ஜப்பான் சுற்றும் வாலிபன்….!

Posted on திசெம்பர் 29, 2009

2


என்னங்க…..தலைப்பை படிச்சிட்டு, “என்னாச்சு இவனுக்கு திடீர்னு, இப்படி ஒரு தலைப்பு வச்சிருக்கான் பதிவுக்கு?! என்னத்த  எழுதப் போறான்னு தெரியலையே” அப்படீன்னெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா?

கவலப்படாதீங்க!ஆஹா….ஆரம்பிச்சிட்டாய்ங்கடான்னு நீங்க ஃபீல் பண்ற அளவுக்கு வளவளான்னு எழுதி உங்கள இம்ச பண்ணமாட்டேன்! ஒன்னுமில்ல, ஜப்பானுக்கு படிக்க வந்து கிட்டத்தட்ட ரெண்டரை வருஷமாச்சு. ஆனா, இன்னும் உருப்படியா சொல்லிக்கிற அளவுக்கு ஜப்பானை சுத்திப் பார்க்க முடியல!

ஏன் என்ன பிரச்சினைன்னு கேக்குறீங்களா? அது ஒன்னுமில்லீங்க, “கல்லக் கண்டா நாயைக் காணோம், நாயைக் கண்டா கல்லைக் காணோம்”னு விடுமுறை கெடைச்சா சேர்ந்து சுத்துறதுக்கு நண்பர்கள் இல்ல, நண்பர்கள் இருந்தா விடுமுறைக் கெடைகிறதில்லைன்னு ஜப்பான் வாழ்க்கையே முக்கால்வாசி முடிஞ்சி போச்சு!

ஆனா, இப்போதான் ஒரு வழியா “நல்ல காலம் பொறக்குது….நல்ல காலம் பொறக்குதுன்”னு

கியோடோவின் "தங்க கோவில்"

விடுமுறையும் கிடைச்சு நண்பர்களும் ஊர் சுத்த ரெடியா இருக்காங்க! அதான், உட்டாப் போதும்டா சாமீன்னு ஊர் சுத்தக் கிளம்பிட்டேன்!

எனக்கு நல்லாத் தெரியும், சொல்லாம போனா நீங்க எல்லாரும், “என்னடா இவன் இவ்ளோ நாளா, தாயா புள்ளையா, ஒன்னு மண்ணாப் பழகிட்டு (?!) ஒரு வார்த்தைக் கூட சொல்லாம போய்ட்டானே”ன்னு மனசொடிஞ்சி போய்டுவீங்கன்னு!

அதான் ஒரு கெத்தா இருக்கட்டுமேன்னு “ஜப்பான் சுற்றும் வாலிபன்”னு தலைப்பை வச்சிட்டு, வலை நண்பர்கள் உங்க எல்லாருக்கும் ஒரு வார்த்தை சொல்லிட்டு  போகலாமுன்னு வந்தேன்! அப்புறம்….எனக்கு இப்போ ஒரு பாட்டு பாடனும்போல இருக்குங்க. நீங்க தப்பா நெனைக்கலைன்னா பாடிக்கட்டுமா?

“ஜப்பானை சுத்திப் பார்க்க போறேன்…..

க்யோடோவில் கிமோனோ வாங்கி வாரேன்

டோக்கியோவின் டவரில் ஏறி நிக்கப் போறேன்

நான் சாமுராய் சண்டியர் போல வாரேன்…!”

ஏய்…ஏய்…நிப்பாட்டு! நீ பாட்டு பாடி படுத்தினது போதும் சீக்கிரம் கெளம்பு காத்து வரட்டும் அப்படீன்னு நீங்க யாரும் சொல்றதுக்கு முன்னாடி நானே நிப்பாட்டிட்டேங்க! ஆமா….பாட்டு எப்படி?

சரிங்க, ஜப்பானைச் சுத்திப் பார்த்துட்டு வந்து, நான் பார்த்த சில புது விஷயங்களப் பத்தி உங்களுக்குச் சொல்றேன். வரட்டுமா? ஆங்….இப்போதாங்க நியாபகத்துக்கு வருது, போறதுக்கு முன்னாடி உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்லனுமே! அது என்னன்னு உங்க யாருக்காச்சும் தெரியுமா?

சரி சரி, நானே சொல்லிடறேன்…..

என் இனிய வலைப்பதிவு வாசக நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் உங்கள் பாசத்திற்குரிய பத்மஹரியின்…..(இதெல்லாம் உனக்குக் கொஞ்சம் ஓவரா தெரியல?!)

“இனிய புத்தாண்டு 2010 நல்வாழ்த்துக்கள்”

Advertisements