Browsing All posts tagged under »Heart attack«

“ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்” மருத்துவரை தூர வைக்கும்?! இது அறிவியல்பூர்வமாக உண்மையா???

ஜூன் 22, 2011

11

பழமொழி அப்படீங்கிறது, நம்ம முன்னோர்கள் சொல்லி, அது வழிவழியாக பேச்சுவழக்கில் பயன்படுத்தப்பட்டு, (பொருள் தெரியுதோ/புரியுதோ இல்லியோ) நாமளும் வாய்ப்பு கிடைக்கும்போது, குறிப்பிட்ட ஒரு சூழ்நிலைக்கு ஒரு பழமொழி பொருத்தமாயிருக்கும்னு நம்ம்ம்ப்பி அப்பப்போ, அங்கங்கே சொல்றோம் இல்லீங்களா? உதாரணமா சொல்லனும்னா, “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” “குரைக்கிற நாய் கடிக்காது” “பாம்பின் கால் பாம்பறியும்” இப்படி நம்மூர்ல நெறைய பழமொழி இருக்குது (எனக்கு இப்பொ நியாபகம் வந்தது இவ்ளோதான்…..ஹி ஹி). ஆனா இம்மாதிரியான […]

மருத்துவம்: ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!

ஓகஸ்ட் 13, 2010

12

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: மிகக்குறைந்த தூக்கம் உங்கள் இருதயத்துக்கு மிகவும் ஆபத்தானது. மிக அதிகமான தூக்கம் மனச்சோர்வு நோய்க்கான அறிகுறி! அதனால், உடலுக்கு ஆரோக்கியமான 6-8 மணி நேர அளவான தூக்கத்தை கடைப்பிடிக்க முயற்ச்சியுங்கள்! ஜப்பான் நாட்டு உணவுகள்ல பொதுவா உப்பு, காரம், இனிப்புன்னு எல்லா சுவைகளுமே கொஞ்சம் குறைச்சலாதான் இருக்கும். வேலைப்பளு அதிகம் இருக்குறதுனால, நம்ம உணவு சமைச்சு சாப்பிட முடியாம பெரும்பாலும், பல்கலைக்கழக உணவகத்துல, ஜப்பான் நாட்டு உணவுகள சாப்பிடுறது வழக்கம். இப்படியே […]

ஆபத்து: மாரடைப்புக்கு பலியாகிக்கொண்டிருக்கும் இந்தியா!!

ஜூலை 11, 2010

15

இன்றைய இருதயநலக் குறிப்பு: உணவுக்கு முன் இயன்றவரை ஒரு சூப் அருந்த முயற்ச்சியுங்கள். அது நாம் உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும். குறைவாகவே சாப்பிடுங்கள் ஆனால் நாளில் பலமுறை! இது உணவுச் செரிமான வேதியல் மாற்றங்களை அதிகரிக்கும். சில வருடங்களுக்கு முன்புவரை ‘மாரடைப்பு’ அப்படீன்னா நம்ம மக்கள் மத்தியில ஒரு சில கருத்துக்கள் இருந்தது. அது, மாரடைப்பு ஏற்படுற ஒருத்தருக்கு குறைந்தது அறுபது வயதாவது ஆகியிருக்கனும், சம்பந்தப்பட்டவர் சில காலங்களேனும் ரத்தக் கொதிப்பினால பாதிக்கப்பட்டு மாத்திரைகள் சாப்பிட்டிருக்கனும், […]

அதிர்ச்சி: ‘குள்ளமானவர்’களைத் தாக்கும் ‘இருதய’ நோய்கள்?!

ஜூன் 16, 2010

7

டிஸ்கி: கீழே நீங்கள் வாசிக்கவிருக்கும் பதிவுச்செய்தி ஒரு ஆய்வறிக்கையே. இது விழிப்புணர்வுக்காக எழுதப்பட்ட ஒரு பதிவு. இச்செய்தியை, நம் அன்றாட வாழ்க்கை முறையை மேலும் ஆரோக்கியமானதாக்கி, நோய்கள் வருமுன் காக்கும் முயற்ச்சிகளை தூண்டும் ஒரு மருத்துவச்செய்தியாக மட்டுமே பார்க்குமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! வீணான பயங்கள், உளைச்சல்கள் அவசியமில்லை!! நன்றி. உங்குத்தமா…..எங்குத்தமா……யார நானும் குத்தஞ்சொல்ல…..?! அப்பா கொடுத்தாரா…..அம்மா கொடுத்தாங்களா…..எனக்கு ஒன்னும் புரியலையே?! என்னங்க, உங்களுக்கும் ஒன்னும் புரியலையா? மேலே இருக்குற பாட்டுல இருக்குற முதல் வரி நம்ம […]

“டாக்டர்” கூகுளும் “சைபர்காண்ட்ரியாவும்”?!

மார்ச் 23, 2010

4

பதிவுத் தலைப்பைப் படிச்சவுடனே உங்களுக்கு மனசுல ரெண்டு கேள்விகள் எழுந்திருக்கும். அதாவது,  “டாக்டர் கூகுள்”னு ஒருத்தர் இருக்கிறாரா (இருந்திருப்பாரோ?), சைபர்காண்ட்ரியாவுக்கும் டாக்டர் கூகுளுக்கும் என்ன தொடர்பு ? இப்படி விசித்திரமான ரெண்டு கேள்விகள்தான் அது. என்ன சரிதானே? “இதைவிட விசித்திரமான பல பதிவுத்தலைப்புகளை மேலிருப்பான் வலைப்பக்கத்தில் சந்தித்திருக்கிறோம், அதனால் இது ஒன்றும் பெரிதல்ல எங்களுக்கு”ன்னு சர்வ சாதாரணமா சொல்லிட்டு “பதிவப் பத்தி மேல சொல்லுப்பா”ன்னு கேக்குற நண்பர்கள்ல ஒருத்தர்தான் நீங்கன்னா நான் உடனே பதிவுச் செய்திக்கு போயிடறேன்….. […]

ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்…..

நவம்பர் 23, 2009

0

“புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு”, “புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்”, இப்படி என்னதான் எழுதி சிகரெட்டை விற்பனை செஞ்சாலும், “தம்மர தம்ம்ம்ம்…..கிக்கு ஏறுது ம்ம்ம்ம்ம்”, அப்படின்னு தம்மடிக்கிறவங்க அடிச்சிகிட்டுதான் இருக்காங்க! புகைப்பிடிக்கிற ஒவ்வொருத்தருக்கும், புகைப்பழக்கத்தால என்னென்ன நோய்கள் வருது (குறைந்தபட்சம் மாரடைப்பு, புற்று நோய்), புகைப்பிடிக்கிற ஒருத்தரால சுத்தியிருக்கிற எத்தனை பேரு பாதிக்கப்படறாங்க அப்படின்னு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்கறத யாரும் மறுக்கமுடியாது! எல்லாமே தெரிஞ்சிருந்தாலும், புகைப்பழக்கத்தை விட முடியாததுக்கு பல காரணங்கள். “வித்ட்ராவல் சிம்ப்டம்ஸ்” அப்படிங்கிறது புகைப்பழக்கத்த திடீர்னு நிறுத்தினா […]