ஐயோ பாவம் அமெரிக்கா….! படிங்க ஏன்னு புரியும்!!

Posted on ஜனவரி 26, 2011

12


ஒரு நாடு முன்னேறனும்னா, நல்லாயிருக்கனும்னா அந்த நாட்டோட இளைஞர்களும், நாளைய இளைஞர்களான குழந்தைகளும் நல்லா படிச்சு, நல்லா வேலை செய்யனும் இல்லீங்களா? (அப்படித்தான் நான் புரிஞ்சு வச்சிருக்கேன், தப்புன்னா எப்படின்னு சொல்லுங்க!). ஒரு நாட்டோட முன்னேற்றம்னு பார்த்தா, அந்த நாட்டோட தொழில்துறை முன்னேற்றம் மிக முக்கியமான ஒன்னு. தொழில்துறை முன்னேற்றத்துக்கு அடிப்படை கல்வி!

கல்வியில பல துறைகள் இருந்தாலும், தொழில்துறை முன்னேற்றத்துக்கு அடிப்படையானதுன்னு பார்த்தா அதுல அறிவியல் துறைக்கு முக்கியமான பங்கு உண்டு! அறிவியல்துறை சார்ந்த மாணவர்கள் பள்ளி முதல் அறிவியல நல்லா படிச்சாத்தான் தொழில்துறை சார்ந்த முன்னேற்றங்களுக்கு அவங்களோட பங்களிப்பை சரியா செய்ய முடியும் அப்படித்தானே? ஆக, ஒரு நாட்டோட முன்னேற்றத்துக்கு அந்த நாட்டோட அறிவியல்துறை சார்ந்த மாணவர்களோட பங்களிப்பு மிக முக்கியம்.

”அதெல்லாஞ்சரி, இப்போ என்ன பிரச்சினைன்னு இதையெல்லாம் சொல்ற நீ”ன்னு கேக்குறீங்களா?

பிரச்சினை இருக்கு! ஆனா, நமக்கு (இந்தியாவுக்கு) இருக்கா இல்லியான்னு இனிமே எதாவது ஆய்வு செஞ்சாத்தான் தெரியும். இப்போதைக்கு நம்ம ஆஹோ-ஓஹோ அமெரிக்காவுக்குத்தான் ஒரு பிரச்சினை! அது என்னன்னு கொஞ்சம் சுருக்கமா பார்க்கலாம் வாங்க…..

.....?????..... (படம்: கூகுள்)

செய்தி: அமெரிக்காவின் கல்வித்துறை வெளியிட்ட ஒரு சமீபத்திய அறிக்கையில, “அமெரிக்க மாணவர்கள்ல, 4-ஆம் வகுப்பைச் சேர்ந்த மூன்றில் இரண்டு பங்கு மாணவர்களும், ஐந்தில் நான்கு பங்கு உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் அறிவியல் படிப்புல தேறவில்லை” அப்படீன்னு சொல்லியிருக்காங்க! முழு அறிக்கையை படிக்க இங்கு செல்லுங்கள்

மொத்த அமெரிக்காவை பிரதிநிதிக்கும் வகையிலான சுமார் 3 லட்சம் 4-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களும், சுமார் 11,000 உயர்நிலைப்பள்ளி மாணவர்களும், “Nation’s Report Card” அப்படீன்னு சொல்லப்படுற தேசிய கல்வி முன்னேற்றத்தின் தரநிர்ணய செயல்பாட்டின் ஒரு பகுதியாக, கடந்த 2009 ஆம் ஆண்டுல ஒரு தரமான அறிவியல் பரீட்சையை எழுதினாங்களாம். அந்த பரீட்சையில தேறனும்னா,

  • 4-ஆம் வகுப்பு மாணவர்கள்: “ஒரு பொருளின் மீதான புவி ஈர்ப்பு விசையின் பாதிப்பு” என்பது மாதிரியான கேள்விகளுக்கு சரியான விளக்கமளிக்கனுமாம்.
  • 8-ஆம் வகுப்பு மாணவர்கள்: ஒரு நாட்டிலுள்ள காற்றின் எடை/நிறையை உலக நாடுகளிலுள்ள காற்றின் எடையுடன் ஒப்பிட்டு விளக்கிச் சொல்லனுமாம்! (சரிதான்….!)
  • 12-ஆம் வகுப்பு மாணவர்கள்: மக்களின் ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் கிருமிகளை இடம் மாற்றுகின்ற (உதாரணத்துக்கு மலேரியா கிருமியை கடத்தும் கொசுக்கள்) உயிர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதற்கு வழிமுறைகளைச் சொல்லனுமாம்! (அப்படிப்போடு….!)

இந்த மாதிரியான கேள்விகள் இருக்குற பரீட்சையில, கடந்த 2009-ஆம் ஆண்டு பரீட்சையின் முடிவுகளின் படி,

  • 4-ஆம் வகுப்பைச் சேர்ந்த 34% மாணவர்கள்
  • 8-ஆம் வகுப்பைச் சேர்ந்த 30% மாணவர்கள்
  • 12-ஆம் வகுப்பைச் சேர்ந்த 21% மாணவர்கள்

மட்டுமே அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைஞ்சிருக்காங்கன்னும், 72% (4-ஆம் வகுப்பு), 63% (8-ஆம் வகுப்பு), 60% (12-ஆம் வகுப்பு) மாணவர்கள் பார்டர் லெவெல்ல பாசாகியிருக்காங்கன்னும் (அதாவது, அறிவியல் கூற்றுகளை ஓரளவுக்கு புரிஞ்சிக்கிட்டாங்கன்னு அர்த்தம்) இந்த அறிக்கையில தெரிய வந்திருக்கு!

பள்ளி இருக்குற இடம் மற்றும் மாணவர்களுடைய இனம் இவ்விரண்டு காரணிகளைப்பொறுத்தும் அவர்களுடைய மதிப்பெண்கள் வேறுபட்டதாம்! இதுல சுவாரசியம் என்னன்னா,  அதிக மதிப்பெண்கள் வாங்கின உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிய-பசிபிக் தீவைச் சார்ந்தவர்கள் மற்றும் வெள்ளையினத்தவர்கள் என்பதும், சராசரியாக வெள்ளையின மாணவர்கள் கருப்பின மாணவர்களைவிட 36 புள்ளிகள் (4 & 8-ஆம் வகுப்பு) மற்றும் 34 புள்ளிகள் (12-ஆம் வகுப்பு) அதிகமாக வாங்கியிருந்தாங்க அப்படீங்கிறதும்தான்!

இத விட செம காமடி(?), 4 மற்றும் 8- ஆம் வகுப்பைச் சேர்ந்த நகரத்து மாணவர்கள் அதே வகுப்புகளைச் சேர்ந்த கிராமத்து மாணவர்களைவிட குறைவான மதிப்பெண்களையே பெற்றிருந்தார்கள் என்பதே!

அடுத்த சுவாரசியம் என்னன்னா, நம்ம ஊருல இருக்குறதுக்கு அப்படியே உல்டாவா, 4, 8 மற்றும் 12-ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அதே வகுப்புகளைச் சேர்ந்த மாணவிகளைவிட அதிகமான புள்ளிகளையும் பெற்று ஆண்களின் மானத்தை அமெரிக்காவில் காப்பாற்றி விட்டார்கள் என்பதெ!

என்னங்க, பதிவைப் படிச்சிட்டு, நம்ம திருவிளையாடல் பாலைய்யா மாதிரி “என்னடா இது, இந்த அமெரிக்காவுக்கு வந்த சோதனை” அப்படீன்னு யோசிக்கிறீங்களா இல்ல, தங்கவேலு சமையல் காமெடியில வர்ற அவரு மனைவி மாதிரி “இதுதான் எனக்கு தெரியுமே”ன்னு சொல்றீங்களா?

நீங்க எப்படிச் சொன்னாலும் சரி, நம்ம ஊர்ல அறிவியல் படிப்புல பசங்களோட நெலம என்னன்னு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லிட்டு போங்களேன்…..

தொடர்புடைய சில பதிவுகள்:

ஐயோ பாவம் அமெரிக்கா….?!

இந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டும்?!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

பிடிச்சிருந்தா இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements