பனிப்பாறைகள் ஏன் மிதக்கின்றன?

Posted on மார்ச் 2, 2010

11


நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச, உலகத்துல ரொம்ப பிரபலமான ஒரு மேல் நாட்டுக்காதல் படம்னா அது “டைட்டானிக்” படம்தான்னு நெனைக்கிறேன். அந்த படத்துல கடைசிக் காட்சியில ஒரு பெரிய பனிப்பாறையில மோதி, டைட்டானிக் கப்பல் நிலைகுலைஞ்சி போறதாவும், அதுல கதாநாயகி தவிர(?) மத்த  எல்லாரும் இறந்துபோறதாவும் காட்சியமைச்சிருப்பாங்க!

"மிதக்கும் பனிப்பாறைகள்"

ஆக, கடல்ல மிதக்கிற பனிப்பாறைகள்னால கப்பல்களுக்கு ஒரு பெரியா ஆபத்து எப்பவுமே இருக்கு. இதுல ஒரு சின்ன சந்தேகம். பனிப்பாறை ஏன் மிதக்குது? இந்தக் கேள்விக்கு, 10/12-ஆம் வகுப்புவரை பௌதீகம் படிச்ச நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பதில்/காரணம், “பனிக்கட்டி/ஐஸ்கட்டிய விட தண்ணீரானது திடமானது அதனால, பனிப்பாறைகள் பார்க்கிறதுக்கு கனமானதாவும், அளவில் மிகப்பெரியதாவும் இருந்தாலும் கூட தண்ணீரில் மூழ்காது, மிதக்கவே செய்யும்” அப்படீங்கிறது! இல்லீங்களா?

ஆனா, மேற்சொன்ன காரணம் தவிர, பனிப்பாறைகள் மிதப்பதற்க்கு வேறு சில காரணங்களும் இருக்காம். அது என்னன்னுதான் நாம இப்போ பார்க்கப் போறோம்!

கேள்வி: பனிப்பாறைகள் ஏன் மிதக்கின்றன?

பதில்: பனிப்பாறைகள், தண்ணீரில் மூழ்காமல் மிதப்பதற்க்கு (அடிப்படையில்) குறைந்தபட்சம்  மூன்று காரணங்கள் உண்டு.

1. தண்ணீரின் பல பௌதீகப் பண்புகளில் ஒன்றான, திடம் (Density) அப்படீங்கிற பண்பின்படி பார்த்தால், பனிக்கட்டி/ஐஸ்கட்டி எவ்வளவுதான் பெரியதாக இருந்தாலும், கனமாகத் தெரிந்தாலும்கூட(?) அடிப்படையில் தண்ணீரைவிட திடம் குறைந்தது என்பதால், தண்ணீரில் மிதக்கவே செய்யும் மூழ்காது!

2. பனிக்கட்டிகள் மிதப்பதற்க்கு மற்றுமொரு சுவாரசியமான காரணம், எல்லா பனிக்கட்டிகளும் பல காற்றுக் குமிழ்களை உள்ளடக்கி இருக்கின்றன என்பதும்தானாம்! (இது நம்மில் சிலருக்கு தெரியாதென்றே நினைக்கிறேன். நெசமாவே இதுவரைக்கும் எனக்குத் தெரியாதுங்கோவ்!). அதனால, பார்க்குறதுக்கு திடமான பனிக்கட்டியாக இருந்தாலும், கோடிக்கணக்கான காற்றுக் குமிழ்களை தன்னுள்ளே கொண்டதுதான் பனிக்கட்டி. அதுமட்டுமில்லாம, பனிக்கட்டி வெண்மையாக தெரிவதற்க்கு காரணமே உள்ளே அடைபட்டிடுருக்கும் காற்றுக் குமிழ்கள்தானாம்! ஆஹா…அப்படியா?

3. மேல சொன்ன காரணங்கள் மட்டுமில்லாம, “பனிகட்டிகள் முற்றிலும் சுத்த/தூய தண்ணீரினால் ஆனவை என்பதாலும், கடல் நீரானது பல வகை உப்புக்கள் நிறைந்தது என்பதால் மிகவும் திடமானது என்பதாலும்தான், பனிக்கட்டிகள் மிதக்கின்றன” என்கிறது விஞ்ஞானம்!

ஆக, பனிக்கட்டிகள் மிதப்பதற்க்கு மூன்று முத்தான காரணங்கள் இருக்குன்னு, இந்தப் பதிவு மூலமா நான் தெரிஞ்சிக்கிட்டேன். இது தவிர வேறு எதாவது காரணமும் இருக்குன்னு நீங்க நெனச்சீங்கன்னா கொஞ்சம் சொல்லுங்க, நானும், நம்ம வாசகர்களும் தெரிஞ்சிக்கிறோம்!

Advertisements