வினோதம்: புலனறிவில் மனிதர்களைத் தோற்கடிக்கும் 10 விலங்குகள்!!

Posted on ஜூலை 8, 2010

9


இன்றைய உடல் நலக் குறிப்பு:

உடல் ஆரோக்கியத்தை குறிக்கும் BMI (உடல் எடை கணக்கு) அளவானது 18.5 முதல் 24.9 வரை இருந்தால் ஆரோக்கியமானது. 25 முதல் 29.9 வரை இருந்தால் உடல் பருமன் அல்லது அதிக எடையுள்ளவர்கள் பட்டியலில் வருவோர் என வரையறுக்கப்பட்டுள்ளது!

இந்த மனுசன் இருக்கானே, உலகத்துலயே எனக்குத்தான் 6 அறிவு இருக்கு, நான் சகல கலா வல்லவன், என்னால இது செய்ய முடியும், அது செய்ய முடியும்னு, இப்படி எப்பப் பார்த்தாலும் ஒரே பந்தாதான்! என்னடா இவன், தனக்கும் மனுசனுக்கும் சம்பந்தமேயில்லாத மாதிரி பேசிக்கிட்டு இருக்கானேன்னு நெனக்கிறீங்களா?

அட நீங்க வேற, நான் சொன்னது என்னையும் சேர்த்துத்தாங்க! ஆமா, ஏன் இப்படியெல்லாம் சொல்றேன்னு யோசிக்கிறீங்களா? அது வேற ஒன்னுமில்லீங்க, பரிணாம வளர்ச்சியில முதலிடத்துல இருக்குறதுனால, மனுசனுக்கு கீழே இருக்குற மத்த விலங்குகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிட்டு, எல்லா வகையிலும் திறமைசாலியா இருக்குறது மனுசந்தான்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன் இதுவரைக்கும்!

மனுசனைப்பார்த்து, “ஏய்…..கொஞ்சம் அடங்குறியா”, அப்படீன்னு கேக்குற மாதிரியும் சில பல விலங்குகள் இருக்குன்னு ஒரு செய்தி படிச்சேன். என்னதான் மனுசன் 6 அறிவோட, எல்லா விலங்குகளுக்கும் சிம்ம சொப்பனமா இருக்குறதா நாம நெனச்சிக்கிட்டு இருந்தாலும், நம்மள பார்த்து “ஐய்ய…..தோடா வண்ட்டுகிறாரு”ன்னு நக்கலா சொல்ற அளவுக்கு, புலனறிவுல நம்மை விட பன்மடங்கு திறமைசாலியான பல விலங்குகள் இருக்குன்னு நெனைக்கும்போது சப்புன்னு ஆகிப்போச்சு!

அதான், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு, அந்த விலங்குகளப் பத்தியும், அதுங்களோட அட்டகாசமான புலனறிவுத்திறன்களைப் பத்தியும் உங்க கூட பகிர்ந்துக்கலாமேன்னு இந்தப் பதிவ எழுதுறேன். வாங்க, புலனறிவுல நம்மளத் தோற்கடிக்கிற அந்த விலங்குகள் என்னென்னன்னு பார்த்துடுவோம்……

1. வவ்வால்கள் (Bats):

wikipedia: Nordelch

எப்பப் பார்த்தாலும் தலைகிழ தொங்கிக்கிட்டிருக்குற இந்த வவ்வால் இருக்குங்களே, அது தான் பறக்கும்போது தன் சிறகுகளில் எதிர்ப்படும் தடைகளைத் தவிர்க்க, ultrasonic squeaks என்னும் ஒரு வகையான ஒலி அலைகளை செலுத்தி, அந்த ஒலி அலைகளின் எதிரொலியைக் கச்சிதமாக கணக்கிட்டு, தடையில்லாமல் பறக்குமாம். இதுக்குப்பேரு “எதிரொலி இடக் கணக்கீடு” அப்படீன்னு சொல்றாங்க. ஆங்கிலத்துல எக்கோலொக்கேஷன் (echolocation). இதே யுக்தியைப் பயன்படுத்தித்தான் டால்ஃபின் மீன்களும் சகதி நிறைந்த பகுதிகளில் நீந்துகின்றனவாம். அது சரி….!

2. சுறா மீன்கள் (Sharks):

wikipedia: Fbattail

நீங்க யாரு கூட வேணா கண்ணாமூச்சி ஆடி ஜெயிச்சிடலாம். ஆனா, நம்ம சுறாக்கிட்ட மட்டும் வேலைக்கே ஆகாதுன்னு சொல்றாங்க. ஏன்னா சுறா மீனோட மூளையில, மத்த உயிரினங்கள் வெளியேற்றும் மின்சார அலைகள மிகத்துல்லியமா கணக்கிடக்கூடிய ஒரு வகையான விசேஷ அனுக்கள் இருக்குதாம்.

இதப் பயன்படுத்தி, மணலுக்குள்ளே மறைஞ்சிக்கிட்டிருக்கிற தம்மாத்தூண்டு மீனோட தசைகள் வெளியிடுற சிறிய அளவு மின்சார சக்தியைப் கூட கணக்கிட்டு, சாப்பிட்டுவிடுமாம் இந்த சுறாக்கள். என்னா ஒரு வில்லத்தனம் பாருங்க…?! வேணாஞ்சாமீ, நமக்கெதுக்கு வம்பு?! வெளையாட்டுக்கு நாம சொல்ல, அதெப்படி ஒரு வாயில்லா சீவன நீ அப்படிச்சொல்லலாமுன்னு, வேணுமுன்னே சண்டைக்கு வருவாங்க சில பேரு!

3. மலைப்பாம்பு (Boa):

wikipedia: Serpent nirvana

மலைப்பாம்புகளுக்கும், ஒரு வகை விரியன் பாம்பான “பள்ள விரியன்” (boas and pit vipers) கண்ணுக்கும் மூக்குக்கு இடையில, பிற உயிரினங்கள் (இரைகள்) வெளியிடக்கூடிய வெப்பத்தைக் கொண்டே அவைஇருக்கும் இடத்தையும், தூரத்தையும் துல்லியமாகக் கணக்கிடக்கூடிய, ஒரு வகையான உடல் பகுதி இருக்குதாம். இதப் பயன்படுத்தி கும்மிருட்டுலயும், தன்னோட இரையை சும்மா அசால்டா காலி பண்ணிச் சாப்பிட்டுவிடுமாம் இவ்விருவகை பாம்புகளும்! அடேங்கப்பா…..!

இந்த பாம்புங்ககிட்டே போய், அதுவும் ராத்திரி ஒரு மணிக்கு, “திறமை இதோ இதோ…., மலைப்பாம்போ, விரியன் பாம்போ…..திறமை இதோ இதோ….. நான்தான் சகலகலா வல்லவன்”, அப்படீன்னு பாட்டுப்பாடுறதுக்கு நீங்க யாராவது தயாரா? சத்தியமா நான் தயாரில்லைப்பா…..!

பார்த்தாலே பயமுறுத்துற இந்த விரியன் பாம்போட வேட்டையை நீங்களே பாருங்க கீழே இருக்குற காணொளியில…..

4. முனுமுனுக்கும் குருவி (Hummingbirds):

விக்கிப்பீடியா

நம்ம பார்வைக்கு எட்டாத/அப்பாற்பட்ட நிறங்களைக் காணக்கூடிய திறன் பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் உண்டு! அல்ட்ரா வைலட் நிறத்தினை ஒட்டிய நிறங்களைக் கூட காணக்கூடிய திறன் இந்த முனுமுனுக்கும் குருவிக்கு (அதாங்க Hummingbirds! மாம் இதுக்கு தமிழ்ல என்ன பேரு?!) இருக்குதாம். அடேங்கப்பா!

பாருங்க, தம்மாத்தூண்டு இருக்குற இந்த முனுமுனுக்கும் குருவி, எவ்வளவு பெரிய திறமையை இயற்கையாவே அடைஞ்சிருக்குன்னு. இதுக்கு முன்னாடி நாமெல்லாம் வெறும் ஜூஜூபி தானே?!

முனுமுனுக்கும் குருவி பத்தின ஒரு அழகான குறும்படம் யூ ட்யூபிலிருந்து உங்களுக்காக…..

5. பூனைகள் (Cats)

இரவு நேரத்துல, விளக்கே போடாம (வெளிச்சமே இல்லாம) இருந்தாக்கூட, கரெக்டா வந்து பால் இருக்குற இடத்தைக் கண்டுபிடிச்சி, எல்லா பாலையும் காலி பண்ணிட்டுப்போற பூனைகளைப் பத்தி உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும். ஆனா, அதெப்படி வெளிச்சமே இல்லைன்னாக்கூட பூனையால மட்டும் பால் இருக்குற இடத்தைக் கண்டுபிடிச்சி குடிச்சிட்டுப் போக முடியுதுன்னு நீங்க யாராவது யோசிச்சிருக்கீங்களா?

நான் கூட யோசிச்சதில்லை. ஆனா, விஞ்ஞானிகள் யோசிச்சிருப்பாங்க போலிருக்கு. ஆமாங்க, பூனைகளோட கண்கள்ல கண்ணாடி மாதிரியான ஒரு மெல்லிய தோல் இருக்குதாம். இந்தத் திரைதான் கும்மிருட்டுல கூட எலியைப் பிடிக்கவோ/நம்ம வீட்டுப் பாலைக்குடிக்கவோ பூனைக்கு “இருட்டுக்கண் பார்வையைக்” கொடுக்குதாம்! ஆங்கிலத்துல இந்தத திரைக்குப் பேரு டாபீடம் லூசிடம் (tapetum lucidum). அதானப் பார்த்தேன், இல்லைன்னா பூனைகூட நம்மள மாதிரிதான் போலிருக்கு!

இன்னும் எழுதிக்கிட்டே போனா, ஐய்யய்ய, என்னாதிது வள வளான்னு இழுத்துக்கிட்டே போறானேன்னு நீங்க அலுத்துக்குவீங்க. அதனால, இன்னும் சுவாரசியமான, ஆச்சரியமான இந்தப் பட்டியலின் மேலும் 5 விலங்குகளை நாம இந்தப் பதிவோட இரண்டாம் பாகத்துல பார்ப்போம்!

ஆனா, அதுக்கு முன்னாடி இந்த பட்டியல்ல இடம்பெறாத, அசாத்திய புலனறிவுத் திறன்களைக் கொண்ட வேறு சில விலங்குகளைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சாலோ, நீங்க கேள்விப்பட்டு/படிச்சிருந்தாலோ அதைக்கொஞ்சம் மறுமொழியில எழுதலாமே. நம்ம வாசகர்களும் தெரிஞ்சிக்குவாங்க. என்ன நான் சொல்றது?!

தொடர்புடைய சில பதிவுகள்:

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!

தந்திரக்கார “வில்” மீனும் “தண்ணீர்”அம்பும்?!

கலிபோர்னியாவில் பேய்சுறா….

பரிணாமத்தில் மனிதனுக்கு அடுத்து என்ன?

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு