தினத்தந்தியில் எனது தொடர்….அறிவியல் ஆச்சரியங்கள்!

December 24, 2011

1

வைரஸ்

வணக்கம். எல்லாரும் நல்லாயிருக்கீங்களா? உங்களை எல்லாம் சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சு. சொந்த வேலைகள் காரணமா வலைப்பக்கமே வர முடியல. ஆனா இப்போ வந்துட்டோம்ல. உங்க எல்லாருடைய ஊக்கத்துனால எழுத்தாளரான நான், நண்பர், எழுத்தாளர் சேவியர் அவர்களுடைய அன்பினால் தினத்தந்தி இளைஞர் மலரில் “அறிவியல் ஆச்சரியங்கள்” எனும் ஒரு அறிவியல் தொடர் எழுத ஆரம்பிச்சிருக்கேன். பத்திரிகைகளில் அறிவியல் தொடர்பாக நான் “தொடர் கட்டுரை” எழுதுவது இதுவே முதல் முறை. அதுவும் தினத்தந்தி போன்ற கோடிக்கணக்கான வாசகர்களைக் கொண்ட… [Read more…]

மருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள், ‘தசைகளையும் வளர்க்கிறது’ இப்போது!!

செப்டம்பர் 17, 2011

5

என்னங்க, எல்லாரும் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா? என்ன அப்படி பார்க்குறீங்க? ஆஹா, இந்த மேலிருப்பான் திரும்பவும் ஆப்பிளோட வந்திருக்கானே….., இந்த முறை என்னத்த சொல்லப்போறானோ அப்படீன்னு பார்க்குறீங்களா? அட, அது வேற ஒன்னுமில்லீங்க! ஆப்பிள், குறைந்தபட்சம் இருதய நோய் சம்பந்தப்பட்ட காரணங்களுக்காகவாவது மருத்துவரை கண்டிப்பா தூரத்திலே வைக்கக் கூடிய திறன் கொண்டது அப்படீன்னு முந்தைய ஆப்பிள் பதிவுல பார்த்தோம் இல்லீங்களா? இப்போ என்னடான்னா, “ஆப்பிள் மருத்துவரை தூர வைக்கிறதோடு மட்டுமில்லாம, நம்ம உடலில் இருக்குற… [Read more…]

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

ஜூன் 29, 2011

12

Image credit: www.flickr.com

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு. அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச, கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா? அப்படி எனக்கு தெரிஞ்ச ஒரு யுக்தி என்னன்னா, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை… [Read more…]

“நியாபக மறதி குறைபாடு” அதிகம் தாக்குவது ஆண்களையே; ஆய்வு!!

ஜூன் 24, 2011

4

Image: Google

நியாபகம் வருதே….. நியாபகம் வருதே….. நியாபகம் வருதே…..! பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் நியாபகம் வருதே…..!! அப்படீன்னு தொடங்குற சேரனின் ஆட்டோகிராப் படப் பாடல முனு முனுக்குறது நம்ம எல்லாருக்குமே பிடிக்கும்! இதுல ஆண்-பெண், பெரியவர்-சிறியவர் அப்படீங்கிற பாரபட்சமெல்லாம் கிடையாதுன்னு நெனக்கிறேன். ஆனா, நம்மளோட பழைய நினைவுகளை எல்லாம் நல்லா நியாபகம் வச்சிருந்தாதானே, அந்த நினைவுகளோட நியாபகம் வந்து இந்த மாதிரி நியாபகம் வருதே அப்படீன்னு பாட முடியும்?! ஆமா, அதுக்கு என்ன இப்போ? அப்படீன்னுதானே… [Read more…]

“ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்” மருத்துவரை தூர வைக்கும்?! இது அறிவியல்பூர்வமாக உண்மையா???

ஜூன் 22, 2011

11

apple-full2

பழமொழி அப்படீங்கிறது, நம்ம முன்னோர்கள் சொல்லி, அது வழிவழியாக பேச்சுவழக்கில் பயன்படுத்தப்பட்டு, (பொருள் தெரியுதோ/புரியுதோ இல்லியோ) நாமளும் வாய்ப்பு கிடைக்கும்போது, குறிப்பிட்ட ஒரு சூழ்நிலைக்கு ஒரு பழமொழி பொருத்தமாயிருக்கும்னு நம்ம்ம்ப்பி அப்பப்போ, அங்கங்கே சொல்றோம் இல்லீங்களா? உதாரணமா சொல்லனும்னா, “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” “குரைக்கிற நாய் கடிக்காது” “பாம்பின் கால் பாம்பறியும்” இப்படி நம்மூர்ல நெறைய பழமொழி இருக்குது (எனக்கு இப்பொ நியாபகம் வந்தது இவ்ளோதான்…..ஹி ஹி). ஆனா இம்மாதிரியான… [Read more…]

என்னது அவருக்கு புற்றுநோயா? ஐயய்யோ…..அப்போ அவரு அவ்வளவுதானா??!!

ஜூன் 13, 2011

6

புற்றுநோய் நூல்

என்னங்க அப்படிப் பார்க்குறீங்க?! ஐயய்ய, நீங்க நினைக்கிற மாதிரி (?) பதிவு சுவாரசியத்துக்காகவோ அல்லது கற்பனையாகவோ எழுதின தலைப்பு இல்லீங்க இது! இதுதான் யதார்த்தம். “புற்றுநோய்” அப்படீங்கிற வார்த்தையை காதில் வாங்கினாக்கூட நாம வாழுற இந்த சமூகம் நம்மை இப்படித்தான் எதிர்கொள்ளும்! புற்றுநோய் குறித்த அறியாமையும், அவலநிலையும்! புற்றுநோய் என்றால் என்ன? அப்படீங்கிற கேள்வியில ஆரம்பிச்சி, அது ஏன் உருவாகிறது, அதற்கான காரணங்கள் என்ன, உடல் ஆரோக்கியத்துக்கும் உயிர் வாழ்வதற்கும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன இப்படி… [Read more…]

குடலுக்குள் கோடிக்கணக்கில் பாக்டீரியாக்கள்; வெளிவரும் அதிர்ச்சி கலந்த பல ஆச்சரியங்கள்!!

ஜூன் 7, 2011

7

"குடல்வாழ் பாக்டீரியா"

நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும் “சுத்தம் சோறு போடும்” அப்படீன்னு! ஆனா, அந்த சுத்தத்துக்கு முதல் எதிரி கிருமிகள். கிருமிகள்னா கண்ணுக்கு தெரியுற கிருமிகள் மட்டுமில்ல, கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களான புழுக்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ் இதெல்லாம் சேர்த்துத்தான். நமக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும், நம்ம உடலோட ஒட்டி உறவாடுற நுண்கிருமிகள்ல முதன்மையானது பாக்டீரியாக்கள்தான். ஏன்னா, நம்ம உடலின் தொடக்கமான தலைகள்ல ஆரம்பிச்சு கால்கள் வரைக்கும் மிகவும் அதிகப்படியான எண்ணிக்கையில், 24 மணி நேரமும் நமக்கு தெரியாமலேயே நம்முடலுடன்… [Read more…]

ஊரை ஏமாற்றி கொள்ளையடிக்கும் AVA! அதை ஊக்குவிக்கும் AIR INDIA!!

மே 16, 2011

13

ava-logo

எல்லாருக்கும் வணக்கம். நல்லா இருக்கீங்களா? ஊருக்கு போய்ட்டு வந்தோமே, சரி ஒரு பதிவு போட்டு வேர்டுப்றஸ் வலையகத்துல ஒரு அட்டென்டன்ஸ் போட்டுடலாம்னு பார்த்தா, அது ஒரு விழிப்புணர்வு பதிவா ஆகிப்போச்சு! அதனால நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணாதீங்க, இதுலயும் நிறைய சுவாரசியங்கள் இருக்குங்க! வாங்க அது என்னன்னு பார்ப்போம்….. அணு உலை பாதிப்பிலேர்ந்து ‘வெற்றிகரமா’ தப்பிச்சு(?), கொஞ்ச நாளைக்காவது நிம்மதியா இருக்கலாமுன்னு இந்தியா பக்கம் வந்தா, வந்து இறங்கின உடனே “வாப்பா வா, வந்துட்டியா? உன்னத்தான் ரொம்ப… [Read more…]

ஜப்பானில் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள், கதிரியக்க அளவுகள்; ஒரு பார்வை!

April 2, 2011

6

ஜப்பானில் இன்னும் சரிசெய்யப்படாத அணு உலைகளினால், சுற்றுச்சூழலுக்குள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுவரும் கதிரியக்க கழிவுகள் ஜப்பானிய மற்றும் உலக மக்களிடையே பல்வேறு பயங்களையும், பெரும் குழப்பங்களையும் ஏற்படுத்தி வருவது நாமனைவரும் அறிந்ததே. அது தொடர்பான சில அதிகாரப்பூர்வ செய்திகளை படிக்க நேர்ந்ததும், உடனே அதனை உங்களுடன் பகிர வேண்டும் என்ற உந்துதலால் ஒரு பதிவை எழுதினேன். ஆனால் அதனை முழுமையாக முடிக்க போதிய நேரமின்மையால் அரைகுறையாக நிறுத்திவிட்டு தொடரும் போட வேண்டிய சூழல். அதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்காக என்னை… [Read more…]

ஜப்பானில் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கதிரியக்கம்! உண்மை நிலவரம்தான் என்ன?

மார்ச் 31, 2011

11

படம்: கூகுள்

ஜப்பானின் ஃபுகுஷிமாவிலுள்ள தாய்இச்சி அணுமின் நிலைய 4 அணுஉலைகளின் கூரைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச்சிதரியது குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதை எழுதிய பின்னர், கடந்த 15 நாட்களாக அணு உலைகளில் வெடிப்போ, பெரிய அசம்பாவிதமோ எதுவும் ஏற்படவில்லை என்பது ஒரு பெரிய ஆறுதல். ஆனால், அணு உலைகளை குளிர்விக்கும் பொருட்டு உட்செலுத்தப்படும் கடல் நீர், சில தினங்களுக்கு முன் நிறுத்தப்பட்டு, அமெரிக்காவிலிருந்து கப்பல் மூலம்… [Read more…]

அடைகாத்துக் கொண்டிருக்கப்படும் அணுவென்னும் அபாயம்!! மக்கள்: யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்??!!

மார்ச் 15, 2011

10

Picture: smh.com.au

சிறிய விஷயத்தை ஊதிப்பெரிதாக்குவதாக முந்தைய இடுகையில் ஊடகங்களை குறைகூறிய நான், பூதாகரமாக வெடிக்கக்கூடிய ஒரு விஷயத்தை புஸ்வானம்போல காட்டி (?), “ஒன்னும் பிரச்சினையில்ல சமாளிச்சிடலாம்” என்பதுபோல சப்பைகட்டு கட்டிக்கொண்டிருக்கிறதா இந்த ஜப்பானிய அரசு என்று ஒரு கேள்வியை எழுப்பி, இந்த பிரச்சினை குறித்த உங்களனைவரின் அபிப்ராயங்களை தெரிந்துகொள்ளலாமென்று இந்த சிறு இடுகையை பதிவு செய்ய எண்ணினேன்! கடந்த 1945 ஆம் ஆண்டு, ஜப்பானின் ஹிரொஷிமாவும், நாகசாக்கியும் அமெரிக்க அணுகுண்டினால் தாக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட பேராபத்து/பாதிப்புகளுக்குப்பின் ஜப்பான் சந்தித்திருக்கும்/சந்திக்கும்… [Read more…]

ஜப்பானில் அணு உலைகளின் கூரைகள் வெடிப்பு; சில அறிவியல் விளக்கங்கள்…..

மார்ச் 14, 2011

51

படம்: கூகுள்

என்னங்க, எல்லாரும் தொலைக்காட்சியில் வந்த ஜப்பான் பூகம்ப/சுனாமி செய்திகளை பார்த்தீங்களா? 8.9 ரிக்டர் அளவிலான பூகம்பமும், 30 அடி உயர ஆழிப்பேரலைகளுடன்கூடிய சுனாமியும் ஜப்பானைத் தாக்கிவிட்டு, வந்த வேலை முடிந்ததும் (?) போய்விட்டன. இவையிரண்டும் ஏற்படுத்திய பேராபத்துகளின் பாதிப்பு என்ன, இவற்றால் காணாமல் போன 100 பேர் கொண்ட கப்பல், பல நூறு/ஆயிரம் பயணிகளை தாங்கிய 3 ரயில்கள் என்னவாயின போன்றவற்றை துல்லியமாக கண்டறியவே சில வாரங்கள்/மாதங்கள் ஆகும் என்பதுதான் நிதர்சனம் எனும் வேளையில்……. இடைவெளிகள் விட்டு… [Read more…]

சுனாமியின் கோரமுகம் ஜப்பானின் பக்கம்!! மக்களோ சகஜநிலையை நோக்கி…..

மார்ச் 13, 2011

34

படம்: PTI graphics

சிறு நகைச்சுவை பூச்சுகளுடன் வேர்டுபிரஸ் மூலம் அறிவியலை தமிழில் சொல்லி வந்த எனக்கு, இந்த ஒன்றரை வருட பதிவுப்பயணத்தில் முதல் முறையாக ஒரு இக்கட்டான சூழல்! அது, தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் காட்சிகளாக செய்திகளாக நீங்கள் பார்த்த, படித்த நிகழ்வுகளை ஜப்பானிலேயே சற்று (வெகு) தொலைவில் இருந்து பார்த்த, கேட்ட அனுபவத்தினை பகிர்ந்துகொள்ள/பதிவுசெய்ய வேண்டிய கடமையே! (கண்ட காட்சிகளையும், கேட்ட செய்திகளையும் என்னைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளாக எண்ணி ஜீரணிக்கவே வெகு நேரம் பிடித்தது எனக்கு! கனத்துப்போன மனது ஏனோ… [Read more…]

உலகின் முதல் “செயற்கை இதயம்” அமெரிக்க நோயாளிக்கு பொறுத்தப்பட்டது!!!

பெப்ரவரி 4, 2011

16

சின்கார்டியாவின் செயறகை இதயம் (படம்: விக்கிப்பீடியா)

இதயமே….. இதயமே….. உன் மௌனம் என்னை கொல்லுதே….. இதயமே! காதலில் மௌனமாகிப்போகும் இதயம் காதலை மட்டும்தான் கொல்லும்! ஆனால், நோய்வாய்ப்பட்டு மௌனமாகிப்போகும் ஒரு இதயம் சம்பந்தப்பட்ட மனிதரையே கொன்றுவிடும்!! நோய்வாய்ப்பட்டு மௌனமாகிப்போகும் இதயங்களுக்கு காரணமானவை இதயநோய்கள். இதயத்தினுள்ளும், இதயத்துக்கு வேளியேயும் செயல்படும், இதயத்துடன் தொடர்புடைய ரத்த நாளங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஏற்படும் இதயநோய்கள் பலவகைப்படும். அவை…., கரோனரி இதய நோய்: இதய தசைகளான கார்டியாக் தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டுசெல்லும் கரோனரி தமனியில் அடைப்புகள் ஏற்படுவதால், மாரடைப்புக்கு… [Read more…]

உங்களின் ஒரு கையெழுத்து!மாறிவிடக்கூடும் தமிழக மீனவர்களின் தலையெழுத்து!!!

ஜனவரி 31, 2011

8

படம்: கூகுள்

கிரி படத்துல வர்ற வடிவேலு ரொம்ப நல்லவன்னு சொன்னதுக்காகவே தர்ம அடி வாங்கிக்கிட்டு நம்மள எல்லாம் சிரிக்க வச்சாரு! ஆனா, நமக்கு காலங்காலமா இந்திய தேசிய(?)த்துல நடக்குற அநியாயத்தைத்தான் அப்படி ஒரு காமெடி மூலமா சொல்லாம சொல்லிட்டு போயிருக்காரோன்னு தோனுது சில தினங்களா தமிழக மீனவர்கள் குறித்து வெளியாகும் செய்திகள்! நான் தமிழக மீனவர்கள் சமீபத்துல சுட்டுக்கொல்லப்பட்டதைத்தான் சொல்றேன்னு உங்கள்ல பலருக்கு நல்லாப்புரியும்னு நெனக்கிறேன். (அப்படிப்புரிஞ்சாலும் சிலபேர் அதைப்பத்தி நீ ஏன் எழுதுற அப்படீன்னு கேட்டீங்கன்னா, மேல… [Read more…]

ஐயோ பாவம் அமெரிக்கா….! படிங்க ஏன்னு புரியும்!!

ஜனவரி 26, 2011

12

.....?????..... (படம்: கூகுள்)

ஒரு நாடு முன்னேறனும்னா, நல்லாயிருக்கனும்னா அந்த நாட்டோட இளைஞர்களும், நாளைய இளைஞர்களான குழந்தைகளும் நல்லா படிச்சு, நல்லா வேலை செய்யனும் இல்லீங்களா? (அப்படித்தான் நான் புரிஞ்சு வச்சிருக்கேன், தப்புன்னா எப்படின்னு சொல்லுங்க!). ஒரு நாட்டோட முன்னேற்றம்னு பார்த்தா, அந்த நாட்டோட தொழில்துறை முன்னேற்றம் மிக முக்கியமான ஒன்னு. தொழில்துறை முன்னேற்றத்துக்கு அடிப்படை கல்வி! கல்வியில பல துறைகள் இருந்தாலும், தொழில்துறை முன்னேற்றத்துக்கு அடிப்படையானதுன்னு பார்த்தா அதுல அறிவியல் துறைக்கு முக்கியமான பங்கு உண்டு! அறிவியல்துறை சார்ந்த மாணவர்கள்… [Read more…]

எய்ட்ஸ் நோயிலிருந்து குணமடைந்த உலகின் முதல் மனிதன்!!! (300-வது பதிவு)

ஜனவரி 20, 2011

23

டைமொதி ரே ப்ரௌன் (படம்:Google)

எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க. “ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சுத்தான் வேட்டை நாயா ஆக முடியுமுன்னு”, அது மாதிரி நானும் இந்த வலைப்பதிவை கவிதையில ஆரம்பிச்சு, அறிவியல எழுத முயற்சி பண்ணி அப்புறம் கொஞ்ச நாளைக்கு சினிமாவுக்கு தாவி, கடைசியில ஒருவழியா இன்னிக்கு இருக்குற அறிவியல் பிரதானமான ஒரு கலவை வலைத்தளத்துல வந்து நின்னுட்டேன்! நின்னு கொஞ்சம் திரும்பி பார்த்தா, அட இது நம்ம 300-வது பதிவு! பொதுவா போரடிக்கிற அறிவியல பிரதானமா, ஆனா கொஞ்சம்… [Read more…]

காதல் தொடங்குவது கண்களிலா, இதயத்திலா இல்லை மூளையிலா? விடை சொல்கிறது ஆய்வு!!

ஜனவரி 17, 2011

9

படம்:google

காதல் காதல் காதல்…..கண்ணில் மின்னல் மோதல்…..!! காதலப்பத்தி சொல்ல, மேலே இருக்குற பாட்டு (கவிதை) வரியில சொல்லியிருக்கிற மாதிரி, ஒரு சில வார்த்தைககள்லேயே கச்சிதமா சொல்லிடலாம்?! ஆனா, காதலுக்கான இந்த மாதிரியான விளக்கங்கள இந்தக் காதால கேட்டோமா, அந்தக் காதால விட்டோமான்னு விட்டுட்டு அடுத்த வேலையப் பார்க்க போயிட்டோம்னா ஒன்னும் பிரச்சினையில்ல. அத விட்டுட்டு, ஆப்பிள் மரத்துக்கு கீழே படுத்து யோசிச்சதுனாலதான(?) (விஞ்ஞானி) நியூட்டன் புவி ஈர்ப்பு விசையெல்லாம் கண்டுபிடிச்சி பெரிய விஞ்ஞானியானாரு. அது மாதிரி, நாமளும்… [Read more…]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 196 other followers