ஏப்ரல் ஒன்றும் “Poisson d’Avril/ஏப்ரல் மீனும்”?!

Posted on ஏப்ரல் 9, 2010

4


என்ன நண்பர்களே, ஏப்ரல் மீன் கதையைப் பார்க்கலாமா? ஆனா, இன்றையப் பதிவுச் செய்திய படிக்கிறதுக்கு முன்னாடி, ரெண்டு விஷயத்தப் பத்தி நாம தெரிஞ்சிக்கனும். ஒன்னு, ஜூலியன் நாளேடுக்கும் க்ரிகோரியன் நாளேடுக்கும் உள்ள வித்தியாசம், ரெண்டாவது இந்த ரெண்டு நாளேடுகளுக்கும் முட்டாள்தினக் கொண்டாட்டத்துக்குமான தொடர்பு என்ன?(இதன் முந்தைய பதிவு இங்கு உள்ளது)

ஜூலியன் நாளேடு!

கி.மு 46-ல் ஜூலியஸ் சீசரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த ஜூலியன் நாளேடு. இதற்கு முன்பு ரோமானிய நாளேடு பழக்கத்தில் இருந்திருக்கிறது. இந்த நாளேட்டில் தற்போது உள்ளது போலவே வருடத்தில், 12 மாதங்களும், 365 நாட்களும், மற்றும் 4 வருடத்துக்கு ஒரு முறை பிப்ரவரியில் 1 லீப் நாளுடன், சராசரியாக ஒரு வருடத்துக்கு 365.25 நாட்கள் இருந்திருக்கின்றன. இது குறித்த மேலதிக விவரங்களுக்கு இங்கு செல்லுங்கள்

க்ரிகோரியன் நாளேடு!

சர்வதேச அளவில் தற்போது பழக்கத்தில் உள்ள நாளேடடுதான் இந்த க்ரிகோரியன் நாளேடு. 1582 ஆம் ஆண்டு, பிப்ரவரி 24 ஆம் தேதி “போப் க்ரிகோரி XIII(Pope Gregory XIII)” என்பவரால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவருடைய பெயரைக் கொண்டிருக்கும் இந்த நாளேட்டிற்க்கும், ஜூலியன்  நாளேட்டிற்க்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் “லீப் வருடக் கணக்குதான்” என்கிறது வரலாறு. அதனாலேயே, தவறான லீப் வருடக் கணக்கை கொண்டிருந்த ஜூலியன் நாளேட்டை மாற்றியமைத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த மேலதிக விவரங்களுக்கு இங்கு செல்லுங்கள்

முட்டாள்தினக் கொண்டாட்டமும், ஜூலியன்-க்ரிகோரியன் நாளேடுகளுக்குமான தொடர்பும்!

ஜூலியன் நாளேட்டில் புது வருடக் கொண்டாட்டமானது,  மார்ச் 25 முதல் ஏப்ரல் 1 வரையிலான, ஒரு வார காலம் முழுதும் கொண்டாடப்பட்டதாகவும், ஆனால் க்ரிகோரியன் நாளேட்டில்தான் அது ஜனவரி 1-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாகவும் ஒரு கூற்று உண்டு என்கிறார்கள். இந்த மாற்றத்தினை (அறிவிக்கப்படாத?) அறியாத சில மக்கள்  பிடிவாதமாக பழைய ஜூலியன் நாளேட்டின்படியே புதுவருடத்தை கொண்டாடினார்களாம். இவர்களை (புது நாளேட்டுக்கு மாறிவிட்ட) மக்கள், ஒவ்வொரு வருடமும் “மார்ச் 25 தொடங்கி ஏப்ரல் 1″ வரையிலான காலகட்டத்தில்  பல்வேறு விதமாக கிண்டல்/கேலி/நையாண்டி செய்யும் பழக்கம் இருந்து வந்ததாம்.

ஏப்ரல் மீன் அல்லது Poisson d’Avril!

"Poisson d' Avril/ஏப்ரல் மீன்" படம்:pvholidays.com

ஃப்ரான்சு நாட்டில், ஏப்ரல் மாதத்தில் நீரோடை/ஆறுகளில் ஒரு வகையான மீன்கள் குஞ்சுகள் பொரிக்குமாம், இந்த மீன் குஞ்சுகளை சில புழுக்களையோ/உணவையோ மீன்பிடி கொக்கிகளில் மாட்டி ஏமாற்றி, மிகச் சுலபமாக பிடித்துவிடமுடியுமாம். எளிதில் ஏமாற்றப்படும்/ஏமாந்து மாட்டிக்கொள்ளும் இத்தகைய மீன்களை ப்ரெஞ்சு மொழியில்  “Poisson d’Avril அல்லது ஏப்ரல் மீன்” என்று அழைப்பார்களாம்.

(மேற்கூறியவாறு) பிடிவாதமாக ஏப்ரல் 1-ஆம் தேதியன்றே புதுவருடத்தை (அதாவது பழைய புதுவருடத்தை) கொண்டாடிய மக்களை கிண்டல் செய்த மக்கள் (ஜனவரி 1 அன்று புதுவருடம் கொண்டாடியவர்கள்), அவர்களின் முதுகில் ஏப்ரல் மீன்களை(?) ஒட்டிவிடுவார்களாம். அப்படி முதுகில் ஏப்ரல் மீன்கள் ஒட்டப்படுபவர்களும் “Poisson d’Avril, or April Fish” (அதாவது ஏப்ரல் மீன்) என்றழைக்கப்படுவார்களாம்! அதாவது, அந்த ஏப்ரல் மீன்களைப் போலவே இவர்களும் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்னும் பொருள்படும்படியாக! ஓஹோ…..அதானா மேட்டரு, அது சரி….!

இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, ஏன் ஏப்ரல் 1 முட்டாள்கள்தினமாக கொண்டாடப்படுகிறது என்னும் கேள்விக்கு விடை கூறுவதற்காக சொல்லப்படும் பல்வேறு கதைகளில் இதுவும் ஒன்று. ஆனால், இந்தக் கதை/கூற்றினால், “ஏன்/எப்படி இத்தகைய ஒரு முட்டாள்தினக் கொண்டாட்டப் பழக்கம், ஜூலியன் மற்றும் க்ரீகோரியன்  நாளேட்டின் பயன்பாடு/பழக்கம் சற்றும் இல்லாத பிற நாடுகளுக்கும் பரவியது என்ற கேள்விக்கு விளக்கம் சொல்ல முடியவில்லையாம்!”

இப்படி இன்னும் நிறைய கதைகள் சொல்லப்பட்டாலும், ஒரு கதை/சம்பவம்தான் முட்டாள்தினக் கொண்டாட்டத்திற்க்கு அடிப்படை என்று, வரலாற்று வல்லுனர்களால்/ஆய்வாளர்களால் தீர்மானமாக இன்னும் வரையறுத்துச் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

இந்தச் செய்தி/கருத்துக் குறித்த ஒரு யூட்யூப் காணொளிய கீழே நீங்க பார்க்கலாம்…..

ஏப்ரல் 1-ஆம் தேதி தொடர்பான விக்கிப்பீடியா கட்டுறையை வாசிக்க இங்கு செல்லுங்கள்

ஏப்ரல் மீன் குறித்த கதையின் அடிப்படைத் தொடர்பை காண இங்கு செல்லுங்கள்

இப்பதிவுத் தொடர்பான உங்க கருத்துகளையும் பதிவு செஞ்சுட்டுப் போங்களேன்…..

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements