டினோசர்களின் பரம எதிரி யார்?

Posted on மே 2, 2010

11


“டினோசர்”னு சொன்னவுடனே நமக்கு நியாபகம் வர்றது ஸ்டீவன் ஸ்பீல்பெர்கோட “ஜுராசிக் பார்க்”கும் அதில் வருகிற ராட்சத டினோசர்களின் சில/பல அட்டகாசங்களும்தான்இல்லீங்களா?

அதே ஜூராசிக் பார்க் திரைப்படத்தை தமிழ்ல பார்த்தவங்களுக்கு, “அது வருகிறது…..ஓடுங்கள், ஓடுங்கள்” மாதிரியான சில செயற்கைத்தனமான வசனங்கள் வரும்போது, கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போன மாதிரி இருக்கும்?! இப்படிச் சொன்னா, “ஆமா இவிய்ங்களுக்கு இதே வேலை, ஒருத்தர் செய்யுற நல்ல விஷயங்கள பாராட்டத் தோணாதே. அதுல சொத்த இதுல சொத்தன்னு குத்தம் கண்டுபிடிச்சிக்கிட்டு”, அப்படின்னு சிலர் அலுத்துக்கலாம்!

சரி, நமக்கெதுக்கு இந்த வெட்டிப் பேச்செல்லாம், சொல்ல வந்த விஷயத்தப் பார்ப்போம்.

பொதுவா டினோசர்கள் வாழ்ந்த காலத்துல (24.8  முதல் 6.5 கோடி வருடங்களுக்கு முன்னால்) அதுங்களுக்கு அதுங்களேதான் ராஜா. அதாவது, டினோசர்களுக்கு வேற எந்த மிருகமும் எதிரின்னு சொல்லமுடியாது. பல சின்ன டினோசர்களுக்கு, ஒரு பெரிய டினோசர் எதிரின்னா அதே பெரிய டினோசருக்கு பல சின்ன டினோசர்கள்தான் எதிரி!

ஆக இதுவரைக்கும், டினோசர் காலத்துல டினோசர்கள்தான் காட்டுக்கு ராஜா (அப்போ சிங்கமெல்லாம் இல்லீங்கோவ்!) அப்ப்டீன்னுதான் எல்லாரும் (விஞ்ஞானிகளும்) நெனச்சிக்கிட்டு இருந்தாங்க! ஆனா, ஆனானப்பட்ட டினோசருக்கே ஒரு பரம எதிரி இருந்திருக்காரு. என்னது டினோசருக்கே ஒரு எதிரியா? அட….உண்மையாவா?!

அட, உண்மைதாங்க. அது சரி, அது யாருன்னு உங்கள்ல யாருக்காவது தெரியுமா? எதாவது யூகமிருக்கா? உங்க யூகம் சரியா தவறான்னு பார்த்துடுவோம் வாங்க…..

“சாரோபாட்” இன ராட்சத டினோசரும் “சர்ப இன” எதிரியும்!

(டிட்டனோசர்)Titanosaur

கடந்த 1984 ஆண்டு நடந்த ஒரு அகழ்வாராய்ச்சியின்படி, உலகத்தின் கடைசி டினோசர் குட்டிகள் (கடைசியாக?) பார்த்தது, அனேகமாக ஒரு ராட்சத பாம்பாகத்தான் இருக்கும்னு சொல்றாரு ஆய்வாளர் திரு.தனஞ்ஜெய் மொஹாபே!

உலகின் மிகப்பெரிய ராட்சத டினோசரான, சாரோபாடின் (Sauropods) கூட்டிற்க்கு பக்கத்தில்,  ஒரு சாரோபாட் குட்டியின் உடலுடன், சாரோபாட் டினோசரின் நொருங்கிய ஒரு  முட்டையை, தன் சுருட்டிய உடலுக்குள்ளே வைத்து, கிட்டத்தட்ட மூழு உடலுடன் புதைந்து போன, சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு ராட்சத பாம்பினை, இந்தியாவின் குஜராத் மாநில கிராமம் ஒன்றில் கண்டெத்துள்ளது தனஞ்ஜெய் அவர்களின் ஆய்வுக்குழு! அடங்கொக்காமக்கா…..இது நல்லாருக்கே!

படம்: news.discovery.com

“முட்டைக்குள்ளேயிருந்து வெளியே வந்துகொண்டிருந்த டினோசர் குட்டியைப் பார்த்த ராட்சத பாம்பு அந்த முட்டையை தாக்கியிருக்கக்கூடும்”னு நெனக்கிறதா சொல்றாரு தனஞ்ஜெய். ஓஹோ, அப்படியா சங்கதி?!

இத படிச்சவுடனே உங்களுக்கு சில சந்தேகங்கள் வரலாம். உதாரணத்துக்கு,

1. ஆமா, இந்தக் கதைய நான் எப்படி நம்புறது?

சனாஜே இன்டிகஸ் (Sanajeh indicus) அப்படீங்கிற இடத்துல (குஜராத்துல) தான் இந்த ஆதாரத்தை கண்டுபிடிச்சிருக்காங்க. டைட்டனோசர் (Titanosaur) அப்படீங்கிற டினோசர் இனத்தோட, பல (12) முட்டைகள் அடங்கிய ஒரு பெரிய முட்டையை (Egg cluster), தன் உடலால் சுருட்டிய ராட்சத பாம்புகள கண்டெடுத்திருக்காங்க!

2.குட்டிபோட்ட தாய்  டினோசர்கள் அந்த குட்டிகளைப் பாதுகாக்கலையா?

இவ்வகை டினோசர்கள் (Titanosaurs), குட்டிகளைப் பேணிப் பாதுக்காக்கும் தன்மையில்லாதவைப் போன்றே தெரிகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்! அடப்பாவமே….?!

3. ஆமா, அந்த டினோசர் குட்டி தன்னைச் சாப்பிடவந்த பாம்புகூட சண்டை போடலையா?

“ஸ்மார்கஸ்பார்டு” (smorgasbord) என்னும் டினோசர் இனக்குட்டிகள், எதிர்த்து சண்டையிடாதவையாம் (Defenseless babies). ஐயோ பாவம்?!

4. அது சரி, டினோசர் குட்டிங்க பாம்பை விட பெருசாத்தானே இருந்திருக்கும்?

பெரிய டைட்டனோசர்கள் 60 அடி நீளமுள்ளவை ஆனால், அதன் குட்டிகள் வெறும் 18 இன்ச் நீளம் மட்டுமே! அவற்றை சாப்பிட்ட ராட்சத பாம்புகள் டினோசர் குட்டிகளைவிட நிச்சயம் பெரியவை என்கிறது ஆய்வு! ஓஹோ…!

ஆனா, கொடுமை என்னன்னா, சரியா ஒரு வருடம் ஆன குட்டிகள் 6 அடி நீளம்வரை வளர்ந்துவிடுமாம்! அதாவது, சரியா 4 மடங்கு?! ஹூம்….ஒரு வருஷத்துக்கப்புறம் எவ்வளவு நீளமா வளர்ந்தாதான் என்ன, அதான் குட்டிப்போட்ட உடனே பாம்புங்க காலி பண்ணிடுமே?! அது சரி, இந்த பாம்புங்க எல்லாம் வெவரம்தான்?!

இரையை “அப்படியே” சப்பிட முடியாத அந்தக்கால பாம்புகள்!

என்னதான் இந்த பழங்கால பாம்புங்க வெவரமா இருந்திருந்தாலும், அதுங்களால அந்த குட்டிகளை “அப்படியே” விழுங்க முடியாதாம். ஏன்னா, அந்த வகை பாம்புகள் மிகவும் தொடக்க நிலை பரிணாமத்தில் இருந்தவையாம். ஆங்கிலத்தில் “lizard like gape” என்கிறார்கள் இவ்வகைப் பாம்புகளை! அதாவது, “ஓணான் போல விழுங்கும் தன்மையுள்ள” அப்படீன்னு அர்த்தம்.

இங்கே விசேஷம் என்னன்னா, இந்தக் கால பாம்புங்க தன்னோட மிகப்பெரிய இரையைக்கூட, ஹார்லிக்ஸ “அப்படியே” சாப்பிடுற நம்ம குழந்தைங்க மாதிரி விழுங்கும் அளவுக்கு “அதி நவீன” கீழ் வாய் அமைப்பைக் கொண்டவையாம். (இதப் பத்தி நாம ஒரு தனிப்பதிவுல, விரிவா சீக்கிரம் பார்ப்போம்). ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு முட்டைய அட்டகாசமா சாப்பிடுற இந்தக் கால பாம்பை கீழேயுள்ள இந்தக் காணொளியில பாருங்க….

ஆக, ஆனானப்பட்ட ராட்சத டினோசர்களையே “நீயெல்லாம் எனக்கு ஒரு ஜுஜூபி”ன்னு சொல்லியிருக்குங்க அந்தக்கால ராட்சத பாம்புங்க?!

இதத்தான் “டினோசருக்கு ஒரு காலம் வந்தா ராட்சத பாம்புங்களுக்கும்  ஒரு காலம் வரும்”னு அந்தக் கால ராட்சத  “பாம்பு பெரியவங்க” சொல்லியிருப்பாங்களோ?!

அது சரி, இந்தப் பதிவ படிச்சதுக்கப்புறம் நீங்க என்ன நெனக்கிறீங்க? “ஐயோ பாவம் டினோசருங்க” அப்படீன்னா, இல்ல “அட, பாத்தியா இந்தப் பாம்புங்கள, ஆனானப்பட்ட டினோசருக்கே தண்ணிகாட்டியிருக்குங்க” அப்படீன்னா?

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Add to Google Buzz

Add to FacebookAdd to DiggAdd to Del.icio.usAdd to StumbleuponAdd to RedditAdd to BlinklistAdd to TwitterAdd to TechnoratiAdd to Yahoo BuzzAdd to Newsvine

Advertisements