“பேசும்” குளிர்சாதனப் பெட்டி?!

Posted on மார்ச் 15, 2010

8


தலைப்பைப் படிச்ச உடனே யோசிச்சிருப்பீங்களே, “ஆஹா…அப்படியா, இது எப்போலேர்ந்து, சொல்லவேல்ல?!” அப்படீன்னு! ஒரு உண்மையச் சொல்லனும்னா, இப்பெல்லாம் உலதத் தொழில்னுட்ப முன்னேற்றம் போற போக்கைப் பார்த்தா, அடுத்த நூற்றாண்டுல மனுசன் இருப்பானான்னு தெரியல, அப்படியே இருந்தாலும் சும்மா பேருக்குத்தான் மனுசனா இருப்பான் போலிருக்கு?! அதாங்க, இந்த “ஒப்புக்குச் சப்பானி”ன்னு சொல்லுவாங்களே அது மாதிரி!

என்னங்க, “ஐய்யய்ய….என்னப்பா இப்படிச் சொல்லிட்ட” அப்படீன்றீங்களா? பின்ன என்னங்க, ஆரம்பத்துல என்னடான்னா மனிதனுக்கு உதவுறேன் பேர்வழின்னு சொல்லிக்கிட்டு எந்திர மனிதன (ரோபோ) கண்டுபிடிச்சாய்ங்க! ஆனா, இப்போ நெலம தலைகீழ். அதாங்க, மனிதனை “முழுச்சோம்பேறியாக்கிட்டு” ரோபோக்களே எல்லா வேலைகளையும் செய்யுது. மனுசன் அதுங்களுக்கு கூட மாட ஒத்தாசையா இருக்குறான்?! அந்த வரிசையில வந்திருக்குற புதிய கண்டுபிடிப்புதான் “பேசும்” குளிர்சாதனப் பெட்டி! கலி முத்திதான் போச்சு போலிருக்கு?!

அது சரி, நமக்கு எதுக்கு ஊர்வம்பு?! ஒரு தொழில்னுட்ப பதிவ எழுதுனோமா, பொழப்பைப் பார்த்தோமான்னு இருப்போம். நீங்க வாங்க, பேசுற அதி நவீன குளிர்சாதனப் பெட்டியப் பத்தி இன்னும் விரிவா தெரிஞ்சிக்கலாம்!

பேசும் குளிர்சாதனப் பெட்டி!

சமீபத்துல நடந்த மிக பிரபலமான உலகத் தொழினுட்ப மாநாடான “CeBIT”லதான் இந்த பேசும் குளிர்சாதனப் பெட்டியப் பத்தின செய்தி வெளியானது! “அதெல்லாம் சரி, குளிர்சாதனப் பெட்டி எதுக்கு பேசனும் இதுக்கு முதல்ல பதில் சொல்லு நீ” அப்படீன்றீங்களா? அப்படிக் கேளுங்க, இதத்தான் நானும் எதிர்பார்த்தேன்!

இதுல அடிப்படை உண்மை என்னன்னா, குளிர்சாதனப் பெட்டி (மட்டும்) சும்மா  பேசுறதில்லீங்க! ம்ம்ம்….அப்புறம்? குளிர்சாதனப் பெட்டி துணி துவைக்கும் வாஷிங் மெஷினுக்கிட்ட பேசுமாம் (?!) . அதேமாதிரி, தொலைக்காட்சிப்பெட்டி பாத்திரம் கழுவுற எந்திரத்துக்கு ஆர்டர் (ஏவல்)/ போடுமாம்!

என்னங்க, கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கா?! இருங்க விவரமாச் சொல்றேன். அதாவது, இந்த புதிய அதி நவீன தொழில்னுட்பத்தோட அடிப்படை நோக்கம் என்னன்னா, நாம வீட்டுல இல்லாமையே நம்ம வீட்டுல இருக்குற எல்லா எந்திரங்களையும் தொலைத் தொடர்பு (ரிமோட்)  மூலமா இயக்க முடியும் அப்படீங்கிறதுதான்!

தங்களுக்குள்ளே பேசிக்கொள்ளும் வீட்டு எந்திரங்கள்!

இன்னும் விளக்கமாச் சொல்லனும்னா, உதாரணத்துக்கு நீங்க உங்க சோஃபாவுல உக்காந்துக்கிட்டே வேறு ஒரு அறையிலிருக்குற துணி துவைக்கிற எந்திரத்தை இயக்க முடியுமாம்! “ப்ஃபூ….இவ்ளோதானா, இதுக்கா  இவ்ளோ பில்டப்பு” அப்படீன்னு அவசரப்படுற மக்களே இருங்க, நான் இன்னும் முடிக்கல!

இப்பெல்லாம் “ஸ்மார்ட் ஃபோன்” அப்படீங்கிற எல்லாம் வல்ல (?)  கைத்தொலைபேசி பயன்பாடு சர்வ சாதாரணமாப் போச்சு! அப்படி நீங்களும் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துனீங்கன்னா, எங்கிருந்து(பல்லாயிரம்  மைல்களுக்கு அப்பாலிருந்து) வேண்டுமானாலும் உங்க வீட்டுல உள்ள பல எந்திரங்களுக்கு வெறும் குறுஞ்செய்தி அனுப்பியே அவற்றை இயக்க முடியும்! அடேங்கப்பா…..!!

அதுமட்டுமில்லாம, ஏதோ ஒரு காரணத்துனால, உங்க வாஷிங் மெஷினுக்கு நீங்க அனுப்புற குறுஞ்செய்தி வேலை செய்யாமப் போனாக்கூட, உங்க குளிர்சாதனப் பெட்டிக்கு , “கொஞ்சம் அந்த வாஷிங் மெஷினை ஆன் பண்ணிவிடேன் ப்ளீஸ்” அப்படீன்னு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி உங்க வாஷிங் மெஷினை இயக்க முடியுமாம்! என்ன, “நம்ப முடியவில்லை…..இல்லை…..இல்லை”ன்னு உச்சஸ்தாயியில பாட ஆரம்பிச்சிட்டீங்களா? நானும் கூடத்தான்! ஆனா, “நீங்க நம்பித்தான் ஆகனும் குறைந்தபட்சம் இன்னும் சில மாதங்கள்ல” அப்படீங்கிறாரு விஞ்ஞானி ப்ராஸ்!

நான் சொல்றத நம்பமுடியலைன்னா, CeBIT-டின் இந்த அதிகாரப்பூர்வ காணொளியைப் பாருங்க…..

“ஹைட்ரா” எனும் மாயாஜால மென்பொருள்!

மேல நீங்க படிச்சதையெல்லாம் சாத்தியமாக்கப் போறது இன்னும் வெளிவராத மென்பொருள் “ஹைட்ரா (Hydra)”! இந்த அதி நவீன புத்துலக மென்பொருளை உங்க எந்திரங்கள் மற்றும் ஸ்மார்ட் ஃபோனில் இன்ஸ்டால் செய்துவிட்டால் மட்டுமே போதும், அடுத்த நொடி உலகம் மட்டும் உங்கள் கையில் இல்லை. உலகத்தின் சில இயக்கங்களும்தான்!

இந்த தொழில்னுட்பம், நீண்ட நாட்கள் விடுமுறை செல்லும் மக்களுக்கு மிக முக்கியமானதா இருக்கும் அப்படீங்கிறாரு ப்ராஸ்! உதாரணத்துக்கு, நீங்க ஒரு 130 மைலுக்கு அப்பால் ஒரு விடுமுறையில இருக்கீங்கன்னு வச்சிக்கலாம். திடீர்னு, “ஐய்யய்யோ…..வீட்டு பின்கதவை மூட மறந்துட்டனே”ன்னு உங்களுக்கு நியாபகம் வந்ததுன்னா, ஒன்னும் பிரச்சினையில்ல. உடனே உங்க ஸ்மார்ட் ஃபோன எடுத்து, உங்க பின்கதவுக்கு  ஒரு சின்ன குறுஞ்செய்தி அனுப்பிட்டாப் போதும்! அதுவும் வேலை செய்யலைன்னாக்கூட பரவாயில்ல. உடனே, உங்க தொலைக்காட்ச்சிக்கோ, வானொலிக்கோ ஒரு குறுஞ்செய்தி அனுப்பி உங்க பின்கதவை மூடிடலாம்!

உலகம்  (இயக்கம்) உங்க கையில்?!

இதெல்லாம் உண்மையிலே சாத்தியமா? இதையெல்லாம் நம்பலாமா? இப்படி பல கேள்விகள் எழலாம் உங்களுக்கு. கண்டிப்பா, நீங்க இதையெல்லாம் நம்பலாம். ஏன்னா, கடந்த நாலு வருஷமா, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த “ஃப்ரான்ஹோஃபர் இன்ஸ்டிடியூட் (Fraunhofer Institute)”, மேலும் பத்து துணை நிறுவனங்களுடன் இணைந்து  நடத்திய “ஹைட்ரா ப்ராஜெக்ட்”டின் பரிசுதான் இந்த ஹைட்ரா தொழில்னுட்பம்! மேலும் விவரங்களுக்கு இங்க போய்ப் பாருங்க

இந்த தொழில்னுட்பம் பயன்படுத்துறது மூலமா நாம “நம்ம நேரம் விரயம், சக்தி விரயம் மற்றும் மன உளைச்சல்” இப்படி பல விஷயங்களைத் தவிர்க்கலாம் அப்படீங்கிறாரு விஞ்ஞானி ப்ராஸ்! உண்மையிலேயே இந்தத் தொழில்னுட்பம் மேற்சொன்ன விஷயங்களுக்காக மட்டும்தான் பயன்படுத்தப் படும்னா, பதிவு தொடக்கத்துல நான் சொன்ன குற்றச்சாட்டுகளையெல்லாம் வாபஸ் வாங்கிக்குறேன். ஆனா,  நிதர்சனம் என்னன்னு காலம்தான் சொல்லனும்!

அதுக்கு முன்னாடி, இந்த “அதி நவீன” தொழில்னுட்ப முன்னேற்றத்தைப் பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்கன்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க நண்பர்களே…!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின் பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements