உளவியல்:பணியிடங்களில் சொல்லப்படும் பொய்கள்!

Posted on ஏப்ரல் 7, 2010

6


நாம் ஏன் பொய் சொல்கிறோம்னு தொடங்கி, இதுவரைக்கும்  நான் வெற்றிகரமாக உண்மைய மட்டுமே (?) சொல்லிக்கிட்டு வர்றேன் ;-). வாங்க, பணியிடங்கள்ல பரிமாறிக்கொள்ளப்படுகிற ‘சுவாரசியமான’ சில பொய்களைப் பத்தியும், அதன் உளவியல் கூற்றுகள் பத்தியும் ‘அல்பெர்டா பல்கலைக்கழக’ உளவியல் ஆய்வாளர் திரு.ஜெனிஃபர் ஆர்கோ என்ன சொல்றாருன்னு பார்க்கலாம். (இப்பதிவின் முந்தைய பாகத்தை வாசிக்க இங்கு செல்லுங்கள்)

பணியிடங்களில் பொய்கள்!

பள்ளிப்பருவம் தொடங்கி தள்ளாடும் முதுமை நாட்கள் வரை நாம் ஒவ்வொருவரும், வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு இடங்களில் பொய்களை சொல்கிறோம். அதில் மிக சுவாரசியமான ஒரு இடம், நாம் பணிபுரியும் நம் அலுவலகம்.   நம் சுயமரியாதைக்கும், ‘தான்’ என்ற அகம்பாவத்துக்கும் ஆபத்து வரும் வேலைகளிலேயே, அலுவலகத்தில் நம்முடன் பணிபுரியும் சக பணியாளர்களிடத்தில் நாம் பொய் சொல்கிறோம் (நமக்கு அறிமுகம் இல்லாத ஒருவரிடத்தில் சொல்லும் பொய்க்கான காரணம் வேறு) என்கிறார் ஜெனிஃபர்!

ஜெனிஃபர் அவர்களின் சமீபத்திய ஒரு உளவியல் ஆய்வறிக்கையின்படி, நமக்கு அறிமுகமில்லாதவர்களைவிட நம்முடன் பணிபுரியும் சக பணியாளர்களுடன் சொல்லும் பொய்களே அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது?!  நம்முடைய தகுதியை காப்பாற்றிக்கொள்ளவேண்டியும், நாம் நல்லவராய்த் தெரியவேண்டிமென்பதற்காகவுமே இப்பொய்கள் சொல்லப்படுகின்றனவாம்.

உதாரணமாக, ஒரு ஆய்வில்,தங்களுடைய சக பணியாளர்களிடம் தாங்கள் வாங்கிய காரின் விலையை சொல்லும்போது, அதே காரை வாங்க சக பணியாளர்கள் கொடுத்த விலையை விட தாங்களே அதிகம் விலைகொடுத்து வாங்கியதாக பொய் சொன்னார்களாம் சோதனைக்குட்படுத்தப்பட்ட பொதுமக்கள்! அந்த விலை வித்தியாசமானது ஒரு சிறிய தொகையானாலும்கூட, தாங்கள் சொல்லப்போவது (தங்களுக்கு அறிமுகமாகாதமானவர்களாக இல்லாமல்) தங்களுடன் பணிபுரியும் சக பணியாளர்களாக இருந்தால், பொய் சொல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது என்கிறார் ஜெனிஃபர்! நல்ல வேடிக்கை இது….?!

பொய்களைப் பத்தி விரிவா பார்த்துட்டு இருக்குறதுனால, எனக்கு ‘உன்னை நினைத்து’ திரைப்படத்துல வருகிற, ஆர்.சுந்தர்ராஜனின் ‘தொலைபேசி கடை’ நகைச்சுவைக் காட்சி நியாபகத்துக்கு வருகிறது. அதன் காணொளி இங்கே

ஆக மொத்தத்தில், மக்கள் தங்களுக்கு நன்கு பரிச்சயமானவர்களிடத்திலேயே (மேற்குறிப்பிட்டது போன்ற சிறு விலை வித்தியாசமானாலும்) வேண்டுமென்றே அதிகம் பொய் சொல்கிறார்களாம். இது தனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது என்கிறார் ஜெனிஃபர்!

மக்கள், “தங்களின் பேரையும், தகுதியையும் காப்பாற்றிக்கொள்ள,  தங்களுக்கு நன்கு பரிச்சயமானவர்களிடத்தில் பொய் சொல்வது” என்னும் குறுகிய நோக்கமுள்ள பழக்கமானது, அப்பொய் சொல்லி ஏமாற்றப்பட்டவர்கள் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று உணர்ந்தபின், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் நீண்ட நாட்கள் நீடிக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார் ஜெனிஃபர்! ஆஹா….இதுல இப்படியெல்லாம் வேற சிக்கல் இருக்குதா என்ன?!

இதையெல்லாம் படிச்ச நமக்கு, மூத்த உளவியல் ஆய்வாளர் திரு. ராபர்ட் ஃபெல்டுமேன் என்ன சொல்றாருன்னா…..

“நேர்மையான பண்பே உண்மையான/உறுதியான உறவுகளை ஏப்படுத்துமென்பதால், நாம் சொல்லும் பொய்களுக்கு நாமே ஒரு வரையரை வகுத்துக்கொள்வது நல்லது”

சுருக்கமா சொல்லனும்னா, “நேர்மையே வாழ்வின் நல்ல கொள்கை” அப்படீங்கிறாரு திரு.ஃபெல்டுமேன்!

நீங்க என்ன சொல்றீங்க……?

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements