Browsing All Posts filed under »மொக்கை«

சிலர் குறட்டை விடுவது ஏன்?

மார்ச் 9, 2010

18

“நாட்டுல எத்தனையோ பிரச்சினை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு இது ஒரு மேட்டருன்னு எழுதறாய்ங்க பாரு”, அப்படீன்னு உங்கள்ல சில பேரு அலுத்துக்கலாம். ஆனா, என்னங்க பண்றது “குறட்டை விட்ட ஒரே காரணத்துனால தன்னோட வாழ்க்கையையே(?) இழந்த சில பேரோட” கதையை நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்! அதாங்க, “புருஷனோட குறட்டை சத்தம் தாங்க முடியாம விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு போன ஒரு பெண்மணியோட” கதையத்தான் சொல்றேன். “அது உண்மையா இல்லையான்னு உனக்கு எப்படி தெரியும்? தெரியாத ஒரு விஷயத்தைப் பத்தி […]

கூகுள் தெரியும்…..”ட்வூகுள்” தெரியுமா?

திசெம்பர் 15, 2009

4

ஆமா….உங்களுக்கு ஒரு பழமொழி தெரியுமா? அதாங்க, ஒரே கல்லுலஅஅஅஅ…..(இன்னும் இழுத்துகிட்டே போனா அதே கல்லால அடிச்சாலும் அடிச்சிருவீங்க?!) ரெண்டு மாங்கா! சரி…அதுக்கு என்ன இப்போன்னு கேக்குறீங்களா? இனிமே நீங்க அந்த பழமொழிய இப்படிக்கூட மாத்திச் சொல்லலாம். “ஒரே இணையதளத்துல ரெண்டு இணையதளங்கள்” ! என்னங்க புரியலயா? எனக்கும் அப்படித்தான் முதல்ல படிக்கும்போது புரியல. சரி வாங்க அது என்னன்னு கொஞ்சம் விவரமாப் பார்ப்போம். செய்தி தலைப்பைப் படிச்சவுடனே உங்களுக்கு எதாவது பொறி தட்டுச்சா? அதாங்க, “ட்வூகுள்”னா என்னவா […]

உலகின் முதல் சோதனைக்கூட மாமிசம்: இதுதான் கலிகாலமென்பதோ?

திசெம்பர் 2, 2009

2

எனக்கு எப்படி, எங்கிருந்து ஆரம்பிக்கிறதுன்னே தெரியலை. அதாங்க, மேல கொடுத்திருக்கிற தலைப்புக்கும் கீழே எழுதப்போற செய்திக்குமான தொடர்பைப் பத்திச் சொல்றேன். இந்த மாதிரி செய்திய எல்லாம் படிக்கிறப்போ, நாம இன்னும் உலகத்துலதான் இருக்கோமா இல்ல எதாவது வேற்றுகிரக வாசியாயிட்டோமான்னு சந்தேகம் கூட வருதுங்க! வராதா பின்ன? கொஞ்சம் ஏமாந்தா நம்மளையே சோதனைக்கூடத்துல உக்கார வச்சி, கொஞ்ச நாள் கழிச்சு ஒரு “ஜூனியர்” நம்மள கையில குடுத்து கெளம்புன்னு சொல்லுவாய்ங்கே போலிருக்கு! சொல்ல முடியாதுப்பா, இன்னும் கொஞ்ச வருஷத்துல […]

செக்ஸ்: ஒரு “புள்ளி” விவரம்!

நவம்பர் 6, 2009

11

செக்ஸ் என்றாலே, “அது ஒரு மர்மம்” என்பதுபோலத்தான் பாவிக்கப்படுகிறது உலகத்தின் வளர்ந்த, இடைப்பட்ட மற்றும் பின்தங்கிய என எல்லா நாடுகளிலும். விளைவு, செக்ஸ் பற்றிய விவரங்களை அறிய ஒரு அதீத ஆர்வம், ஒரு இனம்புரியாத தயக்கம், ஒரு புத்துணர்ச்சி என பல வகையான உணர்வுகள் நம்மை ஆட்கொண்டு விடுகின்றன! சரி, செக்ஸ் பத்தின ஒரு செய்திக்கே இவ்வளவு பில்டப்புன்னா, உலகத்துல இருக்கிற எல்லா மக்களோட செக்ஸ் பத்தின ஒரு புள்ளி விவரம்னா கண்டிப்பா ஒரு “கிக்” இருக்கத்தானே […]

டிசம்பர் 21, 2012-ல் உலகம் அழியப்போகிறது?!

ஒக்ரோபர் 27, 2009

50

ஏங்க…..உங்களுக்கு தெரியுமா டிசம்பர் 21, 2012 அன்னிக்கு உலகம் அழியப்போகுதாமே? அப்படின்னு  உங்ககிட்ட யாராவது சொன்னா…..அடக்கொடுமையே அப்படியா? ஐய்யையோ….நான் இன்னும் ஒன்னுமே அனுபவிக்கலியே முருகா?! அப்படின்னு பொலம்புர கூட்டத்துல ஒருத்தரா இருப்பீங்களா இல்ல, ஆஹா….ஆரம்பிச்சிட்டாய்ங்கடா திரும்பவும்! ஏண்டா நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா? அதான் 2000-துல ஒருமுற இப்படியெல்லாம் பிட்டப்போட்டு படுத்திட்டீங்களேடா….அது போதாதா? அப்படின்னு கடுப்பாகிற கூட்டத்துல ஒருத்தரா இருப்பீங்களா? நீங்க எந்தக் கூட்டத்துல ஒருத்தரா இருந்தாலும் சரி, 2012-ல உலகம் அழியப்போகுதுன்னு ரொம்ப நாளா ஒரு பிட்டு, […]

நெசமா….நாந்தானா….?!

ஒக்ரோபர் 8, 2009

0

சமீபத்துல ஒரு தெலுங்கு பாட்டை நண்பன் ஒருவன் யூட்யூப் லின்க் கொடுத்து பார் எனச் சொன்னான். நானும் பார்த்தேன்/கேட்டேன் .இது பொதுவா எங்களுக்கு இரண்டு வருடங்களாக பழக்கமான ஒன்று.ஆனால் இதுவரை தமிழ்,தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி, ஆங்கிலம் என எத்தனையோ பாடல்களை அவன் எனக்கு பலமுறை பரிந்துரை செய்ததுண்டு. அவற்றை சில சமயங்களில் உடனே பார்ப்பதும்/கேட்பதும் உண்டு.பிறகு, “ம்ம்ம்…என்ன எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு” அப்படியென்று நினைத்து மீண்டும் அன்றாட வேலைகளில் மூழ்கிப்போவேன்.ஆனால் இம்முறை நண்பன் அனுப்பிய பாடலை கண்டு/கேட்டுவிட்டு […]

பில் கேட்ஸின் மருமகனின் கதை….

ஒக்ரோபர் 7, 2009

8

வலைப்பதிவின் வாசக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.வேலைப்பளுவின் காரணமாக ஐந்தாரு நாட்கள் வலைப்பக்கம் வரமுடியவில்லை! சிறிது ஓய்வு கிடைத்தபின், சரி என்ன எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கையில்….அழகான இந்தக் கருத்து கண்ணில்பட்டது. அதை ஒரு உரையாடலாக இங்கே எழுதுகிறேன். அப்பா தன் மகனிடம் சொல்கிறார்…. அப்பா: மகனே, நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணைத்தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும் மகன்: இல்லை அப்பா, நான் மணக்கப்போகும் பெண்ணை நானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன். அப்பா: சரி, ஆனால் நான் உனக்காக தேர்ந்தெடுத்திருக்கும் பெண் “பில் […]

அமெரிக்கா-இந்தியா ஆட்டோவில் ஒரு காதல் கதை!

