சிலர் குறட்டை விடுவது ஏன்?

Posted on மார்ச் 9, 2010

18


“நாட்டுல எத்தனையோ பிரச்சினை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு இது ஒரு மேட்டருன்னு எழுதறாய்ங்க பாரு”, அப்படீன்னு உங்கள்ல சில பேரு அலுத்துக்கலாம். ஆனா, என்னங்க பண்றது “குறட்டை விட்ட ஒரே காரணத்துனால தன்னோட வாழ்க்கையையே(?) இழந்த சில பேரோட” கதையை நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்!

அதாங்க, “புருஷனோட குறட்டை சத்தம் தாங்க முடியாம விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு போன ஒரு பெண்மணியோட” கதையத்தான் சொல்றேன். “அது உண்மையா இல்லையான்னு உனக்கு எப்படி தெரியும்? தெரியாத ஒரு விஷயத்தைப் பத்தி இப்படியெல்லாம் புரளியை கெளப்பி விடக்கூடாது” அப்படீன்னு எங்கிட்ட சண்டைக்கு வந்துடாதீங்க!

எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருந்தது. அதாவது, வயசானவங்க மட்டுந்தான் குறட்டை விடுவாங்களா இல்ல சின்ன வயசுப் பசஙகளும் கூட குறட்டை விடுவாங்களா? அப்புறம் யாராயிருந்தாலும் ஏன் குறட்டை விடுறாங்க? அது ஒரு வியாதியா? இப்படி இன்னும் நெறைய கேள்விகள். அதான் இதுக்கு ஒரு விடையைக் கண்டுபிடிச்சாகனும்னு கெளம்பிட்டேன். நீங்களும் வாங்க, அப்படியே தெரிஞ்சிட்டு வந்துறலாம்……

குறட்டை என்பது என்ன?

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக (relax) வேலை செய்ய ஆரம்பிக்குமாம். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்குமாம். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை. ஆக, சுருங்கிய தொண்ட வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது.

அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச்செய்கின்றனவாம். இந்த அதிர்வைத்தான் நாம் குறட்டை என்கிறோம்! விளக்கம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு கேக்குறதுக்கு. ஆனா, ஏன் சிலர் மட்டும் குறட்டை விடுறாங்கன்னு சொல்லவே இல்லியே இன்னும்?!

குறட்டை விடுவதற்க்கான சில காரணங்கள்:

1.நாம் தூங்கும்போது தலைக்கு வைத்துக்கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக/உயரமாக வைத்துக்கொள்வதாலும்

2.சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக்குழாயில் ஏற்படும் சளி

3.உடல் பருமன் காரணமாகவும் குறட்டைப் பழக்கம் ஏற்படுமாம்!

என்னங்க, இது தவிர வேறு ஏதாவது காரணம் இருக்கா குறட்டை விடுவதற்கு? அப்படி ஏதாவது இருந்தா கொஞ்சம் சொல்லுங்களேன் தெரிஞ்சிக்குவோம்…..

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements