வினோதமான “எலும்புத்தின்னி” புழுக்கள்!!

Posted on ஏப்ரல் 23, 2010

14


பொதுவா புழுன்னு சொன்னாலே சில/பல பேருக்கு ஒரு விதமான அருவருப்பான உணர்வு ஏற்படும்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். அதுக்குக் காரணம் புழுக்களோட உடல் அமைப்பு, உருப்புகள், ஊர்ந்து செல்லும் நடை இப்படி நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்!

ஆனா, நாம நடந்துபோகிற வழியில நகர்ந்து போன ஒரு புழுவை, நமக்கேத் தெரியாம எதேச்சையா மிதிச்சிட்டோம்னு வைங்க, உடனே அந்த புழு உடல் நசுங்கி பரிதாபமா செத்துப்போயிடும். அப்போ சில பேருக்கு தோனும், “அடடா, அதுபாட்டுக்கு சிவனேன்னு போய்க்கிட்டிருந்த புழுவ இப்படி மிதிச்சிக் கொன்னுட்டோமே”ன்னு?!

இப்படி நாம பரிதாபப்படக் காரணம் என்ன? அது ஒரு வாயில்லா ஜீவன், ரொம்ப சாது, மிருதுவான உடலமைப்பைக் கொண்டது அப்படீன்னெல்லாம் நாம நெனச்சிக்கிட்டு இருக்குறதுனாலதானே?! இந்தக் கேள்விக்கு ஆமாம்னு நீங்க பதில் சொன்னீங்கன்னா, இனிமே நீங்க, புழுக்கள் பற்றிய மேலான (?) உங்க எண்ணத்தை மாத்திக்க வேண்டிய நேரம் வந்தாச்சு!

அப்படீன்னு நான் சொல்லலீங்க. புழுக்கள் பற்றிய ஒரு சமீபத்திய ஆய்வு சொல்லுது! என்னங்க, இப்போ என்னதான் நீ சொல்ல வர்றேன்னு கேக்குறீங்களா? வாங்களேன், என்னன்னுதான் பார்ப்போமே…..

அதிசயமான “எலும்புத்தின்னி” புழுக்கள் (Bone worms)!

Osedax rubiplumus, Credit: wikimedia

“என்னது எலும்புத்தின்னி புழுக்களா? என்னமோ எறும்புத்தின்னி மாதிரி சர்வ சாதாரணமா சொல்லிட்ட, புழுக்கள் எலம்பைக்கூட தின்னுமா என்ன? அப்படீன்னா, அதுங்களுக்கு எலும்பைத்திங்கிற அளவுக்குகூட வலிமையான பற்களெல்லாம் இருக்கா?” அப்படீன்னு கெள்வி மேல கேள்வியா கேக்க ஆரம்பிச்சிட்டீங்கன்னு நெனக்கிறேன்?!

நண்பர்களே….அமைதி, அமைதி! உங்களுக்கு இருக்குற கேள்விகள்தான் எனக்கும். வாங்க, அந்த கேள்விக்கான விடைகள ஒவ்வொன்னா பார்ப்போம்!

எலும்புப்புழு ஓசெடாக்சும் (Osedax) திமிங்களமும் (Whales)!

கடந்த 6 வருடங்களுக்கு முன்னாடிதான் முதன்முதல்ல, ஒசேடாக்ஸ் (Osedax) அப்படீங்கிற ஒரு வகையான ஆழ்கடல் (2891 மீ ஆழம்) வாழும் புழுக்கள, இறந்த திமிங்கள உடல்கள்மீது, கலிபோர்னியாவின் கடல்பகுதியில கண்டுபிடிச்சாங்களாம்!  இந்த கண்டுபிடிப்பு, ஆழ்கடல்  ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், புழுக்கள் மீதான ஒருவித அதீத ஆர்வத்தையும் ஏற்படுத்தியதாம். அன்றிலிருந்து, இவ்வகைப் புழுக்களின் பரிணாமத்தையும், வயதையும் கணிக்க , ஆய்வுகள் தீவிரமாக நடக்கத்தொடங்கியதாம்!

சமீபத்தில், ஜெர்மனியின் க்ரிஸ்டியன் ஆல்பர்ட்ஸ் (Christian-Albrechts) பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த, ஸ்டிபன் கெய்ல் அவர்களின் ஆய்வில், 30 மில்லியன் ஆண்டுகள் வயதான ஒரு திமிங்கள எலும்பின் மீது (ஒசேடாக்ஸ் புழுவினால் ஏற்படுத்தப்பட்ட) அரிப்பு/ஓட்டைகளை கண்டுபிடித்துள்ளார்கள். இவ்வரிப்பு/ஓட்டைகளை ஏற்படுத்தியது ஒசேடாக்ஸ் (எலும்புத்தின்னி) புழுக்கள்தானா என்பதை

Osedax frankpressi, credit:wikimedia

ஊர்ஜிதப்படுத்த, அந்த எலும்பினை சி.டி. ஸ்கேன் செய்து பின், இதுவரை சேமிக்கப்பட்டுள்ள, அதே இன திமிங்கள எலும்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர். இறுதியில், திமிங்கள எலும்பின் மீதிருந்த அரிப்பு ஒசேடாக்ஸ் புழுக்களாலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்று உறுதி செய்தனர்!

ஆக, இப்போ ஒசேடாக்ஸ் புழுவை தாராளமா எலும்புத்தின்னி புழுக்கள்னு சொல்லலாம்! அதுமட்டுமில்லாம, அதுங்களோட வயசு 30 மில்லியன் ஆண்டுகள்னும் சொல்லலாம், இல்லீங்களா?! இப்போ புழுக்கள் எலும்பைக்கூட தின்னுமாங்கிற ஒரு கேள்விக்கு விடை கிடைச்சாச்சு! அடுத்து ஏன்/எப்படி (திமிங்கள) எலும்பை ஒசேடாக்ஸ் புழுக்கள் சாப்பிட்டன அப்படீங்கிற கேள்விக்கு போவோம்…..

ஒசேடாக்ஸின் ஆழ்கடல் வாசமும் அடிவயிறு பட்டினியும்!

பொதுவா பார்த்தீங்கன்னா, ஆழ்கடல்ல உணவு தட்டுப்பாடு ரொம்பவே அதிகமாம். ஏன்னா, ஆழ்கடல் உயிர்கள் மிக சொற்பமே! அதனால, ஆழ்கடல் வாழும் உயிரினங்களுக்கு, எப்போதுமே உணவு தட்டுப்பாடு ஒரு பெரிய பிரச்சினைதான். ஒசேடாக்ஸ் புழுக்கள், பல சமயங்கள்ல தேடிச் சென்று உணவு உண்ண முடியாதுங்கிறதுனால, தேடி வர்ற உணவை(?) மட்டுமே  சாப்பிட வேண்டிய கட்டாயம். தேடி வர்ற உணவு, கண்டிப்பா உயிருள்ள உணவா (உயிரினமா) இருக்க வாய்ப்பு மிக மிக குறைவு. இதுபோன்ற சூழலில், ஒசேடாக்ஸ் புழுக்கள் பிற உயிரினங்களின் இறந்த உடல்களை உண்ண தொடங்கியதாம்.

ஒசேடாக்ஸ் புழுக்களின் இறந்த உணவுகளின் மெனுவில் திமிங்களமும் இருந்திருக்கிறது. திமிங்களங்களின் உடல் பகுதிகளை உண்ட பிறகு மிஞ்சியது எலும்பு மட்டுமே! ஆனால், உண்ண வேறு உணவு இல்லை.,சாகவும் முடியாது. என்ன செய்வது? இந்த இக்கட்டான சூழ் நிலையில்தான், ஒசேடாக்ஸ் புழுக்கள் முதன்முதலில், எலும்புகளையும்   தங்களின் உணவாக்கியிருக்க வேண்டும் அப்படீங்கிறாங்க விஞ்ஞானிகள்.

இவ்ளோ தூரம், ஒசேடாக்ஸ் பத்தி கதை கதையா சொல்லிட்டு, அந்த புழுவோட ஒரு காணொளியக்கூட காட்டலைன்னா, நீங்க என்ன சும்மா விட்றுவீங்களா என்ன? சரி வாங்க, எழுத்துக்கள் தீர்க்காத ஒசேடாக்ஸ் புழு பற்றிய உங்களோட மீதமுள்ள சந்தேகங்கள, கீழேயுள்ள ஒரு காணொளி தீர்த்துவைக்குதான்னு பார்ப்போம்…..

இப்போ நீங்க சொல்லுங்க, “முயற்ச்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” அப்படீங்கிற வாழ்க்கை தத்துவம் ஒசேடாக்ஸ் புழுக்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாமில்லையா? ஆமாம், இருக்கிறது என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஸ்டீஃபன்! அதனால, சாதா புழுவா இருந்த ஒசேடாக்ஸ், பதவி உயர்வு கிடைச்சு இப்போ, “எலும்புத்தின்னி” புழுவா  மாறிடுச்சி?!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Add to Google Buzz

Add to FacebookAdd to DiggAdd to Del.icio.usAdd to StumbleuponAdd to RedditAdd to BlinklistAdd to TwitterAdd to TechnoratiAdd to Yahoo BuzzAdd to Newsvine

Advertisements