Browsing All Posts filed under »இது எப்படி இருக்கு«

மருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள், ‘தசைகளையும் வளர்க்கிறது’ இப்போது!!

செப்ரெம்பர் 17, 2011

5

என்னங்க, எல்லாரும் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா? என்ன அப்படி பார்க்குறீங்க? ஆஹா, இந்த மேலிருப்பான் திரும்பவும் ஆப்பிளோட வந்திருக்கானே….., இந்த முறை என்னத்த சொல்லப்போறானோ அப்படீன்னு பார்க்குறீங்களா? அட, அது வேற ஒன்னுமில்லீங்க! ஆப்பிள், குறைந்தபட்சம் இருதய நோய் சம்பந்தப்பட்ட காரணங்களுக்காகவாவது மருத்துவரை கண்டிப்பா தூரத்திலே வைக்கக் கூடிய திறன் கொண்டது அப்படீன்னு முந்தைய ஆப்பிள் பதிவுல பார்த்தோம் இல்லீங்களா? இப்போ என்னடான்னா, “ஆப்பிள் மருத்துவரை தூர வைக்கிறதோடு மட்டுமில்லாம, நம்ம உடலில் இருக்குற […]

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

ஜூன் 29, 2011

14

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு. அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச, கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா? அப்படி எனக்கு தெரிஞ்ச ஒரு யுக்தி என்னன்னா, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை […]

“ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்” மருத்துவரை தூர வைக்கும்?! இது அறிவியல்பூர்வமாக உண்மையா???

ஜூன் 22, 2011

11

பழமொழி அப்படீங்கிறது, நம்ம முன்னோர்கள் சொல்லி, அது வழிவழியாக பேச்சுவழக்கில் பயன்படுத்தப்பட்டு, (பொருள் தெரியுதோ/புரியுதோ இல்லியோ) நாமளும் வாய்ப்பு கிடைக்கும்போது, குறிப்பிட்ட ஒரு சூழ்நிலைக்கு ஒரு பழமொழி பொருத்தமாயிருக்கும்னு நம்ம்ம்ப்பி அப்பப்போ, அங்கங்கே சொல்றோம் இல்லீங்களா? உதாரணமா சொல்லனும்னா, “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” “குரைக்கிற நாய் கடிக்காது” “பாம்பின் கால் பாம்பறியும்” இப்படி நம்மூர்ல நெறைய பழமொழி இருக்குது (எனக்கு இப்பொ நியாபகம் வந்தது இவ்ளோதான்…..ஹி ஹி). ஆனா இம்மாதிரியான […]

ஐயோ பாவம் அமெரிக்கா….! படிங்க ஏன்னு புரியும்!!

ஜனவரி 26, 2011

12

ஒரு நாடு முன்னேறனும்னா, நல்லாயிருக்கனும்னா அந்த நாட்டோட இளைஞர்களும், நாளைய இளைஞர்களான குழந்தைகளும் நல்லா படிச்சு, நல்லா வேலை செய்யனும் இல்லீங்களா? (அப்படித்தான் நான் புரிஞ்சு வச்சிருக்கேன், தப்புன்னா எப்படின்னு சொல்லுங்க!). ஒரு நாட்டோட முன்னேற்றம்னு பார்த்தா, அந்த நாட்டோட தொழில்துறை முன்னேற்றம் மிக முக்கியமான ஒன்னு. தொழில்துறை முன்னேற்றத்துக்கு அடிப்படை கல்வி! கல்வியில பல துறைகள் இருந்தாலும், தொழில்துறை முன்னேற்றத்துக்கு அடிப்படையானதுன்னு பார்த்தா அதுல அறிவியல் துறைக்கு முக்கியமான பங்கு உண்டு! அறிவியல்துறை சார்ந்த மாணவர்கள் […]

காதல் தொடங்குவது கண்களிலா, இதயத்திலா இல்லை மூளையிலா? விடை சொல்கிறது ஆய்வு!!

ஜனவரி 17, 2011

9

காதல் காதல் காதல்…..கண்ணில் மின்னல் மோதல்…..!! காதலப்பத்தி சொல்ல, மேலே இருக்குற பாட்டு (கவிதை) வரியில சொல்லியிருக்கிற மாதிரி, ஒரு சில வார்த்தைககள்லேயே கச்சிதமா சொல்லிடலாம்?! ஆனா, காதலுக்கான இந்த மாதிரியான விளக்கங்கள இந்தக் காதால கேட்டோமா, அந்தக் காதால விட்டோமான்னு விட்டுட்டு அடுத்த வேலையப் பார்க்க போயிட்டோம்னா ஒன்னும் பிரச்சினையில்ல. அத விட்டுட்டு, ஆப்பிள் மரத்துக்கு கீழே படுத்து யோசிச்சதுனாலதான(?) (விஞ்ஞானி) நியூட்டன் புவி ஈர்ப்பு விசையெல்லாம் கண்டுபிடிச்சி பெரிய விஞ்ஞானியானாரு. அது மாதிரி, நாமளும் […]

ஸ்டெம் செல் அதிசயம்: “தோல்” போயி “ரத்தம்” வந்தது டும் டும் டும்!!!

திசெம்பர் 13, 2010

19

இப்பெல்லாம் யாராவது ஸ்டெம் செல்லுன்னு சொன்னாலே, சினிமா படத்துல வர்ற வில்லனை மக்கள் பார்க்குற மாதிரிதான் பார்க்குறாங்க அரசியல்வாதிகளும், பொதுமக்களும்! நம்ம ஊரு நெலவரம் எப்படியோ தெரியல, அமெரிக்காவுல அப்படித்தான் நடக்குது! அதனால, ஸ்டெம் செல் தொடர்பான ஆய்வுன்னாலே ஆயிரத்தெட்டு எதிர்பலைகள் கிளம்பி, தூரத்துல தெரியுற ஒளிமயமான (மருத்துவ) எதிர்காலத்தைக்கூட கானல் நீராக்கிடுது! ஆமா, இதுக்கு என்ன காரணம்? இந்தப் பதிவை படிக்கிறதுக்கு முன்னாடி, “ஸ்டெம் செல்கள் (குறுத்தனுக்கள்) தொடர்-பாகம் 1” அப்படீங்கிற பதிவைக் கொஞ்சம் படிச்சிடுங்க….! சிசு […]

உலக அரங்கில் உயர்ந்த தமிழ்; உயர்த்திக் காட்டிய தமிழன்….!!

நவம்பர் 26, 2010

9

22-ஆம் நூற்றாண்டுலயும் நம்ம ஊடகங்கள் இப்படியேதான் இருக்கும் போலிருக்கு?! என்னங்க ஒன்னும் புரியலியா? அட, அது வேற ஒன்னுமில்லீங்க, கடந்த மாதம் 22-ஆம் தேதி, தமிழகத்தின் புதிய சூப்பர் ஸ்டார் அப்படீன்னு ஒரு தலைப்புல CNN ஹீரோக்களுள் ஒருவரான, தமிழரான  திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்கள் 2010 ஆம் ஆண்டின் உலகின் தலைசிறந்த ஹீரோக்கள்ல ஒருத்தரா தெரிவாகியிருக்காரு, அவருக்கு நிறைய ஓட்டு போட்டு, உலகின் தலைசிறந்த ஹீரோவாக்குங்க அப்படீன்னு கேட்டிருந்தேன். அவருக்கு ஓட்டுப்போட்டுட்டு, அதுக்கப்புறம் நானும், நீங்களும் […]