மனிதர்களால் ஏன் “தண்ணீருக்குள் சுவாசிக்க” முடிவதில்லை?

Posted on ஜூலை 16, 2010

18


இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:

கொஞ்சம் அதிகமா கொலஸ்டிரால் இருக்குதுன்னு ரொம்ப நொந்து நூலாகிடாதீங்க. கொஞ்சம் அதிகமா இருக்குற கொலஸ்டிராலைவிட புகைப்பழக்கமும், உடல் பருமனும் இருதய நலனுக்கு மிகவும் மோசமானது! அதனால, இந்த ரெண்டு பழக்கத்தையும் முதல்ல விடுங்க அல்லது குறைங்க!

கேள்வியை படிச்சவுடனே பல பேருக்கு, “என்னாதிது….? இதெல்லாம் ஒரு கேள்வியா?” அப்படீன்னு கேட்கத்தோனலாம். ஏன்னா, தண்ணீருக்குள்ளே மனிதனால சுவாசிக்க முடியாததுக்கு காரணம், தண்ணீருக்குள்ள சுவாசிக்க முயற்ச்சி செஞ்சா நுரையீரலுக்குள்ள தண்ணி போயி, பரலோகத்துக்கு மனுசன் டிக்கெட் வாங்கிட வேண்டியதுதான் அப்படீங்கிறதுதான்னு நீங்க நெனக்கலாம்!

அதெல்லாம் சரிதான், ஆனா நுரையீரலுக்குள்ள ஏன் தண்ணீர் போகக்கூடாது? அப்படிப்  போனா என்ன ஆகும்? அப்போ தண்ணிக்குள்ள இருக்குற ஜீவராசிகளான மீன்கள், திமிங்கலம், பாம்பு இதெல்லாம் தண்ணிக்குள்ளே சுவாசிக்கறதே இல்லியா? சுவாசிக்குதுங்கன்னா அது எப்படி? இப்படி கேள்வி மேல கேள்வியா கேக்கறதுக்கு நெறைய கேள்விகள் இருக்கு!

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அறிவியல்பூர்வமான பதில்களை விளக்கமா பார்க்குறதுக்கும், தண்ணீருக்குள் சுவாசிக்கும்/சுவாசிக்காத சில கடல்வாழ் உயிரினங்கள் பத்தின உண்மைகளை தெரிஞ்சிக்கிறதுக்கும்தான் இந்தப் பதிவு!

(இதைப் படிச்சிட்டு “ஐய்ய….இதெல்லாம் எங்களுக்கு முன்னாடியே தெரியுமேன்னு சொல்ற ஒருத்தர் நீங்கன்னா, பதிவுல சொல்லப்படாத செய்தி இருந்தா மறுமொழியில சொல்லுங்க, இல்லைன்னா தயவு செஞ்சு அடுத்த பதிவு வரைக்கும் கொஞ்சம் காத்திருங்க வேற செய்தியை தெரிஞ்சிக்க!)

இப்போ நாம பதிவுச் செய்திக்குப் போவோமா……

தண்ணீருக்குள் சுவாசமும், பிராணவாயு கடத்தலும்!

பொதுவா நாம சுவாசிக்கும்போது, மூக்கு வழியா உள்ளே போகிற காற்று, காற்றுக்கூழாயினுள் (trachea/windpipe) சென்று, நுரையீரலினை அடைகிறது. ஒரு பெரிய காற்றுக்குழாயுடன் தொடங்கும் நுரையீரலானது, சிறு சிறு குழாய்களாக கிளைத்து/பிரிந்து இறுதியில் பிரத்தியேகமான சிறு காற்றுப்பைகளுக்குள் முடிகிறது. இவற்றை ஆங்கிலத்தில் அல்வியோலே (alveolae) என்கிறார்கள்!

நுரையீரல் முழுவதும் பரவியிருக்கும் இந்தக் சிறப்பு காற்றுப்பைகளில் நிரம்பும் சுவாசம்/பிராணவாயுவானது, இக்காற்றுப்பையை சுற்றியுள்ள ரத்த நாளங்களுக்குள் கடத்தப்படுகிறது. அதேசமயம், ரத்த நாளங்களுக்குள் இருக்கும் ரத்தத்தில் நிரம்பியுள்ள உடலியக்கத்தின் கழிவான கரிமள வாயுவானது, நுரையீரளினுள் அல்வியோலே/காற்றுப்பைகள் மூலம் கடத்தப்படுகிறது.

“பிராண வாயு-கரிமள வாயு பரிமாற்றமானது நடந்தேறியதன் விளைவாக பிராணவாயு உடலினுள்ளேயும், கரிமளவாயு நுரையீரல் வழியாகும் உடலுக்கு வெளியேவும் இடம் மாறுவதே சுவாசம்” அப்படீன்னு பள்ளிகூடத்துல உயிரியல் பாடம் படிச்ச நம்ம எல்லாருக்குமே நல்லாத் தெரியும்!

இருந்தாலும் இந்த செயல்முறை விளக்க காணொளியையும் ஒரு முறை பார்த்துடுங்க……

மீன்களும் சுவாசமும்!

விக்கிபீடியா: Guitardude012

அதே மாதிரி, தண்ணிக்குள்ளேயே காலத்தைக் கழிக்கும் மீன்களுக்கும், உயிர்வாழ பிராணவாயு அவசியம். ஆனா, காற்றிலிருக்கும் பிராண வாயுவை பிரித்தெடுக்கும் திறன் அதுங்களோட நுரையீரலுக்கு இல்லை. அதனால, மீன்களுக்கு தண்ணீருக்குள் கலந்திருக்கும் பிராணவாயுவை பிரித்தெடுத்து உள்வாங்கி, கரிமள வாயுவை வெளியேற்றும் பிரத்தியேகத் திறன்கொண்ட ஒரு பாகம் உண்டு. ஆங்கிலத்தில் இதை கில்ஸ் (gills) என்கிறார்கள். (தமிழ்ல எனக்குத் தெரியலீங்கோவ்!)

மீன்களுக்கு இருக்குற அந்த பாகம் நமக்கு இல்லைங்கிறதுனால, நம்மால தண்ணீருக்குள்ளே சுவாசிக்க முடியாது! இது ஒரு சப்பை மேட்டரு…..இல்லீங்களா? உண்மைதான். ஆனா, தண்ணிக்குள்ளே இருக்குற எல்லா மீன்களுக்கு இந்த சக்தி/திறன் இருக்குதான்னு கேட்டா இல்லைங்கிறதுதான் உண்மை!

இந்தத் திறன் இல்லாத, நீர்வாழ் மீன்கள் எதெதுன்னு உங்களுக்குத் தெரியுமா? அப்படி இந்தத் திறன் இல்லைன்னா, குறிப்பிட்ட அந்த மீன்கள் தண்ணீருக்குள் எப்படி சுவாசிக்கின்றன?  இந்த ரெண்டு கேள்விக்குமான விடைகளைப் பார்ப்போம்…..

தண்ணீருக்குள் வாழும் ஆனால், தண்ணீருக்குள்ளே சுவாசிக்கும் திறனில்லாத அந்த மீன்கள், கடல்வாழ் பாலூட்டிகளான திமிங்கலமும், டால்ஃபின்களும்தான்! அது சரி, இந்த ரெண்டு உயிரினமும் எப்படி தண்ணிக்குள்ளே சுவாசிக்காம வாழுதுங்க?  இவ்விரு மீன்களும், பிராணவாயுவை உள்வாங்கி பல நிமிடங்கள் மூச்சை பிடித்து/தம் கட்டி தண்ணீருக்குள்ளே நீந்தக்கூடிய பிரத்தியேக திறனை கொண்டவையாம்!

ஆனால், மூச்சிலிருக்கும் பிராணவாயு தீர்ந்துவிட்டால், தண்ணீருக்கு வெளியே வந்து மீண்டும் ஒருமுறை ஆழ்ந்த சுவாசம் பிடித்துபின் தண்ணீருக்குள் சென்றுவிடுமாம்! நீங்களே பாருங்க கீழே இருக்குற காணொளியில…….

இந்தச் செய்தி உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்/தெரியாதுன்னு எனக்குத்தெரியாது! இது தவிர தண்ணீருக்குள் சுவாசிக்கும் வேறு விலங்குகள் பற்றி உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்…..

தொடர்புடைய சில பதிவுகள்:

தண்ணீரின்றி மனிதனால் எவ்வளவு காலம் தாக்குபிடிக்க முடியும்?

விக்கல் என்றால் என்ன?

மீன்களுக்கு காது கேட்குமா?

மீன்கள் அழுமா?

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements