“முட்டாள்தின” கொண்டாட்டம் தொடங்கியது எங்கு, எப்போது, ஏன்?

Posted on ஏப்ரல் 8, 2010

3


பள்ளியில படிச்ச காலங்கள்ல, பொதுவா ஏப்ரல் மாசம் வரப்போகுதுன்னாலே மனசுக்குள்ள ஒரு குதூகலம், சந்தோஷம் எல்லாம் வந்துடும். ஏன்னா, கோடை விடுமுறை நெருங்கிடுச்சிங்கிறதுனால. ஆனா, அத விட பெரிய சந்தோஷம் ஒன்னு இருக்கு ஏப்ரல் மாசத்துல. அதாங்க “முட்டாள்தின” கொண்டாட்டம்!

"முட்டாள்கள் தினம்"

பள்ளியில படிக்கும்போது, ஏப்ரல் 1-ஆம் தேதி மத்த பசங்கள ஏமாத்துறோமோ இல்லையோ, அவிய்ங்களுக்கே தெரியாம எப்படியாவது, அவிங்க முதுகுல “இன்க்” அடிச்சிருவோம். அடுத்த நாள் சம்பந்தப்பட்ட அந்த பையனோ/பொண்ணோ, தம்மேல இன்க் அடிச்சது யாருன்னு கண்டுபிடிச்சிட்டு, பள்ளிக்கு வந்தா இருக்கும் ஒரு பெரிய கச்சேரி. இப்படி “அது ஒரு அழகிய கனாக்காலம்” மாதிரி அழகா இருந்த பள்ளிவாழ்க்கையும்,பருவமும் திரும்பக் கெடச்சாக்கூட நல்லாத்தான் இருக்கும்!

இப்படியெல்லாம் கொண்டின/கொண்டாடுற “ஏப்ரல் ஒன்னாந்தேதிதான்” முட்டாள்தினம்னு யாரு முடிவு பண்ணினது, எந்த ஊரு/நாட்டு வழக்கமது, எப்போ தொடங்கினது இப்படி எத்தனையோ விஷயங்கள்/கேள்விகள் இருந்தாலும் அதப்பத்தி எல்லாம் கண்டுக்கிட்டதோ/கவலைப்பட்டதோ கிடையாது அப்போ?! ஆனா, இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் என்னவா இருக்கும்னு தெரிஞ்சிக்கிறதுக்கு, ஒரு அதீத ஆர்வம் மனசுக்குள்ள வட்டமடிக்குது இப்போ. என்ன, உங்களுக்கும் அப்படித்தானே?!

சரி வாங்க, முட்டாள்தினக் கொண்டாட்டத்தின் வரலாற்றைப் பார்ப்போம்…..

முட்டாள்தினக் கொண்டாட்டம் முதலில் எங்கு தொடங்கியது?

ஐரோப்பிய கண்டம்(?)

எப்போது?

இடைக்காலம் (Middle ages) என்றழைக்கப்படும் 5-ஆம் நூற்றாண்டிலிருந்து 15-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில்தான் “எல்லா முட்டாள்களின் தினம் (All fools day)” என்றழைக்கப்படும் முட்டாள்தினம் முதன்முதலாக ஐரோப்பியக் கண்டத்தில் கொண்டாடப்பட்டதாக வரலாற்று ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக (?) சொல்கிறார்கள் வரலாற்று வல்லுனர்கள்!

ஏன்?

நம்ம வைகப்புயல் (கைப்புள்ள) வடிவேலுவோட, நகைச்சுவை காட்சிகள் சிலதைப் பார்த்துட்டு “விழுந்து விழுந்து” சிரிப்போமில்லீங்களா, அது மாதிரியான யதார்த்தமான, அன்றாட வாழ்வியலுடன் ஒன்றிய நகைச்சுவைகளை, “செல்ட்ஸ் இனம்(Celts)” என்றழைக்கப்பட்ட, பண்டைய ரோமானியர்களுக்கு முன்பு வாழ்ந்த ஐரோப்பிய மக்களின் காலங்களில்,  பிறரை நையாண்டி/கேலி/கிண்டல் செய்வதற்காகவே ஒரு வகையான விழா கொண்டாடப்பட்டதாம். அத்தகைய விழா கொண்டாடப்பட்ட நாள் ஏப்ரல் மாதத் தொடக்கத்தின் அமைந்திருந்ததாம். இந்த விழாவே பின்னாளில் (5-15 நூற்றாண்டுகளில்) அனைத்து முட்டாள்கள் தினம்/முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்ப்டுகிறது என்கிறது வரலாறு!

முட்டாள்கள் தின வரலாற்று குறிப்புகள்!

இன்னும் சிலர், முட்டாள்கள் தினக் கொண்டாட்டம், ரோமானியர்களின் புராணக் கதையான, அறுவடைக் கடவுள் “செரஸ் (Ceres)” மற்றும் அவரது மகளான “ப்ரோசெர்பினா (Proserpina)”வின் காலங்களிலே கொண்டாடப்பட்டதாகவும் சொல்கின்றனர் (எங்களை வச்சி காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலையே…..?!)

அறுவடைக் கடவுள் செரஸ்ஸின் கதை (The Story of Ceres)!

ஒரு சமயம், இறந்தவர்களின் கடவுளான ப்ளூடோ (Pluto), செரஸின் மகளான ப்ரோசெர்பினாவை கடத்திச் சென்று தன்னுடன் வைத்துக்கொள்கிறார். ஆனால், ப்ரோசெர்பினா தன் தாயான செரஸை, தன்னைக் காப்பாற்றுமாறு அழைத்த போதும், செரஸால் ப்ரோசெர்பினாவின் குரலை மட்டுமே கேட்க முடிந்ததே தவிர அவள் இருக்கும் இடத்தைக்  கண்டுபிடிக்க முடியவில்லை!

அத்தகைய முட்டாள்தனமான (?), செரஸின் தன் மகளைத்தேடிய முடிவில்லா/பயனில்லா பயணத்தை, பின்னாட்டகளில்(இந்நிகழ்வை அடுத்த  நூற்றாண்டுகளில்) சில ஐரோப்பிய மக்கள்  கேலியாகச் சொல்லி சிரிப்பார்களாம்?!

இத்தகைய சில கதைகள் முட்டாள்தினக் கொண்டாட்டங்களுக்கு அடிப்படையாகச் சொல்லப்பட்டாலும், மிகவும் பிரபலமான ஒரு கதையும்/யூகமும் உண்டாம். அது என்னன்னா, முட்டள்தினக் கொண்டாட்டமானது, மக்கள் “ஜூலியன் நாளேட்டின்(Julian calender) பயன்பாட்டிலிருந்து  க்ரிகோரியன்  நாளேட்டின் (Gregorian calender) பயன்பாட்டுக்கு மாறிய காலமான 16- ஆம் நூற்றாண்டில்”தான் முதன்முதலில் தொடங்கியது என்னும் வரலாற்றுக் குறிப்பு?!

இந்தச் பதிவுச் செய்தி தொடர்பான ஒரு காணொளியை யூட்யூபிலே பார்த்தேன். அதை நீங்களும் பாருங்க (டிஸ்கி: இந்த காணொளியில ஒரு பொண்ணு கொஞ்சம் பயமுறுத்துற மாதிரி காமேராவுக்கு ரொம்ப பக்கத்துல முகத்தை வச்சிக்கிட்டு பேசுது, ஆனா, நான் எழுதியிருக்கிற விளக்கதை/ஒத்த கதையை கிட்டத்தட்ட சொல்லுது. அதனால பிடிச்சா மட்டும் பாருங்க!)

என்னங்க…..”சப்பாஆஆ……இப்பவே கண்ணக் கட்டுதே” அப்படீன்றீங்களா?!  😉

எனக்கும்தாங்க! அதனால நாம இத விட சுவாரசியமான, ஃப்ரான்சு நாட்டில், முட்டாள்தினக் கொண்டாட்டத்திற்கு அடிப்படையாகச் சொல்லப்படும் “ஏப்ரல் மீன்” கதையை அடுத்த பதிவுல பார்ப்போம். அதுவரைக்கும் கொஞ்சம் காத்திருங்க…..நன்றி!

ஆமா, இந்த வரலாறு தொடர்பான வேறு கதைகள் ஏதாவது உங்களுக்கு தெரியுமா?!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements