ஊரை ஏமாற்றும் “மூளைப்பயிற்ச்சி விளையாட்டு” மென்பொருள்கள்!

Posted on ஏப்ரல் 28, 2010

16


இந்த ஊருக்கு (ஜப்பானுக்கு) படிக்க வந்ததுக்கப்புறம், பொழுதுபோக்கு அப்படீங்கிற வார்த்தைக்கு அர்த்தம் மாறிப்போச்சா இல்ல சுத்தமா இல்லாமையே போய்ட்டுதாங்குற ஒரு சந்தேகம், மனசுல அப்பப்போ வந்துபோகும். ஏன்னா, படிக்கும்/ஆய்வு செய்யும் நேரம் போக, பொழுதை வேறுவிதமாய் கழிக்க கிடைக்கும் சில சனி, ஞாயிறுகளில் பௌலிங், கராஒக்கே இப்படி எங்கேயாவது போவதுண்டு!

அப்படிப்போகும் விளையாட்டு மையங்களிலெல்லாம் (கேம் சென்டர்கள்), சில பல தளங்களைத் (ஃப்ளோர்கள்) தாண்டியே பௌலிங் பகுதி இருக்கும். அந்த ஆரம்ப தளங்களைத் தாண்டும்போது, லொட்டு….லொட்டு…..லொட்டு என்று ஒரே இரைச்சலாவே இருக்கும். இவ்வளவு சத்தம் வர்ற மாதிரி அப்படி என்னதான் பண்றாய்ங்கன்னு ஒரு நாள் போய்ப் பார்த்தா, கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போன மாதிரி இருந்தது…..?!

அட ஆமாங்க, என்னத்துக்கு பண்றாய்ங்கன்னே தெரியாதமாதிரி (ஒரு வேளை நமக்குத்தான் தெரியலையோ), கியர் மாதிரி இருக்குற எதையோ புடிச்சி இப்படியும் அப்படியும் அடிச்சிக்கிட்டு, வெளையாட்டுங்கிற பேர்ல ஒரு ஆர்பாட்டத்தையே பண்ணிக்கிட்டு இருந்தாய்ங்க!

இவிங்களுக்கெல்லாம் வேற வேலையோ இருக்காதோ? இதே பொழப்பா வந்து உக்காந்துக்கிட்டு, அந்த வழியா போற வர்ற நம்மள மாதிரி ஆளுங்களுக்கு தலைவலிய உண்டுபண்றாய்ங்களேன்னு எனக்கு நானே புலம்பிக்குவேன். பின்ன கூட வர்ற ஜப்பான்காரங்கிட்டயா சொல்ல முடியும் இவிய்ங் குடுக்குற அளப்பரைய?!

இதையெல்லாம் நான் ஏன் உங்ககிட்டச் சொல்றேன்னா, இதுவரைக்கும் நான் என்னவோ இந்த மாதிரி விளையாட்டு மையங்கள்ல வந்து இப்படி இம்சைய குடுக்குற கும்பல், வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுந்தான் வெளையாடுறாய்ங்க போலிருக்குன்னு ரொம்ப அப்பாவியா (?) நெனச்சிக்கிட்டு இருந்தேன். என்ன…. நீங்களுமா?!

ஆனா, சமீபத்துல வெளிவந்த ஒரு ஆய்வுச் செய்திய படிச்சதுக்கப்புறந்தான் தெரிஞ்சது, மூளைப்பயிற்ச்சி விளையாட்டுங்கிற பேர்ல, சில/பல விளையாட்டு மென்பொருள் நிறுவனங்கள் கொடுத்த கவர்ச்சிகரமான விளம்பரங்கள நம்ம்ம்பி…..?!, இந்தக் கூட்டத்துல பாதிப்பேருக்கு மேல, பல விளையாட்டு மையங்களுக்குப் போய் மூளைக்கு பயிற்ச்சிக் குடுக்குறதா நெனச்சிக்கிட்டு வெளையாடுறாங்கன்னு…..

என்னங்க, நான் சொல்றது எதாவது புரியுதுங்களா? இல்லைன்னாலும் பரவாயில்லை, வாங்க அந்த ஆய்வுச் செய்திய பத்தி இன்னும் விரிவா படிப்போம்……(நீங்க வேணாம் விடுப்பான்னு கெஞ்சி கேட்டாலும் உங்கள விடுற மாதிரி இல்ல ;-))

கணினி விளையாட்டு விளையாடு! புத்தியை (IQ) கூட்டு?!

மேலே நான் குறிப்பிட்ட, மூளைக்கு பயிற்ச்சி தருவதாய் சொல்லும், கணினி விளையாட்டு நிறுவனங்களின் விளம்பரங்கள் எப்படி இருக்கும்னா, “ஒரு கணினி விளையாட்டு விளையாடு, உன்னுடைய புத்தியை/IQ வை அதிகமாக்கு” இப்படித்தான் இருக்குமாம். இப்படியொரு விளம்பரத்தைப் பார்த்தவுடனே கொஞ்சங்கூட யோசிக்காம உடனே குறிப்பிட்ட அந்த மென்பொருளை வாங்கி விளையாட ஆரம்பிச்சிடுறாங்க குழந்தைங்க, உண்மை தெரியாமையே?!

இது மாதிரியான மூளைப்பயிற்ச்சி விளையாட்டு மென்பொருள்களின் கூற்று எவ்வளவு தூரம் உண்மை அல்லது மோசடியாயிருக்கும்னு தெரிஞ்சிக்க/கண்டுபிடிக்க, பி.பி.சியின் அறிவியல் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ( BBC science television show, Bang Goes the Theory.) தயாரிப்பாளர்கள், இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் நகரில் இருக்கும், மூளை ஆய்வு மையத்தை (MRC Cognition and Brain Sciences) தொடர்புகொண்டு, இத்தகைய விளையாட்டு மென்பொருள்களின் தகுதியை சோதனை செய்ய ஒரு ஆய்வு நடத்துமாறு கேட்டுக்கிட்டாங்களாம்!

ஏட்ரியன் ஓவென் என்னும் ஆய்வாளர் நடத்திய, சுமார் 11,430 ஆரோக்கியமானவர்கள் பங்குபெற்ற,  நியாபக சக்தி, கவனம், கணக்குப் பாடத்தில் பயிற்ச்சி மற்றும் பல்வேறு மூளைச் செயல்பாடுகளைச் செம்மைப்படுத்தும்/அதிகரிக்கும் விளையாட்டு என்று விளம்பரப்படுத்தப்பட்ட விளையாட்டு மென்பொருள்கள் குறித்த ஆய்வின் முடிவுகள் பின்வருமாறு……

 1. விளையாடப்படும் குறிப்பிட்ட ஒரு விளையாட்டில் மேம்படுவதைத் தவிர, இவ்விளையாட்டுகள் குழந்தைகளின் (விளையாடுபவரின்) மூளையின் செயல்திறனை, எந்தவிதத்திலும் பாதிக்கவோ/அதிகரிக்கவோ இல்லை
 2. விளையாட்டு மென்பொருள்களைப் பயன்படுத்தியவர்களும், பயன்படுத்தாது சாதாரணமான மூளைப்பயிற்ச்சிகளில் ஈடுபட்டவர்களும், ஆய்வின் முடிவில் ஒரே மதிப்பெண்ணைத்தான் பெற்றிருந்தார்கள்!

விளையாட்டு மென்பொருள் நிறுவனங்களைத் தொடங்கு! ஊரை நல்லா ஏமாத்து?!

சமீபத்தில், Nature என்னும் உலகப் பிரபல அறிவியல் வார இதழில் வெளியான இந்த ஆய்வுச் செய்தியை படித்த, ஸ்வீடன் நாட்டு கரோலின்ஸ்கா கல்விமையத்தின் நரம்பியல் விஞ்ஞானி டார்கெல் க்லீன்பெர்க் சொல்றாரு, “ஒரே ஒரு ஆய்வின், பாதகமான ஒரு முடிவைச் சொல்லும் ஒரு சோதனையை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த விளையாட்டு மென்பொருளின் தரத்தையும், தகுதியையும் குறைத்துச் சொல்வதும், பலனற்றது எனச் சொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று”?!

மக்களே….இங்கேதான் நீங்க கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இருக்கு. அது என்னன்னா, இந்த டார்கெல் அப்படீங்கிற விஞ்ஞானி (?), மூளைப்பயிற்ச்சியை ஏற்படுத்துவதாக சொல்லிக்கொள்ளும் விளையாட்டு மென்பொருள்களை தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தக்காரர் அப்படீங்கிறதுதான் அது. இப்போ நீங்களே முடிவு பண்ணிக்குங்க, இந்த ஆளு சொல்றத ஏத்துக்கனுமா வேணாமான்னு?!

இவிய்ங்களுக்கு இதே பொழப்புங்க! அதாவது ஒரு நல்ல கல்வி நிறுவனத்துல பணிக்காலம் முடிஞ்சி ஓய்வு பெற்றுக்கொண்டு பிறகு, தன் துறைக்குத் தொடர்பான ஒரு நிறுவனத்தைத் தொடங்கிட வேண்டியது. அதுக்கப்புறம், தன்னோட ஆதிகால விஞ்ஞான அருமை பெருமைகளை எல்லாம் மூலதனமா வச்சிக்கிட்டு, இப்படி எதையாவது ஒரு மென்பொருளை உருவாக்கி ஊரை ஏமாத்தி சம்பாதிக்க வேண்டியது?!

தவறான சில பேரு இது மாதிரியான மென்பொருள்கள் உருவாக்கி மக்களை எப்படி ஏமாத்துறாங்கன்னு, கீழே இருக்குற காணொளியில பாருங்க (அதுக்காக இது ஒரு ஏமாத்து வேலைன்னு நான் சொல்லலீங்கோவ்!)

என்னங்க, காணொளியைப் பார்த்தாச்சா? ஏங்க….இப்ப நீங்களே சொல்லுங்க, இது மாதிரி ஒரு அழகான நடிகையை வச்சி ஒரு மென்பொருளை விளம்பரப்படுத்தினா வாங்காம இருப்பாங்களா மக்கள்??

அதுக்காக, இப்படி ஒரு ஆய்வின் முடிவை கேள்விக்குள்ளாக்கும் எல்லா விஞ்ஞானிகளுமே இப்படித்தான்னும் சொல்லிட முடியாதுங்கிறதையும் நீங்க புரிஞ்சிக்கனும்?! ஆக, எந்த ஒரு ஆய்வின் முடிவையும் சந்தேகித்துக் கேள்வி கேட்கும் உரிமை, விஞ்ஞானிகளுக்கும், படித்தவர்களுக்கும் மட்டுமல்லாது, பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு!

அதனால, இந்த ஆய்வு குறித்த உங்க கருத்துகளையும் பதிவு செஞ்சுட்டுப் போங்களேன்!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Add to Google Buzz

Add to FacebookAdd to DiggAdd to Del.icio.usAdd to StumbleuponAdd to RedditAdd to BlinklistAdd to TwitterAdd to TechnoratiAdd to Yahoo BuzzAdd to Newsvine

Advertisements
16 Responses “ஊரை ஏமாற்றும் “மூளைப்பயிற்ச்சி விளையாட்டு” மென்பொருள்கள்!” →

 1. அதிஷா

  ஏப்ரல் 28, 2010

  மிக நல்ல பதிவு சார்,

  மறுமொழி
  • வாங்க அதிஷா,
   முதல் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி. உங்க ஆதரவு தொடரட்டும், மீண்டும் மற்றுமோர் பதிவில் சந்திப்போம்!

   மறுமொழி
 2. பகிர்விற்கு நன்றி.

  மறுமொழி
  • வாங்க சூர்யா,
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்தும் இணைந்திருங்கள், மீண்டும் சந்திப்போம்!

   மறுமொழி
 3. நான் குறுக்குக் கேள்வி கேக்கறதை நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.

  இந்த பீபீசி ஆய்வைப் பாத்தீங்கன்னா, ஒரே ஒரு விஷயம்தான் இடறுது: இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் வாரம் மூணு முறை, முறைக்கு பத்து நிமிஷம்னு 24 தடவை, வீட்டில இருந்தபடியே கணினி மூலமா இந்த மூளைப் பயிற்சி விளையாட்டுகளை விளையாடினாங்கலாம்- இது போதுமா அவங்க என்தாவது கத்துக்கிட்டாங்களா இல்லையான்னு முடிவு பண்ண? எனக்கு சந்தேகமா இருக்கு.

  இந்த மாதிரி ஒரு ஆராய்ச்சி பண்ணினா, பள்ளிகளில் படிப்பதால மாணவர்கள் ஒன்றும் கற்றுக் கொள்வதில்லைன்னு கூட ப்ரூவ் பண்ணலாம், இல்லீங்களா?

  வீடியோ விளையாட்டுக்கள் மூளையை பாதிக்குது- நல்ல மாதிரியாவும், கேட்ட மாதிரியாவும்’னு பல ஆய்வுகள் இதுக்கு முன்னால முடிவு பண்ணியிருக்குன்னு நினைக்கிறேன். காண்க: http://danapress.typepad.com/weblog/2009/12/video-games-stay-on-the-brain.html

  டிஸ்கி: எனக்கு எந்த மூளைப் பயிற்சி விளையாட்டு நிறுவனத்திலும் பங்கு இல்லை, அதன் மூலம் நான் எந்த பயனும் பெறுபவனாகவும் இல்லை. உங்க பதிவுகள் சிந்தையைத் தூண்டுது. அதனாலதான் என்னோட சந்தேகங்களை உங்ககிட்ட தெளிவு பண்ணிக்க ஆசைப்படறேன். தப்பா நினைச்சுக்காதீங்க.

  மறுமொழி
  • நட்பாஸ், முதல்ல ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திடுறேன். உங்கள மாதிரி, சிந்தனையைத் தூண்டும் மறுமொழிகளை எழுதி, ஆரோக்கியமான விவாதங்களைத் தொடங்கி, என்னை மேலும் ஊக்கப்படுத்தும் ஒருத்தரை என் வலை வாசகரா (நண்பராகக்கூட) பெற்றதுல ரொம்ப சந்தோஷப்படுறேங்க! அதனால, நீங்க கேள்விகள் கேக்கலைன்னாதான் நான் தப்பா எடுத்துக்குவேன் 🙂

   தயவு செய்து இது மாதிரி நிறைய கேள்விகளைக் கேளுங்க…..!!

   //இந்த பீபீசி ஆய்வைப் பாத்தீங்கன்னா, ஒரே ஒரு விஷயம்தான் இடறுது: இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் வாரம் மூணு முறை, முறைக்கு பத்து நிமிஷம்னு 24 தடவை, வீட்டில இருந்தபடியே கணினி மூலமா இந்த மூளைப் பயிற்சி விளையாட்டுகளை விளையாடினாங்கலாம்- இது போதுமா அவங்க என்தாவது கத்துக்கிட்டாங்களா இல்லையான்னு முடிவு பண்ண? எனக்கு சந்தேகமா இருக்கு.//
   உங்க கேள்வி முற்றிலும் சரியானது. ஏன்னா, எந்தவொரு ஆய்வையும் முதலில் செய்தவரைத் தவிர்த்து, பிற ஆய்வாளர்கள் எத்தனை முறை செய்தாலும் முடிவு ஒரே மாதிரியாக இருந்தால்தான் அந்த ஆய்வு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது ஆய்வுலக நியதி! இதை Reproducibility என்பார்கள். ஆக, இந்த ஆய்வானது உங்க கேள்வியையும் சேர்த்து இன்னும் சில/பல கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும். அதனால, இந்த ஆய்வு முடிவு கொஞ்சம் சந்தேகமானதுதான். ஆனா, அவங்களக் கேட்டீங்கன்னா, 11,430 பேரு பங்குபெற்றிருக்காங்களே அப்படீன்னு ஒரு கருத்தை முன்வைப்பாங்கன்னு நினைக்கிறேன். முக்கியமா இதப்பத்தி சொல்ல எனக்கு அறிவு பத்தாதுன்னு நான் நெனக்கிறேன்!

   நல்ல ஒரு தொடர்பை தேடிப்புடிச்சி கொடுத்திருக்கீங்க. ரொம்ப நன்றிங்க!

   //டிஸ்கி: எனக்கு எந்த மூளைப் பயிற்சி விளையாட்டு நிறுவனத்திலும் பங்கு இல்லை, அதன் மூலம் நான் எந்த பயனும் பெறுபவனாகவும் இல்லை. உங்க பதிவுகள் சிந்தையைத் தூண்டுது. அதனாலதான் என்னோட சந்தேகங்களை உங்ககிட்ட தெளிவு பண்ணிக்க ஆசைப்படறேன். தப்பா நினைச்சுக்காதீங்க.//
   ஹா ஹா ஹா (வெடிச்சிரிப்புங்க ;-))…..என்ன டிஸ்கி எழுத ரூம் போட்டு யோசிச்சீங்களா?! 😉

   விவாதத்துக்கு மிக்க நன்றி!

   மறுமொழி
 4. காந்த சிகிச்சை போன்ற இந்த மூன்றாம் தர நிறுவனங்களை வைத்து முடிவு சொல்லாதீர்கள்.

  கொஞ்சம் தரமான விளையாட்டுக்களையும் பாருங்கள். நின்டென்டோ நிறுவனத்தின் BrainAge, Picross விளையாட்டுக்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. மூளைக்கு பயிற்சி கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் வன்முறை இல்லாத, குறுக்கெழுத்து புதிர் போல இருக்கும் இவை பயனுள்ளதாகத்தான் இருக்கின்றன.

  அறத பழசான டெட்ரிஸ் பற்றிய விவாதம் ஒன்றில் வந்த பின்னூட்டம் ஒன்று இங்கே: http://games.slashdot.org/comments.pl?sid=1354291&cid=29275885

  மறுமொழி
  • //காந்த சிகிச்சை போன்ற இந்த மூன்றாம் தர நிறுவனங்களை வைத்து முடிவு சொல்லாதீர்கள்.//
   இந்தப் பதிவு ஒரு பகிர்வு மட்டுமே! இதன் மூலம் முடிவு எதையும் சொல்லவில்லை, சொல்லவும் முடியாது. நீங்க பதிவை இன்னொரு படிச்சீங்கன்னா புரியும், பொதுவா எல்லா விளையாட்டுக்களும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளவையே, ஆனால் மூளையின் நியாபகச் சக்தி, கவனம் போன்ற குறிப்பிட்ட செயல்திறன்களை மேம்படுத்தும் என்ற உத்தரவாதத்தோடு சந்தையில் அறிமுகப்படும் சில/பல மென்பொருள்கள் தரமுடையவைதானா, அதன் உண்மையான பலன் என்ன என்பதை கண்டறிய முயன்ற முதல் (பெரிய) ஆய்வு இது என்பதைத்தான் சொல்ல முயன்றிருக்கிறேன்! மேலும் இது ஒரு தொடக்கமே, இன்னும் பல ஆய்வுகளை செய்தால் மட்டுமே உண்மை (?) நிலையை தெரிந்துகொள்ள வாய்புண்டு!

   உங்க தொடர்பு ஒரு நல்ல செய்தியை தெரிந்துகொள்ள உதவியது நன்றி!

   வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. தொடர்ந்தும் இணைந்திருங்கள். மீண்டும் சந்திப்போம்!

   மறுமொழி
 5. நல்ல பதிவுதான். IQ வை வளர்த்துக் கொள்கிறோம் என்று சிலதுகள் அப்பன் பணத்துக்கு ஆப்பு வைக்கிறதுக்காகவே இப்படிப்பட்ட ஐட்டங்களை வாங்கி நேரத்தை வீணடிக்கிறதை நாம்தான் பார்க்கிறொமே. இந்தப் பதிவிலும் எனக்கு அந்த பழைய பல்லவியேதான். காணொளிகளைப் பார்க்க முடியவில்லை.
  இன்னும் நீங்கள் அதற்கு எனக்கு ஒரு வழி சொல்லவில்லை

  மறுமொழி

 6. வெங்கடேஷ்

  ஏப்ரல் 30, 2010

  இந்த பதிவுக்கு நான் மறுமொழி சொல்லலாமா,இல்லையா, என்று தெரியவில்லை நண்பரே ஏன்னா நானும் நிறைய கணிணி விளையாட்டுக்கள் விளையாடி இருக்கிறேன்
  சில விளையாட்டுக்களில் நுணக்கமான சில புதிர்களை வைத்திருப்பார்கள் அவைகளை கண்டுபிடிக்க சற்று புத்திசாலித்தனம் தேவைப்படும் என்பது போல் தோன்றும் .சில சமயம் சில புதிர்களை கண்டுபிடிக்க முடியாமல் குழம்பிப் போய் நிற்கும் போது என்னுடைய சகோதரியின் மகன் (வயது 12) புதிரை கண்டுபிடிக்க உதவி செய்திருக்கிறான் அது அவனுக்கு இருக்கும் IQ வா இல்லை எனக்கு IQ குறைவா என்று தெரியவில்லை. இருந்தாலும் பல ஆராய்ச்சிகள் செய்து விஞ்ஞானிகள் அதை உண்மையென்று நிருபிக்கும் போது அதை ஏற்றுக்கொள்வது தான் சரி . சில பதிவுகளை விளையாட்டுத்தனமான பதிவுகள் என்று சொல்லலாம் ஆனால் இந்தப்பதிவு விளையாட்டைப் பற்றின பதிவாக இருந்தாலும் இது விளையாட்டுத்தனமான பதிவு அல்ல உபயோகமானபதிவு என்று
  ஆணித்தரமாக கூறுகிறேன் நண்பரே
  நன்றி நண்பரே

  மறுமொழி
 7. thanks for the great and useful post.

  மறுமொழி

 8. gunavally

  மே 22, 2010

  அனைத்தும் அற்புதம்.தொடரட்டும் உங்கள் பணி.

  மறுமொழி
  • வாங்க குணாவள்ளி,
   முதல் வருகைக்கும், ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றி. மீண்டும் மீண்டும் வாங்க, உங்க ஆதரவை அள்ளித்தாங்க. நன்றி.

   மறுமொழி

   • s.s.arasu

    மே 20, 2011

    hi,
    your site is nice and useful.

    congrats for your service.

    please avoid spelling mistakes esp in headings
    (eg: PAYIRCHCHI).
    After bigger ra ch will not come.PAYIRCHI is right.

    please take care.
    arasu

   • மிக்க நன்றிங்க அரசு.

    உண்மைதான், ற’ கரத்துக்குப்பின் ஒற்றெழுத்து வரக்கூடாது. இது பழைய பதிவாதலால் இன்னும் மாறவில்லை. சமீபத்திய பதிவுகளில் இம்மாதிரியான பிழைகள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். இனியும் அப்படியே…..

    கருத்துக்கு மிக்க நன்றி…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s