பதிவு-200!

Posted on மார்ச் 24, 2010

12


எல்லாருக்கும் வணக்கமுங்கோ…..
உங்க எல்லாருடைய ஆதரவு, ஊக்கத்துனால மேலிருப்பான் வலைப்பக்கத்துல இன்னைக்கு வெற்றிகரமான 200வது பதிவுங்கோவ்! அதனால, நம்ம வேர்டுப்ரஸ் கணக்குபுள்ள என்ன சொல்றாருன்னா……

சுமார் 129 நாடுகளிலிருந்து 29,786 பேர் வருகை

இதுவரை மொத்தம் 47,708 பார்வைகள்

675 மறுமொழிகள்

50 மின்னஞ்சல் சந்தாதாரர்கள்

தமிழிஷ் தளத்தில் பிரசுரமான 80 செய்தி/கட்டுரைகள்

Kelvi.net topblogs-ல்

48-வது இடம், ஒரு நாளில் 221 சராசரி விருந்தினர்கள்

Tamil10.com-ன் தரவரிசையில் 94வது இடம்…..

இது எல்லாத்துக்கும் மேல வலைப்பதிவினால் கிடைத்த அன்பான நண்பர்கள்/வாசகர்கள்…..

இது எல்லாத்துக்கும் உங்க ஊக்கம் ஒரு பெரிய மூலதனம்ங்க…….மிக்க நன்றி!

எங்கு தொடங்கிய பாதையிது…..

முதன்முதல்ல வலைப்பதியனுங்கிற ஆசை மனசுல துளிர்விட்டப்போ நான் வெறும் வலைப்பதிவு ஆர்வலன் மட்டுமே. எனக்கென்று கவிதைப் புனைவுகளிலோ, எழுத்தாக்கத்திலோ எந்தவொரு தனித்திறமையும் இல்லவே இல்லை (இன்று வரையிலும் அப்படித்தான்?!).

சில புனைவுகளை கவிதைகள்னு நெனச்சி வலைப்பதிவென கிறுக்கியதுமுண்டு பலமுறை!? (ஐயோ பாவம் வாசகர்கள்?!). ஆனா, என் முதல் பதிவென்னவோ, பசங்க திரைப்படத்தைப் பற்றிய என் புரிதல்களின் வெளிப்பாடாகவே பதிவானது! அதில் தொடங்கிய என் வேர்டுப்ரஸ் வலைப்பயணம், இலக்கில்லாத படகுபோல  தமிழார்வத் துடுப்பு மட்டுமே  துணையாக இருக்க ரொம்ப தடுமாறஆரம்பிச்சது!

எனக்கு நல்லா தெரிஞ்ச(?), சின்ன வயசுலேர்ந்து விருப்பப் பாடமான அறிவியலிலிருந்து பல செய்திகள தினம் படிக்கிறதுனால (ஆய்விற்காக), இவற்றையேன் மக்களுடன் பகிரக்கூடாதுன்னு தோனுச்சி.  அதுமட்டுமில்லாம, இணையத்துல வெகுவா தமிழ் வளர்ந்துவிட்டாலும், அறிவியல் செய்திகள ஆங்கிலத்திலேயே படிக்க வேண்டிய நிர்பந்தம்.

இந்த நிலையை  மாற்றும் தொடக்கமாக, “தமிழ் அறிவியல்” களஞ்சியமாக நம்ம தளத்தை உருவாக்கினா என்ன அப்படீன்னு தோனுச்சி! அதனால, என்னைக் கவர்ந்த, சமுதாயத்திற்க்கு அவசியமான ஆய்வுச் செய்திகள மட்டுமே தொகுக்கலாம்னு நெனச்சி அறிவியல் பதிவுகளை எழுதத்தொடங்கினேன்!

சோதனை மேல் சோதனை!

அதுக்கும் ஒரு சோதனைக் காத்திருந்தது. அது வேற ஒன்னுமில்லீங்க, எழுத்துப்பிரயோகத் தட்டுப்பாடுதான்! காரணம், நான் ஆங்கிலவழிக் கல்வி பயின்றது. ஆனா  ஒருவழியா, இணையத் தமிழ் அகராதிகளின் துணையோடு சில அறிவியல் பதிவுகளை எழுதியாச்சு.பிரசுரமும் ஆனது வலைப்பக்கத்தில்! ஆனா, “கடைவிரித்தேன் கொள்வாரில்லை” அப்படீங்கிறதுதான் நிதர்சனம். இதற்க்கு காரணம் பல அப்படீன்னு எனக்குத் தெரியாது. (அதுல ஒரு முக்கியமான காரணமான வலைஒருங்கிணைப்புத் தளங்களின் பட்டியலை நண்பன் ஒருத்தன்  தரும்வரை!)

என்னதான் வலைப்பதிவு ஒருங்கிணைப்புத் தளங்கள்ல சேர்ந்துட்டாலும், கடையிலக் கல்லாக் கட்ட முடியல?! இந்த இக்கட்டான நேரத்துல, என் வலைப்பயணத்த எப்படி முன்னோக்கித் தொடர்வதுன்னு திணறியபோது, சில பல வலைப்பக்கங்களைப் பார்த்து, நாமும் ஏன் சினிமாச் செய்திகளைப் பதிவுகளாக்கக் கூடாது அப்படீங்கிற ஒரு “இத்துப்போன” எண்ணம் உண்டாச்சு!

சினிமா குப்பைகள்!

அப்புறமென்ன, ஓய்வு நேரங்கள்ல இணையத்துல இருக்கும் “சினிமாக் குப்பைகளைக் கிளரி” சில சூடான(?) செய்திகள நமக்கு வர்ற ஒரு சில வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி சுவாரசியமானப் பதிவா(?!) வெளியிட்டபோது சில பல மக்கள் நம்ம வலைப்பக்கம் வந்து லேசா எட்டிப்பார்த்தாங்க. இதப் பார்த்து அப்பப்போ சில அல்ப சந்தோஷங்களையும் அனுபவிச்சதுண்டு (ம்ம்ம்….என்ன பண்றது, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அவ்வ்வ்வ்வ்…..!)

அப்புறமாதான் தோனுச்சி, ச்சே…..இதுக்காகவா நாம மெனக்கெட்டு வலைப்பதிய வந்தோம்? இல்லவே இல்ல! “சினிமாப் பத்தி நல்லா எழுதத்தான் நூத்துக்கணக்கான பேர் இருக்காங்களே. அதுக்கு நீ எதுக்கு பிஸ்கோத்து” அப்படீன்னு உள்மனசு படுகேவலமா இன்சல்ட் பண்ணுச்சி (நான் ரொம்ப நல்லவன்றதால(?!), உங்ககிட்ட மறைக்காம உள்ளது உள்ளபடியே சொல்றேன்!) அதனால, ஒரு முடிவு பண்ணிக்கிட்டேன். இனிமே மேலிருப்பான் வலைப்பக்கத்துல அறிவியல் பதிவு மட்டுந்தான்  பிரதானமா இருக்கனும்னு!

அறிவியல் பதிவுகள்!

அதனால, அறிவியல் பதிவுகள எனக்கேயுறிய குசும்பு, கிண்டல், நக்கல் இப்படி நெறைய விஷயங்களை சேர்த்து எழுத ஆரம்பிச்சேன். மக்களும் வந்தாங்க, ஆனா படிச்சாங்களான்னுதான் தெரியல(?). இதுக்கிடையிலே, தமிழிஷ் தளத்துலயும்  என்னோட பதிவுகள இணைச்சேன். என்ன செஞ்சாலும் ஒன்னும் வேலைக்காகல. ஆனா, ஒரே ஒரு ஆறுதல், மக்கள் மட்டும் வந்து போனாங்கன்றது?!

எது எப்படியிருந்தாலும், “சற்றும் மனம் தளறாத விக்கிரமாதித்தன்” மாதிரி நம்ம கொள்கையிலேர்ந்து மட்டும் மாறல! இது மாதிரி போய்க்கிட்டு இருந்தப்போதான், நம்ம வாசக நல்லுள்ளங்கள்ல சிலர் ஊக்கத்துடன் கூடிய சில மறுமொழிகள எழுதினாங்க. அப்போதான் லேசா ஒரு நிம்மதிப் பெருமூச்சு, ஆக நாம ஓரளவுக்கு பரவாயில்லைங்கிற மாதிரியான அறிவியல் பதிவுகளத்தான் எழுதுறோமுன்னு!

ஆனா, சும்மா சொல்லக்கூடாதுங்க, பதிவுகள் சுமாரா இருந்தாக்கூட, சில வாசகர்கள் ரொம்ப பெரிய மனசோட மனசார வாழ்த்தி, பாராட்டி மறுமொழி எழுதினாங்க. அவங்க எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள். உண்மையைச் சொல்லனும்னா, “உங்களாலதான்” இன்னைக்கு வரைக்கும் நான் வலைப்பதியறேன்.

என் அன்பிற்குறிய வாசகர்கள் அனைவருக்கும்……

என்னோட வலைப்பதிவோட அடிப்படைக் கொள்கையா நான் நெனக்கிறது “கொடுக்கல் வாங்கல்”. அதாவது, எனக்குப் புரிகிற, சுவாரசியமான சில அறிவியல் ஆய்வு, கண்டுபிடிப்புகள நான் உங்ககூட பகிர்ந்துக்கிறேன். அதுக்கு பதிலாக வரும் உங்களின் மறுமொழிகளில் பல புதிய தகவல்களை நானும் தெரிஞ்சிக்கிறேன். ஆக, இந்த கொடுக்கல் வாங்கல் இன்று போலவே என்றும் தொடரனுங்கிறதுதாங்க என்னோட ஆசை! அதையே தொடருங்கன்னு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

சமீபகாலமா, எனக்கு மிகச்சிறந்த ஊக்கமருந்தாக அமைந்த சில மறுமொழிகள் என் வலைப்பதிவுகளில் பார்த்து மிகுந்த மனநிறைவடைஞ்சதுண்டு. ஆனா, அதுக்காக என் பதிவுகளின் தரத்தை கூட்டி, இன்னும் சிறந்த பதிவுகளை எழுதமுயற்ச்சிப்பேனே தவிர, “ம்ம்ம்…..எல்லாம் நல்லாத்தான் எழுதுறோம் விடுன்னு கவனக்குறைவா பதிவுகள் எழுத மாட்டேங்க”. என்னை மறுமொழிகளால் ஊக்கப்படுத்திய எல்லா நண்பர்களுக்கும், என் வலைக்கு வருகை தந்து என்னை ஆதரித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மேலிருப்பானின் மனமார்ந்த நன்றிகள்.

தமிழிஷ் வலைத்தளம்!

என் வலைத்தளம் இந்த நிலையை அடையவும், என்னையும் என் ஆக்கங்களையும் பல நூறு/ஆயிரம் இணையவாசிகளின் பார்வைக்கு எடுத்துச் சென்றமைக்கும், தமிழிஷ்  தளக் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

திரட்டிகள்!

என் ஆக்கங்கள் பெருவாரியான மக்களைச் சென்றடைய மிகவும் முக்கியமான காரணம் பல்வேறு திரட்டிகளான, தமிழிஷ், தமிழ்மணம், திரட்டி.காம், தமிழ்கணிமை,தமிழ்மீடியா,இலங்கை வலைப்பதிவாளர் திரட்டி,உலவு.காம், இ-தமிழ் மற்றும் தமிழ் 10 என எல்லாத் திரட்டிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! உங்கள் ஆதரவு இன்று போல் என்றும் தொடர வேண்டுகிறேன்!

யூத்ஃபுல் விகடன்!

படைப்பாளர்களின் களம் என்றழைக்கப்படும் யூத்ஃபுல் விகடனில், என் பதிவுகளும் வலைப்பதிவும் குட் ப்ளாக்ஸ் பகுதியில் ஒரு நாள் வராதா என்று எண்ணியதுண்டு பலமுறை! சில முறை அவர்களின் இணையத்துக்கு விண்ணப்பிக்க முயற்ச்சி செய்து, “ஃபார்மட்டிங்” செய்வதில் சில தவறுகள் செய்து பின் சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் திடீரென்று ஒரு நாள் என் வலைப்பதிவை, யூத்ஃபுல் விகடனின் “குட் ப்ளாக்ஸ்” பகுதியில் பார்த்து “நான் ஜெயிச்சிட்டேன்”னு துள்ளிக்குதித்ததும் உண்டு!

மாணிக்கம் ஜானகிராமன்!

எல்லாருக்கும் நன்றி சொல்ற இந்த நேரத்துல, எங்க அண்ணன் திரு.மாணிக்கம் ஜானகிராமன் அவர்களுக்கு நன்றி சொல்லாம இருக்க முடியாது. என்னோட எழுத்து நடையில சில பல மாற்றங்கள் வருவதற்க்கு முக்கிய காரணம் இவர்தான். அதுமட்டுமில்லாம, “நீ வலைப்பதிவு எழுதி பெருசா ஒன்னும் சாதிக்கப் போறதில்லை, இதையெல்லாம் ஏறக்கட்டிட்டு ஒழுங்கா படிக்கிற வேலையப் பாருன்னு” அவரு சொல்லியிருக்கலாம். ஆனா, அப்படிச் சொல்லாம வலைப்பதிவதில் இருக்கிற சாதக பாதகங்கள எடுத்துச் சொல்லி, அதுக்கு ஏத்த மாதிரி பதிவுகள் எழுத என்னைத் தூண்டுவாரு. தொடர்ந்து ஊக்கமளித்த அவருக்கும், என் குடும்பத்தாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்.

200வது இடுகை!

மக்களே…..இதையெல்லாம் படிச்சிட்டு, “200வது பதிவு வரைக்கும் வந்தாலும் வந்தாய்ங்க, சொந்தக் கதை சோகக் கதையா எழுதி மனுசன கொல்றாய்ங்கப்பா?!” அப்படீன்னு உணர்ச்சிவசப்படாதீங்க! பரவாயில்லை மாதிரியான பதிவுகள் எழுதின என்னையும் மதிச்சி வந்து, ஊக்கப்படுத்தி, பல நல்ல மறுமொழிகளை எழுதி, எல்லாத்துக்கும் மேல என்னோட பதிவுகள் பலவற்றை தமிழிஷ் ஓட்டுக்கள் மூலம் பிரபலப்படுத்தி, இன்னைக்கு யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸ் பக்கத்துக்கு என் வலைப்பக்கம் வருவதற்க்கு முக்கியமான காரணமான….

“உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்”

வாசக நண்பர்களே, உங்கள் ஆதரவு இன்றுபோல் என்றும் தொடர வேண்டுகிறேன். என் தவறுகளையும் சுட்டிக்காட்ட தயங்காதீர்கள்!

நட்புடன்,

பத்மஹரி.

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின் பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements