Browsing All Posts filed under »அறிவியல்«

தினத்தந்தி நாளிதழின் ‘மாணவர் ஸ்பெஷல்’ பகுதியில் எனது புதிய தொடர் ‘நாளைய உலகம்’

ஒக்ரோபர் 19, 2015

1

அன்பின் வாசகர்கள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள். வேலைப்பளு அதிகமுள்ள முனைவர் பட்டத்துக்குப் பின்னான ‘Postdoc’ பணியில் இருப்பதால் எவ்வளவோ முயன்றும் முன்பைப் போல இந்த வலைப்பக்கத்தில் எழுத முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். ஆனாலும், என்னுடைய எழுத்துப்பணிக்கு ஓய்வு கொடுக்க மனமில்லை! அதனால் இந்த வலைப்பக்கத்தில் மீண்டும் எனது பதிவுகள் வெகுவிரைவில் அடிக்கடி வரப்போகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் அன்பு வாசகர்களே….. ஆனால் அதுவரை,  நான் சமீபத்தில் தினத்தந்தி நாளிதழின் மாணவர் ஸ்பெஷல் பகுதியில் எழுதத்தொடங்கியுள்ள ‘நாளைய […]

அறிவியல் ஆச்சரியங்கள்! தொடர்…….உடற்பயிற்சி மாத்திரையாகிறது ஒரு ஹார்மோன்!

மே 11, 2012

2

நம் எல்லோருக்குமே ஆசைதான் வாரணம் ஆயிரம் சூர்யா போல நமக்கும் ஒரு சிக்ஸ் பேக் இருந்தால் நன்றாக இருக்குமே என்று! ஆனால் என்ன செய்ய, சூர்யா போல நம்மால் மாதக் கணக்கில் ஜிம்முக்கு போகவும் முடியாது. உணவுக் கட்டுப்பாட்டிலும் இருக்க முடியாது! ‘இவை இரண்டையுமே செய்யாமல் கட்டுமஸ்தான உடலமைப்பு வேண்டும். இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா சொல்லுங்கள்’ என்று யாராவது கேட்டால் நமக்கு சிரிப்புதான் வரும். ஆனால், அமெரிக்க ஆய்வாளர் ப்ரூஸ் ஸ்பீகெல்மேனோ, ‘அவ்வளவுதானே கவலையை விடுங்க. இந்த உடற்பயிற்சி மாத்திரையை சாப்பிடுங்க. நீங்க […]

மருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள், ‘தசைகளையும் வளர்க்கிறது’ இப்போது!!

செப்ரெம்பர் 17, 2011

5

என்னங்க, எல்லாரும் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா? என்ன அப்படி பார்க்குறீங்க? ஆஹா, இந்த மேலிருப்பான் திரும்பவும் ஆப்பிளோட வந்திருக்கானே….., இந்த முறை என்னத்த சொல்லப்போறானோ அப்படீன்னு பார்க்குறீங்களா? அட, அது வேற ஒன்னுமில்லீங்க! ஆப்பிள், குறைந்தபட்சம் இருதய நோய் சம்பந்தப்பட்ட காரணங்களுக்காகவாவது மருத்துவரை கண்டிப்பா தூரத்திலே வைக்கக் கூடிய திறன் கொண்டது அப்படீன்னு முந்தைய ஆப்பிள் பதிவுல பார்த்தோம் இல்லீங்களா? இப்போ என்னடான்னா, “ஆப்பிள் மருத்துவரை தூர வைக்கிறதோடு மட்டுமில்லாம, நம்ம உடலில் இருக்குற […]

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

ஜூன் 29, 2011

14

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு. அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச, கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா? அப்படி எனக்கு தெரிஞ்ச ஒரு யுக்தி என்னன்னா, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை […]

“நியாபக மறதி குறைபாடு” அதிகம் தாக்குவது ஆண்களையே; ஆய்வு!!

ஜூன் 24, 2011

5

நியாபகம் வருதே….. நியாபகம் வருதே….. நியாபகம் வருதே…..! பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் நியாபகம் வருதே…..!! அப்படீன்னு தொடங்குற சேரனின் ஆட்டோகிராப் படப் பாடல முனு முனுக்குறது நம்ம எல்லாருக்குமே பிடிக்கும்! இதுல ஆண்-பெண், பெரியவர்-சிறியவர் அப்படீங்கிற பாரபட்சமெல்லாம் கிடையாதுன்னு நெனக்கிறேன். ஆனா, நம்மளோட பழைய நினைவுகளை எல்லாம் நல்லா நியாபகம் வச்சிருந்தாதானே, அந்த நினைவுகளோட நியாபகம் வந்து இந்த மாதிரி நியாபகம் வருதே அப்படீன்னு பாட முடியும்?! ஆமா, அதுக்கு என்ன இப்போ? அப்படீன்னுதானே […]

“ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்” மருத்துவரை தூர வைக்கும்?! இது அறிவியல்பூர்வமாக உண்மையா???

ஜூன் 22, 2011

11

பழமொழி அப்படீங்கிறது, நம்ம முன்னோர்கள் சொல்லி, அது வழிவழியாக பேச்சுவழக்கில் பயன்படுத்தப்பட்டு, (பொருள் தெரியுதோ/புரியுதோ இல்லியோ) நாமளும் வாய்ப்பு கிடைக்கும்போது, குறிப்பிட்ட ஒரு சூழ்நிலைக்கு ஒரு பழமொழி பொருத்தமாயிருக்கும்னு நம்ம்ம்ப்பி அப்பப்போ, அங்கங்கே சொல்றோம் இல்லீங்களா? உதாரணமா சொல்லனும்னா, “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” “குரைக்கிற நாய் கடிக்காது” “பாம்பின் கால் பாம்பறியும்” இப்படி நம்மூர்ல நெறைய பழமொழி இருக்குது (எனக்கு இப்பொ நியாபகம் வந்தது இவ்ளோதான்…..ஹி ஹி). ஆனா இம்மாதிரியான […]

என்னது அவருக்கு புற்றுநோயா? ஐயய்யோ…..அப்போ அவரு அவ்வளவுதானா??!!

ஜூன் 13, 2011

6

என்னங்க அப்படிப் பார்க்குறீங்க?! ஐயய்ய, நீங்க நினைக்கிற மாதிரி (?) பதிவு சுவாரசியத்துக்காகவோ அல்லது கற்பனையாகவோ எழுதின தலைப்பு இல்லீங்க இது! இதுதான் யதார்த்தம். “புற்றுநோய்” அப்படீங்கிற வார்த்தையை காதில் வாங்கினாக்கூட நாம வாழுற இந்த சமூகம் நம்மை இப்படித்தான் எதிர்கொள்ளும்! புற்றுநோய் குறித்த அறியாமையும், அவலநிலையும்! புற்றுநோய் என்றால் என்ன? அப்படீங்கிற கேள்வியில ஆரம்பிச்சி, அது ஏன் உருவாகிறது, அதற்கான காரணங்கள் என்ன, உடல் ஆரோக்கியத்துக்கும் உயிர் வாழ்வதற்கும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன இப்படி […]