செக்ஸ்: “பாலியல், இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன?”, வாங்கிவிட்டீர்களா?

Posted on நவம்பர் 19, 2010

23


என்னங்க, அப்படி பார்க்குறீங்க? தலைப்பைப் படிச்சா கண்ணைக் கட்டி காட்டுல விட்டது மாதிரி இருக்குதுங்களா? கவலைய விடுங்க, விவரம் என்னன்னு நான் சொல்றேன். இதுவரைக்கும் வலைப்பதிவாளனா இருந்து, உங்க எல்லாருடைய குட்டுகள், ஊக்கங்கள், பாராட்டுகள், வாழ்த்துக்கள் இப்படி எல்லா வகையான எதிர்வினை/மறுமொழிகள் மூலமா தன்னையும், தன் எழுத்துக்களையும் மேம்படுத்தி/மெருகேற்றிக்கொண்ட உங்கள் மேலிருப்பான்/பத்மஹரி…..

மேலே தலைப்புல நீங்க படிச்ச வரிகளையே தலைப்பாகக் கொண்ட, தரமான, எல்லாதரப்பினரும் வாசிக்கவேண்டிய/வாசிக்கக்கூடிய கருத்துக்களடங்கிய ஒரு நூலை எழுதும் வாய்ப்புப்பெற்று, அந்த நூல் (பார்க்க படம், கீழே) இன்று தமிழக மாவட்டங்களின் புத்தக கடைகளிலெல்லாம் கிடைக்கும் நிலையில், எழுத்தாளன் என்னும் தகுதியுயர்வு பெற்று, இன்று உங்கள்முன் எழுத்தாளர் பத்மஹரியாய்  பணிவுடன் நிற்க்கிறேன்!

இந்த நூலைப்பற்றிய ஒரு சிறு அறிமுகத்துடன், என்னை உங்களின் ஆதரவென்னும் அன்பினால் வலைப்பதிவுலகில் காலூன்றச்செய்ததுபோலவே, தமிழ் எழுத்துலகிலும் காலூன்றச்செய்ய உதவவேண்டும் என்ற வேண்டுதலையும் முன்வைக்கவே இந்தப் பதிவு! வாங்க, என்னன்னு விவரமாப் பார்ப்போம்……

நூலின் முன்னுரை:

வாசகர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். செக்ஸ் என்னும் தலைப்பைப் பார்த்தவுடன், “ஓ….இது அந்த மாதிரி புத்தகமா?” என்று ஒரு அவசரமான முடிவுக்கு வந்துவிடவேண்டாம்!

இந்த நூலின் அடிப்படை நோக்கமே, செக்ஸ் குறித்த தவறான புரிதல்கள், குழப்பங்கள், மர்மங்கள், பயங்கள், கவலைகள் மற்றும் மருத்துவக் குறைபாடுகள் போன்றவற்றைப் பற்றி நவீன ஆய்வுகள் என்ன சொல்கின்றன, இக்கருத்துக்களைக் கொண்டு பாமரர் முதல் படித்தவர் வரையிலான சமுதாய மக்களின் பாலியல் அறிவை மேலும் வளர்த்து, செக்ஸ் குறித்த தவறான புரிதல்களை ஓரளவுக்கேனும் களைய முடியுமா என்பதே! அந்த முயற்ச்சிக்கான முதற்படிதான் இந்த நூலில் நீங்கள் வாசிக்கவிருக்கும் கட்டுரைகளும், செய்திகளும்!

முழுக்க முழுக்க பாலியல் ஆரோக்கியத்தை நோக்கிய பாதையில், நம் உறவுகள், பாலியல் பழக்கவழக்கங்கள், தேர்வுகள் ஆகியவற்றை நேர்படுத்திக்கொள்ள உதவும் வண்ணம் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளையே இனிவரும் பக்கங்களில் நீங்கள் வாசிக்கவிருக்கிறீர்கள்!

மனித சமுதாயத்தில் செக்ஸ் என்ற வார்த்தையைச் சுற்றி, மர்மங்கள், பயங்கள், ரகசியங்கள், குழப்பங்கள் இப்படி பலவகையான சுவர்கள் கட்டி எழுப்பப்பட்டு, அது காலம் காலமாய் சந்ததிகளால் பாதுகாக்கப்பட்டும் வருகிறது. விளைவு, செக்ஸ் சம்பந்தமான நல்லது, கெட்டது இப்படி இரண்டுவகையான கருத்துக்களுமே ரகசியமாகவும், மறைமுகமாகவும், எந்த ஒரு தருணத்திலும் பாலியல் மருத்துவரல்லாத ஒருவருடன் பேசக்கூடாத ஒன்றாகவும் மாறிப்போனது.

இதுவரை தமிழிலுள்ள பாலியல் சார்ந்த நூல்கள், பாலியல் உறவுகள் பற்றியும், அவற்றில் எழும் சிக்கல்கள் பற்றியும் விளக்கமளிக்கும் வண்ணம் எழுதப்பட்டிருப்பதாகவே அறிகிறேன். அத்தகைய நூல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, உடலுறவு மற்றும் செக்ஸ் செயல்பாடுகளுடன் தொடர்புடைய உடல் உபாதைகள், ஹார்மோன்களுடன் தொடர்புடைய சில நோய்கள், பாலியல் உறவுகளின் இயல்பு, பாலியல் வக்கிரங்கள், குற்றங்கள் போன்றவற்றையும், அரவாணிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், பாலியல் குற்றவாளிகள் போன்றோர் உருவாகக் காரணம் என்ன என்பதையும், சமீபத்திய ஆய்வு முடிவுகளின் துணையுடன், மரபனுவியல், நரம்பியல், உளவியல் ஆகிய அறிவியல் துறைகளின் அடிப்படையில் அணுகி, இவற்றுக்கான ஒரு முழுமையான விளக்கத்தை கொடுக்க முயன்றுள்ளேன்.

இத்தகையச் செய்திகளைத் தாங்கிவரும் தமிழின் முதல் நூலாகவும் இந்நூல் இருக்குமென்று நம்புகிறேன்! பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள், செய்திக்கோப்புகள், மருத்துவ மாத இதழ்கள், உளவியல் நூல்கள், பாலியல் மருத்துவ மாத இதழ்கள், மருத்துவத்துறை இணையதளங்கள் என எல்லா ஊடகங்களிலும், பல்கலைக்கழக நூலகத்திலும், பலமாதகாலம் செலவிட்டு, தீவிர தேடலின் பயனாக சேகரித்த ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் செய்திகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகளின் கருத்தாழமிக்க, சுவாரசியமானக் கலவையே இந்த நூல்!  சுமார் இரண்டுமாத காலம் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறு ஆய்வின் குழந்தைதான் நீங்கள் வாசிக்கவிருக்கும் இந்த நூல்! வாசித்தபின் தங்களின் மேலான கருத்துகளை அறிய ஆவலாய் உள்ளேன்!

இந்த நூலை எழுதுவதற்க்கான ஆர்வமும், உழைப்பும் என்னிடம் இருந்தபோதும், என் திறமையை அங்கீகரித்து, ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகம் மூலமாக வெளியிடும் அரியதொரு வாய்ப்பை, எனக்களித்து ஊக்குவித்த ஆசிரியர் திரு.யாணன் அவர்களுக்கும், பதிப்பாளர் திரு.பிலால் அவர்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்!

நூலின் உள்ளே…..

பாலியல் சுவாரசியங்கள்!

முத்தமும் வைரசும்…..

மதுவும் செக்ஸும்…..

அரிதான பாலியல் உடலியக்கங்களும், விளைவுகளும்!

திருநங்கைகள்/அரவாணிகள் பற்றிய முழுவிவரங்கள்; அறிவியல் பின்புலத்திலிருந்து மருத்துவம் வரை…..

ஓரினச்சேர்க்கையாளர்கள்; ஏன் பிறக்கிறார்கள், எப்படி உருவாகிறார்கள் இன்னும் பல தகவல்கள்…..

சமுதாயத்தின் சில பாலியல் பேரவலங்கள்/வக்கிரங்களும், தீர்வுகளும்!

கள்ள உறவுகள்; அதிர வைக்கும் அறிவியல் பின்புலம், உளவியல் காரணங்கள் மற்றும் தீர்வுகள்…..

பீடோஃபீலியா; குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை: காரணங்கள், தீர்வுகள்…..

பாலியல் புதிர்கள்!

உச்சகட்டம்; புதிரா புனிதமா?: உச்சகட்டம் குறித்த பலவகையான விளக்கங்கள் மற்றும் பயன்கள்…..

இன்னும் பல சுவாரசியமான, பாலியல் புரிதலை நேர்படுத்த உதவும் பல தகவல்கள், என இந்த நூல் விதவிதமான செய்திகளை நீங்கள் விரும்பும் மேலிருப்பானின் நகைச்சுவை நடையில், உங்களுடைய நண்பன் போல உங்களுடன் பகிர்ந்துகொள்ளும்…..

இந்த நூல் கிடைக்குமிடம்:

Blackhole Media  Publication Limited,

No.7/1, 3-rd Avenue, Ashok nagar,

Chennai-600 083. India

Cell: (+91) 9600086474, 9600123146

Email: admin@blackholemedia.in

Website: http://blackholemedia.in/

நன்றி…..

இன்று நான் இந்தப் பதிவை எழுதும் அளவுக்கு என்னை வளர்த்துவிட்டது, இந்த வலைத்தளத்தில் என்னை ஆதரித்து வாசித்த முதல் வாசகர் தொடங்கி, தரத்தைப்பற்றி கவலைப்படாமல் என் முயற்ச்சியை ஊக்குவித்து மறுமொழி எழுதிய வாசகர்கள், ஆக்கப்பூர்வமான விவாதங்களை உருவாக்கிய வாசகர்கள், தமிழிஷில் எனக்காக வாக்களித்த வாசகர்கள் என எல்லா தரப்பு வாசகர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

“வாசகர்கள் அனைவருக்கும் மேலிருப்பானின் பல கோடி நன்றிகள்”

இந்த நூல் பாலியல் குறித்து இருப்பதுபற்றி சிலருக்கு ஒரு சந்தேகம் எழலாம். அது, மருத்துவம் குறித்த நான் ஏன் ஒரு நூலை எழுதவில்லையென்று. உண்மைதான், காரணம் பாலியல் குறித்து தெளிவாக, அறிவியல் பின்புலத்துடன் எழுதவேண்டிய அவசியமும், அப்படி எழுதுபவர்கள் தமிழ் எழுத்துலகில் மிக மிக அரிது என்பதும்தான்! ஆனால் இனி வரவிருக்கும் என் அடுத்த நூல் மருத்துவம் பற்றியதே!

இறுதியாக, இந்த நூலை எழுதும் அரிய வாய்ப்பை எனக்கு நல்கிய ப்ளாக்ஹோல் மீடியாவின் ஆசிரியர் யாதவ நாராயணன் (யாணன்) அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்நூல் குறித்த விமர்சனங்கள்:

பதிவர் எழுதிய நூல் – ஒரு அறிமுகம்

நூல் பார்வை : பாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன ?

பாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன? – பத்மஹரி மென்நூல் தரவிரக்கத்துடன்

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

போடுங்கய்யா ஓட்டு

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements