வலி வந்தால் நாம் ஏன் அலறுகிறோம்?

Posted on மார்ச் 18, 2010

12


கொஞ்சம் நிதானமா யோசிச்சு பார்த்தீங்கன்னா புரியும், நாம ஒரு நாள்ல எத்தனை முறை சிரிக்கிறோம், அழுகிறோம், அலறுகிறோம், கண் சிமிட்டுறோம்…..இப்படி நம்ம உடலையும், குறலையும் வச்சிக்கிட்டு இன்னும் பல விதமான/வினோதமான சைகைகள்,  உணர்ச்சிகள வீடு/பொதுவிடங்கள்ல வெளிப்படுத்துறோம்னு.

இப்படி என்னதான் நாம (சில சமயங்கள்ல) வினோதமான சில உணர்ச்சிகள வெளிப்படுத்தினாலும், நம்மைப் பார்த்து யாரும் “ஐய்ய….உங்களுக்கு என்ன மூளை கீள குழம்பி போச்சா” அப்படீன்னு கேக்குறது இல்ல. ஏன்னா, இந்த உணர்ச்சிகள நம்மைச் சுத்தியிருக்கிற எல்லாருமே வெளிப்படுத்துறாங்கங்கிறதுனால!

என்னங்க, “என்னப்பா சொல்ற நீ…..தலையும் புரியல வாலும் புரியல” அப்படீன்றீங்களா? அது வேற ஒன்னுமில்லீங்க, நம்ம அன்றாட வாழ்க்கையில நாம அர்த்தமுள்ள பல வார்த்தைகள்/மொழி பேசுறமாதிரியே அர்த்தமே இல்லாத சில பல மொழிகூட அப்பப்போ பேசுறோமுங்கிறது, இயல்பான ஒரு விஷயம்னு உங்க எல்லாருக்கும் தெரியும். இல்லீங்களா? பொதுவா, அர்த்தமுள்ள மொழிக்கு எப்போதுமே ஒரு குறிக்கோள் இருக்கும். உதாரணத்துக்கு, உங்க நண்பரைப் பார்த்து “வணக்கம், எப்படி இருக்கீங்க” அப்படீன்னு நீங்க கேட்க, அவர் பதிலுக்கு ” வணக்கம்ங்க, நான் நல்லா இருக்கேன் நீங்க?” அப்படீன்னு உங்க நண்பர் திருப்பிக் கேட்பது!

ஆனா, நீங்க பேருந்துல பயணம் செய்யும்போது உங்க எதிர் இருக்கையில, உங்களுக்கு பரிச்சயமே இல்லாத ஒரு சின்ன குழந்தை உங்கள பார்த்து கையசைச்சு சிரிக்குதுன்னு வச்சுக்குங்க, அதப் பார்த்து நீங்களும் பதிலுக்கு சைகை செஞ்சு சிரிப்பீங்கதானே? இந்த இடத்துல அந்த குழந்தையோட உணர்ச்சிகளுக்கும், உங்களோட பதில் உணர்ச்சிகளுக்கும் பெருசா ஒன்னும் அர்த்தம் எதுவும் இல்லைங்கிறதுதான் உண்மை. ஆக, அர்த்தமே/குறிக்கோளே இல்லாம நாம பேசுற பொழிக்கு/புன்னகைக்குதான் “நான்வெர்பல் கம்மியூனிக்கேஷன்(Non-verbal communication)-னு பேரு ஆங்கிலத்துல!

எனக்குத் தெரிஞ்ச அரைகுறை தமிழ்ல சொல்லனும்னா ஓசையில்லா மொழி/சங்கேத மொழி அப்படீன்னு சொல்லலாம்.  ஆமா, இப்போ ஏன் இதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கேன்னு நீங்க கேக்கலாம்.  எப்பவும்போல எனக்கு, திடீர்னு ஒரு சின்ன சந்தேகம், அது என்னன்னா……

திடீர்னு வலி வந்தா உடனே நாம ஏன் அலறுகிறோம்?

படம்:sodahead.com

இந்தக் கேள்விய உங்ககிட்ட கேட்டா, உடனே நீங்க “ஆஹா…..இது அவன் இல்லன்னு,  குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டு குடையுற பார்த்திபன பார்த்து தெறிச்சி ஓடுற வடிவேலு” மாதிரி ஓடினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லன்னு நான் நெனக்கிறதுனால, நானே இந்தக் கேள்விக்கு பதில் சொல்லிடுறேன்!

நாம ஒரு சாலையில அவசர அவரமா நடந்து போய்க்கிட்டு இருக்கோம், திடீர்னு ஒரு கல்லுல மோதி நம்ம கால் கட்டைவிரல் நகம் உடைஞ்சி ரத்தம் வரும்போது “சுரீர்” ஒரு வலி வரும் நமக்கு! உடனே நாம, (வலி தாங்க முடியலைன்னா, இடம்,  பொருள், ஏவல் இப்படி எதுவுமே பார்க்காம) “அம்மா……ன்னு” அலறிடுவோம். உடனே நம்மள சுத்தி இருக்குறவங்க என்ன ஏதுன்னு, பதறிடுவாங்க. இல்லீங்களா?  பொதுவா இடம், பொருள் ஏவல்னு எல்லாத்தையும் பார்த்து, இங்கே கத்தலாம்/இங்கே பேசக்கூடாதுன்னு நிதானமா யோசிச்சு உணர்ச்சிகள வெளிப்படுத்துற நாம வலி வந்தா மட்டும் ஏன் அப்படி அலறுகிறோம்?

ஏன்னா, அர்த்தமில்லா மொழியான அலறல், புன்னகை, சில சைகைகள்  (இன்னும் பல உண்ர்ச்சிகள்னு) இப்படி எல்லாமே  பரிணாமம் நமக்கு கொடுத்த ஒரு கருவியாம்! (முக்கியமா, ஊனமுற்றோருக்கு/வாய்பேச முடியாதவர்களுக்கு!). ஒரு நல்ல உதாரணம் சொல்லனும்னா, குழந்தைகளுக்கு தினந்தோரும் சில சிராய்ப்புகள், அடிகள்,  தவறி தாங்களே கீழே விழுதல் இப்படி எதாவது ஒரு பிரச்சினை (பெரியவங்களுக்கு தெரியாம) ஏற்படும். அதிலிருந்து குணமும் அடைஞ்சிடுவாங்க. ஆனா, சில சமயத்துல அழுவாங்கப் பாருங்க…..யப்பா! ஒன்னுமே இல்லாத ஒரு சின்ன விஷயத்துக்கு “ஊரே ரெண்டு படுற மாதிரி பெருங்குறலெடுத்து அழுவாங்க”. எப்படி ஓய்ச்சினாலும் ஓயவே மாட்டாங்க!

குழந்தையோட அம்மா/அப்பாவுக்கு முழி பிதுங்கிடும் அவங்கள சமாதானப் படுத்துறதுக்குள்ள. ஆனா, வேடிக்கை என்னன்னா சில/பல பெரியவங்களும் (நாமதான்!) இப்படித்தான் அலறுவாங்களாம் அடிபடும்போது. காரணம் என்னன்னா, ஒரு அங்கீகாரத்துக்காகவாம். அதாவது, “எனக்கு அடிபட்டுடுச்சே…..பாருங்களேன்” அப்படீன்னு உலகத்துக்கு தெரியவைக்கிறதுக்காகவாம்!

கடந்த 2003-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வுல, மக்களில்  “ஹை கெட்டாஸ்ட்ரோஃபைசர்ஸ் (high catastrophizers)” அப்படீன்னு சொல்லக்கூடிய ஒரு சிலருக்கு, “தம்மைச் சுற்றி மக்கள் இருந்தபோது”  (தாங்கமுடியாத வலி காரணமான ) ஏற்பட்ட அலறல்கள் நீண்ட நேரம் நீடித்தது அப்படீன்னு கண்டுபிடிச்சிருக்காங்க! இதிலிருந்து என்ன தெரியுதுன்னா, நாம் (மக்கள்) அலறுவதற்க்கு ஒரு முக்கிய காரணம் “சார்புத்தன்மையையும் (dependency)  அதனால் உருவாகும் ஆதரவான சூழ்நிலையையும் (communal coping)  ஏற்படுத்திக் கொண்டு நம்மை நாமே காத்துக் கொள்ளவே” என்பதாக இருக்கலாம்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!

அப்பாடா….ஒரு வழியா வலி வந்தா நாம ஏன் அலறுகிறோம்ங்கிறத விளக்கி முடிச்சாச்சுப்பா?!

மக்களே…..இது பத்தி நீங்க எதாவது சொல்ல/கேட்க நெனச்சீங்கன்னா, சிரமம் பார்க்காம ஒரு மறுமொழி எழுதிட்டுப் போங்க. சரிங்களா? அப்ப…..இப்போதைக்கு நான் அப்பீட் ஆயிக்கிறேன். அடுத்த பதிவுல ரிப்பீட் ஆயிக்கிறேன்! அப்பீட்டுக்கு அர்த்தம் தெரியலைன்னா, தயவு செஞ்சி எங்கிட்ட கேக்காதீங்க. அந்த வார்த்தையை “யுணிவர்சிட்டி” படத்துல  சொன்ன (சின்ன கலைவானர்?!) விவேக்கு கிட்ட கேட்டுக்குங்க! 🙂 😉

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின் பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements