“யூத்ஃபுல் விகடனுக்கு மேலிருப்பானின் மனமார்ந்த நன்றிகள்”

Posted on மார்ச் 5, 2010

18


“இளமைத் தளம்….படைப்பாற்றலுக்கான களம்”, இதை எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கீங்களா? கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா, நான் கிட்டத்தட்ட மனப்பாடமே பண்ணி வச்சிருந்தேன். ஏன்னு கேக்குறீங்களா? அப்படிக் கேளுங்க…..

அதாவதுங்க, ஒவ்வொரு படைப்பாளனும் “தன்னோட ஆக்கங்கள் பெருவாரியான மக்களைச் சென்றடைந்து அதற்கான பயனைப் பெற வேண்டும்” அப்படீன்னுதான் நெனைப்பான். அப்படி நெனச்சி தன்னோட படைப்புகளை சிறந்த பத்திரிக்கை ஊடகங்களுக்கு அனுப்பி, பிரசுரிக்க முயற்ச்சி பண்ணுவான். அப்படித்தான் நானும் முயற்ச்சி பண்ணேன்!

எந்த பத்திரிக்கைன்னா, பதிவர்களுக்கான ஒரு உயர்ந்த அங்கீகாரமான “யூத்ஃபுல் விகடன்” வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்துல “குட் ப்ளாக்ஸ்” பகுதியில, என்னோட வலைத்தளமும்/வலைப்பதிவுகளும் முதல் ஐந்து சிறந்த வலைதளங்களோட பட்டியல்ல இடம்பிடிக்கனும்னு சில முறை பதிவுகளோட விண்ணப்பித்தேன். ஆனா, சில பல தொழில்னுட்ப தவறுகள்னால முயற்ச்சி பலனளிக்கல!

ஆனா, ஒரு சின்ன கனவு இருந்தது. கூடிய சீக்கிரம், நம்ம வலைத்தளமும் யூத்ஃபுல் விகடனோட குட் ப்ளாக்ஸ் பகுதியில இடம் பிடிக்கனும்னு. அந்த கனவை நோக்கி பயணப்படலைன்னாலும், நல்ல பதிவுகள மட்டுமே நம்ம வலைப்பக்கத்துல பதிவிடனும்னு ஒரு கொள்கையில தொடந்து பதிவுகள் எழுதினேன் (எழுதிக்கிட்டும் இருக்கேன்)!

இன்ப அதிர்ச்சி!

"யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸ் பக்கம்"

ரெண்டு நாளைக்கு முன்னாடி வலைத்தளத்தோட “Referers” பக்கத்துல இந்த தொடர்பை பார்த்ததும் ஒரு இன்ப அதிர்ச்சி! “எஸ்ஸ்ஸ்ஸ்ன்னு” கத்தனும்போல இருந்தாலும் கொஞ்சம் அடக்கி வாசிச்சி, நான் மட்டும் தனியா இருந்ததால மனசுக்குள்ள சந்தோஷப்பட்டுக்கிட்டேன்! அதனால இந்த சந்தோஷத்தை எனக்குக் கொடுத்த…..

“யூத்ஃபுல் விகடனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்”

"யூத்ஃபுல் விகடன் முகப்புப் பக்கம்"

இந்த ஒரு சின்ன சாதனையை (?)/ஒரு பெரிய அங்கீகாரத்தை நான் எட்டிப்பிடிக்க முக்கிய காரணமாக/ உறுதுணையாக இருந்த எல்லா வாசக நல்லுள்ளங்களுக்கும், என்னை மறுமொழிகளால் ஊக்குவித்த பல இணைய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! இன்று போல் என்றும் உங்கள் ஆதரவு தொடர வேண்டுகிறேன்.

நட்புடன்,

பத்மஹரி.

Advertisements