சூர்யாவும் சில விதைகளும், இந்தியாவுக்கு பல விருட்சங்களைக் கொடுக்க…..

Posted on ஓகஸ்ட் 17, 2010

19


இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:

தண்ணீர் அருவி கொட்டும் சப்தங்கள், பறவைகள் எழுப்பும் சப்தம் போன்ற இயற்க்கையின் பல சப்தங்கள் இருதயத்தை சாந்தப்படுத்தும் திறனுள்ளவையாம். அவற்றைக் கேட்டு பல்வேறு உளைச்சல்களால் துவண்டுபோயிருக்கும் உங்கள் இருதயத்தை புத்துணர்ச்சி  பெறச் செய்யுங்கள்!

“அவள் வருவாளா” அப்படீன்னு நேருக்கு நேர் படத்துல அப்பிராணியா பாட்டுபாடி நடிக்க ஆரம்பிச்ச சூர்யா, திடீர்னு நந்தாவா விசுவரூபம் எடுத்து நம்மளையெல்லாம் “அட” போட வச்சாரு, அப்புறம் கொஞ்சம் இடைவெளி விட்டு ஐ.பி.எஸ்-களுக்கே ஒரு இலக்கணமா “காக்க காக்க” படத்துல அன்புச்செல்வன் ஐ.பி.எஸ் அதிகாரியா வந்து மிரட்டினாரு, அதுக்கப்புறமா யாருமே எதிர்பார்க்காத மாதிரி, ஆனா சூர்யாவுக்குள்ளே இப்படி ஒரு நகைச்சுவை நடிகனா அப்படீன்னு எல்லாரும் அசந்துபோற அளவுக்கு “பிதாமகன்”ல நகைச்சுவையில பூந்து விளையாடி, படம் பார்த்த எல்லாரையும் “அடடே” போட வச்சாரு, இது எல்லாத்துக்கும் மேல, தமிழ்சினிமாவின் முதல் “சிக்ஸ் பேக்” கதாநாயகனா, “வாரணம் ஆயிரம்” படத்துல அறிமுகமாயி, அவரோட நடிப்புத்திறமை பத்தி கொஞ்ச நஞ்சம் இருந்த மக்களோட சந்தேகங்களையெல்லாம் தவிடு பொடியாக்கினாரு……,

இப்படியெல்லாம் ஒரு சினிமா கதாநாயகனா, பத்தோட பதினொன்னா எம்மனசுலயும், உங்க எல்லார் மனசுலயும் இடம் பிடிச்சிருந்த சூர்யா, முதல் முறையா நிஜ வாழ்க்கையில கதாநாயகனா ஜொலிக்கிறத நேத்துதான்  விஜய் தொலைக்காட்சியோட “விதை சூர்யாவுடன் ஒரு வெற்றிப்பயணம்” அப்படீங்கிற நிகழ்ச்சியில பார்த்தேன். பார்த்த உடனே “ஒரு மனிதனா” சூர்யாவுக்கான என்னோட மதிப்பெண்கள் 100% ஆயிடுச்சி! அதான், மேலிருப்பான் வலைப்பக்கத்தோட கொள்கைகள்ல ஒன்றான “சினிமா பத்தி எழுதக்கூடாது” அப்படீங்கிறத கொஞ்சம் தளர்த்திகிட்டு, சூர்யாவோட சினிமா அத்தியாயங்களோட ஒரு அறிமுகத்தை மட்டும் எழுதி, இனி சூர்யாவோட விதை நம்ம தமிழ்நாட்டுக்கும், இந்திய திருநாட்டுக்கும் எவ்வளவு அவசியம்னு எனக்குத் தெரிஞ்ச ஒரு சில விஷயங்களை உதாரணமா எடுத்துக்கிட்டு சொல்லலாமுன்னு இந்தப் பதிவை எழுதுறேன்.

என்னைக்கும் போல ஒரு ஆய்வுச்செய்தியை எதிர்பார்த்து, இன்னிக்கும் மேலிருப்பானுக்கு வருகை தந்திருக்கும் நீங்க எல்லாரும் என்னை மன்னிச்சிட்டு, இந்தப் பதிவுக்கு உங்க ஆதரவை இன்ட்லியில  வாக்களித்துத் தெரிவிக்கனும்னு கேட்டுக்குறேன்.  வாங்க, இனி பதிவைப் பார்ப்போம்…..

தமிழ்நாட்டுக்குள்ளேயே ஒரு “விந்தை உலகம்”!

நான் பார்த்த இந்த விதை நிகழ்ச்சியை, தமிழ்நாட்டைச்சேர்ந்த நீங்களும், இன்னும் பல லட்சம்பேரும் கண்டிப்பா பார்த்திருப்பீங்க. “அப்புறம் எதுக்கு இந்த நிகழ்ச்சியைப் பத்தி வள வளான்னு எழுதி உன்னோட நேரத்தையும், எங்களோட பொன்னான நேரத்தையும் வீணாக்குற” அப்படீன்னு உங்கள்ல சிலபேரு முனுமுனுக்குறது கேக்குது. கவலைப்படாதீங்க, இந்த நிகழ்ச்சியில இடம்பெற்ற, ஆனா நாட்டுக்கு அத்தியாவசியத் தேவையான சில முக்கியமான விஷயங்களப் பத்தி சுருக்கமாச் சொல்லி, இந்த வலையைப் படிக்கிற ஆனா, சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மற்றும் விதை நிகழ்ச்சியைப் பத்தி தெரியாத சில/பலருக்கு தெரியப்படுத்தறது மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம்!

இந்த நிகழ்ச்சியைப் பார்த்தப்போ கண்ணு கலங்கிடுச்சிங்க! ஏன்னா, அடிப்படைத்தேவைகளான உணவு, உடை, உறையுள் இப்படி எல்லாமே கொடுத்து, அதுக்கும் மேல அன்பு, ஆதரவு, ஊக்கம், இன்னும் இத்யாதி இத்யாதி என எல்லாத்தையுமே கொடுத்து….”தலைவாரி பூச்சூடி உன்னை, பாட சாலைக்கு போ என்று சொன்னால் உன் அன்னை” அப்படீன்னு நம்மில் பெரும்பாலனவங்களுக்கு அம்மாவும், அப்பாவும் இருந்து, படிக்க வச்சதுக்கப்புறம்கூட 12 ஆம் வகுப்புல 996 மதிப்பெண்களுக்கு மேல என்னால எடுக்கமுடியல. ஆனா, இந்த நிகழ்ச்சியில அகரத்தோட நிதிவுதவிக்கு தேர்வான 158  மாணவர்கள்ல பெரும்பாலானவங்க 1000 மதிப்பெண்களுக்கு மேல எடுத்திருக்காங்க.

“ஆனா, 1000 அல்லது 1100-க்கும் மேலே மதிப்பெண்கள் எடுத்த இவங்கள்ல பலருக்கு தாய், தந்தையர், மூன்று வேளை உணவு, வீடு, பண வசதி, மின் விளக்கு இப்படியான அத்தியாவசியத் தேவைகளே  எதுவுமே  கிடையாது அப்படீங்கிறதுதான் கொடுமை. ஆனா, அவங்க யாரும் சராசரி மாணவர்கள் மாதிரி எந்த நொண்டிச்சாக்கும் சொல்லாம, ஜெயிச்சிருக்காங்க. அவங்களுக்கு சிறம்தாழ்ந்த வணக்கங்களும், மனமார்ந்த வாழ்த்துக்களும்!”

ஆக, தமிழ் நாட்டுக்குள்ளேயே நமக்குத் தெரியாமலே சோதனைகளும் சாதனைகளும் ஒருசேர பயணிக்கும் விந்தை உலகமும், அதுக்குள்ள ஆயிரக்கணக்கான சாதனை மாணவர்களும் இருக்காங்கங்கிறத இந்த நிகழ்ச்சி மூலமா புரிஞ்சிக்க முடிஞ்சது. ஆ ஊன்னா, அமெரிக்காவையும் அயல் நாடுகளையுமே மேற்கொள் காட்டியும், சாதனைகளுக்கு உதாரணமா எடுத்துக்கிட்டு பழகிப்போன நாம இனியாவது மாறனும். அட்டகாசமான ஒரு இளைய இந்தியா, போதிய வசதிகள் இல்லாம அங்கே வாடிக்கிடக்குது. நம்மாலான பொருள், கல்வி, ஆளுதவின்னு எதையாவது ஒன்னை இனிமேலாவது செய்யலாம் வாங்க!

சூர்யாவின் கடந்த வருட ஒரு கோடி ஒரு தொடக்கம் நிகழ்ச்சியின் காணொளி……

இனியொரு இனியொரு விதி செய்வோம்!

வாரக்கடைசியிலும், மாதக்கடைசியிலும் சினிமாக்களுக்கும், இன்னும் இத்யாதி கேளிக்கைகளுக்கும் பணத்தை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வாரி இறைக்கும் நம்மில் பலர், அந்தப் பணத்தில் குறைந்தது 1 ரூபாயிலிருந்து முடிந்த ஒரு தொகையை, அகரம் மாதிரியான கல்வியை வறியவர்களைத் தேடிச்சென்று வழங்கும், தரமான சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு இனியாவது நம்பிக்கையோட கொடுக்கலாம் வாங்க.

இந்த சமுதாயத்துல ஒரு ‘மாற்றம்’ வரனும் அப்படீன்னு விரும்புற ஆனா அப்படியொரு மாற்றம் வராததுக்கு காரணம், ஊழல் அரசியல்வாதிகள், மக்களின் உழைப்பை மட்டுமே உறிந்துக்கொண்டு தகுந்த ஊதியத்தை வழங்காத பணமுதலைகள், பணியை ஒழுங்காகச் செய்யாத அரசு அதிகாரிகள், அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்கள், விதிகளை மீறும் பொதுமக்கள் இப்படி எல்லாருந்தான்னு புலம்பிக்கிட்டிருக்கறத விட்டுட்டு,

  1. நீங்க விரும்புற எந்தவொரு மாற்றத்துக்குமான முதல்படியா நீங்களே மாறுங்க! அந்த வழியில போக மத்தவங்கள கூப்பிடுங்க
  2. இந்த நாட்டுல நடக்கிற, நம்மால தடுக்க முடியாத எல்லா கொடுமைகளும் ஒரு பக்கம் நடக்கட்டும், ஆனா உங்களால முடிஞ்சவரைக்கும் உங்க சமூகத்தை திருத்த எதாவது ஒரு வேலை செய்ய முயற்ச்சி பண்ணுங்க. சமூக மாற்றம் தானாக வரும்.
  3. ஒரு ஏழைக்குழந்தையின் கல்விக்கு ஒரு பைசா கொடுக்க முடிஞ்சாலும் ஒரு தனிநபரா நீங்க தொடங்குங்க. உங்களைச் சார்ந்த சமுதாயம் கண்டிப்பா உங்களை பின்பற்றி கொஞ்சம் கொஞ்சமா மாறிடும்
  4. பண உதவி கொடுக்க முடியலைன்னா, உங்க பொன்னான நேரத்துல கொஞ்சத்தை ஒதுக்கி சூர்யாவோட அகரம் அமைப்புல தன்னார்வத் தொண்டு செய்யும் தன்னார்வலரா மாறுங்க. அதுக்கு இங்கே போங்க
  5. நம் சமூகத்தில் கல்விக்கு மறைமுக எதிரிகளான, புறையோடிப்போயிருக்கும் குடிப்பழக்கத்தை மாற்ற ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த எதாவது ஒரு வகையில முயற்ச்சி பண்ணுஙக
  6. ஒரு பொறுப்புல்ல குடிமகனா உங்களைச் சார்ந்த இளையச் சமுதாயம் மற்றும் பொதுமக்களுக்கு கல்வியின் இன்றியமையாமையை பற்றி வாய்ப்பு கிடைக்கும்போது விளக்கிச் சொல்லிப் புரியவைங்க!

என்னோட சிற்றறிவுக்கு எட்டிய விதிகள் இவ்வளவுதாங்க. இன்னும் அர்த்தமுள்ள பல விதிகளை நீங்க சொல்லுங்களேன்….

இது ‘நடிகர்’ சூர்யாவின் ‘பப்ளிசிட்டி ஸ்டண்ட்’ அல்ல?!

இந்த நிகழ்ச்சியை பார்த்து முடிச்சதுக்கப்புறமா, நம்ம குறுக்கு புத்தியோட திறமையினால (?) மூளைக்குள்ள ஒரு பொறி தட்டுச்சி! அட அது வேற ஒன்னுமில்லீங்க, தமிழ்நாட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் கனவில் இருக்கும் தளபதிளுக்கும், ‘தல’களுக்கும் சிம்மசொப்பனமாய், திரைத்துறையில் அசுரவளர்ச்சியுடன், சமீபகாலங்களாய் கோடம்பாக்கத்தையே அல்லோ கல்லோலப் பட வைத்துக்கொண்டிருக்கும், நடிகர் சூர்யாவின் சினிமா எதிர்காலத்தை மேலும் பிரகாசமாக்கிக்கொள்ள நடத்தப்படும் எத்தனையோ ‘பப்ளிசிட்டி ஸ்டண்டு’களில் இதுவுமொன்றாக இருக்குமோ” அப்படீன்னு உங்கள்ல சில/பலருக்கு தோனினது (?) போலவே எனக்கும் தோனுச்சி.

ஆனா, அந்த மாதிரி சந்தேகங்களெல்லாம் ஆதாரமில்லாதவை அப்படீன்னி அடிச்சி சொல்ற மாதிரி இருந்தது, நிகழ்ச்சியில் இடம்பெற்ற சூர்யாவின் வார்த்தைகளும், பல செயல்பாடுகளும். அவற்றி சில சுவாரசியங்கள் இங்கே……

  1. ஏழை குழந்தைகளின் கல்வி நிதிக்கு கொடுக்கப்பட்ட மொத்த ஒரு கோடியையும் நீங்களே கொடுத்திருக்க வேண்டியதுதானே என்ற கோபியின் கேள்விக்கு சூர்யா “நான் மட்டுமே ஒரு கோடியை கொடுத்தால் அது பணபலம், ஆனால் அதே ஒரு கோடியை என்னுடன் சேர்ந்து 9 பேரும் கொடுத்தால் அது மனபலம் என்னும் சூர்யாவின் தெளிவான புரிதல்
  2. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அகரம் அறக்கட்டளையின் பல குழந்தைகளின் பெயர், குடும்பப்பின்னனி, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண், பேற்றோர் செய்யும் வேலை முதற்கொண்டு பல்வேறு விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்த சூர்யா
  3. இந்த நிகழ்ச்சிக்கு அரசியல் பெருந்தலைகள், சினிமா நடிக/நடிகைகள் என சென்சேஷனால யாரையுமே அழைக்காமல், தான் அண்ணனாக நினைக்கும் சமூக அக்கரையுள்ள இயக்குனர் பாலைவை மட்டும் அழைத்திருந்த விதம்
  4. நிகழ்ச்சியில் தன்னடக்கத்தை மொத்தமாக குத்தகையெடுத்துக்கொண்டு, இந்த விதைக்கான ஆதாரமாக பணம்கொடுத்த மற்றும் பணிபுரிந்த எல்லாரையும் மனதாரப் பாராட்டியது

மேலே நீங்க படிச்சது எல்லாமே, இந்த நிகழ்ச்சி சூர்யாவோட பப்ளிசிட்டி ஸ்டண்ட் இல்லைங்கிறதுக்கு உதாரணமா, என்னோட அரைகுறை அறிவுக்கு எட்டிய சில விஷயங்கள் மட்டுமே. இது தவிர, எனக்குத் தெரியாத சாதக பாதகமான பல விஷயங்கள் இந்த நிகழ்ச்சியோடு சம்பந்தப்பட்டிருக்கலாம். அப்படி எதாவது இருக்குதுன்னு நீங்க நெனச்சா, ஒரு மறுமொழி எழுதி சொல்லிட்டு போங்க!

தமிழ்நாட்டுக்கு இன்னும் பல விதைகள் வெண்டும்!

தமிழ்சினிமாவையும், தமிழ்நாட்டு மாணவர்கள்/இளைஞர்களையும் ரசனைங்கிற துருப்புச்சீட்டை வச்சி, பல எந்திரன்கள்,  சுறாக்கள் இன்னும் பல இத்யாதிகளாலும், ஆக்கிரமிச்சி இஷ்டத்துக்கு ஆட்டிப்படைச்சிக்கிட்டு இருக்குற,  சூப்பர் ஸ்டார்களும், தளபதி, தல’களும் இன்னும் இருக்குற இத்யாதி இத்யாதி ஸ்டார்களும் போதுமுங்க. தமிழ்சினிமாவுல கோடிகளைக் கொட்டி, சண்டைக்காட்சி, டூயட், காமெடிங்கிற பேர்ல இவிய்ங்க பண்ற சேட்டைங்களையும், இம்சைங்களையும் தாங்க முடியலீங்க!  இதையெல்லாம் பார்த்து பார்த்து எனக்கு எப்பவோ கண்ணைக் கட்டிடுச்சி! ‘”துக்கு எங்கள என்னா செய்யச் சொல்ற” அப்படீன்னு யாரோ மூனாவது மனுசனோட பிரச்சினையைப் பேசுற மாதிரி எந்திரிச்சி போயிடாதீங்க.

இதுக்கு ஒரு வகையில நாமளும்தான் காரணம். நாம காசு குடுத்து பார்க்குற சினிமாவுல, இனிமே சூர்யா மாதிரி சமுதாயத்துல விதைகளை விதைக்கிற மனுசங்கள அதிகமா வளர்த்துவிடுவோம், ஆதரிப்போம். பண முதலைகளை அல்ல!  சூர்யா மாதிரி சினிமாத்துறை சார்ந்த, சாராத இன்னும் பல விதைகள் நம்ம சமுதாயத்துல விழுந்து,  விருட்சமா வளர்ந்து, எடுத்துக்கிட்ட செல்வங்களை நிழலாவும், கனிகளாகவும் இந்த சமுதாயத்துக்கு திருப்பித் தரனும். அதுக்கு சரியானவங்களுக்கு மட்டுமே உங்க ஆதரவைக் கொடுங்க அப்படீன்னுதான் சொல்றேன்!

நாம மாறனுமுங்க!

இந்த விதை நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில பார்த்த உடனே அதுபத்தி எழுதனும்னு ஒரு ஆர்வம் வந்துச்சு. ஆனா, “இந்த மாதிரி நல்ல விஷயங்களை உன்னைவிட விரைவா, தெளிவா எழுதுறதுக்கு தமிழ் பதிவுலகத்துல எத்தனையோ பேரு இருக்காங்க, நீ உன் வேலையைப் பாரு” அப்படீன்னு ஒரு உள்ளுணர்வு சொல்லுச்சு. சரி எத்தனை பதிவர்கள் இதை எழுதியிருக்காங்கன்னு நம்ம கூகுளார்கிட்ட கேட்டுட்டு அப்புறமா எழுதறத பத்தி யோசிப்போம்னு தேடினா, ரெண்டு மூனு ஹிட்டுங்களத் தவிர மத்த ஒரு சில ஹிட்டுங்க இந்த நிகழ்ச்சியோட ஆரம்பமான கடந்த வருட ‘ஒரு கோடி ஒரு தொடக்கம்’  பத்தி இருந்துச்சி.

இதப்பார்த்த உடனே சப்புன்னு ஆயிடுச்சி. புது சினிமா பத்தியும், சினிமா நடிகர்/நடிகைகளோட கிசு கிசு பத்தியும், அசின், நமீதா, லஷ்மிராய் பத்தியும் ஊடகத்துல ஒரு செய்தி வந்த அடுத்த நிமிஷமே விழுந்தடிச்சிக்கிட்டு பதிவு எழுதுற பல தமிழ் வலைப்பதிவர்கள், இந்தச் செய்தியை ஏனோ எழுதல! சரி, கூகுள்லதான் வரல தமிழ் பதிவர்களின் களமான இன்ட்லியிலயாவது வந்திருக்கான்னு பார்த்தா, சுதந்திர தின செய்திகள்னு மட்டுமே ஒரு சில பதிவுகள் இருக்குதே தவிர பிரத்தியேகமா ‘விதை’ நிகழ்ச்சி பத்தி ஒரு பதிவையுமே காணோம்! ஆனா நண்பர் ஜெகதீஸ்வரனின் சகோதரன் வலையில மட்டும் நேத்தே இந்த நிகழ்ச்சி பத்தின விரிவான ஒரு பதிவைப் பார்த்தேன். அவருக்கு என் வாழ்த்துக்களும், நன்றிகளும்! (மேலும் சிலரை நான் விட்டும்கூட இருக்கலாம். அப்படி இருந்தால் மறுமொழியில் குறிப்பிடுங்கள்!)

இன்ட்லியில விதை பத்தி பதிவு இருக்கான்னு தேடும்போது சகபதிவர் ஒருத்தரோட நிஜம் சுடும்ங்கிற ஒரு பதிவை எதேச்சையாப் பார்த்தேன். உண்மைதாங்க, நிஜம் ரொம்பவே சுட்டுது என்னை!! நாம ஏங்க இன்னும் இப்படியே இருக்கோம்? சினிமாவை வச்சி காசு பார்க்கவும், சினிமாவையும் சினிமா கலைஞர்களை தூக்கிப்பிடிக்கவும்தான் நூத்துக்கான பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் வரிசை கட்டி நிக்குதே, வலைப்பதிவர்களான நாமளுமா அதே வேலையைச் விழுந்தடிச்சி செய்யனும்?! சகவலைப்பதிவர்களே, நண்பர்களே கொஞ்சம் யோசிங்க. சினிமாவுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்துல ஒரு கால் பங்கையாவது சமூக விழிப்புணர்வுக்கும், சமூக முன்னேற்றத்தும், சமூக மாற்றத்துக்கு கொடுக்கக்கூடாதா?

யோசிங்க, நல்லா யோசிங்க! வலைப்பதிவுங்கிறது ஒரு பெரிய சக்தியா உருப்பெற்றுக்கொண்டு வருவது நம் எல்லோருக்குமே நல்லாத் தெரியும். அந்த சக்தியை நல்ல விஷயங்களுக்காகவும்,முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்துவோமுன்னு 63-வது சுதந்திர தினத்துக்கு அப்புறமாவது ஒரு உறுதிமொழி எடுத்துக்கலாம் வாங்க! இன்னும் எழுதறதுக்கு நிறைய இருக்கு, ஆனா முன்னாடியே சொன்ன மாதிரி முக்கியமான சில கருத்துகளை மட்டும் பதிவுசெஞ்சுட்டேன்னு நெனக்கிறேன். இந்தப் பதிவு மூலமா நான் யார் மனசையாவது புண்புடுத்தியிருந்தா மன்னிப்பு கேட்டுக்கிறேன். நன்றி!

சூர்யாவின் அகரம் அறக்கட்டளை பற்றி அறிய இங்கு செல்லுங்கள்

அகரம் அறக்கட்டளைக்காக தன்னார்வலராக மாற இங்கு செல்லுங்கள்

விதை, சூர்வாவுடன் ஒரு வெற்றிப்பயணம், சுதந்திர தின நிகழ்ச்சியைக் காண இங்கு செல்லுங்கள்

தொடர்புடைய சில பதிவுகள்:

இந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டும்?!

13 வயதே ஆன யுகரத்னா ஐக்கிய நாடுகள் சபையில்

வலைப்பதிவு: ஐயோ பாவம் வலைப்பதிவர்கள்!?

“மாவ்லின்னாங்”-இந்தியாவின் சுத்தமான,பசுமையான அடையாளம்!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

போடுங்கய்யா ஓட்டு

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements