Browsing All posts tagged under »தண்ணீர்«

சருமம் பொலிவாக வேண்டுமா? காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடிங்க… 👌

மார்ச் 18, 2022

0

மனிதர்களால் ஏன் “தண்ணீருக்குள் சுவாசிக்க” முடிவதில்லை?

ஜூலை 16, 2010

18

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: கொஞ்சம் அதிகமா கொலஸ்டிரால் இருக்குதுன்னு ரொம்ப நொந்து நூலாகிடாதீங்க. கொஞ்சம் அதிகமா இருக்குற கொலஸ்டிராலைவிட புகைப்பழக்கமும், உடல் பருமனும் இருதய நலனுக்கு மிகவும் மோசமானது! அதனால, இந்த ரெண்டு பழக்கத்தையும் முதல்ல விடுங்க அல்லது குறைங்க! கேள்வியை படிச்சவுடனே பல பேருக்கு, “என்னாதிது….? இதெல்லாம் ஒரு கேள்வியா?” அப்படீன்னு கேட்கத்தோனலாம். ஏன்னா, தண்ணீருக்குள்ளே மனிதனால சுவாசிக்க முடியாததுக்கு காரணம், தண்ணீருக்குள்ள சுவாசிக்க முயற்ச்சி செஞ்சா நுரையீரலுக்குள்ள தண்ணி போயி, பரலோகத்துக்கு மனுசன் […]

விரைவில் உறைவது எது, வெந்நீரா குளிர்ந்த நீரா?

மார்ச் 17, 2010

8

பள்ளி, கல்லூரிகள்ல வேதியல் பாடம் படிச்சப்போ, “தண்ணீரின்” சில மர்மமான குணங்களைப் பத்தி படிச்சதுண்டு! உதாரணத்துக்கு சொல்லனும்னா,வேதியல் குடும்பத்துலயே தண்ணீருக்கு மட்டும்தான் “பிரபஞ்ச திரவம் (Universal solvent)” அப்படீன்னு பேரு. ஏன்னா, கிட்டதட்ட பிரபஞ்சத்துல உள்ள எல்லாப் பொருள்களையும் கரைத்துவிடும் தன்மை கொண்டது தண்ணீர் மட்டும்தான் அப்படீங்கிறதுனால! மேல சொன்னதவிட இன்னும் மர்மமான ஒரு குணம் உண்டுங்கிறாங்க தண்ணீருக்கு! அது என்னன்னா, தண்ணீருக்கும் “நியாபக சக்தி” இருக்குதாம். இதக் கேட்டுட்டு, உங்கள்ல சிலர் “வாய்யா வா…..கேக்குறவன் கேனைன்னா, […]

மீன்கள் அழுமா?

பிப்ரவரி 26, 2010

6

மீன்கள் பற்றிய என் முந்தைய ஒரு பதிவில், மீன்களுக்கு காது கேட்குமா என்று பார்த்தோம். ஆனால், திடீரென்று மீன்கள் பற்றிய மேலும் ஒரு சுவாரசியமான சந்தேகம். அது வேற ஒன்னுமில்லீங்க, “தண்ணீரிலே மீனழுதால்……யாரறிவார்?” அப்படீன்னு தொடங்குற ஒரு பாட்டு நான் கேட்டிருக்கேன், நீங்களும் கேட்டிருப்பீங்க. இந்தப் பாட்டுக் கேக்கும்போது தோனும், “ஆமா இந்த வரி ஒரு உவமைக்காக மட்டுமே எழுதப்பட்டதா இல்ல உண்மையாவே மீன்கள் அழுமா?”, அப்படீன்னு ஒரு கேள்வி எழும் மனசுக்குள்ள. ஆனா, கொஞ்ச நேரத்துல […]

ஒட்டகத்தின் முதுகில் தண்ணீர் இருக்கிறதா?

பிப்ரவரி 24, 2010

8

எனக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். கண்டிப்பா உங்கள்ல பல பேருக்கும் அது இருக்கும்னு நெனைக்கிறேன். அது என்னன்னா, சின்ன வயசுலேயிருந்தே ஒட்டகத்தைப் பத்தி படிக்கும்போதெல்லாம் அதோட முதுகுல(Hump) தண்ணீர் இருக்குறதா நெறைய பேரு சொன்னாங்க (ஆனா எங்க வாத்தியாரு மட்டும் சொல்லலையோ?!)! அப்படி ஒட்டகத்து முதுகுல தண்ணீர் இருக்கிறதுக்கு காரணமா பொதுவா எல்லாரும் சொன்னது (கேள்விப்பட்டது) என்னன்னா, பாலைவனத்து போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுற ஒட்டகத்துக்கு திடீர்னு தண்ணீர் தாகம் எடுத்துதுன்னா, அந்த முதுகு மேட்டுல (Humpக்கு தமிழ்ல […]

தண்ணீரின்றி மனிதனால் எவ்வளவு காலம் தாக்குபிடிக்க முடியும்?

பிப்ரவரி 22, 2010

8

திடீர்னு உலகத்துல தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டாலோ அல்லது, ஒரு பாலைவனத்துல ஒரு மனுஷன் மாட்டிக்கிட்டாலோ, தண்ணியே குடிக்காம ஒரு மனுஷனால இருக்க முடியுமா? அப்படியே இருந்தாலும் அதிகபட்சம் எத்தனை நாட்கள் இருக்க முடியும்? இப்படியொரு கேள்வியே கொஞ்சம் பயமானதும், வினோதமானதும்தான் என்றாலும் இத்தகைய திறனுக்கான சாத்தியக்கூறுகள் இருக்கான்னு கேட்டா, ஆமாம் இருக்குன்னு சொல்லுது ஆய்வு. அது என்ன, எப்படின்னு பார்ப்போம் வாங்க…. கேள்வி:தண்ணீரே குடிக்காமல் மனிதர்களால் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும்? பதில்: அதிகபட்சமாய் மூன்று நாட்கள்! […]