செக்ஸ்: போர்னோ வீடியோக்களும் சில அதிர்ச்சிகளும்!!(18+)

Posted on மே 19, 2010

25


டிஸ்கி:

நண்பர்களே, செக்ஸ் என்னும் தலைப்பைப் பார்த்துவிட்டு, ஆஹா…இது அந்த மாதிரியான வீடியோ/காணொளியா இருக்குமோ? இதுவரைக்கும் நாம பார்க்காத ஒரு செக்ஸ் காணொளியோ? அப்படீன்னு ஒரு பேரார்வத்தோட வந்தவர்கள்ல நீங்களும் ஒருத்தர்னா, தயவு செஞ்சு உங்க எண்ணத்தை மாத்திக்குங்க. ஏன்னா, இது ஆபாச தளங்களால் ஏற்படும் செக்ஸ் போதை (Porn Addiction)/பார்னோகிராஃபியினால் ஏற்படும் சில அதிர்ச்சிகரமான விளைவுகள், அதிலிருந்து மீண்டுவர இளவட்டங்களுக்கும், அதில் உதவ அவர்களின் பெற்றோருக்குமான சில அறிவுரைகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு/காணொளி. நன்றி!

செக்ஸ் பத்தி எவ்வளவு வேணும்னாலும் எழுதலாம். ஆனா, அப்படி எழுதுறதுக்கு முன்னாடி, என்ன எழுதுறோம், அது படிக்கிறவங்க மனசுல எதாவது ஒரு மாற்றத்தை/விழிப்புணர்வை உருவாக்குதா, செக்ஸ் பத்தின என்னோட ஒரு பதிவை படிச்சதுக்கப்புறம், செக்ஸ் குறித்த ஒரு எச்சரிக்கை உணர்வு, புரிதல் இதெல்லாம் மக்கள் மத்தியில ஏற்பட்டிருக்கா அப்படீன்னெல்லாம் யோசிக்கிறவன் நான்! அந்த வரிசையில, மேலிருப்பானின் மற்றுமோர் செக்ஸ் குறித்த விழிப்புணர்வு பதிவே இன்றைய பதிவு!

இணையதளம் அப்படீங்கிற ஒன்னு 90-கள்ல உலகத்துக்கு அறிமுகமான பிறகு, 2000-லதான் எனக்கு முதன்முதலில் ஒரு கணினி வகுப்புல அறிமுகமாச்சு, மைசூரில் கல்லூரியில் படிக்கும்போது! அதுக்கப்புறம், இணையத்தைப் பத்தின ஒரு பேராவல் மனசை போட்டு புரட்டி எடுக்கும். கல்லூரியில் கிடைக்கும் இணைய உலாவுதல் வாய்ப்பு, மிகக்குறைவுங்கிறதால, வெளியில் உள்ள இணையதள கடைகளுக்குப் போய் , இணையத்தை  பயன்படுத்தனும்னு ஒரு ஆசை.

cerdit:debbienathan.com/books/

உங்களுக்குத்தான் நல்லாத் தெரியுமே, நமக்கு நல்லது எப்பவுமே வேப்பங்காயா கசக்கும், கெட்டது அப்படியே தேனா இனிக்கும். அதுக்கு நான் ஒன்னும் விதிவிலக்கெல்லாம் இல்ல, இணையமும்தான்?! ஏன் சொல்றேன்னா, இணையதளத்தைப் பயன்படுத்தி உருப்புடுற வழிகள் எத்தனையோ இருந்தாலும், கெட்டுக் குட்டிச்சுவரா போறதுக்கான வழிகளத்தான் நாமே அல்லது நண்பர்களின் உந்துதலால் தேர்ந்தெடுப்போம்! இல்லீங்களா?

அப்படி எனக்கு 2002-ல, அறிமுகமானதுதான் இந்த பாழாய்ப்போன போர்னோகிராஃபி/ஆபாசத்தளங்கள்! இப்படித்தான் நாட்டுல பல்லாயிரக்கானவர்களுக்கும் அறிமுகமாகுது இணைய ஆபாசம்/Internet porn! என்ன ஒன்னு, அதப்பத்தி மத்தவங்ககிட்ட வெளிப்படையா பேசுற தைரியம்/மனமுதிர்ச்சி/பக்குவம் இப்படி எதுவுமே இல்லாத பல கோழைகளத்தான் நம்ம சமுதாயத்துல பார்க்க முடியும். அதுக்குக் காரணம் அவங்க இல்ல, செக்ஸை ரகசியமாக்கிய இந்த சமுதாயமும், அது உருவாக்கிய பல கட்டுப்பாடுகளும்தான்!

விளைவு, செக்ஸ் கொலைகள், கற்பழிப்புகள், கள்ளக் காதல் இப்படி எத்தனையோ சமுதாய சீர்கேடுகள்!  அதுக்காக, சமுதாயத்தை திருத்துறேன் பேர்வழின்னு சில பேரு, (உதாரணமா வேலுபிரபாகரன் இயக்கிய “காதல் கதை” அப்படீங்கிற செக்ஸ் காவியத்துல (?) அவரு, செக்ஸை ஒளிவு மறைவில்லாம வெளிப்படையாக்கனும், மேலை நாடுகளில் இருப்பது போல, பெண் உடலை ஆண்களுக்கு அறிமுகப்படுத்தனும்னு பெருசா வியாக்கியானமெல்லாம் பேசுவாரு! ஆனா, கடைசியில  அதுக்கான நம்ம கலாச்சாரத்துக்கேத்த வழிமுறைகளப் பத்தி ஒன்னுமே பேசாம(?), ஒரே குட்டையில ஊரின மட்டையாக, பத்தோட பதினொன்னா, இன்னொரு ஆபாச திரைக்காவியத்தை அரங்கேற்றி, அவரு காசு பார்த்துட்டு போனதுதான் மிச்சம்) இப்படிச் செய்யலாம், அப்படிச் செய்யலாம்னு ஏதேதோ சொல்றாங்க/சொல்லுவாங்க. ஆனா, இதுவரைக்கும் நம்ம ஊருல, ஒன்னும் பெரிய விழிப்புணர்ச்சி எதுவும் வந்துடலைன்னு நான் நெனக்கிறேன்?! இதுல உங்களுக்கு எதாவது மாற்றுக் கருத்து இருந்தால் சொல்லுங்க கேப்போம்!

சரி சரி, ஊர்வம்பு பேசலைன்னா, நமக்கு தூக்கம் வராது. நாம பதிவுச் செய்திய பார்ப்போம் வாங்க. ஆரம்பத்துல வெறும் ஆசையா/ஆர்வமா ஆரம்பிக்கிற போர்னோ பழக்கம், காலப்போக்குல ஒரு போதைப்பழக்கமா, ஒருத்தர செக்ஸ் போதைக்கு அடிமையாக்கி, அவங்க வாழ்க்கையையே புரட்டிப்போடுற அளவுக்கு மோசமான நிலைக்கு இழுத்துக்கிட்டு போயிடுதாம்.

இந்த பிரச்சினைய, சில நிகழ்கால உதாரணங்களோட அலசியிருக்குற ஒரு  குறும்படம் நண்பர் மூலமா எனக்கு அறிமுகமாச்சு. அதைப்பற்றிய ஒரு சிறு முன்னுரையோட, அந்தக் காணொளிய உங்க பார்வைக்கும் எடுத்துக்கிட்டு வரவே இந்தப் பதிவு! வாங்க பார்ப்போம்….

இணைய செக்ஸ் போதைக்கு அடிமையான இருவர், போர்னோகிராஃபியை ஒரு ஆரோக்கியமான விஷயமாய்ப் பார்க்கும் ஒருவர் ஆகிய மூவரின் கதையும், செக்ஸ் போதைக்கு அடிமையான இருவருக்கும், அவர்களை நல்வழிப்படுத்த சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோருக்கும், உளவியலாளர்களும், மருத்துவர்களும் கூறும் அறிவுரைகள் அடங்கிய ஒரு குறும்படம்தான் “Teens hooked on Porn”.

“இக்குறும்படத்தின் சில காட்சிகள், செக்ஸ் குறித்து இடம்பெறுவதால், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தவிர்ப்பது நல்லது. பெற்றோர்கள் பார்த்தால், தங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்த இப்பதிவு உதவலாம்”

செக்ஸ் காணொளி/போர்னோகிராஃபியால் பாதிக்கப்பட்ட மூவரின் கதையாக வரும் இப்படத்தில், இன்றைய சூழலில் போர்னோகிராஃபி, இணைய உலகில் எந்த நிலையில் உள்ளது, அதன் விளைவுகள் என்ன, மீண்டு வர வழிகள் என்னென்ன, என பல கருத்துகளை அலசும் இப்படத்தின் அறிவுரைகளை மட்டும் சொல்லிவிட்டு முடித்துக்கொள்கிறேன்!

குறும்படம் முன்வைக்கும் கருத்துக்கள்!

 1. போர்னோகிராஃபியானது, தனக்கு பிடித்த ஒரு பெண்ணை இணையத்தில் தேடுவதற்காக எனத் தொடங்கப்பட்டு, செக்ஸ் போதை/அடிமைத்தனத்தில் முடிகிறது!
 2. பிரிட்டனைச் சேர்ந்த Darryl, (வயது 17) எனபவருக்கு போர்னோகிராஃபி ஒரு பிரச்சினையாக தெரியவில்லையாம்! (மக்கள் சிந்திக்க?!)
 3. 16 வயதான Malcolm, மற்றும் 14 வயதான Colin என்ற இருவரும் போர்னோகிராஃபியால், தங்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகச் சொல்லி செக்ஸ் தெரபிஸ்ட் மருத்துவர்களை அணுகியிருக்கிறார்கள்!
 4. பாதிக்கப்பட்ட இருவரின் பழக்க வழக்கங்களில், கோபம், ஆக்ரோஷம், குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை போன்றவை போர்னோகிராஃபியால் ஏற்பட்ட புதிய மாற்றங்கள்!
 5. இப்பிரச்சினையில் பேற்றோர்களின் பங்கு என்ன, அதை எப்படிச் சமாளிப்பது என்று சொல்கிறது இக்குறும்படம்!

அறிவுரைகள்!

 1. போர்னோகிராஃபி காணொளிகள், செக்ஸ் கல்வி காணொளிகள் அல்ல. அவை எல்லாமே இணையத்தில் சுலபமாக விலைபோகும் செக்ஸ் செயல்பாடுகளை, தேர்ந்த நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை/நாடகம் அல்லது இயக்கப்பட்ட ஒரு நிகழ்வே தவிர, உண்மையான/யதார்த்தமான செக்ஸ் செயல்பாடுகள் அல்ல!!
 2. போர்னோகிராஃபியில் வரும் காணொளிகளும், நிஜ உலக செக்ஸ் வாழ்க்கையும் முற்றிலும் வேறானவை, இதில் சுகாதாரமின்மையும் இருப்பதை கவனித்தல் அவசியம்!
 3. நமக்குக் காண்பிக்கப்படாத/தெரியாத போர்னோகிராஃபி நிதர்சனங்கள் சில உண்டு. உதாரணமாக, போர்னோகிராஃபியால் ஏற்படும் குடிப்பழக்கம், போதை மருந்துப் பழக்கம் மற்றும் பல தற்கொலைகள்!!
 4. போர்னோகிராஃபியானது செக்ஸ் வாழ்க்கையை உருக்குலைத்துவிடும், செக்ஸ் குறித்த முற்றிலும் தவறானதொரு புரிதலை ஏற்படுத்திவிடும் என்பதையும் கவனத்தில் கொள்க!!
 5. செக்ஸ் செயல்பாடுகளை மட்டுமே சொல்லும் போர்னோ, அதன்பின் ஏற்படும் பழக்கவழக்க மாற்றங்களையோ, அதிர்ச்சிகரமான பல பின் விளைவுகளைப் பற்றியோ ஒருபோதும் சொல்வதில்லை!!
 6. எல்லாவற்றிற்க்கும் மேலாக, நிஜ உலக உறவுகளை புறக்கணிக்கும் ஒரு மோசமான ஒரு நிலைக்குக் கூட ஒருவரை மாற்றக்கூடியது இந்தப் பாழாய்ப்போன போர்னோகிராஃபி!!

இவை இப்படத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளாக எனக்குத் தோன்றியவை. மீதமுள்ளவற்றை நீங்களே படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்களேன்!!

இந்தப் பதிவு மூலமா நான் சொல்ல நினைக்கிறது என்னன்னா, போர்னோகிராஃபி நல்லதைச் செய்வதைவிட தீமையே அதிகமாக செய்கிறது. அதைப் புரிந்துகொண்டு, மனப்பக்குவத்துடன் செக்ஸை அணுகுங்கள். செக்ஸ் கல்வி குறித்த காணொளிகளை/புத்தகங்களை வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்/படியுங்கள். உதாரணத்துக்கு என் கண்ணில் பட்ட ஒரு புத்தகம் இங்கே(இப்பதிவின் புகைப்படத்தில் இருப்பது!)

“வாழ்க வளமுடன்!! செக்ஸ் விழிப்புணர்ச்சியுடன், சரியான புரிதலுடன்!!

தொடர்புடைய சில இடுகைகள்:

காதல் கதையா? காமசூத்திராவா?

ஃபேஸ்புக்கும் செக்ஸும்; உஷாரய்யா உஷாரு!!

செக்ஸ்: சுவாரசியமான 10 கண்டுபிடிப்புகள்!

முத்தம் ஒன்று கொடுத்தால்…..வைரஸ்?!

“அந்த” ஹார்மோனின் லீலைகள்!

செக்ஸ்: ஒரு “புள்ளி” விவரம்!

செக்ஸு வாங்கலையோ செக்ஸு…..

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Add to Google Buzz

Add to FacebookAdd to DiggAdd to Del.icio.usAdd to StumbleuponAdd to RedditAdd to BlinklistAdd to TwitterAdd to TechnoratiAdd to Yahoo BuzzAdd to Newsvine