ஆத்மாவின் எடை என்ன?

Posted on மார்ச் 10, 2010

19


“ஆத்மா” அப்படீங்கிற, கண்ணால் பார்க்க முடியாத ஒரு விஷயத்துல நம்பிக்கை இருக்குற பலர், அவங்கவங்க அம்மா/அப்பா (இன்னும் பல சொந்தங்களின்) ஆத்மா சாந்தி அடைய என்னென்னமோ செய்யுறாங்க உலகத்துல! நாமளும், நம் சொந்த பந்தங்களுக்காக சில சமயம் ஆத்மா  சம்பந்தமான சில (சம்பிரதாயமான) விஷயங்களைச் செஞ்சிருப்போம். ஆக, நம்மில் பலருக்கு ஆத்மா அப்படீங்கிற விஷயத்துல நம்பிக்கை இருக்கு!

ஆனா, ஆத்மாவைப் பத்தி உண்மையில யாருக்குமே இதுவரைக்கும் புரியாத/தெரியாத சில அடிப்படையான விஷயங்கள் இருக்கு! அது என்னன்னா, ஆத்மா அப்படீன்னா என்ன? அப்படி எதாவது ஒன்னு உண்மையிலே இந்த உலகத்துல இருக்கா? அப்படி இருந்தா அந்த ஆத்மா எப்படி இருக்கும்? உங்கள்ல யாராவது ஆத்மாவை பார்த்திருக்கீங்களா? இப்படி இன்னும் சில! ஆனா, இப்படியெல்லாம் நான் உங்களைக் கேட்டா, “ஆமா எங்களையெல்லாம் கேக்குறியே முதல்ல உனக்கு எதாவது தெரியுமா ஆத்மாவை பத்தி” அப்படீன்னு நீங்க கேக்கலாம்.

சத்தியமா தெரியாதுங்க! அதான், அதப்பத்தி இதுவரைக்கும் யாராவது தெரிஞ்சிக்க முயற்ச்சி பண்ணியிருக்காங்களான்னு பார்த்தா, ஒருத்தர் ஆராய்ச்சி செஞ்சு (?!) முயற்ச்சி பண்ணியிருக்காருன்னு தெரிஞ்சது. அவரு என்ன பண்ணாரு? அதோட முடிவு என்ன? அது நம்புறமாதிரி இருக்கா? இப்படி இன்னும் பல கேள்விகளுக்கு விடையைத் தெரிஞ்சிக்க, வாங்க பதிவ மேல படிப்போம்…..

ஆத்மா அப்படீங்கிற விஷயத்துல நம்பிக்கை (மட்டுமே?) உள்ள நம்மில் சில/பல பேர், “ஆத்மா எப்படி இருக்கும்/எங்கு இருக்கிறது” அப்படீங்கிற சில கேள்விகளுக்கு நிஜ உலக உதாரணங்கள் இல்லாம பல சமயங்கள்ல குழப்பத்துக்குள்ளாகிறோம். இல்லீங்களா? ஆக, “ஆத்மா” என்பதற்கு ஒரு அறிவியல்பூர்வமான சான்று/விளக்கம் இப்படி ஏதாவது ஒன்னு இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறோம் அப்படீங்கிறது உண்மை!

ஆத்மாவின் எடையைக் கண்டுபிடித்த அதிபுத்திசாலி?!

“ஆத்மா???”

ஆத்மா அப்படீங்கிற விஷயத்துக்கு ஒரு சான்று/விளக்கத்தை என்னால் தர/சொல்ல முடியும்னு 1907-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் மசாச்சுசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த, “டங்க்கன் மெக்டக்கல்” அப்படீன்ற ஒரு மருத்துவர்  திடீர்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாராம். உண்மையில், அவரு என்ன சொன்னாருன்னா “ஆத்மாவின் எடை எவ்வளவென்று என்னால் சொல்ல முடியும்” அப்படீன்னு சொன்னாராம்! அட….இங்க பாருங்கப்பா வேடிக்கைய?!

அவர் இப்படிச் சொல்வதற்கான அடிப்படைக் காரணம், சில நோயாளிகளை வைத்து அவர் செய்த ஒரு சின்ன ஆய்வு. அவரோட அந்த ஆய்வுல, மிகவும் மோசமான நிலையில் (வாழ்க்கையின் இறுதி கட்டத்தில்) இருந்த 6 நோயாளிகளை ஒரு பிரத்தியேகமான படுக்கையில் வைத்து, அவர்களின் எடையை இறப்பதற்கு முன், இறக்கும்போது மற்றும் இறந்தபின் என்று மூன்று வெவ்வேறு தருணங்களில் கணக்கிட்டாராம். ஆய்வு (கணக்கு) முடிவுல,  அவருக்கு கிடைத்ததென்னவோ குழப்பமான விடைகள்தானாம்?!

ஆனா, அவரு ஆய்வின் முடிவாக வெளியில் சொன்னது, “அந்த ஆறு நோயாளிகளின் இறப்பிற்க்குப் பின் அவர்களின் மொத்த எடையில் 21 கிராம் குறைந்துள்ளது. ஆக, (அவர்களின்) ஆத்மாவின் எடை 21 க்ராம்கள்” அப்படீன்னு சொன்னாராம். அது சரி…?! மேலும் விவரத்துக்கு இங்கு செல்லுங்கள்

இப்படி ஒரு ஆய்வுச் செய்தி வெளிவந்த உடனே மக்கள் மத்தியில ஒரு பெரிய ஆச்சரியம், குழப்பம் இப்படி அப்படின்னு  ஒரு எழந்தாலும், மெக் டக்கல்லோட ஆய்வை நன்கு பரிசோதித்த ஆய்வாளர்கள் அதுல நெறைய டுபாக்கூரு வேலை நடந்திருக்கு அப்படீங்கிற உண்மையை ஊரறிய சொல்லிட்டாங்களாம். அய்யோ பாவம் டக்கல்!?

மெக் டக்கல் செஞ்ச அந்த டுபாக்கூரு வேலை என்னன்னு நீங்க தெரிஞ்சிக்க வேணாம்?! வாங்க பார்ப்போம்….

1. மெக்கல்லோட ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நோயாளிகள் வெறும் ஆறு பேருதான். அதிலும் இறுதியில் மெக்கல் ஆய்வில் பயன்படுத்தியது வெறும் 4 உடல்களைத்தானாம்!

2. ஆய்வின் முடிவுகள் தீர்க்கமானவையாக இல்லையாம்.

3. மிக முக்கியமாக, ஒருவர் எந்த தருணத்தில் இறந்து போகிறார் என்பது விஞ்ஞானிகளுக்கு இன்று (2010) வரையில் ஒரு புரியாத புதிராகத்தான் இருக்கிறதாம்?! (அப்படீன்னா 100 வருஷத்துக்கு முந்தைய ஆய்வு முறைகள் எப்படி இருந்திருக்கும்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க!)

ஆக, ஆத்மாவோட எடையைக் கண்டுபிடிக்கிறேன் பெர்வழின்னு சொல்லிட்டு, நல்லா ஊரை ஏமாத்தலாமுன்னு முயற்ச்சி பண்ணியிருக்காரு நம்ம மெக் டக்கல்! கிட்டத்தட்ட நம்ம கைப்புள்ள வடிவேலு மாதிரின்னு வச்சுக்குங்களேன்?! இதுலேர்ந்து தெரியுற உண்மை என்னன்னா, ஆத்மா அப்படீங்கிற ஒரு விஷயத்தைப் பற்றி ஆய்வு செய்வதே ஒரு குதிரைக் கொம்பு.  அப்படியே ஒரு ஆய்வை செஞ்சாலும், அதை மக்கள் ஏத்துக்குற மாதிரி விளக்கமா, சான்றுகளோட சொல்வது அப்படீங்கிறது மிக மிக சிரமமான ஒன்று!

ஆமா, இந்தக் கதையை (?) பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க?

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements
குறிச்சொற்கள்: , , ,