செப்ரெம்பர் 28, 2009

4

காதலுக்கு கண் இல்லைன்னு தெரியும் ஆனால் கண்டம் கூட இல்லைன்னு இப்போதாங்க தெரிஞ்சிக்கிட்டேன்.என்னங்க ஒன்னும் புரியலையா? என்ன இவன் குழப்புறானேன்னு யோசிக்கிறீங்களா? சரி வாங்க அது என்னன்னு பார்ப்போம்.அதாவது காதலிக்கறதுக்கு அழகு,பணம்,பேரு,புகழ் இப்படி எதுவுமே தடையில்லைன்னு தெரியும்.அதனால்தான் காதலுக்கு கண் இல்லைன்னு சொல்றாங்கன்னு நான் நினைக்கிறேன்.ஆனால் சமீபத்துல ஜெய்ப்பூரில் நடந்த ஒரு கல்யாணத்துல கண்டம் கூட காதலுக்கு ஒரு தடையில்லைன்னு நிரூபிச்சு இருக்காங்க அமெரிக்க-இந்திய காதல் ஜோடியான விட்னி-ஹரிஷ்! என்ன ஆச்சரியமா இருக்கா? ஆமாங்க, உண்மைதான்! அந்த […]

வருங்கால இந்தியா காட்சி மூன்று….

செப்ரெம்பர் 23, 2009

0

இந்தியா இனி வரும் காலங்களில் இந்தியாவில் அன்றாட இயல்பு வாழ்க்கை, இப்படிகூட இருக்கலாமுங்க…… தொழிலாளி: அய்யா, காலை வணக்கம்! சாலையில் கொடுமையான நெரிசல்.இம்மி  அளவு கூட நகர முடியலை. அதனால அலுவலகம் வர தாமதாகும் அய்யா! முதலாளி: ம்ம்ம்…வணக்கம், வணக்கம்! சரி சரி நாங்க எல்லோரும் காத்திருக்கிறோம் உங்களுக்காக!? சீக்கிரம் வந்து சேரப் பாருங்க! “பொய் சொல்ல இந்த மனசுக்குத் தெரியவில்லை??! சொன்னால் பொய் பொய்தானே!!”

யோகாசனம் எளிதாக செய்ய ஒரு யோசனை…..

செப்ரெம்பர் 19, 2009

10

நம்மில் பலருக்கு யோகாசனம் செய்ய ஆசையிருக்கும் ஆனால் செய்ய இயலாது.காரணம் போதிய நேரமின்மை,வேலைப்பளு என இன்னும் பல….. ஆனால் மிகவும் சிரமப்படாமல் யோகாசனம் செய்ய ஒரு வழி இருக்கிறது.சொன்னால் செய்வீர்களா? சரி நான் சொல்வதற்க்கு முன்னால் உங்களுக்கு சில புகைப்படங்களை காண்பிக்கிறேன்,பார்த்துவிட்டு பின்பு  நான் சொல்வதை செய்யலாமா வேண்டாமா என முடிவு செய்து கொள்ளுங்கள்! “மது அருந்துவது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு” இப்போ யோகாசனம் எளிதாக செய்ய என்ன செய்யனும்னு உங்களுக்கே புரிந்திருக்கும் என நினைக்கிறேன்!!? இன்னும் […]

ரஜினி-அமிதாப் பச்சன், நீயா நானா? சபாஷ் சரியான போட்டி!!

செப்ரெம்பர் 15, 2009

0

இந்த கதை/உரையாடல் ஒரு கற்பனையே…… இந்திய திரையுலகின் முன்னனி நடிகர்களுள் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என மிகவும் அன்புடன் அழைக்கப்படுபவர்கள் இருவர்.ஒருவர் தென்னகத்தின் திரைமன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.மற்றவர், ஹிந்தி திரையுலகின்(பாலிவுட்)  சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்! இவர்கள் இருவரும் இந்திய திரையுலகின் பிரதிநிதிகள் என்று கூட கொள்ளலாம். ரஜினிகாந்த்-அமிதாப் பச்சன் நல்ல நண்பர்களாகிய இவர்கள் இருவருக்கும் திடீரென்று ஒரு நாள் யார் பெரியவன் என்ற வாக்குவாதம் வருகிறது (கற்பனைதான்!).அப்போது….. ரஜினிகாந்த்: அமிதாப், உனக்கு ஒரு […]

வருங்கால இந்தியா காட்சி ஒன்று…..

செப்ரெம்பர் 15, 2009

0

இந்தியா வருங்காலத்துல இப்படி கூட இருக்குமோன்னு…… விமான பணிப்பெண்: படியில தொங்காதீங்க ப்ளீஸ்?!! இருந்தாலும் இருக்கும்.ஓன்னும் சொல்ரதுக்கில்லை அப்படிங்கறீங்களா? நம்ம நாட்டு மக்கள்தொகை இப்படிதாங்க போய்க்கிட்டிருக்கு.என்னதான் உலகத்தில் உழைக்கும் வர்க்கம் அதிக சதவிகிதத்தில் இருக்கிறது இந்தியாவில் என்றாலும் இது ஒரு ஆபத்தான போக்குதான் என்பதை மறுப்பத்ற்க்கில்லை! இதே நிலை நீடிக்கும் என்றால் இந்தியாவின் வளர்ச்சி, முன்னேற்றம், உலக அரங்கில் புகழ் எல்லாம் ஒரு கேள்விக்குறியே!! மாற்றுக்கருத்துள்ளவர்கள், தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம்! மீண்டும் மற்றுமொறு வருங்கால இந்தியா […]

ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…..

செப்ரெம்பர் 14, 2009

0

நாட்டுக்கு மிக அத்தியாவசியமான ஒரு செய்தி கண்ணுள பட்டுதுங்கோ! அதான் ஒரு சமுதாயத்தொண்டு பண்ணலாமேன்னு…… ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி? கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்! மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் […]

பிரபலங்களின் இணையதள முகவரிகள்

செப்ரெம்பர் 13, 2009

3

நடிகர்கள்: சூர்யா http://www.rssurya.com விஜய் http://www.actorvijayonline.com விஷால் http://www.actorvishal.com/ அப்பாஸ் http://www.actorabbas.com விஜயகாந்த் http://www.indiadirect.com/captain சரத்குமார் http://www.rskworld.com அர்ஜூன் http://arjun.fanspace.com தனுஷ் http://www.thedhanushsite.com/ மாதவன் http://www.rmadhavan.com விக்ரம் http://www.chiyaanvikramonline.com பிரசாந்த் http://www.prashanthonthenet.com ஜீவா http://www.jeeva-online.com/ சிம்பு http://www.simbuonline.com/ நடிகைகள்: சிம்ரன் http://www.simplysimran.com சினேகா http://www.priyamudansneha.com பூமிகா http://www.bhoomikachawla.info/ ஐஸ்வர்யாராய் http://www.aishwarya-rai.com கிரண் http://www.kiranontheweb.com லைலா http://www.laila.net மீனா http://www.meenaonthenet.com ஜோதிகா http://www.jothikaonline.com சங்கவி http://www.sangavi.com கோபிகா http://www.gopika.info/ கஜோல் http://www.kajolonline.net/ அசின் http://www.asinonline.com ஷெரீன் http://www.ilamaisherin.com நமீதா […]

குடிமகனே…..

செப்ரெம்பர் 11, 2009

6

நாட்டு குடிமகன்களுக்கு மட்டும் ஓர் நற்செய்தி??!! வயது வந்தவர்கள் மட்டும் குடிக்க….ம்ம்…மன்னிக்கனும் படிக்க!! நாட்டுக்குத் மிகவும் தேவையான?? ஒரு செய்தியை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஒரு திருப்தியில்??!! மீண்டும் மற்றுமொரு மொக்கையில் சந்திப்போம் நண்பர்களே!! நன்றி மீண்டும் வருக! ஆதாரவை அள்ளித் தருக!!

பாவம் இந்த பசங்க…..

செப்ரெம்பர் 11, 2009

4

நம் சமுதாயத்தின் பார்வையில்…… ஒரு அழகான பெண் அழுதால் இந்த உலகம் ஆறுதல் சொல்லும் ஆனால் ஒரு ஆண் அழுதால் அவனை “பெண்கள் போல அழுகிறாயே” என்று கேலி செய்யும்! ஒரு பெண் ஒரு ஆணை கன்னத்தில் அறைந்தால் கண்டிப்பாக அந்த பையன் எதாவது வம்பு செய்திருப்பான் எனும் இந்த உலகம்…. ஒரு ஆண் ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்துவிட்டால் உடனே அவனை “பெண்களை மதிக்கத் தெரியாத காட்டுமிறாண்டி” எனத் தூற்றிப் பேசும்! ஒரு பெண் ஒரு […]