மீன்கள் அழுமா?

Posted on பிப்ரவரி 26, 2010

6


மீன்கள் பற்றிய என் முந்தைய ஒரு பதிவில், மீன்களுக்கு காது கேட்குமா என்று பார்த்தோம். ஆனால், திடீரென்று மீன்கள் பற்றிய மேலும் ஒரு சுவாரசியமான சந்தேகம். அது வேற ஒன்னுமில்லீங்க, “தண்ணீரிலே மீனழுதால்……யாரறிவார்?” அப்படீன்னு தொடங்குற ஒரு பாட்டு நான் கேட்டிருக்கேன், நீங்களும் கேட்டிருப்பீங்க.

இந்தப் பாட்டுக் கேக்கும்போது தோனும், “ஆமா இந்த வரி ஒரு உவமைக்காக மட்டுமே எழுதப்பட்டதா இல்ல உண்மையாவே மீன்கள் அழுமா?”, அப்படீன்னு ஒரு கேள்வி எழும் மனசுக்குள்ள. ஆனா, கொஞ்ச நேரத்துல “ஆமா வேற வேலையில்ல உனக்கு, போய் எதாவது ஆவற வேலையைப்பாருடா”ன்னு மனசாட்ச்சி சொல்லிடும்!

அதனால, இதுவரைக்கும் மீன்கள் அழுமா, அழாதா அப்படீங்கிற கேள்விக்கு விடையே தெரியாது எனக்கு. அதை தெரிஞ்சிக்கலாமேன்னு முயற்ச்சி பண்ணினேன். அதுக்கான விடையைச் சொல்லப்போற பதிவுதான் இது.

கேள்வி: மீன்கள் அழுமா?

பதில்: மீன்கள் அழாது/மீன்களுக்கு அழத் தெரியாது!

விளக்கம்: கடல் உயிரியல் (Marine Biologist) வல்லுனர் ஸ்டீவ் வெப்ஸ்டர் அவர்களின் கூற்றுப்படி, அழுதல் என்பது"இலை ட்ராகன் மீன்" பெரிய மூளையுள்ள பாலூட்டிகளான (Big-brained Mammals) விலங்குகளால் மட்டுமே வெளிப்படுத்தப்படும் ஒரு உணர்ச்சி! அதுக்கு காரணம் என்னன்னா, பெரிய மூளையுள்ள விலங்குகளில் (மனிதர்களில்) உள்ள “செரிப்ரல் கார்டெக்ஸ்” (Cerebral cortex) என்னும் மூளைப்பகுதி மீன்களுக்கு இல்லையென்பதே!

அதனால, வெப்ஸ்டர் மீன்கள் அழுவதற்கான சாத்தியங்கள் என்கிறார். அதுமட்டுமில்லாம, மீன்களின் கண்கள் எப்போதும் தண்ணீரினால் சூழப்பட்டு இருப்பதால் மீன்கள் அழவேண்டிய அவசியம் இல்லையென்கிறார். இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும், மனிதர்களாகிய நாம் அழுவது(?) சோகம்/சந்தோஷத்தினால் மட்டுமே அல்ல. சில சமயம் கண்களில் காரணமே இல்லாமல் நீர் சுரக்கும். இது கண்களை சுத்தப்படுத்த உடல் தானாக செயல்படுத்தும் ஒரு நிகழ்வு!

மீன்கள் அழுமான்னு தெரிஞ்சிக்கப் போனப்ப, மீன்கள் பற்றிய வேறு சில சுவாரசியமான தகவல்களும் கெடைச்சதுங்க. அது என்னன்னா, மீன்கள் ஆழாதே தவிர கொட்டாவி,இருமல், ஏப்பம் விடுறது இதையெல்லாம் செய்யுமாம். அடங்கொக்காமக்கா….. நெசமாளுமா? சொல்லவேல்ல…..?!

Advertisements