செக்ஸ்: மூளை வளர்ச்சியை “தூண்டுகிறது” உடலுறவு?!

Posted on ஓகஸ்ட் 4, 2010

8


இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:

உங்களின் ஒவ்வொரு மணிநேர நடைப்பயிற்ச்சியும், உங்கள் வாழ்நாளை 60 நிமிடங்கள் வரை நீட்டிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆகவே, தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு மணி நேரமாவது நடைப்பயிற்ச்சி செய்வதை பழக்கமாக்கிக்கொண்டு உங்களின் இருதயத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்!

செக்ஸுன்னு சொன்னாலே, மூளைக்குள்ளே ஒரு கிறுகிறுப்பு, குறுகுறுப்பு, சுறுசுறுப்பு இப்படி ஒரே களேபரமாயிடும் நம்ம மூளையும், மனசும்னு உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும்! அது ஏன்னு என்னைக்கேட்டிங்கன்னா எனக்குத்தெரியாதுன்னுதான் சொல்ல முடியும். அதுக்காக நீங்க ஒன்னும் மனச தளர விட்டுடாதீங்க. ஏன்னா, மருத்துவர்.ஷாலினின்னு ஒரு செக்ஸ் துறைசார்ந்த மருத்துவர் இருக்காங்களாம் நம்ம ஊருல. அவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கலாம் நீங்க!

“யோவ், அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்யா……, நீ என்ன சொல்ல வர்றே இப்போ? அதச்சொல்லு முதல்ல” அப்படீங்கிறீங்களா?!

சரி சரி ஒன்னும் உணர்ச்சிவசப்படாதீங்க. அதாவது, செக்ஸ்/உடலுறவினால் ஏற்படும் நன்மைகள்/தீமைகள் பத்தி எத்தனையோ ஆய்வுகள், பல்வேறு மருத்துவ வார/மாத இதழ்கள்ல அப்பப்போ வந்துகிட்டுதான் இருக்கு. அதுல ஒரு சில ஆய்வுச் செய்திகள் மட்டும் ரொம்ப ஆச்சரியப்படுத்தும் விதமாகவும், இது உண்மையாவே சாத்தியமா அப்படீங்கிற மாதிரியான கேள்விகளை எழுப்பும்படியாவும் இருப்பவை!

அந்த மாதிரியான ஒரு சுவாரசியமான ஆய்வுச் செய்தி ஒன்னு கண்ணுல பட்டுது. அதை உங்ககூட பகிர்ந்துகிட்டு, அதுல இருக்குற சாதக பாதகங்கள் பத்தி உங்ககூட விவாதிக்கலாமேன்னுதான் இந்த பதிவு! என்ன ஆரம்பிச்சிடுவோமா கச்சேரிய….?!

செக்ஸ்/உடலுறவு, மூளை வளர்ச்சி; ஒரு தொடர்பு?!

மூளை வளர்ச்சி குறித்த முந்தைய ஆய்வுகளில், துன்பம்/மன உளைச்சல் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன என்பது கண்டறியப்பட்டது. அப்படியானால், இன்பம் அல்லது மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள்/அனுபவங்கள் (செக்ஸ்/உடலுறவு) மூளை வளர்ச்சியின்மீது எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா என்று கண்டறிய, செக்ஸ்/உடலுறவை தேர்ந்தெடுத்து எலிகளில் ஒரு ஆய்வைச் செய்தார்கள் அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்!

இந்த ஆய்வில், வயது வந்த ஆண் எலிகளுடன் உடலுறவில் ஈடுபடத் தகுதியுள்ள பெண் எலிகளை ஒரே பெட்டிக்குள், ஒரு நாளில் இருமுறை அல்லது இரு வாரங்களில் ஒரு முறை என ஒன்றாக வைத்தார்கள். அப்படி வைத்த எலிகளின் ரத்தத்தில் இருக்கும் மன உளைச்சலுடன் தொடர்புடைய ஹார்மோனான க்லுக்கோகார்டிகாய்ட்ஸின் (glucocorticoids) அளவையும் கணக்கிட்டார்கள். ஏன்னா, மூளை வளர்ச்சி மீதான துன்பமான நிகழ்வுகளின் தாக்கத்துக்கு இந்த ஹார்மோன் காரணமாயிருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டார்கள் ஆய்வாளர்கள்!

சோதனையின் முடிவில், கன்னி கழியாத ஆண் எலிகளுடன் ஒப்பிடுகையில், செக்ஸ்/உடலுறவில் ஈடுபட்ட எலிகளின் மூளை வளர்ச்சி அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக, மூளையின் நியாபகங்களுக்கு அடிப்படையாக கருதப்படும் ஹிப்போகேம்பஸ் (hippocampus) என்னும் பகுதியிலுள்ள நரம்புகள், அணுக்களின் எண்ணிக்கை கூடியிருந்ததும் கண்டறியப்பட்டது. துன்பமான நிகழ்வுகளின்போது இந்தப் பகுதியின் அணுக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் தன்மையுடையவை என்பது குறிப்பிடத்தக்கது!

“இதுல வேடிக்கை என்னன்னா, பெண் எலிகளை இரு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே கண்ட/சேர்ந்த எலிகளின் உடலில் உளைச்சல் தொடர்பான ஹார்மோன்களின் (stress hormones) அளவு அதிகரித்துவிட்டிருந்ததாம். ஐய்யோ பாவம்….?! ஆனால், தினமும் இரு முறை பெண் எலிகளை கண்ட/சேர்ந்த ஆண் எலிகளின் உடலில் உளைச்சல் தொடர்பான ஹார்மோன்கள் அதிகரிக்கவே இல்லையாம்! ம்ம்ம்…..கொடுத்து வச்ச எலிங்க…..?!”

அதுமட்டுமில்லாம, செக்ஸ்/உடலுறவில் அதிகம் ஈடுபட்ட எலிகள், எலிகளின் பொதுவான குணமான படபடப்பு, பயம் போன்றவை குறைவாக இருந்ததாம். அவை, புதிய சூழல்களில் விடப்பட்டபோது உணவை எந்த தயக்கமும், பயமும் இல்லாமல் உண்டனவாம்!

ஆக, இந்த ஆய்வுலேர்ந்த நமக்கு தெரியவர்றது என்னன்னா, “பொதுவாக மூளை வளர்ச்சியை பாதிக்கும் தன்மை உடைய உளைச்சல் ஹார்மோன்களின் பாதிப்பை, மகிழ்ச்சி தரக்கூடிய (செக்ஸ் போன்ற) அனுபவங்களின்மூலம் மாற்றியமைக்க முடியும்” என்று தெரியவந்துள்ளது அப்படீன்னு கருத்து தெரிவிக்கிறாங்க பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்!

ம்ம்ம்…..செக்ஸுக்கும், மூளைக்கும் எப்படியெல்லாம் முடிச்சு விழுது பாருங்க?! ஆமா, இந்த ஆய்வு பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க….?!

தொடர்புடைய சில பதிவுகள்:

செக்ஸ்: ஜேம்ஸ் பாண்டும் செக்ஸும்; காரணங்களுடன் ஒரு ஆய்வு?!

செக்ஸ்: உடலுறவுக்காக ‘உயிரையும் கொடுக்கும்’ ஆண்கள், உளவியல் ஆய்வு!!

செக்ஸ்: “கல்லூரி முதல் கடற்கரை வரை”, உளவியல் பார்வையில்!!(18+)

செக்ஸ்: ‘உடலுறவு’ இதயத்துக்கு நல்லது; மாரடைப்புக்கு பின்னும்!!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements