மனிதனை தின்னும் குறும்புக்கார சிங்கங்கள்!!

Posted on ஏப்ரல் 22, 2010

7


காட்டுக்கு ராஜா யாருன்னு கேட்டா சின்ன குழந்தை கூட சொல்லும் சிங்கம்னு! நாட்டுக்கு ராஜா யாரு, மனுசன்தான்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். பொதுவா பார்த்தீங்கன்னா, காட்டுராஜா (சிங்கம்) பெரும்பாலும் தன்னோட இரைவேட்டைய காட்டுக்குள்ளேயே முடிச்சிக்கிறதுனால, காட்டை விட்டு வெளியே வர்றது இல்ல.

ஆனா, நாட்டுராஜா (மனுசன்) அப்படியில்ல?! இரைக்காக இல்லாம பெரும்பாலும் தன்னோட வீர தீர செயல்கள காட்டவும், நல்ல சாப்பாடு சாப்பிடும்போதே நாக்கு அரிப்பு எடுத்துப்போயி (?), பாவப்பட்ட மான்கள வேட்டையாடுறதுக்காக காட்டுக்குப் போறத பத்திரிக்கைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமா நீங்க பார்த்து/கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நெனக்கிறேன்?!

ஆனா, இப்போ நீங்க படிக்கப்போற செய்தி கிட்டத்தட்ட அப்படியே உல்டா! ஆமாங்க, கடந்த 1898 ஆம் ஆண்டு, உகாண்டா நாட்டில் ரயில்வே கட்டுமானப் பணிகள் செஞ்சுக்கிட்டிருந்த பல ஊழியர்கள, ரெண்டு குரும்புக்கார (?) சிங்கங்கள் கொன்று தின்றுவிட்டதாம். சுமார் 135 ஊழியர்கள காலி பண்ணிவிட்டதாம் அந்த ரெண்டு சிங்கங்களும்!

இதுல வேடிக்கை என்னன்னா, அந்த ரெண்டு சிங்கங்கள்ல ஒன்னுக்கு, மூன்றில் ஒரு பங்கு தீனியே மனுசந்தானாம்?!  இன்னொரு சிங்கத்துக்கு அதுல பாதியாம். அடங்கொக்காமக்கா, சிங்கங்களா….இதெல்லாம் உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியல?!

ஏய்….அதெல்லாம் சரிதாம்பா, 1898-ல நடந்த சம்பவத்துக்கு இப்போ என்ன?

அது வேற ஒன்னுமில்லீங்க, பொதுவா சிங்கங்களுக்கு காட்டு விலங்குகள வேட்டையாடி சாப்பிடுறதுலதான் ஒரு கிக்கு/அலாதி இன்பமாம்?! அதுமட்டுமில்லாம, மனுசங்கன்னாலே சிங்கங்கள் கொஞ்ச ஒதுங்கித்தான் இருக்க முயற்ச்சி பண்ணுமாம். ஆனா, அதே சிங்கங்கள் தன்னோட இரைகளான காட்டு விலங்குகள் குறைந்துபோனாலோ, தனக்கு இரைகளை வேட்டையாடி உண்ணும் தெம்பு இல்லாமல்போனாலோதான் மனுசங்கள அடிச்சி தின்ன முயலுமாம்.

யதார்த்தம் அப்படியிருக்கும்போது, ஏன் இந்த ரெண்டு சிங்கங்கள் மட்டும் இத்தனை (135) பேர துவம்சம் பண்ணுச்சின்னு  தெரிஞ்சிக்க, 1898-ல் நடந்த சம்பவத்தை மறு ஆய்வு செஞ்சாங்களாம். அதுல, கடைசியா ஒரு வழியா, இந்த ரெண்டு குரும்புக்கார சிங்கங்களையும் கொன்னுட்டதா தெரிய வந்திருக்கு!

ஆனா, கதை இன்னும் முடியலீங்கோவ்! நீங்க சுத்தமா எதிர்ப்பார்த்திருக்கவே முடியாத மாதிரி (?), கதையில இங்கதான் ஒரு ட்விஸ்டே…..அதாங்க திருப்புமுனைன்னு சொல்வாங்களே?! அது, என்னன்னா, மேல நீங்க படிச்ச இந்த ரெண்டு சிங்கங்கள் செத்த பிறகும், மனுசங்கள அடிச்சி சாப்பிடுற சிங்கங்களோட குரும்பு ஓய்ந்தபாடில்லையாம்?! ஐய்யய்ய….அப்புறம்?

அப்புறமென்ன, கடந்த 2005 ஆம் ஆண்டு, வெளிவந்த ஒரு செய்திப்படி, 1990 ஆண்டு முதல் சுமார் 560 தான்சேனியா (Tanzania) நாட்டினர் சிங்கங்களால் கொல்லப்பட்டிருக்காங்களாம். இதுல கொடுமை என்னன்னா, படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த சிறு குழந்தைகளை இழத்துச் சென்று தின்றுவிட்டிருக்கின்றன சிங்கங்கள். அடக்கொடுமையே….!!

அந்த ஆய்வின் முடிவு/அறிக்கைப்படி, அடிப்படையில் தான்சேனிய நாட்டு மக்கள் வளர்த்த பன்றிகளுக்காக, கிராமத்துள் நுழைந்த சிங்கங்கள், இறுதியில் மக்களை தாக்க ஆரம்பித்திருக்கின்றன என்று கண்டறியப்பட்டது!

நான் சொல்லியிருக்கிற, மனிதனை தின்னும் சிங்கங்கள் பத்தின ஒரு BBC உண்மை/குறும்படத்தை நீங்க கீழே பாருங்க….

இந்த செய்திய முதல்ல படிச்சப்போ, எனக்கு கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சி. ஆனா, நம்ம ஊருல இது மாதிரியான செய்திகள படிச்ச நியாபகம் ஒன்னும் இல்லியேங்கிறதுனால, ஒரு வேளை தான்சேனியா, கென்யா, உகாண்டா மாதிரியான நாடுகள்ல வாழுற சிங்கம்தான் இப்படியெல்லாம், கெட்ட சிங்கமா இருக்கும்போலிருக்குன்னு நெனச்சிக்கிட்டேன்?!

ஆமா, நம்ம ஊருல (இந்தியாவுல) மனுசன அடிச்சி சாப்பிட்ட சிங்கங்கள் பத்தின கதை/கதைகள், ஏதாவது கேள்விப்பட்ட அனுபவம் உங்களுக்குண்டா?

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Add to Google Buzz

Add to FacebookAdd to DiggAdd to Del.icio.usAdd to StumbleuponAdd to RedditAdd to BlinklistAdd to TwitterAdd to TechnoratiAdd to Yahoo BuzzAdd to Newsvine

Advertisements