“ஆனந்தி” இதழும் அரிசி விற்கும் “அழகியும்”!

Posted on ஏப்ரல் 12, 2010

10


“எங்க வீட்டுக்காரனும் கச்சேரிக்குப் போனான்”னு பதிவுகளை  எழுதிக்கிட்டிருந்த எனக்கு, இணைத்த பதிவுகளில் தரமுள்ளவற்றை மட்டும் பிரசுரித்து, தமிழ் வலையுலகில் (இணையத்தில்) ஒரு அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்தது தமிழிஷ்!

தமிழிஷ் தந்த அங்கீகாரம், வலைப்பயணப் பாதையில் நான் தடம்மாறிடாமல், எப்போதும் நேராகச் சென்றிடவேண்டியிட்ட கடிவாளம் போலாகிப்போனது! விளைவு, என் எழுத்துக்களின் போக்கை அறிவியல்/ஆய்வுகளின் திசையில் மட்டுமே இட்டுச்செல்லத் தொடங்கினேன்!

தமிழிஷ் தளத்தில் பதிவுகளை இணைக்கச் செல்லும்போதெல்லாம், தமிழ்மீடியாவின் ஆனந்தி என்றொரு விளம்பரப்பலகை, “சிந்தையைக் கவரும் சுவாரசியமான பல செய்திகளுடன் உள்ளே வாயேன், வந்துதான் பாரேன்”னு கையப் பிடிச்சி இழுக்காத குறையாக கண்ணையும், கருத்தையும் கவரும்.

இப்படித்தான் ஒரு முறை, தமிழ்மீடியாவின் இணையதளத்துக்குப் போனேன். உள்ளே போனா ஆனந்தி, கேளிக்கை, தமிழ்பெஸ்ட்-ன்னு மூனு வாசப்படி, எதுக்குள்ளே போறதுன்னு ஒரே குழப்பம். சரின்னு, வஞ்சனையில்லாம மூனு வலைத்தளத்துக்குள்ளேயும் போனேன்.  அனேகமா நீங்களும் போயிருப்பீங்கன்னு நெனக்கிறேன்!

ஆனந்திக்குள்ளே போனவுடனே ஒரு இன்ப அதிர்ச்சி. ஏன்னா, கும்பிடப்போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி,  “வாங்க வாங்க,  எழுதுறதுக்கு விருப்பமும்,   திறமையும் இருக்குறவங்க எல்லாம் வாங்க”ன்னு, ஆனந்தி இதழ்ல படைப்பாளியாகுற வாய்ப்பை அள்ளி வழங்குவதாக ஒரு அறிவிப்பு  வெளியிட்டிருந்தாங்க!

சீதையைத் தேடி இலங்கைச் சென்றுவந்த அனுமன் சொன்னது போல, “கண்டேன் வாய்ப்பை” என்றது உள்மனம். ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில், ஆனந்தி இதழின் ஆசிரியர் குழுவிற்க்கு, படைப்புகள் எழுதும் என்  விருப்பத்தையும், வலைப்பக்க முகவரியையும் எழுதி ஒரு விண்ணப்பம் போட்டேன்! உடன் தங்களின் பதிலெழுதுவதாக ஆனந்தி குழுவினரிடமிருந்து ஒரு பதில் மின்னஞ்சல்!

என்னை ஆச்சரியத்திலாழ்த்திய சுவிஸ் அழைப்பு!

ஒரு நாள், எப்போதும்போல பல்கலைக்கழக சோதனைக்கூடத்தில் ஆய்வுகளை முடித்துக்கொண்டு, தங்கியிருக்கும் விடுதி அறைக்குச் சென்ற சிறிது நேரத்தில், ஒரு தொலைபேசி அழைப்பு. எப்போதும் கூப்பிட்டுப் பேசும் நண்பர்களில் ஒருவராகத்தானிருக்கும் என்று கைப்பேசியை எடுத்து ஹலோ என்றதும், மறுமுனையில் இதுவரை கேட்டிராத ஒரு புதுக்குரல்?!

யாரென்று விசாரித்ததும் மறுமுனையிலிருந்து, “நான் ஆனந்தி இதழின் ஆசிரியர் மலைநாடான் என்று பதில் வந்தது”, உடனே உள்ளேயிருந்து “நம்ப முடியவில்லை…..இல்லை….இல்லை”ன்னு உள்மனம் உச்சஸ்தாயியில் பாட ஆரம்பித்திருந்தாலும், சுதாரித்துக் கொண்டு

“ஐயா, வணக்கம். சொல்லுங்க….” என்றேன்,

ஐயா திரு. மலைநாடான் அவர்கள், (மிகவும் வெளிப்படையாக) என் வலைப்பக்கம் குறித்தும், பதிவுகள் குறித்தும் தன் கருத்துகளைச் சொல்லி, நான் எழுதும் கருத்துகள் மிகவும் நன்றாக இருப்பதாக மனமார பாராட்டினார். வாழ்க்கையில் முதல் முறையாக என் காதுகளையே என்னால் நம்பவே முடியவில்லை!

அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு மேலும் தொடர்ந்தேன். இன்ப அதிர்ச்சிமேல் அதிர்ச்சியாக, வரும் ஏப்ரல் மாத இதழுக்காக ஒரு  செய்தியை உடனே எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு விடைபெற்றேன்!

ஆனந்தி தந்த இன்ப அதிர்ச்சியும் என் முதல் குழந்தையும்!

ஆனந்தி இதழில் அரியதொரு வாய்ப்பு கிடைத்த ஆனந்தமும், அழகான ஒரு செய்தியை எழுதி உடனே அனுப்பவேண்டுமே என்ற பரிதவிப்பும் சேர்ந்து என்னை கொஞ்சம் ஆட்டித்தான் படைத்தது. பிறகு ஒரு வழியாக, ஆசிரியர் அவர்களின் ஒப்புதலோடு ஒரு செய்தியை எழுதி அனுப்பினேன். அச்செய்தி குறித்த தன் கருத்தினையும், பிரசுரிக்கப்படுமா என்னும் விடயம் குறித்தும் பிறகு தெரிவிப்பதாக உடனே எனக்கு பதில் எழுதி அனுப்பினார் ஆசிரியர்.

இலவு காத்த கிளியாய்(?), ஆனந்தியின் ஏப்ரல் மாத இதழுக்காக காத்திருந்தேன். திடீரென்று நேற்று, ஆனந்தி இதழின் தளத்தை பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! அதில் 42-43 ஆம் பக்கங்களில் “அரிசி விற்க்கும் அழகியாகவும், எழுத்துலகில் பிரசுரமான என் முதல் குழந்தையாகவும்” சிரித்துக் கொண்டிருந்தார் ஷிஹோ ஃபுஜிதா (Shiho Fujita)! இவர் என் இன்ப அதிர்ச்சிக்கு ஒரு காரணமாய் அமைந்த ஒரு ஜப்பானிய இளம் (தொழிலதிபர்) அழகி! (பார்க்க படம்)

“என் முதல் குழந்தை”

ஆனந்தியின் ஏப்ரல் மாத இதழ் தற்போது, சுவிஸ், ஜெர்மனி,இத்தாலி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளில், வர்த்தக நிலையங்களில் கிடைக்கிறது. ஆனந்தி இதழை முழுமையாய் (இலவசமாக) வாசிக்க/இணையத்தில் காண இங்கு செல்லுங்கள்

ஆனந்தி ஆசிரியர் குழுவினருக்கு மேலிருப்பானின் மனமார்ந்த நன்றிகள்!

வளரும் நிலையில் இருக்கும் என்னைப் போன்ற ஒரு வலைப்பதிவருக்கு, “எழுத்தாளன்” என்னும் ஒரு அங்கீகாரத்தையும், எழுத்துலக அடையாளத்தையும் நல்கிய ஆனந்தி இதழின் ஆசிரியர் குழுவிற்க்கு, என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். எழுத்துலகில் இது என் முதல் படி. “கற்க கசடற” என்பதுதான் என் தாரக மந்திரம். அதை மேலும் தொடர்ந்து, இச்சமூகத்திற்க்கு ஏதேனும் ஒரு வகையில் பயனுள்ள செய்திகளை மட்டுமே எழுத முயற்ச்சிப்பேன்.

நான் இந்த அங்கீகாரத்தை அடைய, எனக்கு ஆதரவளித்த என் வலைவாசக நண்பர்களனைவருக்கும், இத்தருணத்தில் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். தொடர்ந்தும் என்னை ஆதரிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

நன்றி……நன்றி……நன்றி!

இப்படைப்பு குறித்த உங்களின் மேலான கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்…….நன்றி!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements