பள்ளியிருக்கும், பசியிருக்கும்….உணவிருக்காது!!! புத்தகமிருந்தும் படிப்பு வராது!!!

Posted on திசெம்பர் 23, 2010

10


என்னங்க, தலைப்பைப் படிச்ச உடனே தலை சுத்துமே?! உண்மைதான், உங்களுக்கு இந்த தலைப்பைப் பார்த்து தலைசுத்துற அதே நேரம், இந்தியாவின் பல மூலைகளிலுள்ள ஏழை/ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தலை சுத்தும், உங்கள மாதிரி குழப்பத்துனால இல்ல. பசி மயக்கத்துனால…..!

சரி, ரொம்ப சுத்தி வளைக்காம நாம நேரா மேட்டருக்கே வந்துடுவோம். இந்த உலகத்துல இருக்குற எல்லாச் செல்வங்களைக்காட்டிலும் மிக மிக உயர்ந்தது எதுன்னு கேட்டா, கண்ணை மூடிக்கிட்டு கல்விச்செல்வம்னு சொல்லிடலாம். அதனாலதான் நம்ம திருவள்ளுவரு கூட “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” அப்படீன்னு சொல்லிருக்காரு. அத்தகைய கல்விச் செல்வத்தை உங்களுக்கும், எனக்கும் நம்ம தாய்-தந்தையர் ஏற்பாட்டுல, நல்ல ஒரு பள்ளியில சிறந்த ஆசிரியர்கள் கொடுத்தாங்க.

தமிழ் நாடு: மதிய உணவுத்திட்டம்!

ஆனா, தாய்-தந்தையர் இல்லாத/இருந்தும் ஏழையான குழந்தைகளுக்கு கல்விச்செல்வத்தை அரசாங்கம் கொடுத்தாலும், உண்ண உணவில்லாமல் போனால் அந்தக் கல்வி குழந்தைகளுக்கு போய்ச்சேராது என்பதை ஒரு மாடு மேய்க்கும் சிறுவன்மூலம் உணர்ந்த காமராஜர், தமிழக பள்ளிகளில் மதிய உணவு/சத்துணவு திட்டத்தை கடந்த 1960-களில் உருவாக்கினார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும்!

கோல்கத்தா: அக்ஷ்யபாத்ரா அமைப்பு!

வீதியில் எறியப்பட்ட மீதமான உணவுக்காக தெரு நாய்களுடன் சண்டையிட்ட ஆதரவற்ற குழந்தைகளைப் பார்த்து, இதயம்கனத்த கல்கத்தாவின், மாயாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.ஏ.சி. பக்திவேதாந்த்த சுவாமி ப்ரபுபதா அப்படீங்கறவரு, நம்ம பாரதியார் மாதிரி “தனியொருவருக்கு உணவில்லையெனில் இஜ்ஜகத்தினை அழித்திடுவோம்”னு எல்லாம் கோபப்படாம, தன் இருப்பிடத்தைச் சுற்றிய 10 மைல் சுற்றளவில் யாரும் இனி பசியால் வாடக்கூடாது என்ற உறுதிமொழியுடன் தொடங்கியதுதான் “அக்ஷ்யபாத்ரா” என்னும் அறக்கட்டளை/அமைப்பு!

அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட திட்டங்கள் தவிர்த்து, தனிமனிதர்களால் நிறுவப்பட்டு, பொதுமக்களின் தன்னார்வத் தொண்டு மற்றும் நன்கொடைகள் ஆகியவற்றால் மட்டுமே குழந்தைகள் உள்ளிட்ட பசியால் வாடும் ஆதரவற்ற, ஏழை எளிய மக்களின் அன்றாட உணவுத்தேவை பூர்த்தி செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள்  மற்றும் அறக்கட்டளைகளும் நம் நாட்டில் ஏராளம்!

உதாரணத்துக்கு கீழுள்ள பதிவுகளைப் பாருங்கள்:

  1. இந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டும்?!
  2. சூர்யாவும் சில விதைகளும், இந்தியாவுக்கு பல விருட்சங்களைக் கொடுக்க…..
  3. தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு!!

அதெல்லாம் சரிதான், இந்த அமைப்புக்களுக்கும் இந்தப் பதிவுக்கும் என்னப்பா சம்பந்தம்? அப்படீன்னு நீங்க கேக்கலாம்.

இருக்குங்க, இருக்கு! நம்ம நாட்டுல பரவியிருக்குற இப்படிப்பட்ட பல அமைப்புகள் பத்தி இணையம், செய்தித்தாள், தொலைக்காட்சி, நண்பர்கள் இப்படி ஏதாவது ஒரு வகையில தெரியவந்து நன்கொடைகள் மூலமாகவும், தன்னார்வத் தொண்டுகள் மூலமாகவும் உணவில்லாத பலருக்கு உணவு கிடைக்க, இந்தப் பதிவைப் படிச்சிக்கிட்டிருக்கும் உங்கள்ல பலர் உதவியிருப்பீங்க.

இன்னும் சிலர் இம்மாதிரியான நிறுவனங்கள் பத்தி தெரிஞ்சு, “பச்….பாவம் இந்தக் குழந்தைங்க. உணவில்லாததுனால படிக்கமுடியாம கஷ்டப்படுறாங்களே” அப்படீன்னு வருத்தப்படுறதோட நிறுத்திக்கிட்டு, அடுத்த வேலையைப் பார்க்க போயிருப்பீங்க!  அப்படிப்போன பலபேர்ல நீங்களும் ஒருத்தர்னா, வலையுலகில் வலைப்பதிவர்னா உங்களுக்கான பதிவுதாங்க இது (மத்தவங்களுக்கும்தான்!) மேலே படிங்க…..

இன்டிப்ளாக்கரின் வலைப்பதிவுப் போட்டி!

இந்திய வலைப்பதிவர்களை, வலைப்பதிவின்மூலம் சமுதாய மாற்ற/முன்னேற்ற/சீர்திருத்த செயல்களில் ஈடுபடுத்தும் மேன்மையான பணியை சில மாதாந்திர போட்டிகள் மூலம் இன்டிப்ளாக்கர் கடந்த சில வருடங்களாக செய்துவருகிறது. அந்த வரிசையில, சமீபத்திய போட்டிதான் இன்டிப்ளாக்கர், அக்ஷ்யபாத்ரா அமைப்புடன் இணைந்து நடத்தும் “வலைப்பதியுங்கள்; 50 குழந்தைகளுக்கு உணவளியுங்கள்” போட்டி. இந்தப் போட்டியில் கலந்துகொள்ள, அக்ஷ்யபாத்ரா அமைப்பை அறிமுகப்படுத்தி, ஏழைக்குழந்தைகளுடன் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டு, பின் அந்தப் பதிவை இன்டிப்ளாக்கரின் போட்டிக்கு விண்ணப்பிக்க வேண்டும்! உங்கள் பதிவு பலரைச் சென்றடைந்து, அவர்கள் மூலம் அக்ஷ்யபாத்ரா மற்றும் ஏனைய பல தன்னார்வ அமைப்புகள் மூலம் ஏழை/ஆதரவற்ற இந்தியக் குழந்தைகளுக்கு கல்வி/உணவு கிடைக்க வழி ஏற்படும்!

அதைவிட மிக முக்கியமா, இந்தப் போட்டிமூலாம நமக்கு கிடைக்கப்போற பரிசுகளைவிட, நாம (ஒவ்வொரு வலப்பதிவரும்) வலைப்பதிவுல எழுதுற ஒவ்வொரு பதிவுக்கும், தலா 50 குழந்தைகளுக்கு மனிதவாழ்க்கையின் அடிநாதங்களுள் ஒன்றான உணவை பரிசாக அளிக்கப்போகிறது இன்டிப்ளாக்கர் அக்ஷ்யபாத்ரா அமைப்பின் மூலமாக!  என்னைப்பொறுத்தவரைக்கும் இதுதாங்க நமக்கு, நம்ம எழுத்துக்கு கிடைக்கிற பெரிய பரிசு, அங்கீகாரம் எல்லாம்! என்ன எழுதுவீங்களா? அந்த ஏழைக் குழந்தைகளுக்கு உணவை பரிசாக கொடுப்பீங்களா?

வலையுலகில் இருக்கும் உங்களில் பலருக்கு இன்டிப்ளாக்கர் பற்றித் தெரிந்திருக்கும். அதில் உறுப்பினராகவும் இருப்பீர்கள்?! அப்படி தெரியாதவர்களுக்கும், உறுப்பினராக இல்லாதவர்களும் இன்டிப்ளாக்கர் பத்தி தெரிஞ்சிக்க/உறுப்பினராக இங்கே போங்க.

ஒரு சின்ன விண்ணப்பம்: உங்களுக்கு தெரிந்த, ஏழைக்குழந்தைகளின் கல்விக்கும், ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் வேறு பல அமைப்புகள் தொடர்பான தகவல் அல்லது இணையத் தொடர்புகள் இருந்தா தயவுசெஞ்சு ஒரு மறுமொழி மூலமா தெரியப்படுத்துங்க. அதையும் பதிவுல இணைச்சு, அவை குறித்த தெரியாத ஆனால் உதவ விரும்பும் நல்லுள்ளங்களுக்கு தெரியப்படுத்துவோம். நன்றி

தொடர்புடைய சில பதிவுகள்:

இந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டும்?!

சூர்யாவும் சில விதைகளும், இந்தியாவுக்கு பல விருட்சங்களைக் கொடுக்க…..

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு!!

உலக அரங்கில் உயர்ந்த தமிழ்; உயர்த்திக் காட்டிய தமிழன்….!!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements