வந்துவிட்டது 3-டி தொலைக்காட்சி!

Posted on மார்ச் 4, 2010

22


சமீபத்துலதான், இந்த உலகப்புகழ்பெற்ற 3-டி படமான “அவதார்” பார்த்தேன். பொதுவா இங்கே (ஜப்பான்ல) படம்பார்க்கனும்னா கிட்டத்தட்ட 1500-2000 யென் (800-1000 ரூபாய்) வரை செலவு ஆகும். ஆனா, எங்களுக்கு (மாணவர்களுக்கு) ஒரு பிரத்தியேக சலுகை உண்டு! அது என்னன்னா, எங்களுக்கு மட்டும் 1000 யென் (500 ரூபாய்) கொடுத்தால் போதும் படம் பார்க்கலாம்!

ஆனா, இந்த 3-டி படத்துக்கு அந்த சலுகை இல்லைன்னுட்டாய்ங்க. “அடப்பாவிகளா”ன்னு நம்ம விவேக் பாணியில சொல்லிட்டு சரி எவ்வளவுன்னா, 2000 யென்னுன்னு சொன்னாய்ங்க. சரின்னு குடுத்துட்டு உள்ளே போய் படத்தைப் பார்த்தா, அப்படி ஒன்னும்  3-டி மட்டுந்தான் பார்க்கனும்ங்கிற மாதிரி படத்துல 3-டி காட்சிகள் எதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்ல.

ஆமா,இதை எல்லாம் ஏன் நான் உங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன்?! ஆங்….. நியாபகம் வந்துருச்சி. அதாவது, படத்துல சொல்லிக்கிற மாதிரி 3-டி காட்சிகள் இல்லைன்ன உடனே எனக்குத் தோனுச்சி,  “இந்த மொக்கப் படம் பார்க்க அநியாயத்துக்கு 1000 ரூபாய் கிட்ட செலவு பண்ண வேண்டியதாப் போச்சே. என்னென்னவோ கண்டுபிடிக்கிறாய்ங்க, சீக்கிரம் ஒரு 3-டி தொலைக்காட்சி கண்டுபிடிச்சாய்ங்கன்னா, பேசாம வீட்லயே உக்காந்து 3-டி படம் எல்லாத்தையும் பார்த்துறலாமேன்னு!”

அனேகமா, உங்கள்ல பல பேரு கூட என்னை மாதிரியேதான் நெனச்சிருப்பீங்க. இல்லியா? இப்படி நான் (நீங்களும்) நெனச்சி ஒரு வாரம் கூட ஆகல, திடீர்னு பார்த்தா 3-டி தொலைக்காட்சி வந்திருச்சின்றாய்ங்க! அதான் தெரியுமேன்னு சிலபேர் சொல்லலாம். உண்மையை சொல்லனும்னா 3-டி தொலைக்காட்சி 2008-லயே வந்திருச்சி. ஆனா, நான் சொல்ற 3-டி டி.வி எல்.சி.டி (LCD TV) இல்ல, ப்ளாஸ்மா (Plasma TV) டீவும் இல்ல.

அப்புறம் என்ன டி.விதான்பா அது? அப்படிக்கேளுங்க! அதாவது, தொலைக்காட்சி (மின்சாதன) தொழில்னுட்பத்துலயே முதல்தரமான (உயர்ந்த) தொழில்னுட்பமான எல்.இ.டி  (LED) திரையைக் கொண்ட தொலைக்காட்சியில இப்போதான் 3-டி வந்திருக்கு ! ஆஹா….அப்படியா? எங்கே கிடைக்கும்….? எப்போ கிடைக்கும்….? இதானே கேக்க வர்றீங்க? அதச் சொல்லத்தான் இந்தப் பதிவு! வாங்க பார்ப்போம்….

"3-டி தொலைக்காட்சி"

ஆனா, இந்த டி.வி வாங்குறதுக்கு முன்னாடி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான, ஒரு பெரிய (?) பிரச்சினை இருக்கு இந்த 3-டி டி.வி வாங்குறதுல. அது வேற ஒன்னுமில்லீங்க, 3-டி டி.வி மட்டுந்தான் வந்திருக்கு. ஆனா, அதுல போட்டுப் பார்க்க இன்னும் 3-டி டி.வி.டி/ப்ளூ ரே டிஸ்க் இப்படி எதுவுமே வரலைங்கிறதுதான் காமெடியே!? அதனால, இப்போ 3-டி டி.வி வாங்கினா பழையபடி 2-டி காட்சிகள் மட்டுந்தான் பார்க்க முடியுமாம்?! பச்ச்ச்……அடப்போங்கப்பா, ஆசைக் காட்டி மோசம் பண்றீங்களே!

அதுமட்டுமில்லாம, 3-டி டி.வி வாங்கும்போது டி.வி மட்டுந்தான் குடுப்பாய்ங்களாம். அப்போ, 3-டி காட்சிகளைப் பார்க்க 3-டி கண்ணாடி? அத நீங்கதான் தனியா வாங்கனும். அது சரி…! ஆனா, இதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா, இ.எஸ்.பி.என் (ESPN) மற்றும் டிஸ்கவரி சேனல் காரைங்க, இனிமே நாங்க 3-டி நிகழ்ச்சிகள ஒளிபரப்புவோம்னு சொல்லியிருக்காய்ங்களாம். அட…இது நல்லாயிருக்கே!

சரி, இப்போ நாம இந்த 3-டி டி.வி எவ்வளவு விலை, எங்கே வாங்கலாம், எந்த நிறுவனத்தோடது வாங்கலாம்   இதயெல்லாம் பத்தி பார்ப்போம்……

நிறுவனங்கள்: சேம்சங் (SAMSUNG)

திரை அளவுகள்: 46 இன்ச் , 55 இன்ச்

விலை: $2,600 (46 இன்ச்), $3,300 (55 இன்ச்)

விற்க்கும் இணையதளங்கள்: Amazon.com, Sears.com, Onecall.com (இங்கெல்லாம் முன்பதிவு செய்யலாம்) அமெரிக்காவில் வருகிற 15 ஆம் தேதிக்குமேல் கடைகளில் கிடைக்குமாம்! (நம்ம அமெரிக்க வாசகர்கள் வாங்கிடுவாங்க சீக்கிரமா, இல்லீங்களா?)

டி.வி.டி/ப்ளூ ரே டிஸ்க் எப்போது கிடைக்கும்: இன்னும் சில மாதங்களில் என்கிறார்கள்!

தள்ளுபடி விலையேதும் உண்டா?: “கண்டிப்பா, அது இல்லாமையா? அதுலதான வாடிக்கையாளர் உலகமே ஓடிக்கிட்டிருக்கு, ஆனா வருகிர ஆகஸ்டு மாதம் வரை கிடையாது” அப்படீன்னு சொல்லுது தள்ளுபடி விலைக்கு பெயர்போன Vizio Inc. நிறுவனம் (இது அமெரிக்காவுலதாங்க, நம்மூருல இப்படி ஏதாவது இருக்கா?)

இன்னும் பெரிய அளவில் இந்த டி.வி கிடைக்குமா?: கிடைக்கும் அதுவும் மலிவான விலையில் (ஆகஸ்டில்).

47 இன்ச்-$1,999

55 இன்ச்-$2,499

72-இன்ச்-விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை!

ஆக, இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா இந்த டி.வி வாங்கப்போற நீங்க, நம்ம கிரி பட வடிவேலு மாதிரி,  “3-டி டி.வி.டி, ப்ளூ ரே டிஸ்க் அப்புறம் 3-டி டி.வி நிகழ்ச்சிகள்னு எல்லாம் கண்டிப்பா கூடிய சீக்கிரம் வந்துடுனு நம்ம்ம்பீ…..தான் வாங்கனும்?!”.

என்ன புரியுதுங்களா? சரி, சீக்கிரம் 3-டி டி.வி வாங்கி வீட்டுல சும்மா ஹோம் தியேட்டர்ல நெறைய 3-டி படம் பார்த்து கலக்குங்க! நான் கெளம்புறேன்.

Advertisements