மருத்துவம்: பார்வையை மீட்டுக் கொடுத்த ஜீன் தெரபி!

Posted on நவம்பர் 15, 2009

8


Corey-Haas-150x150“கோரி ஹாஸுக்கு ஏழு வயதானபோது, அவன் கூடவே பிறந்த கண் பார்வை சம்பந்தமான நோய், அவன் பார்வையை கிட்டத்தட்ட முழுவதுமாய் அழித்துவிட்டிருந்தது. அதன்பின்னர் கோரி என்னையோ, என் மனைவியையோ சார்ந்தே வாழ வேண்டியதாயிற்று” என்கிறார் கோரி ஹாஸின் தந்தை ஈதன் ஹாஸ்!

அன்றிலிருந்து கோரி பெரும்பாலும் ஒரு பிரம்பின் உதவியோடும், பெரியவர்களின் உதவியுடனுமே அன்றாடப் பொழுதுகளை கழிக்க ஆரம்பித்தான்.

பள்ளியில் கரும்பலகையின் எழுத்துகளை பார்க்க இயலாததால் ஒரு ஆசிரியரின் உதவியோடு, ஒரு பெரிய  கணினித் திரைக்குமுன்னெ தன் பள்ளிப்பொழுதுகளைக் கழித்தான்!

வெளியுலகத்திற்கு கண்பார்வையற்றவனான கோரி, சிறிது காலங்களில் தன் பார்வை முழுவதையும் இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான். 13 மாதங்கள் கழித்து, தன் எட்டாவது பிறந்த நாளுக்குப்பின் ஒரு நாள், சோதனை முறை ஜீன் தெரபிக்கு உள்ளாகி தன் இடது கண்ணில் ஒரு ஊசி போட்டுக்கொண்டான் கோரி!

என்ன ஆச்சரியம், கோரியின் இடது கண் பார்வை நன்றாக தெரிய ஆரம்பித்திருந்தது!

தற்போது 9 வயதாகும் கோரி, நியூயார்க்கின் ஹாட்லி நகரில் பேஸ்பால் ஆடுகிறான், நடைவண்டி ஓட்டுகிறான், பள்ளியின் கரும்பலகைகளின் எழுத்துகளை வாசிக்கிறான். மேலும் தன் கண் பார்வை மிக நன்றாக இருப்பதாக சொல்கிறான்!

ஆமாம், பிறவியிலிருந்து கண் பார்வை இழந்த ஒரு சிறுவனுக்கு திடீரென்று எப்படி கண் பார்வை கிடைத்தது? இது எப்படிச் சாத்தியமாயிற்று? இதுதானே உங்கள் கேள்வி?!

இந்த அதிசயத்திற்கு காரணம் “கண்களுக்கான ஜீன் தெரபி”! கண் பார்வை இல்லாத எத்தனை பேருக்கு இந்த வகையான ஜீன் தெரபி சிகிச்சை பலனளிக்கும் என்பது இன்னும் தெரியவில்லையென்றாலும், இந்த சிகிச்சை முறையானது கண்டிப்பாக சில வகை கண்பார்வை நோய்களுக்கு நிறைந்த பலனளிக்கும் என்று நம்பிக்கையூட்டுகிறார்கள்!

“லான்செட்” என்னும் இங்கிலாந்து  நாட்டு அறிவியல் இதழில் ( journal Lancet) வெளியாகியுள்ள இந்த ஆய்வில்  கலந்து கொண்ட 5 குழந்தைகள் மற்றும் 7 பெரியவர்களுக்கு “லெப்பர்ஸ் கான் ஜெனிட்டல் அமாரோசிஸ்” (Leber’s congenital amaurosis) என்னும் பிறவிக்கண்பார்வை நோய் “ஜீன் தெரபி சிகிச்சை” மூலம் குணமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

அறிவியல் எல்லாம் வல்லது என்று சொல்லமுடியாதென்றாலும், “பிறவியிலேயே இழந்த பார்வையைக் கூட மீட்டுத்தற வல்லது”, என்று நிச்சயம் நம்பலாம் என்பதையே காட்டுகிறது இந்த ஆய்வு! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இச்செய்தியை மேலும் விரிவாக படிக்க இங்கு செல்லுங்கள்

குறிச்சொற்கள்: ,