்ல பல அறிவுபூர்வமான தகவல்களோடு நிறைவாக இருக்கிறது.வாழ்த்துகள்.
padmahari
ஏப்ரல் 20, 2010
வாங்க முஷாஃபிர்,
முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
//நல்ல பல அறிவுபூர்வமான தகவல்களோடு நிறைவாக இருக்கிறது.//
உங்களின் இம்மறுமொழி என் மனதுக்கு நிறைவை தந்தது. என் பிற பதிவுகளைப் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களை அறிய ஆவல். மேலிருப்பானுக்கு உங்கள் ஆதரவு தொடரட்டும், மற்றுமோர் ஆச்சரியத்துடன் உங்களைச் சந்திக்கிறேன்! நன்றி.
சிரவணன்
ஏப்ரல் 20, 2010
பகிர்வுக்கு மிக்க நன்றி.
padmahari
ஏப்ரல் 20, 2010
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிரவணன்! மீண்டும் சந்திப்போம்.
வெங்கடேஷ்
ஏப்ரல் 21, 2010
எரிமலைகள் என்பது மலைகள் உள்ள இடத்தில் மட்டும் இருக்கின்றதா இல்லை சமவெளிப் பகுதிகளிலும் இருக்குமா, இந்தியாவில் எரிமலைகள் இருக்கின்றதா.
பூமிக்குள் பதுங்கி இருக்கும் பாறைகள் பூமியின் மேற்புறத்தை பார்ப்பதற்க்காக ஆவலாக
வெளியே வருவதற்கு பெயர் எரிமலை என்றால், எங்கெங்கோ பதுங்கி இருக்கும் தகவல்களை எங்களுக்காக வெளியே கொண்டுவரும் தங்களுடைய பதிவுகளும்
ஒருவகையில் எரிமலைப் பதிவுகள் தான். ஊக்கம் தான் ஒரு மனிதனை மேலும் மேலும் முன்னேறுவதற்க்கு ஊக்குவிக்கும். ஒரு வகையில் இதுவம் எங்களுடைய சுயநலம் தான் ஏன் தெரியுமா நண்பரே? அப்பொழுது தான் எங்களுக்கும் புதுப்புது
தகவல்கள் கிடைக்கும். வாழ்த்துக்கள்
padmahari
ஏப்ரல் 21, 2010
உங்க கேள்வி கனைகள்லேயிருந்து தப்பிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்….. 😉
//எரிமலைகள் என்பது மலைகள் உள்ள இடத்தில் மட்டும் இருக்கின்றதா இல்லை சமவெளிப் பகுதிகளிலும் இருக்குமா, இந்தியாவில் எரிமலைகள் இருக்கின்றதா.//
எரிமலைகள் பெரும்பாலும் மலைகள் உள்ள இடங்களில் மட்டுமே தோன்றும். சமவெளிகளில் தோன்றியதாக வரலாறு இல்லை! ஆனால் சில எரிமலைகள் மலைகளல்லாத இடங்களில் ‘பெரும் குழிகள்’ போல தோற்றமளிப்பதாக சில கூற்றுகளும் உண்டு. மேலும் விவரங்களுக்கு…..
http://www.encyclopedia.com/topic/volcano.aspx
//இந்தியாவில் எரிமலைகள் இருக்கின்றதா.//
உண்டு. Deccan Traps, Narcondum, Barren Island, Barren 1, Unnamed
மேலதிக விவரங்கள் இங்கே…..http://www.volcanolive.com/india.html
மறுமொழியிலேயே கலக்குறீங்க வெங்கடேஷ்……நன்றி!
தணிகாசலம்
ஏப்ரல் 21, 2010
கட்டுரையின் விடயங்களைவிட நீங்கள் அதைப் படைத்த பாணி படு ஜோர்.
இதிலுள்ள பல விடயங்கள் புதியவைதான்(எனக்கு). ஒரெயொரு சலிப்பு.
காணொளிகளைக் காணமுடியவில்லையே!. அது எவ்வாறு? மற்றது, இந்த சும்பாவா, டம்போரா, பினாடூபோ வற்றை அடைப்பில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டால்
என்ன குறைந்தா போய்விடுவீர்கள்.
அடுத்த கலக்கல் என்ன ? சுனாமியா? ம் வெளுத்துக்கட்டுங்கள்.
padmahari
ஏப்ரல் 21, 2010
//கட்டுரையின் விடயங்களைவிட நீங்கள் அதைப் படைத்த பாணி படு ஜோர்.
இதிலுள்ள பல விடயங்கள் புதியவைதான்(எனக்கு).//
அப்படிங்களா….ரொம்ப நன்றிங்க!
//ஒரெயொரு சலிப்பு. காணொளிகளைக் காணமுடியவில்லையே!. அது எவ்வாறு?//
ஐய்யய்ய…..அப்படியா? என் தளத்துல (இணைய உலாவி, Browser) நல்லாதாங்க தெரியுது. ஒரு வேள உங்க உலாவியில ஏதும் பிரச்சினையோ?!. சரி ஒன்னும் கவலைப்படாதீங்க. காணொளிகளை இங்கே போய்ப் பாருங்க,
//மற்றது, இந்த சும்பாவா, டம்போரா, பினாடூபோ வற்றை அடைப்பில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்.//
சத்தியமா இல்லீங்க 😉 நீங்க குறிப்பிட்டிருக்கிற அந்த வார்த்தைகள் மட்டுந்தான் விட்டுப்போச்சு. இப்போ மாத்திட்டேன், பாருங்க!
//அடுத்த கலக்கல் என்ன ? சுனாமியா? ம் வெளுத்துக்கட்டுங்கள்.//
ஏதோ உங்க புண்ணியத்துல, ஒரு சுவாரசியமான விஷயத்த பதிவு செய்யலாம்னு உத்தேசம். உங்க ஆதரவு மட்டும் குடுங்க, அப்புறம் பாருங்க…..நம்ம (பதிவு) ஆட்டத்த 😉
முதல் வருகைக்கும், வெளிப்படையான கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றிங்க!
bama
ஓகஸ்ட் 13, 2012
ROMMBA NALLA IRUKKUTHU.VALLTHUKKAL
dhatchinamurthy
ஒக்ரோபர் 30, 2016
நல்லது
dhatchinamurthy
ஒக்ரோபர் 30, 2016
ரொம்ப நல்லது