தினத்தந்தி நாளிதழின் ‘மாணவர் ஸ்பெஷல்’ பகுதியில் எனது புதிய தொடர் ‘நாளைய உலகம்’

Posted on ஒக்ரோபர் 19, 2015

1


அன்பின் வாசகர்கள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள். வேலைப்பளு அதிகமுள்ள முனைவர் பட்டத்துக்குப் பின்னான ‘Postdoc’ பணியில் இருப்பதால் எவ்வளவோ முயன்றும் முன்பைப் போல இந்த வலைப்பக்கத்தில் எழுத முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். ஆனாலும், என்னுடைய எழுத்துப்பணிக்கு ஓய்வு கொடுக்க மனமில்லை! அதனால் இந்த வலைப்பக்கத்தில் மீண்டும் எனது பதிவுகள் வெகுவிரைவில் அடிக்கடி வரப்போகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் அன்பு வாசகர்களே…..

ஆனால் அதுவரை,  நான் சமீபத்தில் தினத்தந்தி நாளிதழின் மாணவர் ஸ்பெஷல் பகுதியில் எழுதத்தொடங்கியுள்ள ‘நாளைய உலகம்’ தொடரில் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகிய துறைகள் சார்ந்த 3-4 கட்டுரைகள் உங்கள் அறிவியல் பசிக்குத் தீனி போடும் வகையில் இருக்குமென்பதால் அதை பகிர விரும்புகிறேன். கடந்த 5-10-2015 முதல் ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் வெளியாகத் தொடங்கியுள்ள நாளைய உலகம் தொடரின் இணையத்தொடர்பு மற்றும் ஸ்கிரீன் ஷாட் எனப்படும் புகைப்படத்தையும் இங்கு இனி தொடர்ந்து பகிர விரும்புகிறேன்.

முதல் வாரத்தில்,

அதிக புரதம் நிறைந்த உணவு இதய ஆரோக்கியத்தைக் கூட்டுகிறது!

மனசாட்சியின் குரல் உடலில் எங்கிருந்து வருகிறது?

புற்றணுக்களை ஆரோக்கியமான உயிரணுக்களாக மாற்ற முடியும்!

உடைந்த இதயத் தசைகளை ஒட்டவைக்கும் அதிநவீன ‘வெல்க்ரோ’ திசு!

ஆகிய நான்கு தலைப்புகளில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. கீழே அதன் புகைப்பட வடிவம் உங்களுக்காக…..

Dailythanthi Nalaiya Ulagam 2015

இத்தொடர் குறித்த உங்களின் மேலான கருத்துகளை அறியத்தாருங்கள். அதனடிப்படையில் மாற்றங்கள் தேவையாயிருப்பின் மாற்ற முயற்சிக்கிறேன்.

அன்புடன்,

ஹரிநாராயணன்.

Advertisements