ரெக்ஸ்: அதிநவீன “செயற்க்கை” கால்கள்; “நடக்கும்” பக்கவாத நோயாளிகள்!!

Posted on ஜூலை 31, 2010

10


இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:

ஒமேகா கொழுப்பு (Omega fatty acids) என்னும் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புச்சத்தினை அதிகமான அளவில் கொண்ட ஒரு உணவு மீன்கள். அந்த ஒமேகா கொழுப்பு இருதயத்துக்கு மிகவும் உகந்தது. அதனால், நிறைய மீன்கள் சாப்பிட்டு உங்கள் இருதய நலனை பேணிப் பாதுக்காத்துக்கொள்ளுங்கள்!

இந்த உலகத்துல பிறக்கிற எல்லாருக்குமே, உலகியல் விஷயங்களையெல்லாம் ரசிக்கனும், செயற்கரிய செயல்கள் பல செய்து பெயரும் புகழும் அடையனும், எல்லா வகையான இன்பங்களையும் அனுபவிக்கனும் இப்படி நிறைய ஆசைகள் இருக்கும்! ஆனா, ஆசைகளை நிறைய கொடுக்கும் இயற்க்கை அதை அனுபவிக்கத் தேவையான (இயற்க்கை/செயற்க்கை உடைமைகள்) எல்லாவற்றையும் எல்லாருக்கும் கொடுக்கிறது இல்லை!

அப்படி இயற்க்கையால் வஞ்சிக்கப்பட்ட/வஞ்சிக்கப்படும் ஒரு சாரார்தான் பிறப்பிலிருந்தும், திடீரென்று ஏற்படும்  (முதுகுத்தண்டை பாதிக்கும்) விபத்துகளுக்கும், சில வகை நோய்களுக்கும் (உதாரணமாக போலியோ) என பலவகையான காரணங்களுக்கு, தங்களின் கை/கால்களின் செயல்பாட்டை இழந்துவிடுபவர்கள்! இக்காரணங்களில் மிகவும் துன்பம் தரக்கூடியதும், பெரும்பாலும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்களினால் ஏற்படுவதுமான வாதம் (Paralysis) என்னும் குறைபாடு!

உடலின் (உடல் பகுதிகளின்) உணர்வு மற்றும் இயக்கத்துக்கு அடிப்படையான நரம்புகளான சென்சரி (Sensory neuron) மற்றும் மோட்டார் (Motor neuron) நரம்புகள் என்றழைக்கப்படும் நரம்புகளை பாதித்து, அதன் விளைவாக பாதிக்கப்பட்டவரின்  உடல் பகுதிகளின் தசைகள் செயலற்று, உடலின் இயக்கம்/போக்குவரத்துக்கு அடிப்படையான கை, கால்களை முடக்கிவிடும் தன்மையுடையவை இந்த வாத நோய்கள்.

வாதநோயில் பலவகை உண்டு! உடலின் எந்த பகுதி பாதிக்கப்படுகிறது, பாதிக்கப்படும் அந்த குறிப்பிட்ட பகுதியின் கட்டுப்பாட்டில் உள்ள உடல் இயக்கங்கள் என்ன என்பதைப் பொறுத்து இந்த வாத நோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன! உதாரணமாக, வாத நோய்க்கு அடிப்படைக் காரணம் (பெரும்பாலும்) விபத்துகளால் அல்லது சில வகை நோய்களால் பாதிப்புக்குள்ளாகும் முதுகுத்தண்டு (Spinal chord)! முதுகுத்தண்டு கட்டுப்படுத்தும் போக்குவரத்து, உணர்வுகள் உட்பட்ட எல்லா உடல் இயக்கங்களுமே, உடலுக்கு  அத்தியாவசியமான/இன்றியமையாதவை என்பது குறிப்பிடத்தக்கது!

வாதநோய் வகைகள்!

முதுகுத்தண்டின் செயல்பாட்டுக்கு ஏற்படும் முட்டுக்கட்டை/பாதிப்புகளால் உண்டாகும் வாத நோய்கள் உடலின் குறிப்பிட்ட சில பாகங்களை மட்டும் அல்லது உடல் முழுவதையும் செயலற்றுப் போகச் செய்துவிடும் தன்மையுடையவை! அவை…..

  1. Paraplegia: இக்குறைபாட்டினால் பாதிக்கப்படுபவர்களின் கால்கள் இரண்டும் செயலற்று விடும். அவர்கள் பெரும்பாலும் சக்கர நாற்காலிகளின் துணையுடனே வாழ வேண்டும்
  2. Hemiplegia: ஒரு பக்க கால்கள் மட்டும் பாதிக்கப்படும்
  3. Quadriplegia: இரு கை மற்றும் கால்கள் அனைத்தும் பாதிக்கப்படும்
  4. Spastic diplegia: கால்கள், இடுப்பு மற்றும் இடுப்புப் பகுதி சுற்றிய எலும்பான பெல்விஸ் பாதிக்கப்படும்
  5. monoplegia: ஒரு கை/கால் மட்டும் பாதிக்கப்படும்

மேற்குறிப்பிட்டுள்ள நோய்களினால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் தம் அன்றாட வாழ்க்கையின் போக்குவரத்துத் தேவைகளுக்கு இதுவரை நம்பியிருந்தது சக்கர நாற்காலிகளையே. ஆனால் இனியும் அவர்கள் அப்படியிருக்கத் தேவையில்லை என்று திடமாக நம்புகிறார்கள் ரிச்சர்டு லிட்டில் மற்றும் ராபர்ட் இர்விங். அவர்களின் நம்பிக்கைக்கு அடிப்படை அவர்கள் கண்டுபிடித்துள்ள பயோனிக் கால்கள் (Bionic legs) அதி நவீன ரோபாட்டிக் செயற்கைக் கால்கள்!

அதைப்பற்றிய ஒரு அறிமுகத்துக்காகவே இந்தப் பதிவு. வாங்க என்னன்னு பார்ப்போம்…..

வீல்-சேர்களுக்கு இனி விடுமுறை! பக்கவாத நோயாளிகளுக்கு விடுதலை!

5 வருடங்களுக்கு முன்பு, ஒரு இரு சக்கர வாகன விபத்தின் காரணமாக பாராப்ளீஜிக் வாத நோயால் பாதிக்கப்பட்டு, வாழ்க்கையில் இனி நடக்கவே முடியாது என்னும் துயர நிலைக்கு தள்ளப்பட்டவர் (தற்போது)23 வயதான ஹெய்டன் ஆலன். ஆனால், அது அந்தக் காலம்! இன்று அவர் நம்மைப் போல நடக்கிறார் பயோனிக் கால்களின் துணையுடன்! ஆமாங்க, ரிச்சர்டு மற்றும் ராபர்டின் கண்டுபிடிப்பான செயற்க்கைக் கால்களை முதன்முதலில் சோதித்துப் பார்த்தவர் நம்ம ஆலன்தான்!

“பயோனிக் கால்களை பொருத்திக்கொண்டு நடக்கையில் தான் ஒரு சராசரி மனிதன்போலவே உணர்வதாகவும், இது ஒரு அட்டகாசமான உணர்வு என்றும் தெரிவித்துள்ள ஆலன், அன்றாட வாழ்க்கையில் ஒருவரை அவரின் கண்களை நேரிட்டு பேசக்கூடிய ஒரு வாய்ப்பை கொடுக்கும் இந்த பயோனிக் கால்கள் மிகவும் பயனுள்ளவை என்றும் கருத்து தெரிவிக்கிறார்”

ஆலனோட அட்டகாசமான அந்த அனுபவத்தை வெறும் வார்த்தைகளால் தெரிந்துகொள்வதற்க்கு பதிலாக நடக்கும் அவரையே கண்கூடாக பாருங்கள் கீழேயுள்ள காணொளியில்……


ஆலனுக்கு ஆலன் போன்ற மற்றவர்களுக்கும் தன்னம்பிக்கையையும், சராசரி வாழ்க்கையையும் கொடுத்துள்ள இந்த பயோனிக் கால்கள் உருவாக்க பொறியாளர்கள் ரிச்சர்டும், ராபர்ட்டும் எடுத்துக்கொண்ட கால அவகாசம் 10 ஆண்டுகள். இத்தொழில்நுட்பத்துக்காக செலவிடப்பட்ட தொகை 7.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள்! அடேங்கப்பா…..!

ஆலன் போன்றோருக்கு விடுதலையும், அவர்களின் வீல் சேர்கள்/சக்கர நாற்காலிகளுக்கு விடுமுறையும் கொடுத்த பெருமை 38 கிலோ எடையும், ஜாய் ஸ்டிக் மூலம் இயக்கமும் கொண்ட ரோபாட்டிக் எக்ஸோஸ்கெலிடன் என்றழைக்கப்படும் ரெக்ஸையேச் (Rex/robotic exoskeleton) சாறும்! ஏலியன்ஸ் என்னும் ஆங்கிலப் படத்தில் வரும் Ripley (Sigourney Weaver) என்னும் கதாபாத்திரத்தை முன்னுதாரணமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ரெக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது!

ரெக்ஸின் பெருமை நோயாளிகளை நடக்க வைப்பதோடு முடிந்துவிடவில்லை நண்பர்களே! பாராப்ளீஜிக் நோயாளிகள் மாடிப்படி ஏறி-இறங்க, உட்கார்ந்து-எந்திரிக்க, பின்னால் நடக்க, பக்கவாட்டில் நடக்க என கிட்டத்தட்ட ஒரு சராசரி மனிதன் தன் கால்களைக் கொண்டு செய்யும் அத்தனை வேலைகளையும், வாத நோயாளிகளும் செய்ய உதவுகிறான் அதி நவீன ரெக்ஸ்!

அதெல்லாம் சரி, இந்த ரெக்ஸோட விலையென்ன?

அதுதாங்க கொஞ்சமில்ல ரொம்பவே அதிகமா இருக்குது?! ரெக்ஸின் விலை, 150,000 அமெரிக்க டாலர்கள்! ஆனால், தற்சமயம் இக்கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்ட நாடான நியூசிலாந்தில் மட்டும் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ரெக்ஸ் அடுத்த வருடம் உலக நாடுகள் எல்லாவற்றிலும் வாங்க கிடைப்பானாம்! விலையைக் கேட்டா எனக்கு மயக்கமே வந்துடும் போலிருக்கு!

நமக்குத்தான் இப்படியிருக்கேத் தவிர, 25 மெக்காட்ரானிக் மற்றும் மென்பொருள் பொறியாளர்களைக் கொண்டு இயங்கும் ரெக்ஸின் கண்டுபிடிப்பாளர்களின் நிறுவனமான ரெக்ஸ் பயோனிக்சுக்கு (Rex Bionics) வந்திருக்கும் பாதிக்கப்பட்டோரின் தேவைக்கான தகவல்களின்படி, மக்கள் ரெக்ஸை கிட்டத்தட்ட 250,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்தும் வாங்குவதற்க்கு தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது!

அது சரி, தேவையை பணமா முக்கியம்?

தொடர்புடைய சில பதிவுகள்:

பார்வையில்லாதவரும் வாகனம் ஓட்டலாம்!

அதிசயம்: அசைத்தாலே ‘ரீசார்ஜ்’ ஆகும் அதிநவீன பேட்டரிக்கள்!!

ஆச்சரியமூட்டும் நவீன “பேப்பர்” பேட்டரி!

வேகமும் விவேகமும் நிறைந்த உலகின் முதல் பந்தயக் கார்

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements