தண்ணீரின்றி மனிதனால் எவ்வளவு காலம் தாக்குபிடிக்க முடியும்?

Posted on பிப்ரவரி 22, 2010

8


திடீர்னு உலகத்துல தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டாலோ அல்லது, ஒரு பாலைவனத்துல ஒரு மனுஷன் மாட்டிக்கிட்டாலோ, தண்ணியே குடிக்காம ஒரு மனுஷனால இருக்க முடியுமா? அப்படியே இருந்தாலும் அதிகபட்சம் எத்தனை நாட்கள் இருக்க முடியும்?

இப்படியொரு கேள்வியே கொஞ்சம் பயமானதும், வினோதமானதும்தான் என்றாலும் இத்தகைய திறனுக்கான சாத்தியக்கூறுகள் இருக்கான்னு கேட்டா, ஆமாம் இருக்குன்னு சொல்லுது ஆய்வு. அது என்ன, எப்படின்னு பார்ப்போம் வாங்க….

கேள்வி:தண்ணீரே குடிக்காமல் மனிதர்களால் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும்?

பதில்: அதிகபட்சமாய் மூன்று நாட்கள்!

விளக்கம்: மனிதர்கள் யாருமே இல்லாத பாலைவனத்திலோ அல்லது உண்டி,உறையுள் எதுவுமே இல்லாத ஒரு இடத்தில்

“தண்ணீர் தண்ணீர்”

ஒரு மனிதன் மாட்டிக்கொண்டால், உயிர்வாழ தேவையான மூன்று விஷயங்களான காற்று, தண்ணீர், உணவு மற்றும் தங்குமிடம் என எதுவுமே இல்லாமல் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்றால்…..

காற்று: காற்றில்லாமல் (சுவாசம்) மூன்றே நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது!

உறையும் பனியில்: உடையெதுவிமின்றி, உறையுளுமின்றி வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே!

தண்ணீர்: மூன்று நாட்கள் தண்ணீரின்றி!

உணவு: உணவின்றி மூன்று வாரங்கள் தாக்குப்பிடிக்க முடியுமாம்! இது பரவாயில்லையே!?

மேற்சொன்னவை, மனிதன் மோசமான நிலைகளில் உயிர்வாழ மூன்று விதிகள்! ஆனால், இந்த விதிகளுக்கு சில விதிவிலக்குகளும் உண்டு நம் உலகில். அது வெகுசிலர் 8 முதல் 10 நாட்கள் வரை தண்ணீரின்றி வாழ்ந்துள்ளது! இவர்கள் அனைவரும் உலக சாதனையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

மனிதனின் உடலில் 65% தண்ணீரினால் ஆனது. ஆக, தண்ணீர் மனித வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது! ஏனென்றால், தண்ணீர்தான் ரத்தத்தில் ப்ராண வாயு மற்றும் உணவுப் பொருள்களை எடுத்துச்சென்று உடலின் ஒவ்வொரு செல்லிற்கும் கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், நம் மூட்டுகளையும், திசுக்களையும் மென்மையாக வைக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தண்ணீரின்றி நாம் உண்ணும் உணவு செறிமானமாகாது!

Advertisements