Browsing All Posts filed under »ஏனிந்த அவலம்«

ஜப்பானில் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள், கதிரியக்க அளவுகள்; ஒரு பார்வை!

ஏப்ரல் 2, 2011

6

ஜப்பானில் இன்னும் சரிசெய்யப்படாத அணு உலைகளினால், சுற்றுச்சூழலுக்குள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுவரும் கதிரியக்க கழிவுகள் ஜப்பானிய மற்றும் உலக மக்களிடையே பல்வேறு பயங்களையும், பெரும் குழப்பங்களையும் ஏற்படுத்தி வருவது நாமனைவரும் அறிந்ததே. அது தொடர்பான சில அதிகாரப்பூர்வ செய்திகளை படிக்க நேர்ந்ததும், உடனே அதனை உங்களுடன் பகிர வேண்டும் என்ற உந்துதலால் ஒரு பதிவை எழுதினேன். ஆனால் அதனை முழுமையாக முடிக்க போதிய நேரமின்மையால் அரைகுறையாக நிறுத்திவிட்டு தொடரும் போட வேண்டிய சூழல். அதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்காக என்னை […]

ஜப்பானில் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கதிரியக்கம்! உண்மை நிலவரம்தான் என்ன?

மார்ச் 31, 2011

11

ஜப்பானின் ஃபுகுஷிமாவிலுள்ள தாய்இச்சி அணுமின் நிலைய 4 அணுஉலைகளின் கூரைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச்சிதரியது குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதை எழுதிய பின்னர், கடந்த 15 நாட்களாக அணு உலைகளில் வெடிப்போ, பெரிய அசம்பாவிதமோ எதுவும் ஏற்படவில்லை என்பது ஒரு பெரிய ஆறுதல். ஆனால், அணு உலைகளை குளிர்விக்கும் பொருட்டு உட்செலுத்தப்படும் கடல் நீர், சில தினங்களுக்கு முன் நிறுத்தப்பட்டு, அமெரிக்காவிலிருந்து கப்பல் மூலம் […]

ஜப்பானில் அணு உலைகளின் கூரைகள் வெடிப்பு; சில அறிவியல் விளக்கங்கள்…..

மார்ச் 14, 2011

52

என்னங்க, எல்லாரும் தொலைக்காட்சியில் வந்த ஜப்பான் பூகம்ப/சுனாமி செய்திகளை பார்த்தீங்களா? 8.9 ரிக்டர் அளவிலான பூகம்பமும், 30 அடி உயர ஆழிப்பேரலைகளுடன்கூடிய சுனாமியும் ஜப்பானைத் தாக்கிவிட்டு, வந்த வேலை முடிந்ததும் (?) போய்விட்டன. இவையிரண்டும் ஏற்படுத்திய பேராபத்துகளின் பாதிப்பு என்ன, இவற்றால் காணாமல் போன 100 பேர் கொண்ட கப்பல், பல நூறு/ஆயிரம் பயணிகளை தாங்கிய 3 ரயில்கள் என்னவாயின போன்றவற்றை துல்லியமாக கண்டறியவே சில வாரங்கள்/மாதங்கள் ஆகும் என்பதுதான் நிதர்சனம் எனும் வேளையில்……. இடைவெளிகள் விட்டு […]

சுனாமியின் கோரமுகம் ஜப்பானின் பக்கம்!! மக்களோ சகஜநிலையை நோக்கி…..

மார்ச் 13, 2011

34

சிறு நகைச்சுவை பூச்சுகளுடன் வேர்டுபிரஸ் மூலம் அறிவியலை தமிழில் சொல்லி வந்த எனக்கு, இந்த ஒன்றரை வருட பதிவுப்பயணத்தில் முதல் முறையாக ஒரு இக்கட்டான சூழல்! அது, தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் காட்சிகளாக செய்திகளாக நீங்கள் பார்த்த, படித்த நிகழ்வுகளை ஜப்பானிலேயே சற்று (வெகு) தொலைவில் இருந்து பார்த்த, கேட்ட அனுபவத்தினை பகிர்ந்துகொள்ள/பதிவுசெய்ய வேண்டிய கடமையே! (கண்ட காட்சிகளையும், கேட்ட செய்திகளையும் என்னைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளாக எண்ணி ஜீரணிக்கவே வெகு நேரம் பிடித்தது எனக்கு! கனத்துப்போன மனது ஏனோ […]

உங்களின் ஒரு கையெழுத்து!மாறிவிடக்கூடும் தமிழக மீனவர்களின் தலையெழுத்து!!!

ஜனவரி 31, 2011

8

கிரி படத்துல வர்ற வடிவேலு ரொம்ப நல்லவன்னு சொன்னதுக்காகவே தர்ம அடி வாங்கிக்கிட்டு நம்மள எல்லாம் சிரிக்க வச்சாரு! ஆனா, நமக்கு காலங்காலமா இந்திய தேசிய(?)த்துல நடக்குற அநியாயத்தைத்தான் அப்படி ஒரு காமெடி மூலமா சொல்லாம சொல்லிட்டு போயிருக்காரோன்னு தோனுது சில தினங்களா தமிழக மீனவர்கள் குறித்து வெளியாகும் செய்திகள்! நான் தமிழக மீனவர்கள் சமீபத்துல சுட்டுக்கொல்லப்பட்டதைத்தான் சொல்றேன்னு உங்கள்ல பலருக்கு நல்லாப்புரியும்னு நெனக்கிறேன். (அப்படிப்புரிஞ்சாலும் சிலபேர் அதைப்பத்தி நீ ஏன் எழுதுற அப்படீன்னு கேட்டீங்கன்னா, மேல […]

ஐயோ பாவம் அமெரிக்கா….! படிங்க ஏன்னு புரியும்!!

ஜனவரி 26, 2011

12

ஒரு நாடு முன்னேறனும்னா, நல்லாயிருக்கனும்னா அந்த நாட்டோட இளைஞர்களும், நாளைய இளைஞர்களான குழந்தைகளும் நல்லா படிச்சு, நல்லா வேலை செய்யனும் இல்லீங்களா? (அப்படித்தான் நான் புரிஞ்சு வச்சிருக்கேன், தப்புன்னா எப்படின்னு சொல்லுங்க!). ஒரு நாட்டோட முன்னேற்றம்னு பார்த்தா, அந்த நாட்டோட தொழில்துறை முன்னேற்றம் மிக முக்கியமான ஒன்னு. தொழில்துறை முன்னேற்றத்துக்கு அடிப்படை கல்வி! கல்வியில பல துறைகள் இருந்தாலும், தொழில்துறை முன்னேற்றத்துக்கு அடிப்படையானதுன்னு பார்த்தா அதுல அறிவியல் துறைக்கு முக்கியமான பங்கு உண்டு! அறிவியல்துறை சார்ந்த மாணவர்கள் […]

செக்ஸ்: பணியிடங்களில் பாலியல் தொல்லை; ஆய்வு சொல்லும் கருத்து!

திசெம்பர் 7, 2010

20

பாலியல் தொல்லை என்பது மிகவும் மோசமான, மனிதாபிமானமற்ற, கீழ்த்தரமான ஒரு செயல். பாதிக்கப்படுபவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நியாயம் ஒன்றுதான். ஆனால் செய்தித்தாள், தொலைக்காட்சி, சினிமா, இணையம் என பல்வேறு ஊடகங்கள் மூலம் அடிக்கடி நம் கவனத்துக்கு வரும் பாலியல் தொல்லை குறித்த பெரும்பாலான செய்திகள், பொதுவிடங்களிலும் பணியிடங்களிலும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்த செய்திகளாகவே இருக்கின்றன. இப்படிச்சொன்னவுடனேயே சிலர், பெண்ணியம்-ஆணாதிக்கம் பேசுகிறான் என்று வரிந்துகட்டிக்கொண்டு சண்டையிட வந்துவிடுவார்கள் அவரவர் பக்கத்து […]