கிக்கு ஏறுது புத்தி(I.Q) இறங்குது?!

Posted on ஏப்ரல் 25, 2010

16


கல்லூரிகள்ல படிக்கத்தொடங்கும்போது (இப்பெல்லாம் பள்ளிகள்லேயே)….

நண்பன் 1: “மச்சி, தம்மடிச்சா எப்படி மச்சி இருக்கும்?

நண்பன் 2: ஹே தோடா….மச்சான்,  நீ அடிச்சதே இல்லீயா?  அதெல்லாம் சொன்னா புரியாது நண்பா, ஒரு முற அடிச்சிப்பாரு அப்புறம் தெரியும். படையப்பா பாட்டுல வர்றது மாதிரி “ஓ ஒ ஓ….கிக்கு ஏறுதே…..தான்?!”

இப்படி தொடக்கத்துல ஒரு மப்புக்காகவும், கிக்குக்காகவும் ஆரம்பிக்கிற புகைப்பழக்கம், அப்படியே ரேஸர் (தல) அஜித் மாதிரி டாப் கியர்ல போயி, கடைசியில “புண்பட்ட மனச புகைவிட்டு ஆத்துற வாழ்வே மாயம் கமல் மாதிரி” சப்புன்னு ஆயிடும் வாழ்க்கை/நெலமை?!

ஆமா, இதையெல்லாம் நான் ஏன் உங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன்?! எல்லாம் ஒரு காரணமாத்தான்! இதுவரைக்கும் நம்ம வலைப்பக்கத்துல புகைப்பழக்கம் குறித்தும் அதன் பாதிப்புகள் குறித்தும் எத்தனையோ பதிவுகள் எழுதியிருக்கேன். ஆனா, அந்த பதிவுச் செய்திகள் எல்லாமே புகைப்பழக்கத்துக்கும், உடல் நலக்கேட்டிற்க்குமான தொடர்புகளை பல்வேறு (ஆய்வுகள்) உதாரணங்கள் மூலம் உறுதி செய்தவை.

ஆனா, இன்றைக்கு நாம் பார்க்கப் போகிற பதிவுச் செய்தி முற்றிலும் வித்தியாசமானது. அதாங்க, நம்ம சன் டீவியில வர்றது மாதிரி, உலக புகைப்பழக்க ஆய்வு வரலாற்றிலேயே முதல் முறையாக, புகைப்பழக்கத்தை புத்தியுடன் (Intelligent quotient, I.Q)  தொடர்புபடுத்திய முதல் ஆய்வு இது என்கிறார்கள் ஆய்வாளர்கள். வாங்க அது என்னன்னு, விவரமா பார்ப்போம்…..

புகைபழக்கமும் புத்தி மந்தமும்!

புகைப்பழக்கம் குறித்த இந்த ஆய்வில், 18 வயது முதல் 21 வயது வரையிலானவர்கள் பிடித்த மொத்த சிகரெட்டையும், அவர்களின் (மற்றும் சிகரெட்டே பிடிக்காதவர்களின்) புத்திகூர்மையையும் (I.Q),  தொடர்ந்து கண்கானித்ததில், ஒருவர் புகைக்கும் சிகரெட்டின் எண்ணிக்கைக்கும், அவர்களுடைய புத்திகூர்மைக்குமான ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

புகைப்பழக்கமில்லாத ஒரு சராசரி மனிதனின் புத்திக்கூர்மையின் (I.Q) அளவு 101, ஆனால் புகைப்பிடிப்பவரின் I.Q அளவோ 94 என்ற ஒரு சங்கடமான உண்மை கண்டறியப்பட்டுள்ளது! இதைவிட கொடுமை என்னன்னா, ஒரு நாளில் ஒரு பாக்கெட் சிகரெட் புகைத்தவர்களின் I.Q 90 குறைஞ்சுப் போச்சு அப்படீங்கிறதுதான்.

ஆனா,இங்கே நாம கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா, திடகாத்திரமான, எந்த நோயும் இல்லாத ஒரு சராசரி இளைஞனின் I.Q அளவு 84 முதல் 116 வரை அப்படீங்கிறதுதான்!

இதுவரையிலான புகைப்பபழக்கம் குறித்த ஆய்வுகளிலேயே, மிகவும் அதிகப்படியான எண்ணிக்கையிலான மக்களை சோதனை செய்த ஒரே ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

இரட்டையர்களும் புகைப்பழக்க-புத்தி தொடர்பும்!

இது எல்லாத்தையும் படிச்சிட்டு, “ம்ம்ம்….இப்படி ஒரு ஆய்வை செஞ்சு, தம்மடிச்சா புத்தி மந்தமாகுதுன்னு சொல்லிட்டா, நாங்க ஒத்துக்கனுமாக்கும். இந்த ஆய்வு முடிவுகள் உறுதியானவைதான்னு நாங்க எப்படி நம்புறது”ன்னு நீங்க புத்திசாலித்தனமா கேப்பீங்க நல்லாத்தெரிஞ்சிதானோ (?) என்னவோ, இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள், புகைப்பிடிக்கும்/புகைப்பிடிக்காத இரட்டையர்களிலேயும் இந்த ஆய்வை செஞ்சிருக்காங்க.

இரட்டையர்களிலும், சராசரியாக புகைப்பிடிப்பவரின் I.Q வானது, புகைப்பிடிக்காதவரின் I.Q வை விட பெரிதும் குறைந்தே இருந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது!

இதுல இன்னொரு வேடிக்கை என்னன்னா, I.Q குறைவா இருக்குற பல பேருதான் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகுறாங்கன்னு ஒரு கருத்து இதுவரைக்கும் இருந்து வந்ததாம். இந்த ஆய்வின் தொடக்கத்துல பதிவான புகைப்பிடிப்பவர்களின் I.Q சராசரி I.Q அளவில்தான் இருந்ததுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க! அட….இதுல இப்படி வேறயா…?!

ஆக மொத்தத்துல, இந்த ஆய்வுல தெரியவந்திருக்கிற உண்மைகள் என்னன்னா,

  1. குறைவான I.Q உள்ளவர்கள் மட்டுமே புகைப்பழக்கத்துக்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம் என்பதல்ல
  2. இம்மாதிரியானவர்களே ( குறைவான I.Q உள்ளவர்கள்) உடல் பருமன், போதை மருந்து பழக்கம், உணவுப்பழக்க குறைபாடுகள் என பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம்
  3. சம்பந்தப்பட்ட இளைஞர்களின் பெற்றோர், தங்களின் பிள்ளைகள் குறித்த சில முடிவுகளை, தகுந்த நேரத்தில், சரியானபடி எடுக்க இந்த ஆய்வு பயன்படும்!

தொடர்புடைய சில இடுகைகள்…..

ஒ ஓ ஒ ஓ….கிக்கு ஏறுதே….?!

சிகரெட்டுப் பிடிக்கலையோ சிகரெட்டு….?!

சிகரெட்டும் சில பாக்டீரியாக்களும்!

ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்…..

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Add to Google Buzz

Add to FacebookAdd to DiggAdd to Del.icio.usAdd to StumbleuponAdd to RedditAdd to BlinklistAdd to TwitterAdd to TechnoratiAdd to Yahoo BuzzAdd to Newsvine

Advertisements