மீன்களுக்கு காது கேட்குமா?

Posted on பிப்ரவரி 19, 2010

9


எனக்குத் தெரிஞ்சவரைக்கும், மீனுக்கு காது கெடையாது.  அதனால, என்னைப் பொறுத்தவரைக்கும் மீனுக்குக் காது கேக்காதுன்னுதான் நான் நெனைக்கிறேன். இப்படித்தான் (நான் உள்பட) நம்மில் பலர் நினைக்கக்கூடும் பதிவுத்தலைப்பைப் படித்தபின்.ஆனால், உண்மை வேறுவிதமாக இருப்பதுதான் நிதர்சனம்!

கேள்வி: மீன்களுக்குக் காது கேட்குமா?

பதில்:  மீன்களுக்கு, நம் கண்களுக்கு தெரிகின்ற மாதிரி (பெரிய) காதுகள் இல்லையென்பது உண்மைதான் என்றாலும், மீன்களுக்கு காதுகள் உண்டு. அவை தலைக்கு உள்ளே இருக்கின்றன! அதனால், மீனுக்கு நன்றாக காது கேட்கும்!!

விளக்கம்: தலைக்கு உள்ளே இருக்கின்ற காதுகளினாலும், உடலாலும் மீன்கள் தண்ணீருக்குள்ளே, தங்களைச் சுற்றி எழும்

அழகான மீனே, உன் காதுகள் எங்கே?

சப்தங்களை உள்வாங்கிக் கொள்கின்றன என்கிறது (National Wildlife Federation) ஆய்வு!  அதுமட்டுமல்லாமல், மீன்கள்  (உதாரணத்துக்கு சுறா போன்றவை) மின்சாரத்தை உணரும் ஆற்றலையும் பெற்றுள்ளனவாம்! இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த (மின்சாரம் உணரும்) ஆற்றலுக்கு  காரணகர்த்தாவான மரபனுக்கள் (ஜீன்கள்), மனிதர்களில் தலை மற்றும் முக அமைப்புக்கு காரணமானவையாம். ஆக மொத்தத்துல, மீன்கள் நமக்கு ரொம்ப தூரத்து சொந்தக்காரங்கன்னு சொல்றாங்க ஆய்வாளர்கள்!

பின் குறிப்பு: இந்தத் தலைப்பைப் படிக்கிற சிலர், “ஆமாம் நாட்டுக்கு இப்போ ரொம்ப தேவையான செய்தி இது”, அப்படீன்னு நெனைக்கலாம். கண்டிப்பா இது நாட்டுக்கு தேவையான செய்தி இல்லைன்னாலும், நம்ம எல்லாருக்கும் (குறைந்தபட்சம் குழந்தைகளுக்காவது) உலக உயிரினங்கள் பற்றிய சிறு சிறு சந்தேகங்கள் நிச்சயம் இருக்கும். அத்தகைய செய்திகளை தொகுக்கும் ஒரு சிறு முயற்ச்சியே இத்தகைய பதிவுகள். நன்றி!

Advertisements
குறிச்சொற்கள்: , ,