உலக அரங்கில் உயர்ந்த தமிழ்; உயர்த்திக் காட்டிய தமிழன்….!!

Posted on நவம்பர் 26, 2010

9


22-ஆம் நூற்றாண்டுலயும் நம்ம ஊடகங்கள் இப்படியேதான் இருக்கும் போலிருக்கு?! என்னங்க ஒன்னும் புரியலியா? அட, அது வேற ஒன்னுமில்லீங்க, கடந்த மாதம் 22-ஆம் தேதி, தமிழகத்தின் புதிய சூப்பர் ஸ்டார் அப்படீன்னு ஒரு தலைப்புல CNN ஹீரோக்களுள் ஒருவரான, தமிழரான  திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்கள் 2010 ஆம் ஆண்டின் உலகின் தலைசிறந்த ஹீரோக்கள்ல ஒருத்தரா தெரிவாகியிருக்காரு, அவருக்கு நிறைய ஓட்டு போட்டு, உலகின் தலைசிறந்த ஹீரோவாக்குங்க அப்படீன்னு கேட்டிருந்தேன்.

அவருக்கு ஓட்டுப்போட்டுட்டு, அதுக்கப்புறம் நானும், நீங்களும் நம்ம வேலையில மூழ்கிட்டோம். இன்னிக்கு சக பதிவர் மீனாட்சி நாச்சியார், நம்ம கிருஷ்ணன் உலக அரங்குல, CNN 2010 தலைசிறந்த 10 ஹீரோக்கள்ல ஒருத்தரா கேடயம் வாங்கினதப் பத்தி எழுதியிருக்கறத பார்க்க/படிக்க நேர்ந்தது. முன்னாடி நான் கிருஷ்ணன் அவர்களப்பத்தி எழுதினதும், இவர் பதிவு படிச்சபின்னாடிதான். வேலைப்பளுவுல, இந்த செய்திய நான் பார்க்கல!

ஆனா, நானும் அனேகமா உங்கள்ல பல பேரும், இவரப்பத்தி தெரிஞ்சிக்க முடியாததுக்கு காரணம் நம்ம ஊடகங்கள்தான்! செய்தித்தாளாகட்டும், இணையமாகட்டும் நம்ம ஆளுங்க எல்லாரோட கவனத்துக்கும் கொண்டுவர்ற செய்திகள்ல பிரதானமானது, எனக்குத் தெரிஞ்சவரைக்கும் ரெண்டு. ஒன்னு, சினிமா இன்னொன்னு அரசியல். இது ரெண்டுத்துக்கப்புறமா, இருக்கவே இருக்கு கள்ளக்காதல் செய்திகள். இதுலயே மூழ்கடிச்சிடுறாங்க மக்கள! அப்புறம் எப்படி, கிருஷ்ணன் மாதிரியானவங்க உலக அரங்குல ஜொலிக்கிறது நமக்கு தெரிய வரும்???

அது சரி, நம்ம இசைப்புயல் ரெண்டு ஆஸ்கார் வாங்கினத மட்டும் கம்பியூட்டரு தேயுற வரைக்கும் இணையத்துல பரப்புன ஊடகங்களும், வலையுலகமும் இதை ஏன் வாசகர்கள் கவனத்துக்கு கொண்டு வரல? இப்படி கேட்டா, ஒன்னும் சொல்றதுக்கில்லன்னு சொல்றதத்தவிர, நம்மால வேற என்ன செய்ய முடியும்? அவங்கவங்களா திருந்தினாதான் உண்டு! சரி அத விடுங்க, நாம நம்ம நிஜ ஹீரோ கிருஷ்ணன், தமிழுக்கும், தமிழர் கருணைக்கும் ஒரு உலக அங்கீகாரத்தை வாங்கிக்கொடுத்த தருணத்தைப் பார்ப்போம் வாங்க……

“தமிழனென்று சொல்லடா (கிருஷ்ணன் மாதிரி தொண்டுகள் செய்து, உலக அரங்கில்) தலை நிமிர்ந்து நில்லடா”

 

நிழல் ஹீரோ கெய்ஃபர் சதர்லேண்டுடன் நம்ம நிஜ ஹீரோ கிருஷ்ணன்!

“தனியொருவருக்கு உணவில்லையெனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்”, அப்படீன்னு சொன்ன நம்ம பாரதியாரோட வாக்கினை, அஹிம்சை வழியில பின்பற்றி, தன் எதிர்காலக் கனவுகளை அழித்துக்கொண்டு, புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்கு தினமும் உணவளிக்கும் நம்ம தல நாராயணன் கிருஷ்ணன், உலகின் தலைசிறந்த ஹீரோக்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு, எப்படி அந்தக் கேடயத்தை வச்சிகிட்டு தலை நிமிர்ந்து நிக்கிறாருன்னு கீழே இருக்குற காணொளியில பாருங்க…..

முக்கியமா, ஏ.ஆர் ரகுமானுக்கு அடுத்தபடியா, தனக்கு கிடைத்த உலக அங்கீகாரத்தை ஒரு தமிழனாக பதிவு செய்ய, “எல்லாப்புகழும் இறைவனுக்கே” அப்படீன்னு தமிழுக்கும், தமிழரின் கருணைக்கும் ஒரு உலக அங்கீகாரத்தை வாங்கிக்கொடுத்திருக்காரு நம்ம கிருஷ்ணன். அதுக்காக அவருக்கு ஒரு தலைவணக்கம். ஆனா, உலகம் முழுதும் வியாபித்திருக்கும் நம்மவர்கள், எல்லாரும் ஓட்டுப்போட்டிருந்தாங்கன்னா, இந்த வருடத்தின் தலைசிறந்த ஹீரோவா வந்திருப்பாரு நம்ம கிருஷ்ணன். அதுக்குக் காரணம் ஊடக விளம்பரமின்மையும், அலட்சியப்போக்கும்தான்னு தோனுது!

முந்தைய பதிவுல சொன்ன மாதிரியே, இந்த அங்கீகாரம் அவருக்கு 25,000 டாலர் பணத்தை பெற்றுத்தந்ததன் மூலம், அவர் தொண்டு செவ்வனே தொடர்வதுடன், மேலும் பலருக்கு அவர் தொண்டு செய்யவும், நம்மையும் தொண்டுசெய்யத தூண்டவும் பயன்படும் என்று நம்புவோமாக! இந்த சந்தோஷத்தை நாம எல்லாரும் கண்டிப்பா கொண்டாடியே ஆகனும். அதனால, இந்த காணொளிய உங்க நண்பர்கள் பலருக்கும் அனுப்புங்க, செய்தியப் பகிர்ந்துக்குங்க நண்பர்களே!

அதுமட்டுமில்லாம, நீங்களும் ஒரு வலைப்பதிவர்னா, தயவு செஞ்சு உங்க வலைப்பக்கத்துல இந்தச் செய்திய கண்டிப்பா பதிவு செய்யுங்க. இது தமிழன்னு பெருமைப்பட்டுக்கிறதுக்காக இல்ல, கிருஷ்ணனோட சந்தோஷத்தை நாம எல்லாரும் கொண்டாடுறதுக்காகவும், அவரை மாதிரி இன்னும் பலர் உருவாக பலரை ஊக்கப்படுத்துறதுக்காகவும்தான். நம்மில் பல கிருஷ்ணன்கள் இன்னும் உருவாகனும்ங்க. அதுக்கு இந்த உலக அங்கீகாரமும், கிருஷ்ணன் அவர்களுக்கு கிடைத்த இந்த வெளிச்சமும் முதற்படியா அமையும்னு நம்புவோம்.

எல்லாத்தையும் சொல்லிட்டு, இந்த வருடத்தின் உலகின் தலைசிறந்த ஹீரோவாக CNN ஆல் தேர்ந்தடுக்கப்பட்ட திரு.அனுராதா கொய்ராலா பத்தி சொல்லலைன்னா தப்பாயிடும். அவங்கள மாதிரி ஒரு தைரியமும், உத்வேகமும் இருந்தா இந்த உலகத்துல பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிறையவே குறையவும், இல்லாமற்போவதற்க்கும்கூட வாய்ப்பிருக்கு. அவங்க நேபாலத்திலிருந்து வெளி நாடுகளுக்கும், உள் நாட்டிலும் விபசாரத்திற்க்கு உட்படுத்தப்படும் இளம் பெண்களை அந்த நரகத்திலிருந்து மீட்கவும், அவர்கள் விபசாரத்திற்க்கு செல்லாமல் தடுக்கவும் பல வருஷமா போராடிக்கிட்டு வர்றாங்க. அவங்களுக்கும் நம்மோட தலைவணக்கம். இன்னும் பல அனுராதா கொய்ராலாக்கள் உருவாகட்டும் இந்த உலகில்…….

மேலும், நாராயணன் கிருஷ்ணனுக்கு நிதியுதவி செய்ய நீங்க விரும்பினா, நாராயணன் கிருஷ்ணன் அவர்களின் தொண்டு நிறுவன முகவரி இங்கே (http://www.akshayatrust.org/index.php)

தொடர்புடைய சில பதிவுகள்:

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு!!

இந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டும்?!

சூர்யாவும் சில விதைகளும், இந்தியாவுக்கு பல விருட்சங்களைக் கொடுக்க…..

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements