டாஸ்மாக்குக்கு, தண்ணியடிக்க போன “வைரஸ்” தீவிரவாதி!

Posted on ஏப்ரல் 21, 2010

6


வைரஸ் ஒன்னு, தண்ணியடிக்கலாம்னு டாஸ்மாக்குக்கு போச்சாம்

வைரஸ் வர்றதப் பார்த்த கடைக்காரர் சொன்னாராம்…..

“வைரஸுக்கு எல்லாம் நாங்க மது விற்பனை செய்யுறதில்ல”

உடனே அந்த வைரஸ் அவரை போட்டுத்தள்ளிட்டு, வரவேற்பு மேஜைல நின்னுக்கிட்டு சொல்லுச்சாம்….

“இப்போ நாங்க செய்யுறோம் மது விற்பனை,  வைரஸுக்கு?!”

இந்த நகைச்சுவை புரியாதவங்க, பதிவை இறுதிவரை தொடர்ந்து படிச்சிட்டு மீண்டும் ஒரு முறை நகைச்சுவையை படிங்க கண்டிப்பா புரியும்! நகைச்சுவை புரிஞ்சவங்களும் பதிவை தொடர்ந்து படிங்க, வைரஸ் பத்தி இதுவரைக்கும் உங்களுக்குத் தெரியாத ஒரு புது தகவல் கிடைக்கலாம்!

பொதுவா மேலிருப்பான் வலைப்பக்கத்துல ஒரு சின்ன முன்னுரையோடதான் எல்லா பதிவுகளுமே தொடங்கும். அதுக்குக் காரணம் வெகுஜன மக்களுக்கு பரிச்சயமில்லாத/புரியாத பல செய்திகள பதிவு செய்யுறதுதான். இனி அவ்வப்போது ஒரு நகைச்சுவையைத் தொடர்ந்து பதிவுச்செய்திகள் இங்கே இடம்பெறும். அந்த வகையில, இன்றைய பதிவு வைரஸ் பற்றியதுங்கிறதுனால, மேல நீங்க படிச்ச நகைச்சுவையைத் தொடர்ந்து, இதோ பதிவுச் செய்தி உங்களுக்காக…..

வைரஸ், ஒரு சிறு குறிப்பு வரைக!

உங்கள்ல சில/பல பேருக்குத் தோனலாம், ஏன் இவன் வைரஸப்போயி தீவிரவாதின்னு சொல்றான்னு?! உங்களுக்கு நல்லாத் தெரிஞ்ச தீவிரவாதி “ஓசாமா பின் லாடன்” தான் இல்லீங்களா? ஆனா, வைரஸைப் பத்தி முழுசா தெரிஞ்சதுக்கப்புறம், “வைரஸுக்கூட ஒப்பிட்டுப் பார்த்தா ஓசாமா எல்லாம் சும்மா ஜுஜூபி”ன்னு  நீங்களே சொல்வீங்க பாருங்க!

உண்மைதாங்க. நம்ம உடல்லயும், பிற உயிரினங்கள்லேயும் பல்வேறு நோய்களைத் தோற்றுவிக்கும் பயங்கரமான நுண்ணுயிர்கள்ல வைரஸ்களுக்குத்தான் எப்போதுமே முதலிடம்னா பார்த்துக்குங்களேன். ஏன்னா, வைரஸ்களோட தந்திரம், செயல்பாட்டு யுக்தி அப்படி! ஆனா, வைரஸ் ஒரு வேடிக்கையான நுண்ணுயிரியும்கூட. இப்படி வைரஸ் பத்தி நெறைய ஆச்சரியங்கள அடுக்கிக்கிட்டே போகலாம். வாங்க ஒவ்வொன்னா, ஆற அமர படிப்போம்…..

வைரஸ் ஆச்சரியங்கள்!

  1. வைரஸ் என்பது, அடிப்படையில் ஒரு (புரதம்) வேதியல் பொருள். அதாவது ஒரு உயிரற்ற ஜடப்பொருள்!
  2. (ஏதாவது) ஒரு உயிரினுள் சென்றால் மட்டுமே ஒரு வைரஸால் உயிர்பெறமுடியும்
  3. உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தாக்கும் வலிமை/தன்மை கொண்டது வைரஸ்
  4. உலகின் எல்லா இடங்களிலும் இருக்கும் வைரஸ்கள்தான் உலகில் மிக அதிகமாக வாழும் உயிரினம்?!
  5. வைரஸின் மரபனு டி.என்.ஏ (DNA) அல்லது (RNA)
  6. வைரஸ் ஒரு உயிராயுதம் (Bioweapon)
  7. புற்று நோய் தோற்றுவிக்கும் வைரஸ்களும் உண்டு
  8. வைரஸ் ஒரு உயிரினமா இல்லை வெறும் வேதிப்பொருளா என்பதில் இன்னும் ஐயமுண்டு. அதனால், அவற்றை “வாழ்வின் விளிம்பு நிலை உயிரினங்கள்” என்றும் அழைப்பவர்களுண்டு!

இப்படி இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். வைரஸ் பற்றிய மேலும் விரிவான ஒரு விளக்கத்துக்கு இங்கு செல்லுங்கள்

வைரஸ் தீவிரவாதம்!

ஒரு வைரஸ் என்பது ஒரு தீவிரவாதிக்கு சமம். வைரஸ்களுக்கு மரபனுக்கள் இருந்தபோதும் பிற உயிரினம் போல உடலியக்க செயல்களான, வேதியல் மாற்றங்கள், உணவுப்பொருள்களிலிருந்து சக்தி உருவாக்குதல் போன்ற எந்த செயலையும் தனித்து இயக்க முடியாது. ஆக, ஒவ்வொரு வைரஸும் ஒரு உயிரினத்துள் புகுந்து, அவ்வுயிரினத்தின் உடலியக்கங்கள் முழுவதையும் தன்வசப்படுத்தி (ஹைஜாக் செய்வது போல), பின் தன் மரபனுக்களை பெருக்கிகொள்ளுதல், புதிய புரத கவசங்கள் உருவாக்குதல் என எல்லாவற்றையும், இரவல் பாகங்களைக் கொண்டே நிறைவேற்றிக்கொள்ளும் தன்மையுடையவை!

இப்போ புரியுதுங்களா, வைரஸ ஏன் தீவிரவாதின்னு சொன்னேன்னு?! புரியலைன்னாலும் பரவாயில்லை. வாங்க, ஒரு வைரஸின் தீவிரவாதத்தை அழகாக படம்பிடித்து, தத்ரூபமாக காட்டும் இந்த அழகான காணொளியைப் பார்ப்போம்…..

“ஒரு வைரஸ் (ஃப்லூ வைரஸ்) மனிதனின் உடலுக்குள் எப்படி ஊடுருவி, தன்னோட தீவிரவாத தாக்குதலை எப்படி தொடங்குகிறது என்பது தொடர்பான, ஒரு அழகான செயல்விளக்கக் காணொளி”

என்னங்க இப்போ சொல்லுங்க, வைரஸ்……ஒரு தீவிரவாதி தானே?!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Add to Google Buzz

Add to FacebookAdd to DiggAdd to Del.icio.usAdd to StumbleuponAdd to RedditAdd to BlinklistAdd to TwitterAdd to TechnoratiAdd to Yahoo BuzzAdd to Newsvine

Advertisements