சூர்யாவுக்கு போட்டியாக “சிக்ஸ் பேக்”குடன் வானவில் மீன்?!

Posted on மார்ச் 19, 2010

2


வாரணம் ஆயிரம் சூர்யாவைப் (சிக்ஸ் பேக்கைப்) பார்த்துட்டு, “ஆ…..ன்னு வாயைப் பிளந்தவர்களும், ஹும்ம்….. நாமளும்தான் இருக்கோமே” அப்படீன்னு தங்களைத் தாங்களே நொந்துகொண்டவர்களும் ஏராளம்னு அந்த படத்துல வர்ற அழகான சூர்யாவைப் பார்த்த எல்லாருமே ஒத்துக்குவாங்க!

ஆனா, இப்போ சூர்யாவோட சிக்ஸ் பேக்கையெல்லாம் “ப்ஃபூ…..ன்னு” எளக்காரமா பார்க்குற மாதிரி ஒரு மேட்டர் வந்திருக்கு சமீபத்துல! அது வேற ஒன்னுமில்ல, சமீபத்துல வெளிவந்த (10 ஆண்டுகாலமா தொடர்ந்து நடத்தப்பட்ட) ஒரு வினோதமான ஆனா வெவரமான ஆய்வுமுடிவு பத்தின செய்திதாங்க அது?!

இந்த ஆய்வைப் பத்தி மேல படிக்கிறதுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயம். தலைப்பை படிச்ச உடனே உங்களுக்கெல்லாம் கண்டிப்பா ஒரு கேள்வி எழுந்திருக்கும். அதாவது, மனுசன் சிக்ஸ் பேக் பண்றான்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. ஆனா, மீனுக்கெல்லாம் எதுக்கு சிக்ஸ் பேக்கு???

“வேலை வெட்டி எதுவும் இல்லைன்னா, இப்படித்தான் சில பேரு, ஆராய்ச்சி பண்றேன் பேர்வழின்னு சொல்லிக்கிட்டு, குண்டக்க மண்டக்க எதையாவது செஞ்சுக்கிட்டு இருப்பாய்ங்க!”, அப்படீன்னு நீங்க அலுத்துக்கிட்டீங்கன்னா அது தவறு. ஏன் தெரியுமா? ஏன்னு தெரிஞ்சா பதிவுச்செய்தியில இருக்குற செய்தியோட உங்க யூகத்தை ஒப்பிட்டுப் பார்த்து அது சரியா/தவறான்னு தெரிஞ்சிக்குங்க. (என்னை மாதிரி) தெரியலைன்னாலும் பரவாயில்ல, வாங்க படிச்சி தெரிஞ்சிக்குவோம்……

வா.ஆ. சூர்யாவுக்கு போட்டியாக “சிக்ஸ் பேக்குடன்” வானவில் மீன்!

வானவில் மீன் (Rainbow trout,Photo:alaskafishing411.com)

“ரெய்ன்போ ட்ராட் (rainbow trout)” (இதைத்தான் வானவில் மீனுன்னு தமிழாக்கம் பண்ணிட்டேன்), அப்படீன்னு ஒரு மீன் வகை உண்டு.  இது பெரும்பாலும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் செயற்கை மீன்வளர்ப்பு (Aquaculture) முறையிலதான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மீனைப் பயன்படுத்திதான் 10 ஆண்டு காலம் தொடர்ந்து ஆய்வு நடத்தி, சாதாரண வானவில் மீனா இருந்ததை இப்போ “சிக்ஸ் பேக்” வானவில் மீனா உருவாக்கியிருக்காங்க, ரோட் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த ஆய்வாளர் திரு.டெர்ர்ய் ப்ராட்லி (Terry Bradley)யும் அவரோட ஆய்வு மாணவர்களும்!

இந்த மீன்ல இன்னொரு வேடிக்கை என்னன்னா, இது வெறும் சிக்ஸ் பேக் மீன் இல்லீங்க. “அட்டகாசமான தோள்”களுடன் கூடிய சிக்ஸ் பேக் மீன்! ஆனா, இதுல முக்கியமான விஷயம் என்னன்னு பார்த்தோமுன்னா, இந்த சிக்ஸ் பேக் ஆய்வோட சாராம்சமே “அதிகப்படியான தசை வளர்ப்பு” அப்படீங்கிறதுதான். அதனால, இந்த ஆய்வு செயற்கை மீன் வளர்ப்பு துறையைச் சார்ந்தவங்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதாம் அப்படீன்னு சொல்றாரு டெர்ரி!

படிச்சுப் புரிஞ்சிக்கிறத விட அந்த “சிக்ஸ் பேக் மீன்”அதிசயத்த பார்த்து தெரிஞ்சிக்குங்களேன்……

“மயோஸ்டேட்டின்”னும் சிக்ஸ் பேக் மாயாஜாலமும்!

இந்த சிக்ஸ் பேக் தசை வளர்ப்புக்கு அடிப்படை “அறிவியல் காரணி” என்னன்னா, மயோஸ்டேட்டின் அப்படீங்குற ஒரு மரபனுதாங்க! அடிப்படையில இந்த மரபனு தசை வளர்ச்சிக்கு முற்றிலும் எதிராக செயல்படக்கூடியது. ஓஹோ….அப்படியா?  பெல்ஜியத்தின் நீல வண்ண “ஆநிரை”கள்ல (ஆடு மாடைத்தாங்க அழகு தமிழ்ல அப்படிச் சொன்னேன்!/Belgian blue cattle) இந்த மயோஸ்டேட்டின் மரபனுவானது இயற்கயிலே திரிந்து (mutation) இருக்குமாம். அதனால, இந்த வகை விலங்குகள்ல 20-25 % அதிக தசை வளருமாம்/இருக்குமாம்!

இதைப் பார்த்துட்டு இதே மாதிரியான தசை வளர்ப்பு மீன்கள்லயும் சாத்தியப்படுமா அப்படீன்னு யோசிச்சு, சரி முயற்ச்சி செஞ்சு பார்ப்போம்னு தொடங்கிய ஆய்வோட அழகான முடிவு (?) தான் சிக்ஸ் பேக் மீன். டெர்ரி ப்ராட்லியின் கூற்றுப்படி, பாலூட்டிகள்ல (Mammals) பிறப்புக்குப் பின் தசை வளர்ப்பு ஒரு கட்டுக்குள்தான் இருக்குமாம். ஆனா, மீன்கள்ல மட்டும் அதுங்க வாழ்நாள் முழுவதும் தசை நாறுகள் அதிகரிச்சுக்கிட்டே இருக்குமாம். அட…..அப்படியா?

மயோஸ்டேட்டின்-சிக்ஸ் பேக் மரபனு மாற்று ஆய்வு!

மயோஸ்டேட்டின் மரபனுவை கட்டுப்படுத்துறதுனால (inhibition), தசை வளர்ச்சி அதிகரிக்குதுங்கிற உண்மை தெரிஞ்சதும் இதையேன் நாம மீன்கள்ல முயற்ச்சி செஞ்சு பார்க்கக்கூடாதுன்னு டெர்ரியும் அவரோட மாணவர்களும் (ஆய்வு) களத்துல குதிச்சிருக்காங்க.

சுமார் 500 மணி நேரம் செலவு செஞ்சு, கிட்டத்தட்ட 20,000 வானவில் மீன் முட்டகளுக்குள்ளே, மயோஸ்டேட்டின் மரபனுவை கட்டுப்படுத்தும் டி.என்.ஏ (DNA) இழைகள  நுன்னிய ஊசி (Micro-injection) மூலமா செலுத்தியிருக்காங்க! அடேங்கப்பா….!  குஞ்சு பொரிச்ச முட்டகள்ல வெறும் 300 மீன் குஞ்சுகள் மட்டுமே மயோஸ்டேட்டினை மரபனுவை கட்டுப்படுத்தும் மரபனுவை (DNA) தாங்கி இருந்ததாம். ஐயோ….பாவம் ஆய்வாளர்கள்!

இந்த சோதனை செஞ்ச இரண்டாவது வருடத்துல (300 மீன்கள்ல) பெரும்பாலான மீன்கள் “சிக்ஸ் பேக்” குடன் இருந்தனவாம். அப்படிப்போடு! ஆனா, இதுல வேடிக்கை என்னன்னா, மீனுக்கு பொதுவா வயித்துல (Abdomen)   தசையே இருக்காதாம். சிக்ஸ் பேக் மட்டுமில்லாம “ஆஜானுபாகுவான புஜங்களும்” இருந்ததாம் இந்த மீன்களுக்கு!  குடுத்து வச்ச் மீனுங்க…..இல்லீங்களா?

சிக்ஸ் பேக் மீன் ஆய்வும் மனித நோய்களும்!

என்னதான் மீன் தசை உற்பத்திய அதிகரிக்க ஆய்வு செஞ்சாலும் “சோழியன் குடுமி சும்மா ஆடாது”ங்கிற பழமொழிக்கு ஏத்த மாதிரி இந்த ஆய்வினால வெறும் மீன் உற்பத்தியாளர்களுக்கு மட்டும் பயனில்லையாம்.  மாறாக, மனித-மீன் தசை வளர்ச்சி பத்தின அறிவியல் உண்மைகளையும், மனிதர்களில் ஏற்படும்  மஸ்குலர் டிஸ்ட்ராஃபி போன்ற “தசை இழப்பு” தொடர்பான நோய்கள் பத்திய அறிவியல் உண்மைகளையும் அறியும் வண்ணம் இருக்கிறதாம் இந்த ஆய்வு முடிவுகள். அப்பாடா….இப்பதான் காதுல தேன் பாய்ந்த மாதிரி மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு. அப்படித்தானே?

இதையெல்லாம் படிச்சுட்டு, “ஹூம்…..மீனுக்கு சிக்ஸ் பேக் வரவைக்க ஆராய்ச்சி பண்ணிட்டு என்ன பண்றது?!. நமக்கும் அப்படி ஒரு ஆராய்ச்சி பண்ணி ஒரு சிக்ஸ் பேக்கோ, சிக்ஸ்டீன் பேக்கோ வரவச்சாங்கன்னா எப்படி இருக்கும்”னு தானே யோசிக்கிறீங்க?! கவலப்படாதீங்க நண்பர்களே, மீனுக்கு ஒரு காலம் (ஆய்வு) வந்தா மனுசனுக்கும் ஒரு காலம் வராமலா போயிடும்….???

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின் பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements