ஒட்டகத்தின் முதுகில் தண்ணீர் இருக்கிறதா?

Posted on பிப்ரவரி 24, 2010

8


எனக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். கண்டிப்பா உங்கள்ல பல பேருக்கும் அது இருக்கும்னு நெனைக்கிறேன். அது என்னன்னா, சின்ன வயசுலேயிருந்தே ஒட்டகத்தைப் பத்தி படிக்கும்போதெல்லாம் அதோட முதுகுல(Hump) தண்ணீர் இருக்குறதா நெறைய பேரு சொன்னாங்க (ஆனா எங்க வாத்தியாரு மட்டும் சொல்லலையோ?!)!

அப்படி ஒட்டகத்து முதுகுல தண்ணீர் இருக்கிறதுக்கு காரணமா பொதுவா எல்லாரும் சொன்னது (கேள்விப்பட்டது) என்னன்னா, பாலைவனத்து போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுற ஒட்டகத்துக்கு திடீர்னு தண்ணீர் தாகம் எடுத்துதுன்னா, அந்த முதுகு மேட்டுல (Humpக்கு தமிழ்ல என்னங்க பேரு?) இருக்குற தண்ணீரை(?) அது பயன்படுத்தி(?) தன்னோட தாகத்தை தீர்த்துக்குமாம்!

இத நாம சின்ன வயசுல கேட்டதுனால பெருசா ஒன்னும் யோசிக்கலன்னு(?) நெனைக்கிறேன், அதனால அப்படியே விட்டாச்சு! ஆனா, இப்போ இதையே நம்ம பசங்ககிட்டப் போய்  சொன்னா, அவங்க “ஆமா, எத்தன பேரு கெளம்பி இருக்கீங்க இப்படி”ன்னு கண்டிப்பா கேப்பாங்க!?

அதனால இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முயற்ச்சி பண்ணப்போ, (இப்போ நாம படிக்க போற) ரொம்ப சுவாரசியமான சில தகவல்கள்  கெடைச்சுது. அது என்னன்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க…..

கேள்வி: ஒட்டகத்தின் முதுகில் உண்மையாகவே தண்ணீர்தான் இருக்கிறதா?

பதில்: இல்லை! ஒட்டகத்தின் முதுகில் கொழுப்புதான் இருக்கிறது.

ஓட்டகமே,உன் முதுகில் என்ன இருக்கிறது?

விளக்கம்: பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, ஒட்டகத்தின் முதுகில் இருப்பது கொழுப்பு என்பதுதான்அறிவியல் உண்மை! அதுக்குக் காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா, பல நாட்கள் ஒரு துண்டு உணவு கூட இல்லாம பாலைவனங்களில் ஒட்டகங்கள் வாழ உதவுவதே இந்த முதுகுக் கொழுப்புதான்! ஒரு ஒட்டகம், சுமார் 80 பவுண்டுகள் (36 கிலோ) கொழுப்பினை தன் முதுகில் சுமக்கும் திறன் படைத்தவையாம். யப்பா…! ஆனால், ஒட்டகத்தின் குட்டிகளுக்கு, அவை திட உணவு உட்கொள்ளும் பருவம் வரை இந்தக் முதுகுக் கொழுப்பு இருப்பதில்லையாம்!  அவசரக் காலங்களில், ஒட்டகங்கள் இந்தக் கொழுப்பினை உணவுக்காக பயன்படுத்தும்பட்சத்தில் இந்த மேடான முதுகுப்பகுதி சுருங்கி, ஒரு பக்கமாக சாய்ந்து விடுமாம்! ஆஹா, இது நமக்கு இதுவரைக்கும் தெரியாதே!!

ஆனால், திரும்பவும் உணவு உண்டபின் ஒரு நல்லத் தூக்கம் போட்டுவிட்டால் அந்த முதுகு(க் கொழுப்பு)மேடு நேராகிவிடுமாம். அது சரி…! இது எல்லாத்தையும்விட ஒரு சுவாரசியமான செய்தி இருக்குங்க ஒட்டகத்தப் பத்தி. அது வேற ஒன்னுமில்ல, ஒரு ஒட்டகம் ஒரு முறை தண்ணீர் குடிக்கும்போது சுமார் 20 கேலன் (75 லிட்டர்) தண்ணீர் குடிக்குமாம்! அதானப் பார்த்தேன், 75 லிட்டர் தண்ணி குடிக்கிறதுனாலதான் பாலைவனத்துல எல்லாம் சும்மா சாவகாசமா நடந்து போறாரு நம்ம ஒட்டகத்தாரு! நீங்க கலக்குங்க….!!

Advertisements