தந்திரக்கார “வில்” மீனும் “தண்ணீர்”அம்பும்?!

Posted on ஏப்ரல் 16, 2010

10


நாம மனுஷங்கங்கிற ஒரே காரணத்துனால, பெரும்பாலும் நம்ம உருவாக்கின கட்டிடங்கள், பிரமிடுகள், கோவில்கள்னு இப்படி எதையோ ஒன்னத்தான் நாம உலக அதிசயம்னு சொல்லிக்க ஆசைப்படுறோம். பல்வேறு கால உலக அதிசயங்களாக நாம பட்டியலிட்டிருக்கிற பல உலக அதிசய பட்டியல்களே அதுக்கு சாட்சி (இங்கே)!

ஆனா, மனிதர்களால (நம்மால) கண்டுகொள்ளப்படாத, அங்கீகரிக்கப்படாத இயற்கை அதிசயங்கள் எத்தனையோ இருக்கு இந்த உலகத்துல. அப்படிப்பட்ட அதிசயங்கள்ல ஒன்னத்தான் நாம் இன்றைய பதிவுல பார்க்கப் போறோம்!

தந்திரக்கார வில் மீன் (Archer fish)!

“வில் மீன்(Archer fish)” படம்:wikipedia

மேலே நான் குறிப்பிட்ட இயற்கை அதிசயங்கள்ல முக்கியமானவை நமக்குத் தெரியாத, பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள். தொலைக்காட்சியில டிஸ்கவரி, அனிமல் ப்ளானட் அலைவரிசைகளை விரும்பிப் பார்க்குற உங்கள்ல பலபேர் இது ஒத்துக்குவீங்க. ஒவ்வொரு உயிரினமும் தன்னோட இரையை எப்படிப் பிடிச்சி சாப்பிடுதுன்னு பார்த்தோம்னா, அதைவிட சுவாரசியமான ஒரு படம் இந்த உலகத்துல இருக்க முடியாது.

அந்த வகையில, இந்தப் பதிவோட கதாநாயகன் யாருன்னு பார்த்தா நம்ம ‘தந்திரக்கார வில் மீன்’தான் சொல்லனும். “அது என்ன வில் மீன் அப்படீன்னு ஒரு விசித்திரமான  பேரு, அந்த மீனு வில் மாதிரி வளைஞ்சு இருக்குமா”ன்னு நீங்க கேட்டீங்கன்னா, கண்டிப்பா அப்படி இல்லைன்னுதான் சொல்லனும். ஏன்னா, இந்த மீனோட உடலுக்கும் அதோட பேருக்கும்தான் சம்பந்தம் இல்லியே தவிர, இந்த மீனோட இரை வேட்டைக்கும் பேருக்கும் நிறைய சம்பந்தம் இருக்குன்னுதான் நான் நெனக்கிறேன்?!

தண்ணீர் அம்புடன் வேட்டையாடும் வில் மீன்!

கடல்வாழ் உயிரினங்களிலேயே, இரையை வேட்டையாட ஒரு விசித்திரமான யுக்தியான “தண்ணீர் அம்பினை ” கையாளும் ஒரே உயிரினம் நம்ம கதா வில் மீனாகத்தானிருக்கும்?! அதென்ன தண்ணீர்த் அம்பு அப்படீங்கிறீங்களா? நீங்க நெனக்கிற(?) மாதிரி தண்ணீர்ல செஞ்ச அம்பெல்லாம் இல்லீங்கோவ்! தன்னோட வாயைப் பயன்படுத்தி, தன்னைச் சுற்றியுள்ள தண்ணீரை உள்ளிழுத்து, பின் அந்த தண்ணீரையே ஒரு அம்பு போல “விஷ்க்” என்று (அதிகபட்சமாக கிட்டதட்ட  3 மீட்டர்) தூரத்தில் இருக்கும் தன் இரைகளான, துள்ளுப்பூச்சி, சிலந்தி மற்றும் பட்டாம்பூச்சியை ஒரே அடியில் வீழ்த்திவிடும் ‘கடல் அர்ச்சுனனாம்’ இந்த வில் மீன்! யப்பா…..!!

வில் மீன் அப்படீங்கிற அந்த கடல் அதிசயத்தை, இந்த அழகான பி.பி.சியின்ஆய்வுக் காணொளியில நீங்களே பாருங்களேன்…..

என்னங்க, அப்படியே மலைச்சுப்போய் உக்காந்துட்டீங்களா?! சரி வாங்க, இத விட வேடிக்கையான இன்னொரு விஷயத்தப் பார்ப்போம்.

ஆமா, அந்தக் காணொளியப் பார்த்ததுக்கப்புறம் என்ன தோனுச்சி உங்களுக்கு? “ஐய்ய…இதுல என்ன அதிசயம் இருக்கு, வாயில தண்ணிய வச்சிக்கிட்டு, தூரத்துல இருக்குற தன்னோட இரைய பார்த்து குத்து மதிப்பா (?) தண்ணிய துப்புது இந்த மீனு, உடனே அந்த பூச்சி கீழே விழுந்துடுது”ன்னு ரொம்ப சர்வ சாதாரணமா சொல்லிட்டுப்போனீங்கன்னா, உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கு.

இதுவரைக்கும் கிட்டத்தட்ட உங்கள மாதிரியேதான் நெனச்சிருந்தாங்களாம், இந்த மீன ஆய்வு செஞ்ச ஆய்வாளர்கள். ஆனா, இதுல எவ்வளவு தூரம் தந்திரம், யுக்தி, புத்தி எல்லாம் இருக்குன்னு ஆய்வு செய்யலாம்னு செஞ்சுப் பார்த்ததுல, நம்ம வில் மீனு, 3 மீ தூரத்துல ஒரு மரக்கிளையில உக்காந்திருக்கிற, ஒரு பூச்சியோட உடல் நீளத்தையும், அது கிளையை பிடிச்சிருக்கிற உறுதியையும், கிட்டத்தட்ட கச்சிதமா கணக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி தன்னோட தண்ணீர் அம்பை கனக்கச்சிதமா செலுத்துமாம். அடி சக்கை, அப்படிப்போடு அருவாள…..மன்னிக்கனும், தண்ணீர் அம்பை!

ஆக, நாம நெனக்கிற மாதிரி ஒரு குத்து மதிப்பா எல்லாம் அம்பு விடுறதில்ல, நம்ம தல வில் மீன். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு சொல்ற மாதிரி, அடிச்சா நெத்தியடிதான் போலிருக்கு! இப்ப சொல்லுங்க, இது ஒரு உலக அதிசயமா இல்லையா?

எனக்கென்னமோ, நம்ம வில் மீனுகூட போக்கிரி விஜய் மாதிரிதான் போலிருக்கு. அதாங்க, “இரைய அடிக்கிறதுன்னு ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா, அது பேச்ச அதுவே கேக்காது போலிருக்கு?!”.  நாம நெறைய கத்துக்கனமுங்க, விஜய் கிட்டே இல்ல. நம்ம தல வில் மீனு கிட்ட. ஹி ஹி….எதோ நம்மால முடிஞ்ச ஒரு பஞ்ச் டயலாக்கு!

சரிங்க, மீண்டும் அடுத்த அதிசயம்/ஆச்சரியத்துல சந்திப்போம்!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements