“மேங்கலிட்சா”, ஒரு ஆட்டுப்பன்றி மர்மம்!

Posted on ஏப்ரல் 30, 2010

12


உலகின் எல்லாவிதமான மர்மங்களுமே, பொதுவா நமக்குள்ளே ஒரு வித அதீத ஆர்வத்தை, ஈர்ப்பை  உண்டு பண்ணும். ஏன்னு கேட்டா…..

  1. எந்தவொரு மர்மமானாலும், அதைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும்.
  2. சில விஷயங்கள் கேள்விப்பட்டுத் தெரிந்திருந்தாலும், அவை உண்மைதானா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும்.
  3. மர்மங்களைக் கதைகளாக மட்டுமே கேட்டிருக்கும் பட்சத்தில் அவற்றைக் காட்சி வடிவில் காண வேண்டும் என்ற பேராவல் உருவாகும்!
  4. கேள்விப்பட்ட மர்மங்களின் பாதிப்பிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள (?), அம்மர்மங்கள் பற்றிய முழு விவரங்களையும் சேகரிக்க/தெரிந்துகொள்ள விரும்புவோம்

இப்படி மர்மங்களின்பால் ஏற்படும் ஈர்ப்புக்கான காரணங்களை அடுக்கிக்கிட்டே போகலாம். ஆனா கேக்கறதுக்குத்தான் உங்களுக்குப் பொறுமை வேணும்?! மர்மங்கள்ல மிகவும் பிரபலமானவை, அமானுஷ்ய சக்திகள், பேய்/பிசாசு, இயற்கை நிகழ்வுகள், விலங்குகள் பற்றியது.

இன்றைய பதிவுல நாம பார்க்கப்போறது, விலங்குகள் பற்றிய ஒரு மர்மத்தை. நம்ம ஊருல, கழுதைப்புலி அப்படீன்னு ஒரு விலங்கைப் பத்தி முதன்முதல்ல, பள்ளிச்சிறுவனா இருக்கும்போது கேள்விப்பட்டதுண்டு. ஆனா, நேர்ல பார்த்தது கிடையாது. அப்பெல்லாம் தோனும், “ஆமா கழுதைப்புலின்னா, ஒரு வேளை கழுதைக்கும் புலிக்கும் பொறந்த ஒரு குட்டியோ (விலங்கோ?)?!” அப்படீன்னு! அப்புறமாதான் தெரிஞ்சது கழுதைப்புலிக்கும், கழுதை, புலி ரெண்டுக்கு எந்தச் சம்பந்தமுமில்லைன்னு. எப்படின்னு கேட்காதீங்க, அப்புறம் எழுத வந்த கதையை விட்டுட்டு கழுதைப்புலி கதைய எழுத வேண்டியதாப் போயிடும் (வேணும்னா இன்னொரு பதிவுல கழுதைப்புலிய பத்தி விவரமாப் பார்ப்போம்!). கழுதைப்புலியைப் பற்றிய ஒரு கட்டுரை இங்கே

கழுதைப்புலியைப் பத்தி எதுக்குச் சொல்ல வந்தேன்னா, பொதுவா புதுவகையான விலங்குகள் பலவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க, கண்டுபிடிக்க மக்கள் மத்தியில வித்தியாசமான ஒரு பழக்கம் வந்திடுச்சி. இந்த கணினி-மென்பொருள் இணைய உலகத்துல, இல்லாத  ஒரு உருவத்தை மார்ஃபிங் புகழ் மென்பொருள்கள வச்சி உருவாக்கிடலாம். இந்த மாதிரியான மென்மொருள்கள வச்சி கற்பனையா பல விலங்குகள, உதாரணமா புலித்தலையுடன் ஆந்தை, மான் தலையுடன் முயல், நாய் தலையுடன் பறவை இப்படி நிறைய உருவாக்கி, மின்னஞ்சல் மூலமா நண்பர்களுக்கு எல்லாம் ஃபார்வர்டு பழக்கம்தான் அது!

எனக்கு இப்படி சில மின்னஞ்சல்கள் வந்ததுண்டு. அனேகமா உங்களுக்கும் வந்திருக்கலாம். அப்படிப்பட்ட விலங்குகள்ல பெரும்பாலானவை வெறும் கற்பனையே அப்படீன்னு பார்த்தவுடனே புரிஞ்சிடும். அந்த வரிசையில சமீப காலங்கள்ல ஒரு புதுவகையான வினோதமான விலங்கு ஒன்றைப்பற்றிய மின்னஞ்சல் ஒன்று (இணைய) உலகில் வலம் வந்துகொண்டிருக்கிறதாம். அதப்பத்திதான் இனி இந்தப் பதிவுல நாம பார்க்கப்போறோம்…..

மேங்கலிட்சா (Mangalitsa) ஒரு ஆட்டுப்பன்றியா?!

மேங்கலிட்சா/ஆட்டுப்பன்றி, படம்:wikipedia

மேங்கலிட்சா அப்படீங்கிற பேரோட, செம்மறி ஆட்டின் உடலையும் பன்றியின் தலையையும் கொண்ட ஒரு புதுவிதமான விலங்கின் புகைப்படத்தைதான் மின்னஞ்சல்ல பரிமாறிக்கிட்டாங்களாம் இணைய உலக மக்கள்! இப்படி ஒரு படம், மின்னஞ்சல்ல எனக்கு வரலப்பா. அப்படியே வந்திருந்தாலும், அது உண்மையா இல்லையான்னு தெரிஞ்சிக்க, செம்மறி ஆட்டுக்கிட்டப் போய், “செம்மறி ஆடே…..செம்மறி ஆடே, செய்வது சரியா சொல்?” அப்படீன்னு  பாட்டுப்பாடியா கேட்க முடியும்?!

அதனால, கட்டற்ற களஞ்சியமான விக்கிப்பீடியாகிட்டயும், இன்னும் சில அறிவியல் ஆய்வு குறித்த இணையங்களிலும் கேட்டு (?)/பார்த்துத் தெரிஞ்சிக்கிட்டதுல, இது ஆட்டுப்பன்றியும் இல்ல, புதுவகையான விலங்கும் இல்லைன்னு தெரிஞ்சது. அதை அப்படியே உங்களுக்கும் சொல்லிடலாமேன்னுதான் இந்தப் பதிவே!

ஆட்டுப்பன்றி/மேங்கலிட்சா அப்படீங்கிறது அடிப்படையில, அடர்ந்த ரோமத்தைக் கொண்ட ஒரு வகையான பன்றி இனம்! இது காட்டுப்பன்றிக்கு நெருங்கிய உறவினராம்(?). உலகில், ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரி நாடுகளில் மட்டும் வாழும் இப்பன்றியினம், ஐரோப்பிய குளிர்களைச் சமாளிக்கவே இப்படியொரு அவதாரத்தை எடுத்திருக்கின்றனவாம்?!

வாங்க அந்த வாமன அவதாரத்தை நாமகூட பார்ப்போம் இந்தக் காணொளியில…..

சுமார் ஒரு நூற்றாண்டுகாலாம உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் இப்பன்றியினம், சமீபத்தில் இங்கிலாந்தின் எஸ்செக்ஸ்(Essex) என்னும் நகரத்தில் உள்ள ஒரு விலங்குகள் காட்சியகத்தில், அழிந்துகொண்டிருக்கும் உயிரின வரிசையில் காட்சிக்கு வைக்கப்பட்டதால், உலகின் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது! அதைப் பார்த்த நம்மவர்கள், இஷ்டத்துக்கு புகைப்படம் எடுத்து, மர்மமான விலங்கு என்று ஒரு அடைமொழி சூட்டி, ஒரு இணையச்சேவையையே செய்து வருகிறார்கள் அப்படீன்னா பார்த்துக்குங்களேன்?!

இதுல இன்னொரு வேடிக்கை என்னன்னா, பிற பன்றிகளை விட குறைவான அளவில் மாமிசத்தை மனிதர்களுக்கு அளித்த ஒரே காரணத்தினாலேயே (?), இப்பன்றியினம் அழியும் தருவாயில் இருக்கக்கூடும் அப்படீங்கிறாங்க(?). அய்யோ பாவம் ஆட்டுப்பன்றி/மேங்கலிட்சா!! இதுக்கு, நம்ம விவேக் மாதிரி, அடப்பாவிகளா…..ன்னு இழுத்து ஒரு பெருமூச்சிய விடுறதத்தவிர வேறென்ன செய்ய முடியும் சொல்லுங்க…..??

ஆட்டுப்பன்றியைப் பற்றிய ஒரு கட்டுரை இங்கே

ஆமாம், இதுமாதிரியான மர்ம விலங்குகள் பத்தி நீங்க எதாவது கேள்விப்பட்டதுண்டா?

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Add to Google Buzz

Add to FacebookAdd to DiggAdd to Del.icio.usAdd to StumbleuponAdd to RedditAdd to BlinklistAdd to TwitterAdd to TechnoratiAdd to Yahoo BuzzAdd to Newsvine

Advertisements