அறிவை வளர்க்க “மூளை” மாத்திரைகள்?!

Posted on மார்ச் 29, 2010

9


சின்ன வயசுல, என்னை மாத்திரை விழுங்க வைக்கிறதுக்குள்ள எங்கம்மாவுக்கு போதும் போதும்னு ஆயிடும். ஏன்னா, நாம மாத்திரை விழுங்காம தப்பிக்கிறதுல பெரிய கில்லாடி. இப்படித்தான் ஒரு முறை எதோ ஒரு உடல் உபாதைக்கு மாத்திரை சாப்பிட சொன்னப்போ, சாப்பிடவே மாட்டேன்னு ஓடிக்கிட்டு இருந்திருக்கேன். சரி, இவன்கிட்ட சாதுவா பேசினா வேலைக்காகாதுன்னு அதிரடியா என்னோட அக்காவை என்னை பிடிச்சிக்க சொல்லிட்டு மாத்திரையை போட முயற்ச்சி செஞ்சுருக்காங்க.

நாம யாரு….சிங்கமுல்ல, எதேதோ சத்தம் போட்டு ஒன்னும் முடியலைன்ன உடனே, யாருக்குமே புரியாத ஒரு வார்த்தையை சொல்லி சத்தம் போட்டு கத்தியிருக்கேன். ஒன்னும் புரியாத அம்மா, “ஐய்யய்யோ என் பையனுக்கு என்னவோ ஆயிடுச்சு அவனை விடு”, அவன் மாத்திரை சாப்பிடலைன்னா பரவாயில்லைன்னு சொல்லி விட்டுட்டாங்க. அப்புறம் எப்பவும்போல ஜாலியா ஐயா ஊர் சுத்தக் கெளம்பிட்டேன்?!.

ரெண்டு நாள் கழிச்சு என்கிட்ட அம்மா, “டேய் என்னடா சொன்னே அன்னிக்கு மாத்திரை சாப்பிட சொன்னப்போ”ன்னு  கேட்டாங்க. ரொம்பச் சாதரணமா தெரியாதுன்னு சொல்லிட்டேன். (உண்மை என்னன்னா, என்ன சொன்னேன்னு இதுவரைக்கும் எனக்கே தெரியாது?!)

ஏன் இந்தக் கதையைச் சொல்றேன்னா, பொதுவா சின்ன வயசுல நம்மில் பல பேரு, மாத்திரை விழுங்க நெறைய அடம்பிடிப்போம். காரணம் என்னன்னா, மாத்திரை கசக்கும் அப்படீங்கிற ஒரு சின்ன விஷயம்தான். (இந்தக் காலத்துல அனேகமா, குழந்தைங்க அடம் பிடிக்காம சாப்பிடுற மாதிரி மாத்திரைகள் வந்தாச்சுன்னு  நெனக்கிறேன்.) சரி பதிவுச் செய்திக்கு வருவோம்….

“மூளை” மாத்திரைகள் (Brain pills)!

"மூளை மாத்திரைகள்" படம்:istockphoto

பொதுவா மாத்திரை எதுக்கு கொடுக்குறாங்க? ஒன்னு உடல் உபாதைக்காக அப்படி இல்லைன்னா, உடலில் சக்தி ஏற்படுவதற்க்காக. உதாரணமா, வைட்டமின், தாது மாத்திரைகளச் சொல்லலாம். ஆனா, உங்களுக்கு தெரியுமா இப்பெல்லாம் “அறிவை” வளர்க்க (?) மாத்திரை சாப்பிடுகிறார்களாம். இந்த பழக்கம் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள்ல சமீபகாலமா வழக்கத்துல இருக்குதாம்.

இந்த மாத்திரைகள யாரு, எப்போவெல்லாம் சாப்பிடுறாங்கன்னு பார்த்தா,

  • கல்லூரி மாணவர்களும், பெரிய நிறுவன மேலதிகாரிகளும் தத்தம் அறிவு சார்ந்த செயல்களை மேம்படுத்துவதற்க்காக சாப்பிடுறாங்களாம். அப்படியா…?!

இதுல வேடிக்கை என்னன்னா, இந்த வகையான மாத்திரைகள் FDA போன்ற அரசு கண்கானிப்பு நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படவில்லை அப்படீங்கிறதுதான். ஆனாலும், சில அறிவியல் வல்லுனர்கள் மற்றும் நரம்பியல் நிபுனர்களும் இத்தகைய “அறிவு ஊக்கி” மாத்திரைகளை, டிமென்ஷியா(Dementia) போன்ற நோய்களால் பாதிக்கப்படாத, ஆரோக்கியமான மக்களும் உட்கொள்ளலாம் அப்படீன்னு சொல்றாங்களாம்! என்ன கொடுமை சரவணன் இது?!

இது இப்படியிருக்க, ஒருவருடைய மூளைச் செயல்பாட்டினை பாதிக்கும் எந்தவொரு மருந்து/மாத்திரையையும், நாம் தினம் உட்கொள்ளும் காபி/தேனீர் போல உட்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள் அல்லது அம்மருந்துகள் பாதுகாப்பானதுதானா என்பதைப் பற்றிய கேள்விகள் இன்னும் விடையில்லாக் கேள்விகளாகவே இருக்கின்றன என்பதுதான் நிதர்சனம்?!

இதையெல்லாம் படிச்சிட்டு உங்கள்ல சிலர், “ஆமா, சும்மா கெடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டிங்கிற மாதிரி, எதுக்கு இந்த வீண் விஷப்பரீட்சை எல்லாம்” அப்படீன்னு கேக்கலாம். அதாவது, நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்க, “ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுன்னு”, அப்படித்தான் இதுவும்.

நாளைய H+ மனிதன்!

ஏன் அப்படிச் சொல்றேன்னா, இந்த மூளை மாத்திரை மாதிரியான விஷயங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் H+ மனிதன் அப்படீங்கிற ஒரு மேம்படுத்தப்பட்ட மனிதனுக்கான தேடல். அதாவது, சுருக்கமா சொல்லனும்னா  “மனிதன்+” அப்படீங்கிற ஒரு “புத்துலக மனித வடிவம்”னு வச்சிக்குங்களேன். நாம இதப்பத்தி இன்னும் விரிவா அடுத்த பதிவுல பார்ப்போம்!

இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, மூளையோட செயல்பாட்டை அதிகரிக்க மாத்திரையெல்லாம் கண்டுபிடிச்சி சாப்பிட ஆரம்பிச்சிட்டதுனால, அடுத்த மனிதனுக்கான தேடல் வெறும் பேச்சளவில இல்லாம செயல்வடிவத்துல வெளிப்பட ஆரம்பிச்சாச்சு மக்களே!

இதப் பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க…..?

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின் பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

குறிச்சொற்கள்: , , , , , , ,